Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தேசாபிமானத்தால் மரத்துப்போன தெற்கிற்கு யாழ்ப்பாணம் என்பது அன்று போல் இன்றும் புலிகளின் முகாம் தான். அங்கிருக்கும் இராணுவம் மிருகத்தனமாக செயல்பட்டதும், செயல்படுவதும் 'தமிழர்"களுக்கு எதிரானது என்பதால் அது நியாயமானதாகும்." என்ற கருத்தியல் மாயையில் சிக்கியிருக்கும் தெற்கு மக்களை கொஞ்சம் தடடிக் கேட்போம்.

கடந்த 25ம் திகதி யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த இராணுவம் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் பேயாட்டம் ஆடியது உங்களுக்குத் தெரியும். இவ்வாறான சம்பவங்கள் தெற்கிலிருந்து வெளிவரும் 'தேசாபிமான பத்திரிகை"களுககு செய்தியாகத் தெரிவதில்லை....



வணக்கம்


இலங்கையில் வன்முறையால் ஜனநாயகம் கட்டிப்போடப்பட்டுள்ளது. இதனை இலங்கையின் இனவாத அரசு தனது படைகளை மக்கள் முன்னிறுத்தி ஆதிக்க அனியாயம் செய்கின்றது. இதனைத் தட்டிக் கேட்கும் நாதி என்பது அனைத்து இனங்களின் இணைவிலேதான் தங்கியுள்ளது. இந்த வன்முறை அரசினால் பாதிக்கப்படுகின்ற மக்கள் இலங்கையின் அனைத்து இனங்களிலும் உள்ளனர். இந்த அரச வன்முறைகள் தனித்து தமிழ் மக்கள் மீது மட்டும் கட்டவிழ்த்து விடப்பட்டவை அல்ல என்பதை மக்கள் நலம் சார்ந்த, இனங்களின் சுய இணைவை விரும்புகின்ற அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் நன்கு புரிந்தவர்களாகும். மக்களுக்கான ஊடகங்கம் என்பது அனைத்துப் பேதங்களையும் கடந்ததாகும். அதுவே பேதங்களினாலும் அநீதிகளினாலும் பாதிக்கப்படும் மக்களின் உற்ற நண்பனாகும்.  


யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இலங்கை அரச படைகளின் அடவாடித்தனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் தொடரும் நிலையில், தென்பகுதி மாணவ அமைப்புகள் ஒன்றாக இணைந்து நாடு தழுவிய போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் வேலையில் இறங்கியுள்ளன.


இந்நிலையில், தென்னிலங்கை மாணவ  அமைப்பு தலைவர்களுக்கும், அவற்றின் செயற்பாட்டாளர்களுக்கும் அரசபடைகளின் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்கள் விடப்பட்டிருக்கிறன. அவ் அச்சுறுத்தல்கள் தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும், பல்கலைக்கழகங்களின் தலைமைகள் ஊடாகவும் விடப்பட்டுள்ளது.

பரமலிங்கம் தர்ஷானந், கணேஷமூர்த்தி சுதர்ஷன், கனகசபாபதி ஜெயன், சண்முகம் சொலமன் ஆகிய நான்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (30.12.2012 ) கைது செய்யப்பட்டனர். இவர்கள் சம்பந்தமாக எந்தவித தகவல்களும் வெளிவராத நிலையில், முன்னிலை சோஷலிச கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் திரு.அஜித் குமார, இன்று மாலை யாழ். போலிஸ் அத்தியட்சகரை தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்ட மாணவர்களைப் பற்றி விசாரித்தார் . 

யாழ். பல்கலைக்கழகம்

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச ஆதரவு அரசியல் கட்சியொன்றின்(ஸ்ரீடெலோ) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதல் தொடர்பாகவும் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டியமைக்காகவும் சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் கூறினார்.

இவர்கள் நால்வரும் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு, டிஐடி என்று அழைக்கப்படுகின்ற பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்ததார்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஜனமேகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த தர்ஷானந்த், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சொலமன் மற்றும் மருத்துவபீடத்தைச் சேர்ந்த சுதர்சன் ஆகிய நான்கு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இலங்கை அரச படைகளின் அடவாடித்தனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும்  நடைபெறுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான .தர்ஷானந் (வயது24) நேற்று நள்ளிரவு கோப்பாய் பொலிஸாரால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து அவரது தயார் கூறுகையில்

"நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ் சீருடையில் வந்த நால்வர் வீட்டின் கதவைத் தட்டினர். பின்னர் தர்ஷானந்தின் அடையாள அட்டையை வாங்கிப் பரிசீலித்து விட்டு "வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தர்ஷானந்தை அழைத்துச் செல்லப் போகின்றோம்' என்று கூறினார்.

யாழ் பல்கலைக் கழக வளாகத்துக்குள் படையினர் உட் புகுந்து தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து பல்கலைக் கழக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த 27 ஆம் தேதி விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளையொட்டி பல்கலைக் கழகத்தில் நினைவு தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து படையினர் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து சோதனைகளை மேற்கொண்டனர். இதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

ஐநா சபையில் non-member observer state, அதாவது 'உறுப்புரிமை அற்ற பார்வையாளர்' என்ற அந்தஸ்து கிடைத்துள்ளதை பாலஸ்தீனியர்கள் கொண்டாடுகிறார்கள்.

மேற்குகரையில் ரமல்லா நகரிலுள்ள யாசீர் அரபாத் சதுக்கத்தில் பாரம்பரிய இசைமுழங்க, பாரம்பரிய நடனங்களை ஆடியபடி,மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நேற்று மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைகழகத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்தும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் நடந்த ஆர்பாட்டம்.

தமிழர்களை ஒடுக்குவதை சிங்கள மக்கள் எதிர்ப்பதில்லை என்ற தமிழ் இனவாத பிரச்சாரத்துக்கு, சவால் விட்டுள்ளது சிங்கள மக்களின் போராட்டம். யாழ் பல்கலைக்கழகம் மீதான அரச பயங்கரவாதம் நடந்த அடுத்தநாளே, அதற்கு எதிரான போராட்டத்தை சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மாணவர்கள் நடத்தியிருக்கின்றனர். இதை தமிழ் இனவாதிகளும் விரும்பவில்லை, பேரினவாதிகளும் விரும்பவில்லை. தமிழ் - சிங்களம் என்று தனித்து இனரீதியான "வர்க்கப்" போராட்டம் நடத்தப் போவதாக கூறுகின்றவர்களும் கூட இதை விரும்பவில்லை. இந்த வகையில் நடந்த போராட்டத்தை அனைத்துத் தரப்பும் இருட்டடிப்பு செய்கின்றனர். அனைத்து இனரீதியான செயற்பாடுகளுக்கும், அரசியலுக்கும் இது சவால் விட்டுள்ளது. தொடங்க இருக்கும் போராட்டத்தில் முதல் பக்கம் இது.

யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டமையை வன்மையாக்க் கண்டிக்கும் அனைத்து பல்லைகழக மாணவர் ஒன்றியம், வடக்கில் மட்டுமல்ல அனைத்து மக்களினதும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடத் தயார் எனக் கூறுகிறது.

யாழ்- பல்கலைக் கழக மாணவர்களை இலக்கு வைத்து ராணுவமும் பொலிசாரும் நடாத்திய இரண்டு நாட்களிலான அராஜகத் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். இத்தாக்குதல்கள் மாணவர்கள் மீதான தாக்குதல் மட்டுமின்றி அனைத்துத் தமிழ் மக்களையும் அச்சுறுத்தி அடக்கி வைத்திருப்பதற்கான கொடூரக் தாக்குதலாகும். இது தமிழ் மக்கள் மீதான பேரினவாத  ராணுவ ஒடுக்கு முறை நீடிக்கப்பட்டு வருவதையே வெளிகாட்டியுள்ளது.

இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று வியாழக்கிழமை யாழ் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் தமது வலைகளை அறுத்து நாசம் செய்வதாகவும், இதனால் தாங்கள் தொழிலில் ஈடுபட முடியாதிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, முன்னிலை சோஷலிச கட்சியின் மாணவர் அமைப்பும், வேறு சில ஜனநாயக சக்திகளும் இணைந்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் இன்று மேற்கொண்டனர். இதனால் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் இஸ்தம்பிதம் அடைந்தது

கடந்த இரு நாட்களாக வட-கிழக்கில், அரச படைகளின் அத்துமீறிய அராஜகம் மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கின்றது. தாம் நம்பியதோர் இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த தியாகிகளை நினைவு கூருவதை, சிங்களப் பேரினவாதம் ஒடுக்கும் வண்ணம் அரச பயங்கரவாதத்தை ஒரு இனத்தின் மீது ஏவியிருக்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE