Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

குறிப்பு:

தற்போது வடக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலைக்காக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொது இடங்களிலும் பல போரட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுப் கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானவைகளில் ஒன்றாகக் கருதப்படுவது, சிங்கள மற்றும் தென்னிலங்கை மாணவர்களின் ஆதரவுப்போராட்டங்கள். இந்த போராட்டங்களை தமது குறுந்தேசிய புலிப்போராட்டங்களாக சித்தரிக்க முயலுபவர்கள், தேர்தல் அரசியலை முன்னெடுக்க இந்த போராட்டங்களை உபயோகிப்போர் எனப் பல தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயநலனில் நின்று இயங்குகின்றனர். அவர்களில் ஒருவர், திரு.மனோ கணேஷன். அவர் மார்க்ஸ்சிசத்தின் மீதான அவதூறை மட்டுமல்ல, தென்னிலங்கையில் போராட்டங்களை முன்னெடுக்கும் சக்திகள் மீதும் அரசியல் சேறடிப்பை நிகழ்த்துகிறார். கீழ்வரும் குறிப்பு தோழர். ரிச்சார்ட் அவர்களால் முகபுத்தகத்தில் எழுதப்பட்டது.

சமவுரிமை இயக்கத்தின் பத்திரிகையாளர் மநாடு பகுதி 2

கடந்த 27-28-29-30 ம் திகதிகளில் யாழ்ப்பாண பழ்கலைக்கழகத்தில் பாரிய அத்து மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன.மாணவ தலைவர்கள் செயலாளர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளர் இன்று வரைக்கும் எதுவித விசாரனையும் நடத்தப்படவில்லை.இறந்த தங்களது உறவினர்களுக்காக தீபம் ஏற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தரால் காடைத்தனமான அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டுள்ளது.போலி அபிவிருத்தியைக் காட்டி இளைஞர்களை அவர்களது வலையில் சிக்க வைக்க இந்த அரசு எத்தனிக்கிறது.

அடக்குமுறைக்கெதிராக போராடும் தமிழ் தேசிய இனத்தின் துடிப்பான மாணவர் மற்றும் இளையோர் அணிகளை கலாச்சார சீரழிவுகள் மூலம் திசை திருப்பி, அல்லது அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்குகின்றது ஸ்ரீ லங்கா பேரினவாத பாசிச அரசு. இதன் மூலம் தமிழ் தேசிய இனம், தனது அடிப்படை உரிமைகளை கூட ஸ்ரீ லங்கா பேரினவாத பாசிச அரசிடமிருந்து போராடாமல் பெறமுடியாது என்று மீண்டும் மீண்டும் அடித்துக்கூறுகிறது.

சமவுரிமை இயக்கத்தின் பத்திரிகையாளர் மநாடு பகுதி 1

தெற்கில் இருக்கும் சிங்களவர்கள் அனுபவிக்கும் உரிமைகள் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இல்லை.அது அரச பாதுகாப்பு படையினரால் பறிக்கப்பட்டுள்ளது.வடக்கில் உரிமை கேட்டு போராடுபவர்களுக்கு ஒயில் வீசப்படுகின்றது, கடத்தப்படுகின்றார்கள், கொலைசெய்யப்படுகின்றார்கள். இவை அனைத்தையும் அரச படைகளே செய்து கொண்டிருக்கின்றது. குடும்பங்களை புகைப்படம் எடுக்கும் திட்டத்தை உலகில் ஜேர்மனியில் உள்ள நாசிகளே முதலில் பாவித்தார்கள். அதே மிலேச்சத்தனமான நடவடிக்கையையே ராஜபக்ச அரசாங்கம் பயன் படுத்துகின்றது. நீங்கள் உரிமை கேட்டு பேச வேண்டாம் மீறி பேசினால் உங்களை கொலைசெய்வோம்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், CID - புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் ஒரு மாணவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை ஒரு மாதம் தடுப்புக்காவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவேளையில் கைது செய்யப்பட்ட மருத்துவபீட மாணவன் க. சுதர்சன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. மிகுதி மூவருமே ஒரு மாத காலம் தடுப்புக்காவில் வைக்கப்பட உள்ளனர்.

 

சமஉரிமை இயக்கத்தினால் நடாத்தப்பட்ட விசேட பத்திரிகையாளர் மாநாடு இன்று காலை பத்து மணியளவில் கொழும்பு மருதானை சமூக மற்றும் மதங்கள் கேந்திர நியைத்தில் நடைபெற்றது. இம்மாநாடு தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தியும், வடக்கில் நடைபெறும் போராட்டங்கள் பற்றியும் தென்பகுதி மக்களுக்கு விளக்கும் ஊடகப் பிரச்சாரமாகவும் சமஉரிமை இயக்கம் முன்னெடுத்துள்ளது. இதில் சகல தமிழ்-சிங்கள ஊடகங்களும் கலந்து கொண்டன.

இன்ரநெற்றும், சற்றலைற்றும் இல்லாத ஆயிரத்து தொளாயிரத்து ஆரம்பத்தில் ஒருநாள்.

பேய் மழை அடித்து ஊத்திக் கொண்டிருந்தது. யுத்த விமானங்களோ அல்லது பீரங்கிகளோ வீசும் குண்டுகளைப் போல இடி காதைப் பிளந்தது. மின்னல் அகோரமாய் வெட்டிக் கொண்டிருந்தது.

மற்றும்படி மத்தியான நேரத்துக்கு ஒவ்வாத இருட்டு. மழை தொடர்ந்தும், சத்தமாயும்பெய்தது.

மரங்கள் முறிந்து தாறுமாறாய் விழுந்தன. வெள்ளம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் கரை புரண்டது. ஒழுங்கைகள் எதுவும் தெரியாதபடி எங்கும் வெள்ளம்.

பள்ளக்குடி ஊரில், வெளியில் மழையில் மாட்டிக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தங்களது கூரைகளுக்குக் கீழிருந்து மழையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழ்த்தரப்பிற்கு ஓர் ஐயம் இருந்தது! கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்-பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக போராடுவார்களா என?… இதை கிழக்கு பல்கலைக்கழக தமிழ்-சிங்கள மாணவர்கள் ஐயத்திற்கு இடமின்றி முறியடித்துள்ளனர். இதைவிட தமிழ்த்தரப்பிற்கு உள்ள அடுத்தொரு கவலை மாணவர்கள் போராட்டம் சிங்கள மக்களை உள்ளடக்கிய நாடுதளுவிய போராட்டங்களாக நடைபெறக்கூடாது என்பதாகும். இக்கவலை அரச தரப்பிற்கும் இல்லாமல் இல்லை. இந்நிலை கொண்ட செயற்பாடுகளே தற்போது தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் கைது!

யாழில் மடிந்த போராளிகளை நினைவு கூரும் பொருட்டு ஓழங்கு செய்யப்பட்ட கூட்டமானது ஆயுதபடைகளில் சிதறடிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நடைபெற்ற போராட்டங்களில் எத்தனையோ போராளிகளையும், பொதுமக்களையும் அரச படைகள் காவுகொண்டுள்ளது. இன்று இறந்த மனிதர்களை வெவ்வேறு தளங்களில் தத்தம் அரசியல் நிலைப்பாடுகளின் படி நினைவு கூறுகின்றார்கள். நினைவு கூரல் வெறும் சம்பிரதாயத்திற்கு உட்பட்டதாக இருக்கின்றது. ஆனாலும், போராட்டத்தில் இறந்த மக்களும், போராளிளும் ஆதிக்க அரசியல் கருத்துக்கு எதிர்நிலையில் இருந்ததினால் கொல்லப்பட்டுள்ளனர். ஓடுக்கப்பட்டோர் நலம் சார்ந்த அரசியல் கருத்தை அழிக்க முடியும் என்ற குருட்டு நம்பிக்கையால், ஆயுதப்படைகளினால் இவர்கள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் இறந்த போராளிகளையும், மக்களையும் நினைவு கூர்வது அடிப்படை மனித உரிமையாகும்.

 

தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதற்கான வேலைகள் நடைபெறும் இவ்வேளையில், தென்னிலங்கை மாணவர் தலைவர்கள் அரசபடைகள், மற்றும் புலனாய்வு பிரிவாலும், மஹிந்த அரசின்  பங்காளி கட்சிகளாலும் பலவகை அழுத்தங்களுக்கு உள்ளாக்கபடுகின்றனர்.

altமன்னாரில் சில பகுதிகளில் திடீரென ஆயுததாரிகள் சுற்றிவளைத்து அப்பகுதியில் தங்கியிருக்கும் இளைஞர்களைக் கைது செய்து இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

altயாழ். பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்தும் நாட்டிலுள்ள சகல பல்கலைக் கழகங்களும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று நாம் செய்தி வெளியிட்டபடி பரமலிங்கம் தர்ஷானந், கணேஷமூர்த்தி சுதர்ஷன், கனகசபாபதி ஜெயன், சண்முகம் சொலமன் ஆகிய நான்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் வவுனியாவில் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கபட்டுள்ளனர். மாணவர்களில் நிலை பற்றி எந்தவித தகவல்களும் வெளிவராத நிலையில், முன்னிலை சோஷலிச கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் திரு.அஜித் குமார, நேற்று மாலை01.12.2012, யாழ். போலிஸ் அத்தியட்சகரை தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்ட மாணவர்களைப் பற்றி விசாரித்தார். யாழ் பொலிஸ் அத்தியட்சகர், பாராளுமன்ற உறுப்பினர் திரு. அஜித் குமாரவுக்கு பதிலளிக்கையில், மேற்படி மாணவர்களை, CID புலனாய்வுப்பிரிவு கைது செய்ததாகவும், அதற்கு போலீஸ் உதவி புரிந்ததாகவும், கூறியதுடன் தற்போது அவர்கள் புலனாவுப்பிரிவினரால் வவுனியாவில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு 24 மணிநேரம்  ஆனபோதும் அவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என முன்னிலை  சோஷலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 24 மணித்துயாலத்திற்குள் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பது சட்டம் எனவும், ஆனால் இம் மாணவர்கள் இதுவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை என அக்கட்சி குற்றஞ்  சுமத்தியுள்ளது.

யாழ் -பல்கலைக்கழக மாணவர் விடுதியில் படையினர் அத்துமீறி உட்புகுந்த சம்பவத்தில், படையினரால் உதயன் பத்திரிகை ஆசிரியர் தேவநாதன் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த தாக்குதலைக் கண்டித்தும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE