Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இராணுவத்தில் சேர்க்கப்பட்டு சுகவீனம் உற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 தமிழ் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் எவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.


 

அந்தப் பெண்கள் உள்மன முரண்பாடு என்னும் உள நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், போருக்கு பின்னரான நிலையில் வன்னியில் பல இடங்களில் இப்படியாக பாதிக்கப்பட்டவர்களை தான் பார்த்திருப்பதாகவும் வவுனியா மருத்துவமனையின் உளநல மருத்துவரான டாக்டர் . சிவசுப்ரமணியம் சிவதாஸ் கூறுகிறார்.

டாக்டர். எஸ். சிவதாஸ் செவ்வி

மாற்று மீடியா வடிவில் இயக்க

இராணுவத்தினரால் அந்தப் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான எந்தவிதமான ஆதாரங்களையும் தான் அவர்களிடம் காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உண்மையில் தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற வகையில் அடிக்கடி ஊடகங்களில் வரும் செய்திகள் தம்மை மிகவும் மோசமாகப் பாதித்திருப்பதாகவும், உண்மையில் அப்படியான நிகழ்வுகள் எதுவும் தமக்கு ஏற்படவில்லை என்றும் அந்தப் பெண்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தான் தமிழ் தேசியத்தை ஆதரிப்பவன் என்ற வகையில் இராணுவம் இவ்வளவு அவசரமாக பெண்களை பணிக்கு சேர்த்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்கின்ற போதிலும், ஒரு மருத்துவன் என்ற வகையில் இந்தப் பெண்கள் எந்த வகையிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்பதை உலகுக்கு சொல்ல வேண்டிய கடமை தனக்கு உண்டு என்றும் டாக்டர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

முன்னிலை சோஷலிச கட்சியின் முன்னணிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் இனவாதத்திற்றிற்கு எதிராக இயங்கும் அமைப்பான சமவுரிமை இயக்கம், மார்கழி 18 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை, கொழும்பு புகையிரத நிலையத்திற்கு எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்தவுள்ளது.

சக மனிதர்கள் இன்னொரு மொழியை பேசுகிறார்கள் என்பதனாலேயே அவர்களை கொல்லப்பட வேண்டியவர்கள். அவர்கள் வேறொரு பண்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்பதால் கீழ்ப்பட்டவர்கள். பிறிதொரு மதத்தை பின்பற்றுவதால் கேலி செய்யப்பட வேண்டியவர்கள். நாங்கள் கத்தரிக்காயை சாப்பிடுபதால் உயர்ந்தசாதியினர், அவர்கள் கணவாய் உண்பவர்கள் தாழ்ந்த சாதியினர், மூடச்சிங்களவன், பறத்தமிழன், கள்ளத்தோணி இந்தியத்தமிழன், தொப்பிபிரட்டி முஸ்லீம்கள் என்று பட்டங்கள். இப்படியான மண்டை கழண்ட சிந்தனைகள் மூலம் மக்களை பிரித்து ஒருத்தரை ஒருவர் வெறுக்கச் செய்து அதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சனையான பொருளாதாரப் பிரச்சனைகளிற்கு மற்றவர்கள் தான் காரணம் என்று மனங்களை மதிமயங்க வைத்து இலங்கைத்தீவு எங்கும் இரத்த வெள்ளம் ஓட வைத்தார்கள்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், வடக்கு கிழக்கில் அரசால் நடத்தப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும் வவுனியா நகரில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது!.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேசியக் கூட்மைப்பின் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்கி ஆனந்தன் ஆகியோரும், தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பாக கஜேந்திரகுமார் கஜேந்திரனும், புளொட் சார்பாக அதன் தலைவர் சித்தார்த்தனும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக பாஸ்கரா, புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிய கட்சியின் சார்பில் செந்திவேல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு தமது கண்டனங்களைத் தெரிவித்தனர்.

altஇணுவில் சந்தியில் தாய் மற்றும் சகோதரியுடன் ஆட்டோவில் வந்த இளைஞர் ஒருவர் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு 8.15 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சம்பவ இடத்தில் கூடியிருந்த பொதுமக்களை கலைந்து செல்லும் படி கூறியதுடன் இராணுவத்தினரால் எவ்வித நடவடிக்கைளும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சுன்னாகம் கந்தரோடை ஐயநார் வீதி வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் மரணமான இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு மரணமான பெண் யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான 21வயதுடைய நடராசா கியானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 இனவாதம் குறுகியதும், வக்கிரமானதுமாகும். இதில் சிறுபான்மை பெரும்பான்மை என்று எந்த வேறுபாடு இன்றி அது ஒரே தன்மை கொண்டது. ஒடுக்கும், ஒடுக்கப்படும் என்ற எந்த வேறுபாடும் இன்றி, ஒத்ததன்மை கொண்டது. இனவாதம் சமூகத்தில் நிலவும் பிற சமூக ஒடுக்குமுறைகளைச் சார்ந்து, தன்னை முன்னிறுத்தி இயங்குகின்றது. இனவாதம் சுரண்டும் வர்க்கத்தை மூடிமறைத்தபடி, அதை பாதுகாத்து முன்னெடுக்கும் பிற்போக்கு கோட்பாடாகவும் இயங்குகின்றது. இனவாதம் அரசியல்ரீதியாக ஏகாதிபத்தியத் தன்மை கொண்டது. இனவாதம் என்பது தேசியவாதமல்ல. முதலாளித்துவ தேசியவாதம் என்பது இனவாதமல்ல. சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் படுபிற்போக்கான கூறுகளைக் கொண்டு, தன்னை வெளிப்படுவது தான் இனவாதம்.

இரு இணையச் செய்திகள்

"பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் மனநோயாளி என்று அனுமதித்துள்ளார்கள்!

பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட 100பெண்களில் 21பெண்களுக்கு என்ன நடந்தது? 30 பெண்களை கிளிநொச்சிவைத்தியசாலையில் அனுமதித்தோம் என்று இராணுவம் கூறியது பொய்!

அப்படி என்றால் 9 பெண்களுக்கு என்னநடந்தது? பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை... அதிர்வு இணையத்துக்கு வழங்கிய இரகசியத்தகவல்"

16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில்: மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?"

கோரமான மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள இனப்படுகொலையில் இராணுவத்தினர் வவுனியா இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரம் வரையான இராணுவத்தினர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை வாபஸ்பெறுமாறு கோரி, இலங்கையின் பல பாகங்களிலும் சட்டத்தரணிகள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த தீர்மானத்துக்கு எதிராக சுமார் ஒரு மணிநேரம் பணி பகிஷ்கரிப்பை மேற்கொள்ளுமாறு நாடெங்கிலும் உள்ள சட்டத்தரணிகளை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டிருந்தது.

மனிதம் உறங்கியது மிருகம் விழித்துக் கொண்டது..- வெலிக்கடை சிறைச்சாலை பயங்கரம்

அன்று நவம்பர் 9ம் திகதி. வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள பாதையில் வாகனங்கள் வேகமாக போவதும் வருவதுமாக இருந்தன. விஷேட வாகனங்கள் சில திடீரென சிறைச்சாலை வாசலின் முன்னால் நிறுத்தப்பட்டன.

விஷேட அதிரடிப் படைக்குச் சொந்தமான வாகனங்கள் என்பதால் அனைனவரின் கவனமும் அந்தப்பக்கம் திரும்பியது. அதிலிருந்து இறங்கிய STF வீரர்கள் திடு திடுவென சிறைச்சாலைக்குள் நுழைந்தார்கள்.விஷேட அதிரடிப்படை (STF) போலிஸ் மா அதிபரின் கீழ் செயற்பட்டாலும், இந்த விஷேட நடவடிக்கைக்கு விஷேட அதிரடிப்படை வருவதை போலிஸ் மா அதிபர் இலங்ககோன் அறிந்திருக்வில்லை என்பது பிரபலமான தகவல்.

பசுமையான வெளிகளும்

பச்சையான மரங்களும்

கரிய அமிலக் காற்றை

அதிகமாக அருந்த மறுக்கின்றன.

சுத்தமான பிராண வாயுவை

எப்போதும் அருந்துகின்ற உயிரினங்கள்

மூச்செடுக்க முடியாமல் தவிக்கின்றன.

இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம் வீரகட்டிய பகுதியில் ஜீவனாலோக சபை என்ற கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த கூட்டம் ஒன்றினால் ஞாயிறன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதெனக் குற்றம்சாட்டபடுகிறது.

மக்கள் போராட்ட இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் ஆர்பாட்ட பேரணி கொழும்பில் நடைபெறுகிறது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் கடத்தப்பட்டமைக்கு எதிராகவும் அவர்களை விடுதலை செய்யமாறு கோரியும் மற்றும் கடத்தல், காரணமற்ற கைதுகள், இனவாத நெருக்கடிகளைகள், காணாமலாக்குதலை போன்றவற்றைக் கண்டித்தும், இவற்றை நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காகவும் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு டெக்னிகல் சந்தியிலிருந்து மக்களை வாழவிடு என்ற கோசத்துடன், கோட்டை புகையிரத நிலையம்வரையான நடைப்பயணமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இங்கே படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (மேலதிக விபரங்கள் விரைவில் )

யாழ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்களை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் கிளிநொச்சி பிரதேசசபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய், இராணுவமே வெளியேறு, போன்ற கோசங்கள், பாதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

altஉலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

altயாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்தார்.

மருத்துவ பீட மாணவர்கள் ஐவர் மற்றும் விஞ்ஞான பீட மாணவர்கள் இருவருமே நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சஞ்ஜீவ பண்டார தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE