Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தற்போதைய பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் நிறைவேற்று அதிகாரத்தையும் பயன்படுத்தி சகல அதிகாரங்களையும் தங்களது கைகளுக்கு எடுத்து அப்பட்டமான குடும்ப சர்வாதிகாரத்தை முன்னெடுப்பதே ராஜபக்ஷ ஆட்சியினரது குறிக்கோளாகும். அதன் அடிப்படையிலேயே ஜனநாயகமும், மனித உரிமைகளும் மக்களின் அன்றாட வாழ்வுரிமைகளும் கால்களில் போட்டு மிதிக்கப்பட்டு வருகின்றன.

நிவிநெகும சட்ட மூலத்தினை மூன்றில்  இரண்டு பெரும்பான்மையினால் இன்று (08) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றியன் ஊடாக மிகுதியாக இருந்த கொஞ்ச நஞ்சு ஜனநாயக அலகினுயும் அழித்துள்ளது.


யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்து ஒரு மாதம் ஆகின்றது. மாணவர்களின் கைது பற்றி தமிழ் மக்களிடமும் எடுத்துச் செல்லாமலும், அரசிற்கும் இடையூறு செய்யாமலும் வெகு பௌவியமாக நடந்து கொள்ளும் தமிழ் “தேசிய”வாதிகளை இட்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மாணவர்களின் கைதினைத் தொடர்ந்து தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற நிலை கண்டிக்கப்பட வேண்டும்.


மாணவர்களின் நினைவு கூறல் நிகழ்வுகள் தன்னெழுச்சிக்கும் உட்பட்டதாக கவனிக்கப்பட வேண்டும். சிலர் திட்டமிட்டு இருக்கலாம். மாவீரர் தினத்தினை நினைவு கூர்வதற்கு சில அரசியல் “சக்திகள்” பின்புலனாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த நினைவு நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களின் தொகையினை தீர்மானித்தது மாணவர்களின் தன்னெழுச்சிதான். மாணவர்களின் எழுச்சிப் பாடல்கள், நினைவலைகள் எல்லாம் தன்னியல்பானது. இதனால் மாணவர்களின் மாவீரர் தின நிகழ்வு என்பது தன்னெழுச்சியானதாகும்.

 

அழகிய மழைக் காடுகளை

வல்லரசார் அழித்தபோது

மிக மலிவாகப் பலகை வகை

வாங்கிடலாம் கெதியாக என

ஆய்வுகள் செய்த சிலர்

அதைவிடவும் மினுக்கான

ஆடம்பரத் தளபாடங்களை

தம் சொத்தாக்கிக் கொண்டார்கள்.

இறங்கிப்பார் தெருவில்

நெஞ்சில் ஈரமாவது ஊறும்

ஏங்கும் சனத்தின் குரல்கள் எழுந்தால்,

தூங்காதிருக்கும்

கழுகார் முழிகளில்

பொறாமைப் பொறிகள் தெறிக்கும்

 

வறுமையையும் பேசும்

வாழ்வின் இடரெல்லாம் கண்டு

வருந்துவதாய் நீலிக்கண்ணீர் சொரியும்

உலகத்தெருவெலாம்

உழைப்பவன் குரலொலித்தால்

தானும் ஒன்றுபட்டதாய் அலறும்

குந்தியிருந்து

ஏழனச்சிரிப்பொடு பிதற்றி முனகும்

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அளிக்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

கல்வி நிலையங்களை இராணுவமயமாக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமே இந்தப் பயிற்சி என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டுகிறது.

altசட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சை தொடர்பில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து சிலர் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூக்கிப் பிடிக்கும் நோக்கத்துடன்  கருத்து தெரிவித்து வருவதாக சம உரிமை இயக்கம் கூறுகிறது. ஜனவரி 3ம் திகதி நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய மின்சாரத் துறை அமைச்சர் சம்பிக ரணவக வெளியிட்ட கருத்து சம்பந்தமாக  கருத்து தெரிவிக்கும் போதே சம உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்ர முதலிகே மேற்கண்டவாறு கூறினார்.

வெக்கை தாங்காமல் நாய்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரிகிற மத்தியான நேரத்திலே மாணிக்கம் அப்புவின் கடை தாழ்வாரத்திலே செல்வராசா வாத்தியாரும் கூட்டாளிகளும் ஆடு-புலி ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். செல்வராசா வாத்தியார் எப்பவும் ஆடு-புலி ஆட்டத்தில் ஆட்டிற்கு தான் காய் வைப்பார். பெரும்பாலும் புலியை ஆடுகளைக் கொண்டு நகர முடியாமல் செய்து விடுவார். விளையாட்டிலே புலியை அடக்கும் அவரால் அவரது துவக்கை வைத்து ஒரு புறாவைக் கூட சுட முடியவில்லை. இயக்கங்களும், இராணுவமும் ஊர்களிற்குள்ளே திரிய முதல் துவக்கு வைத்திருந்த ஒரு சிலரில் அவரும் ஒருவர். எப்பிடியோ அனுமதிப்பத்திரம் எடுத்து ஆசை, ஆசையாக ஒரு shotgun வாங்கினார். முதன்முதலில் வைத்திலிங்கத்தாரின் வெறிநாயை சுட கூப்பிட்டார்கள். ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்க வாத்தியார் ஒரு வேட்டைக்காரனின் மிடுக்குடன் கம்பீரமாக வந்து பூவரசு மரத்திலே கட்டி நின்ற நாய்க்கு குறி வைத்து சுட்டார். நாலைந்து தோட்டாக்கள் வீணாய்ப் போனது தான் மிச்சம், கட்டி நின்ற நாயிலே ஒரு குண்டு கூடப்படவில்லை. பார்த்துக் கொண்டு நின்ற வைத்திலிங்கத்தாரிற்கு கொதி தலைக்கேறி உலக்கையாலே நாய்க்கு ஒரு அடி போட்டார்.

தமிழ், சிங்கள மொழி பேசும் மக்கள் இணைந்ததான புதிய வரவு தான் "போராட்டம்"பத்திரிகை. ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, இனவாதிகளுக்கு எதிராக, எல்லாவகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக “போராட்டம்” போராடும்.

இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் இது வெளியாகின்றது. மக்களை வழிகாட்டக் கூடிய முற்போக்கான தமிழ் பத்திரிகை இல்லாமையை இது நிவர்த்தி செய்யும். இந்த வகையில் "போராட்டம்" பத்திரிகை இலங்கையில் இருந்து பல்வேறு தடைகளைக் கடந்து வெளிவருகின்றது.

இன்றைய முதலாளித்துவ அரசாங்கத்தின் இருப்பிற்கு பிரச்சினைகள் வரும்போது நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக புதிய புதிய உத்திகளை அரசாங்கம் கையாண்டு வருகிறது. 2013க்கான வரவு செலவு திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதுஇ நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் நீதி விசாரணைக்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

altசுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழ், சிங்கள மொழி பேசும் மக்கள் இணைந்ததான புதிய வரவு தான் "போராட்டம்" பத்திரிகை. ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, இனவாதிகளுக்கு எதிராக, எல்லாவகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக “போராட்டம்” போராடும்.

இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் இது வெளியாகின்றது. மக்களை வழிகாட்டக் கூடிய முற்போக்கான தமிழ் பத்திரிகை இல்லாமையை இது நிவர்த்தி செய்யும். இந்த வகையில் "போராட்டம்" பத்திரிகை இலங்கையில் இருந்து பல்வேறு தடைகளைக் கடந்து வெளிவருகின்றது.

இராணுவத்தினரை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க அனுமதிப்பது தவறு என ஆசிரியர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.

 

இலங்கையில் சீனாவின் மேலாதிக்கம் எல்லை மீறுமானால் தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும், வல்லரசு நாடுகள் இலங்கையைத் துண்டாடி தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். இவ்வாறு நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார்.

முள்ளிவாய்காலில் இடம்பெற்ற கொலைக்களுக்கு பொறுப்புக் கூறும் கடமை இவருக்கு உண்டு. இவர் எந்த உளவுப்படையின் பின்னால் நின்றார்? நிற்கின்றார்? இறுதிக் காலத்தில் நடேசனால் தொடர்பு கொள்ளப்பட்ட குறிப்பிட்ட நபர்களில் இவரும் ஒருவர். இந்த இந்திய அரச கைக்கூலி மறுபடியும் கனவான் அரசியலை முன்நிறுத்தும் முனைப்புடன் அரங்கிற்கு வருகின்றார். தமிழகத்தில் இருந்து எத்தனையோ அரசியல் கோமாளிகள் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுப்பாகக் கூறி தமிழக இளைஞர்களிடையே வெறும் உணர்ச்சியை தூண்டிக் கொண்டிருக்கின்ற வேளையில் போட்டியாக மீண்டும் நுளைகின்றார் இந்த ஜெகத் கஸ்பார்.

வெள்ளத்தினால் விளைச்சல்கள் நாசமடைந்த விவசாயிகளுக் இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாய போராட்ட இயக்கத்தின் நடவடிக்கைக் குழு உறுப்பினர் திரு. எஸ்.கே. சுபசிங்க கூறினார்.

 அரசாங்கம் தனது அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து விவசாயிகளை ஓரங்கட்டி வருவதானால் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாதெனவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒருங்கிணையுமாறும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது திரு. சுபசுங்க கேட்டுக் கொண்டார். மேற்படி ஊடக சந்திப்பினபோது விவசாய போராட்ட இயக்கத்தின் நடவடிக்கைக் குழு உறுப்பினர் திரு.ஜே.பீ.ரன்தெனியவும் சமுகளித்திருந்தார்.

அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது.

தடுத்து வைத்துள்ள  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் அதிகாரம் வாய்ந்தோர் விடுவிப்பதன் மூலம் சர்வதேச சமுதாயத்திற்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்த இடமில்லாமல் செய்யமுடியும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE