Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கடந்த இரு நாட்களாக வட-கிழக்கில், அரச படைகளின் அத்துமீறிய அராஜகம் மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கின்றது. தாம் நம்பியதோர் இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த தியாகிகளை நினைவு கூருவதை, சிங்களப் பேரினவாதம் ஒடுக்கும் வண்ணம் அரச பயங்கரவாதத்தை ஒரு இனத்தின் மீது ஏவியிருக்கின்றது.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பாக பேரினவாத வெறி கொண்டு வன்னியில் ஓர் மாபெரும் மனித வேள்வியை நடாத்திய அரசின் பிணந்தின்னிகள்தான், இலட்சோப இலட்சமாய் வடகிழக்கில் வாழும் எம்மக்களின் காவல் நாய்களாக உள்ளன. கழுதைகளுக்கு கற்பூர வாசனை தெரியாது. அதனால்தான் எம்மக்கள் தாம் பறிகொடுத்த தம் சொந்த-பந்த இரத்த உறவுகளை இந்நாளில் நினைவுகூர முற்படும் போது, அம்மக்களை காடைத்தனம் கொண்டு அடக்குகின்றது அரச பயங்கரவாதம். தங்கள் உறவுகளை நினைவு கூரவும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் கூட சுதந்திரம் கிடையாது. வட-கிழக்கின் சிவில் நிர்வாகம் இப்படித்தான் அம்மணமாகி இருக்கின்றது.

புலிகளின் "மாவீரர்" தினமன்று, வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் தீவிரமாகியது. இதற்கு சவால் விடும் வண்ணம் தீபம் ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் ஆங்காங்கே நடந்தேறியுள்ளது. இதற்கு எதிரான அரச வன்முறையை, ஆங்காங்கே அரங்கேற்றியும் இருக்கின்றது.

அரசுக்கு எதிரான இந்த உதிரியான எதிர்ப்பு நிகழ்வுகள் வெறும் இனத் "தேசியமாக" புலி சார்பு நிகழ்வுகளாக குறுக்கிக் காட்டி விட முடியாது. இப்படி இதை குறுந்தேசிய அரசியலாகக் காட்டி பிழைப்பவர்களுக்கும், அரச பாசிச நிழலில் ஒதுங்கி பிழைப்பவர்களுக்கும் இது எதிரானது. அதுபோல் மக்கள் அரசியலை முன்னெடுக்கத் தயாரற்றவர்களை, கேலி செய்தும் இருக்கின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி!! மாணவி காயம் ஐவர் கைது!!!

altநேற்று இராணுவத்தினர் யாழ். பல்லலைக்கழக பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகளை மிரட்டியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளை மாணவர்கள் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மாணவர்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் தாக்கியும் உள்ளனர்

altஇலங்கையில் நிலவும் கடும் பாதுகாப்பு நெருக்கடிக்கு இடையிலும் சிலர் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை அனுஸ்ட்டித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் குழுக்களாக பிரிந்து செயல்படும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பல இடங்களில் மாவீரர் தினத்தை அனுஸ்ட்டித்துள்ளனர்.

புலி "மாவீரர்" தினத்தை கொண்டாடுவதை தடுக்கும் ஒரேவிதமான சிந்தனை, ஒரே நோக்குடன் அமுலாகின்றது. இங்கு மக்கள் மேலான அடக்குமுறையுடன் கூடிய அதிகாரம் தான், வன்முறையுடன் திணிக்கப்படுகின்றது. இதற்குள் புலி "மாவீரர்" தினமும், ஆளுக்காள் குத்துவெட்டுகளும், கெடுபிடிகளும்.

இம் முறையும் மண்ணில் புலி "மாவீரர்" நாளை ஒட்டி தொடரும் இராணுவக் கெடுபிடிகள். இந்த இராணுவக் கெடுபிடிகளைப் பற்றி பேசியவர்கள் மீது, தாக்குதலை நடத்துகின்றது அரசு. வடக்கு கிழக்கில் நடக்கும் ஜனநாயக ஆட்சி என்பது, இராணுவத்தின் கெடுபிடி அதிகார ஆட்சிதான் என்பதை இது மீண்டும் தெள்ளத்தெளிவாக உறுதி செய்கின்றது.

மாவீரச் செல்வங்களை
மடியிருத்திக் காக்கின்ற ஈழமண்ணே
நீ வருந்தி
வெடிக்கும் விம்மல்
பாரொலிக்கக் கேட்கிறது
யார் வந்தார் எமைக் காக்க..?
எமை மீட்க..?

நின் வேர் பிளந்து,
விருட்சமெலாம் வீழ்ந்தழியக்
காத்திருந்த கூட்டம்
புலத்திருந்து,
கார்த்திகைப் பூப்போடுமென்றா
மாவீரர் துயிலுகிறார்..?

altஉலகில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் சிறைச்சாலையும் ஒன்று என்பார்கள். எதிரிகளிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்களில் பலர் ஏதேனும் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு சிறையில் போய் அமர்ந்து கொள்வது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நடப்பதுதான்.

கே. ஏ. சுப்பிரமணியம் நினைவாக—(5-3-1931---27-11-1989)

இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாற்றிலும் சரி, சாதிய-தீண்டாமைக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாற்றிலும் சரி கே.ஏ.சுப்பிரமணியம் அவர்கள் எப்பொழுதும் ஓர் முன்னேடியான செயற்பாட்டாளராகவும், போராளியாகவும் வாழ்ந்து பல தடங்களைப் பதித்துச் சென்றவர். தமிழர் சமுதாயத்தில் கடந்த மூன்று தசாப்தத்திற்கு மேல் நடைபெற்ற ஆயதப்போராட்டம் மக்களிற்கும், அவர்களின் விடுதலைக்கும் ஆனதல்ல.  ஆனால் 1966-ம் ஆண்டு பகுதிகளில் நடைபெற்ற சாதிய-தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறுகியகாலப் போராட்டங்கள்தான். ஆனால்  மக்களின் விடுதலைக்கு ஆனவைதான் என்பதை எதிர்வரும் பதிவுகளுக்கு ஊடாக காணமுடியும். இதில் கே.ஏ. அவர்களின் வரலாற்றுப் பாத்திரத்தை சொல்வதின் ஊடாகவும, அடக்கி-ஒடுகப்பட்டதோர் சமூகம் எத்தகையதோர் போராட்ட மார்க்கத்திற்கு (புரட்சிகர-வெகுஜனப் போராட்ட)  ஊடாக தன் விடுதலைப்பாதையை முன்னெடுத்து முன்னேற முடியும் என்பதையும் தொட்டுச் செல்ல விரும்புகின்றேன்.

altதமிழ் நாட்டின் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தெரிவித்திருந்த நிலையில் அதன் முதற்கட்ட விழிப்புனர்வு நடவடிக்கை இன்று மன்னார் நகரில் இடம்பெற்றது.

நான் தமிழ் நாட்டு அரசியல்வியாதி பேசுகிறேன். கம்யுனிஸ்ட்டு, திராவிடம், காங்கிரசுத் தேசியம், சாதிக்கட்சி, மதக்கட்சி என்று நாங்கள் பல கட்சிகளாக பிரிந்து இருந்தாலும்; எங்கள் எல்லோருக்கும் மக்களை, நாட்டை, இயற்கையை எப்படி கொள்ளையடிப்பது என்ற  ஒரே கொள்கை தான் என்பதை கூடங்குளத்தில் குண்டு போட்டால் என்ன? கூழ் குடிக்க கூட வழி இல்லாமல் குழந்தைகள் பட்டினி கிடந்தால் என்ன? படங்கள் திரையரங்குகளிற்கு வர முதலே நடிகன்களிற்கு ரசிகர்மன்றம் அமைக்கும் தமிழ்நாட்டு ரசிக கண்மணிகளிற்கும், குண்டுமழை பொழிந்து, குருதி வெள்ளம் ஒடிய ஈழமண்ணிலே கூத்தாடிகளின் கோவணத்தை தேசியக்கொடியாக தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்கும் விசிலடிச்சான் குஞ்சுகளிற்கும் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

altஇஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்திற்கு முன்பாக இன்று(23) பிற்பகல்1.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று மக்கள் போராட்ட இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

altமேற்காசிய பிராந்தியத்தில் அரசியல் போர்க் குரல்கள் ஒருபக்கம் அரசுகளை அலற வைத்துக் கொண்டிருக்கும்...வேலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ரத்தம் தோய்ந்த யுத்தம் ஓய்வுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் இன்று அறிவித்துள்ளது.

altமும்பையை தாக்கிய தீவிரவாதி கருதப்படும் அஜ்மல் கசாப் நேற்று தூக்கிலிடப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது.

மும்பையை தாக்கிய 10 தீவிரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப் என்று இந்திய நீதி மன்றம் முன்னரே அறிவித்துவிட்டது. அஜ்மல் கசாப் நேற்று காலையில் தூக்கிலிடப்பட்டார். அவரது கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

altகடந்த ஒரு வராகாலமாக இஸ்ரேலிய காட்டுமிராண்டிகளால் பாலஸ்த்தீனத்தில் அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் இதற்கு துணையாக நின்ற ஏகாதிபத்திய பிசாசுகளான ஐக்கி நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவின் ஆதரவை எதிர்த்தும் மக்கள் போராட்ட இயக்கம் நாளை வௌ்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.ஆர்ப்பபாட்டத்தில் அனைத்து இடது சாரிக் கட்சிகளும் கலந்து கொள்ளவிருக்கின்றன.என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக, மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்குமுள்ள உறவின் வரம்புக்குள் வைத்துப் பார்த்தாலும், மூலதனத்தின் நலன்களும் கூலியுழைப்பின் நலன்களும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை என்பதை நாம் காண்கிறோம். மூலதனத்தின் விரைவான வளர்ச்சி என்பது, இலாபத்தின் விரைவான வளர்ச்சியையே குறிக்கிறது. உழைப்பின் விலை, அதாவது ஒப்பீட்டுக் கூலி விரைவாகக் குறையும்போதுதான் இலாபம் விரைவாக அதிகரிக்க முடியும். பெயரளவு கூலி, அதாவது உழைப்பின் பணமதிப்பு உயரும்போது, கூடவே உண்மைக் கூலியும் உயரும். என்றாலும், இலாபம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் உண்மைக் கூலி உயரவில்லையெனில், ஒப்பீட்டுக் கூலி குறைந்துபோகலாம். எடுத்துக்காட்டாக, தொழில் வணிகம் நல்ல நிலையில் நடக்கும் காலங்களில், இலாபம் 30 சதவீதம் அதிகரிக்கும்போது, கூலி 5 சதவீதம் உயர்கிறது எனில், ஒப்பீட்டுக் கூலி குறைந்துள்ளதே அல்லாது அதிகரித்துவிடவில்லை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE