Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஏதோ கனவிலே கேட்பது போலே கிடக்கிறது. ஆனால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாமலும் இருக்கு. கொஞ்சம் கண்ணை விழித்து காதைக் கூர்மையாக்கி கேட்கிறேன். உண்மையிலே அது ரெலிபோன் அடிக்கிற சத்தம் தான். வெள்ளிக்கிழமையெண்டபடியாலே லேற்றாக வந்து தான் படுத்தனான் கண் திறக்க எரிந்து வலித்தது. முழிக்க முயன்றேன் முடியவில்லை. ரெலிபோன் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது.

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன.


தெருக்களில் முழங்கும்
மாணவர் கிளர்ச்சிக்குத் தெரியாது
இனங்களைப் பிரித்துப்போட்டு
பதாகைகள் ஏந்திட
எமக்காய் ஒலிக்கும் குரல்களில்
இனவாதத் தீயை தேடல்
எந்தவகை நியாயம்

அணு உடைவுச் சிதறல்கள்
அண்மையிலா அதிககாலங்களா?
எப்போதும் நிகழாம்
தெருவிபத்து.

பொங்கித்தள்ளும்  தீமலைகள்
உலுக்கி சிதைத்தப்போடும்
நிலநடுக்கம்

தென்னையளவுயர்ந்து
தவளையின் நாக்கென
சட்டென நீண்டு
பின்னோடும் பெருவெள்ளம்
சுனாமி.
இயற்கையின் சீற்றம்
எப்போதும் நிகழலாம்.

நேற்று லண்டனில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரித்தானியக் கிளையின் பகிரங்க கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குமார் குணரட்ணம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


தோழர் குமார் "இன்று என்ன செய்யப்பட வேண்டும்" என்னும் தலைப்பில் உரையாற்றியதுடன் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களின் இன ஐக்கியத்தையும் வலியுறுத்தினார். கூட்டத்தின் இறுதியில் கேள்வி நேரத்தில் இரண்டும் முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன.


இந்தப் பிரச்சாரத்தில் இரண்டு குறிப்பான விடையங்கள் குறித்து தற்போதைக்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

1.சுயநிர்ணயத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாதது குறித்து

சுயநிர்ணயத்தை அவர்கள் ஏற்க மறுத்தது குறித்து பேசுகின்றனர். சரி இவர்கள் யார்? இவர்கள் வைக்கும் தீர்வு என்ன? இப்படி பல கேள்விகள் மூலமும், இவர்களைப் புரிந்து கொள்ள முடியும். கடந்த 30 வருடத்தில் எங்கே எப்படி இருந்தனர் என்பது தொடங்கி இன்று என்ன செய்கின்றனர் என்பது வரை, இவர்களை தெரிந்து கொள்வதன் மூலம் இவர்களின் "சுயநிர்ணயம்" என்ன என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுத்து ஆட்டிகல மீது யாழ்ப்பாணத்தில் வைத்து கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அவற்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும் போது யாழ்ப்பாண நல்லூர் கோவிலுக்கு அருகாமையில் வைத்து இச்  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த குமார் குணரத்தினத்திடம் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்கின்றீர்களா, உங்கள் தீர்வுத் திட்டம் என்ன என்ற கேள்வியைத்தான் மாற்றி மாற்றி பலரும் எழுப்பினர். வர்க்கப்போராட்டம் மூலமான அவர்களின் தீர்வை மறுக்கின்றவர்கள், அதை சாத்தியமில்லை என்று கருதுகின்றவர்களின், தர்க்கங்களும் வாதங்களும் தான் இவை. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக இந்த வர்க்க அமைப்பில் தீர்வுகளைக் காணமுடியும் என்று கருதுகின்றவர்களின் கேள்விகள் தான் இவை.

தாய் தகப்பனுடன் இருக்க முடியாத காரணங்களினாலும், தாய் தகப்பன் இருந்தும் சில சமூகப்பழக்க வழக்க நடைமுறைகளை சரிவரச் செய்யத் தெரியாத ஒரு வகை உளவியல் வருத்தங்களைக் கொண்ட பிள்ளைகளை பராமரிக்கின்ற இடம் தான் நான் வேலை செய்யும் இடம். மெசின்களுடன் வேலை செய்வதை விட இந்த மனிதர்களுடன் வேலை செய்வதென்பது மிகவும் கஸ்ரமான ஒன்று. அதிலும் குழந்தைகளுடன் அதுவும் கொஞ்சம் மனம் சரியில்லா உளவியல் குறைபாடுள்ள பிள்ளைகள் என்றால். அதை அனுபவிச்சவர்களுக்குத் தான் தெரியும்.

இந்தப் பேட்டி பற்றி திறந்த விவாதம் இன்று அவசியமாகின்றது. தங்கள் சொந்த இனவாதம் மூலம், மற்றவற்றை எதிர் இனவாதமாக நிறுவமுனையும் போக்கில் இந்த நிகழ்ச்சியின் கேள்விகள் இழுபட்டுச் சென்றது. கேள்விகள் அனைத்தும் சுற்றிச் சுற்றி இனவாதம் சார்ந்ததாக இருந்ததால், இந்த விடையத்தைச் சுற்றிய விரிவான அரசியல் பார்வையை குறுக்கி விட்டது. இங்கு தம்மை "மார்க்சியவாதியாக", "இடதுசாரியாக" காட்டிக் கொண்டு, சுயநிர்ணயம் தொடர்பாக குமார் குணரத்தினத்திடம் எழுப்பிய தர்க்கம் அனைத்தும் இனவாதம் சார்ந்த தேசியவாதம் தான்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை லண்டன் வெம்பிளியில் முன்னிலை சோசலிசக் கடசியின் மத்திய குழு உறுப்பினரும் அரசியல் பொலிட்பீரோ உறுப்பினருமான தோழர் பிறேம்குமார் அவர்கள் “என்ன செய்யப்பட வேண்டும்” என்னும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

கூட்டமைப்பு இரண்டாக உடையக் கூடிய சாத்தியம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நகைப்பிற்கு உரிய விடயமாக கவனிக்கப்பட வேண்டியது எதுவெனில் கூட்டமைப்பு எதன் அடிப்படையில் உடைகின்றது என்பதே. கூட்டமைப்பின் உடைவில் இரு அரசுகளின் சதிகளை நாம் இனங்காண முடிகின்றது. சுரோஸ் பிரேமச்சந்திரனின் தலைமையில் இந்திய அரசு சார்பும் சம்பந்தன் தலைமையில் இலங்கை சார்புமாக பிரிந்து நின்று உடைவினை நோக்கி செல்லக் கூடிய சாத்தியப்பாடு பலமாக இன்று காணப்படுகின்றது.

 

altபிரச்சினைகளுக்கு பதில் வழங்குவதற்கு பதிலாக பூச்சாண்டி காட்டும் அரசியலை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை இன்றைய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளியிருப்பதாகத தெரிகிறது.  மாறி மாறி இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே மக்களது அடிப்படை உரிமைகளில் காலத்துக் காலம் கை வைக்காமல் ஆட்சி செய்ததாக வரலாறே இல்லை. ஒன்று இவர்கள்மக்களது மானியங்களில் கைவைப்பார்கள் அல்லது மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்த்து விட்டு அந்த நெருப்பில் குளிர்காய்வார்கள். இப்படித்தான் காலாகாலமாக நடந்து வந்திருக்கிறது.

கல்வித்துறையில் தோன்றியுள்ள நெருக்கடியும், அதற்கெதிராக அன்றாடம் நடக்கும் போராட்டங்களும் இன்றைய பத்திரிகைகளில் நாளாந்த செய்திகளாக இருக்கின்றன. விஷேடமாக சுதந்திரக் கல்வியை பாதுகாப்பதற்காக பல தசாப்தங்களாக போராடி வரும் மாணவர் இயக்க போராட்டங்களில் பல்கலைக் கழக விரிவுரையாளர்களும், மாணவர்களும் இணைந்துள்ளார்கள். போராட்டம் விரிவடைந்துள்ளது. போராட்டக் களம் சூடாகிக் கொண்டிருக்கிறது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தனது முன்றாவது அமைப்பு மாநாட்டை, 21,22,23 செப்டெம்பர் 2012 அன்று டென்மார்க்கில் நடத்தியது. தனக்கான எதிர்கால வேலைகளை முன்னெடுக்கும் வண்ணம் அமைப்பாக்கத்தையும், தன் அரசியல் வழிமுறைகளையும் வகுத்துக் கொண்டது.       

மூன்று வருடங்களுக்கு முன்னம் எம்மை நாம் ஒரு அமைப்பாக ஒருங்கிணைத்துக் கொண்டவர்கள். தனிநபர் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அதை ஒருங்கிணைந்த நடைமுறை அரசியலாக்கும் வண்ணம், அமைப்பு செயற்பாட்டுக்கான காலடியை எடுத்து வைத்தோம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE