Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி


புதிய திசைகளின் கட்டுரையை வாசித்தேன்.  நடைமுறை யதார்த்த்தை புரிந்து கொண்டதையும், எங்கள் சனங்களின் பாற்பட்டு  இலங்கையில் ஒரு முற்போக்கான அரசியல் சமூக மாற்றம் பற்றிய எண்ணப்போக்கு இவர்களிடம் உள்ளக்கிடக்கையாக இருப்பதையும்  காணமுடிகிறது. எவ்வளவு மோசமான அவல நிலையை, அழிவின் கீர்த்தியை  நமது சமூகம் தாண்டி நிற்கிறது? எந்த விதமான போரட்டம் அல்லது சமூகநீதி என்ற விடயங்களை எங்கள் மக்களிடம் கதைக்கவே முடியாத மோசமான மனோ நிலையில் நாங்கள் வாழ்கின்றோம். இவை பற்றிய உணர்வார்ந்த நிலமை தமிழர் புலம் பெயர் மக்களிடம் வளர்வது வரவேற்கத்தக்கது.


 தேசிய இனப்பிரச்சினையில்--சுயநிர்ணய உரிமைப் பிரயோகம்
 
மனிதகுல வரலாற்றை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்த்தால், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் "கோட்பாட்டு உருவாக்கம்" முதலாளித்துவத்தின் பிறப்பிடத்திற்கு ஊடாகவே கரு உருவாக்கம் பெறுகின்றது. நிலமானிய சமூகத்திற்குள் நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்களின் வர்க்கப்போராட்டம் முதலாளித்துவ சமுதாயத்தில் பிரசவிக்கின்றது. இச்சமுதாயம் பிரசவிப்பதற்கு முன்பாக உலகில் நிலையான தேசம் என்பது எதுவுமே இருக்கவில்லை.  இதற்கு முன்பான இச்சமூகப் புவியியல் நிலை பற்பல பேரரசுகளையும் - சிற்றரசுகளையும் கொண்ட முடியாட்சிகளைத்தான் தன்னகத்தே கொண்டிருந்தது. தேசங்களின் ஆரம்ப உருவாக்கம் ஐரோப்பாவை மையப்படுத்தியே உருவாகின்றது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகில் கிட்டத்தட்ட நூற்றுக்கு குறைவான தேசங்களே உருவாக்கம் பெற்றன.

சம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில் இனஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதியசமூக அமைப்பு முறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளை உண்மையில் வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது.

இன்று தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள இனவாத அரசால் நசுக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் தனித்தமிழீழம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதை முன்தள்ளுவதற்கு இலங்கையின் இடது சாரிய வரலாற்றையும் அதேவேளை சிங்கள இனவாதிகளின் வரலாற்றையும் புரட்டிப்போட்டு தனிமையில் இனவாதத்திற்கு சிங்கள இனம் மாத்திரம் தான் காரணம் என்று கூறி அவர்களின் மீது பழியைப் போட்டு தமிழ் குறுந்தேசிய வாதத்தை முன்தள்ளுகின்றனர். இதில் சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமும் பிரித்தானியர்களின் சூழ்ச்சியின் முக்கிய கருவான பிரித்தாளும் தந்திரத்தால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டதே ஒழிய தனிமையில் சிங்களவர்களால் உருவாக்கப்பட்டது என்று கூறிவிட முடியாது. எவ்வாறு சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைக்க சிங்கள மேட்டுக்குடி முன்வந்ததோ அதேபோன்று தமிழ் இனவாதத்தையும் விதைக்க தமிழ் மேட்டுக்குடியினர் முன்வந்தனர்.

altஉழைக்கும் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க இன்று மாலை 4மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற இருப்பதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

altஇலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  ஒருநாள் செலவாக இரண்டு கோடி ரூபாவை ஒதுக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதன்படி இலங்கையின் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில்  ஜனாதிபதியின் ஆண்டுச் செலவாக 740கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்னை பூமியை, கடல் தாயை, இயற்கையோடு இணைந்து வாழும் ஏழை மனிதர்களின் எளிய வாழ்க்கையை அழிக்க வேண்டாம் என்று தம் உயிர் வாழும் உரிமைக்காக போராடிய அந்தோணிசாமியும், சகாயமும் படுகொலை செய்யப்பட்டார்கள். பணக்காரர்களினதும், அரசியல்வாதிகளினதும் காலை நக்கும் தமிழ்நாட்டு காவல்துறை கம்மனாட்டிகள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பாராமல் எல்லோரையும் தாக்குகிறார்கள். கொலைகாரர்களிற்கும், கொள்ளைக்காரர்களிற்கும் சிறைசாலையில் கூட விருப்பமான உணவுகளை வாங்கிக்கொடுக்கும் காவல்துறை நாய்கள், ஏழைகளின் ஒருவேளை கஞ்சியைக்கூட காலில் போட்டு மிதிக்கின்றார்கள்.

altமுள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் வன்னியில் மீள்குடியேற்றங்களும் கடந்த மூன்றாண்டுகளாகவும் தொடர்ந்து நடந்துவருகின்றன.


மரிக்கானா படுகொலைகள் தென்னாபிரிக்காவின் உள்ளாந்த நெருக்கடிகளைப் புலப்படுத்துகின்றன

கடந்த ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவில் மரிக்கானா எனும் பகுதியில் உள்ள லொன்மின் பிளற்றினம் சுரங்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை தென்னாபிரிக்க அரசின் காவல் துறை சுட்டுத்தள்ளியது. இது நெல்சன் மண்டேலாவின் வானவில் தேசம் இன்றுள்ள நிலையை மீண்டும் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆபிரிக்கக் கண்டத்தின் மிகப் பலம்வாய்ந்ததும், அதேவேளை பல்லின சமூகங்கள் அமைதியாகவும் மரியாதையாகவும் வாழுவதுமான தேசம் என்ற பிம்பம் மெதுமெதுவாக உதிர்கிறது.

சிங்கள மக்களுடன் இணைந்து போராடுவதையும், அவர்கள் தமிழ் மக்களுக்காக போராட முற்படுவதையும், பலரும் தங்கள் தங்கள் நிலை அவர்களால் அங்கீகரிக்கப்படுதல் என்ற குறுகிய பார்வையூடாக அணுகுகின்றனர். நாங்கள் சரியாக தான் இருந்தோம், இருக்கின்றோம், அவர்கள் தான் தவறாக இருந்ததாக கருதிக்கொண்டு, காட்டிக்கொண்டு அணுக முற்படுகின்றனர்.

altதமது கோரிக்கைகளுக்கு அரசு உடனடித் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அடுத்தவாரமளவில் பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் களமிறங்குவதற்கு மருத்துவம், கல்வி ஆகிய துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் அவசர முடிவொன்றை எடுத்துள்ளன. இதனால் கல்வி, மருத்துவத்துறைப் பணிகள் அடுத்த வாரத்தில் முற்றாக ஸ்தம்பிதமடையும் அபாயநிலை காணப்படுகின்றது.

என்னையும் நின்னையும்
பகைமூழவைத்து உயிர்
பறித்தவர் சரித்திரம்
இலங்கையில் உறங்கும்.
உழைக்கும் எம்கரங்கள்
இணைந்தே வீறுகொண்டோங்கும்.
 
இணைந்து நாம் எழுந்தோம்
இனியொரு இனவாத
மதவாதக் கூற்றனுக்
கிங்கென்ன வேலை
எடு வேலை
எய்தவனை வீழ்த்து.

தோழர் சண்முகதாசன் அவர்களின்
“ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்”
நூல் அறிமுக மற்றும் விமர்சன அரங்கு

காலம் - 20th October 2012 , 3.00 P.M

இடம் - Walthamstow Quaker Meeting House, 1a Jewel Road, London E17 4QU

இறுதிப் போரில் காணமால் போன தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு பெற்றோர் கோரிக்கை விட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து மூன்றரை வருடங்களாகின்றது. இந்த மூன்று வருடங்களாக எத்தனையோ பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள் என தமது உறுவுக்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தமது உறவுகளை தொலைத்து விட்டு அவதியுறும் மக்களைப் பற்றி தழிழ் கட்சிகள் கவனத்தில் கொள்வது திருப்திகரமானதாக இல்லை. காணாமல் போனவர்களையிட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய தொடர்ச்சியான ஒரு போராட்டத்தினை, தளத்தில் இருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள், சக்திகள் மேற்க்கொள்ளாதது பெரும் அதிருப்தி தருவதாக இருக்கின்றது. இவர்கள் ஒரு தீர்க்கமான மக்கள் போராட்ட வடிவத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் செயற்படுபவர்களாகவும் இல்லை.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 26

சமூகத்தின் உரிமையை மறுத்த தனிமனித உரிமை  மீதான பாட்டாளி வாக்க சர்வாதிகாரம்

லெனினை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த டிராட்ஸ்கி, லெனினின் மரணத்தின் பின் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்ததுடன் சதியிலும் ஈடுபட்டான். லெனினியத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராகவே தொடச்சியாக செயல்பட்டான். லெனின் ஒரு நாட்டில் நடக்கும் புரட்சியையும், அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்கத்தின் பணியையும் தெளிவுபடுத்தியதுடன், டிராட்ஸ்கியம் போன்ற கோட்பாடுகளை முன் கூட்டியே அம்பலப்படுத்தினார்.

உழைக்கும் மக்கள் இன ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் எப்போதுமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதில் வர்க்க விடுதலை பற்றி விவாதிப்பவர்கள் போலவே, வெவ்வேறு வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் வெவ்வேறு பாதைகளை முன்வைக்கின்றனர். இவ்வாறான வெவ்வேறு திசை கொண்டவர்களிடத்தில் இருந்து ஒடுக்கப்பட்டும், சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்காகப் போராடக் கூடிய சித்தாந்தத்தை தேடியே இவ்வாக்கம் செல்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE