Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட குர்திஸ் போராளிகளின் பூதவுடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பல்லின மக்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வு குர்திஸ் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நகரான டியார்பகிரில் உள்ள முக்கிய சதுக்கத்தில் நடைபெற்றது

பௌத்த பிக்குமார் குழு ஒன்று புடவைக்கடை ஒன்றுக்குள் புக முயற்சித்த சம்பவத்தை பொலிஸார் தடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை கொழும்பின் புறநகர் மஹரகமவில் இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட பௌத்த பிக்குமாரே இந்தக் கடைக்குள் புகுவதற்கு முயற்சித்துள்ளனர். இதன் காரணமாக பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் குறித்தக்கடைக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் மோசமான வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த வருடத்தில் உலகின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் டாலர்கள் எனவும் அது கூறியுள்ளது. அதற்கு மாறாக உலகில் மிகவும் மோசமான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒன்றேகால் டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்வதாகவும் அது கூறியுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள சட்ட விரோதமான முறையில் அபகரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் உள்ள பல தனியார் காணிகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.

அவர்களது உறவினர்களின் பராமரிப்பில் உள்ள காணிகளே அரச ஆளும் தரப்புக் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் சிலரால் அபகரிக்கப்படும் சம்பவங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. காணிகளைப் பராமரித்து வரும் உறவினர்கள் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர்.

தாய், மனைவி, சகோதரி, மகள், பூமித்தாய், கடல் அன்னை, நிலம் என்னும் நல்லாள், தாயின் மணிக்கொடி, கல்வித்தெய்வம் இன்னும் என்னவெல்லாமோ சொல்லுவார்கள். ஆனால் பட்டப்பலில் பலர் சேர்ந்து அவளின் உடல், மானம்,உயிர் உறிஞ்சி எடுப்பார்கள். ஆனால் அதுவும் அவளின் குற்றம் தான். அவள் ஒழுங்காக உடை உடுத்தவில்லை, சேலை இடையைக் காட்டும், பாவாடை தொடையைக் காட்டும். பாலைவனத்தில் காற்று மணலை வீசி அடிக்கையில் மணல் மழையில் இருந்து தப்புவதற்காக உடல் முழுதும் மூடி கண்கள் மட்டும் வெளியே தெரிய போடப்பட்ட உடையை பெண்களிற்கான சர்வதேச உடையாக்குங்கள். கண்ட நேரத்திலும் வெளியே சுற்றலாமா, பொது இடத்தில் காதலனுடனோ, கணவனுடனோ கரம் கோர்த்து நடக்கலாமா, கட்டிப்பிடிப்பது ஆபாசத்தின் உச்சமல்லவா, உங்களது அன்பை வெளிப்படுத்துவதென்றால் அதை நாலு சுவர்களிற்குள் வெளிப்படுத்துங்கள்.

பிரகீத் எஹெலியகொட காணாமற்போனமைக்கும், புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பிரகீத் எஹெலியகொடவின் மனைவியான சந்தியா எஹெலியகொட தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சித்திரவதைக்குழு கூட்டத்தில் பிரகீத் எஹெலியகொட வேறு நாடு ஒன்றில் அகதியாக வாழ்வதாக மொஹான் பீரிஸ் தகவல் வெளியிட்டிருந்தார் என சந்தியா எஹெலியகொட நினைவுபடுத்தியுள்ளார்.

இலங்கையில் இன ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இனவாதிகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைந்து போராடக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….

சிங்கள - தமிழ் - மூஸ்லிம் - மலையக மக்கள் ஒன்றிணைந்து இனவாதத்தை ஒழிக்கக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….

அனைத்து இனவாதங்களுக்கு எதிராக நடைமுறையில் போராடுவதற்கான ஒரு அமைப்பு பற்றி….

அனைத்தது ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கப் போராடும் அமைப்பு பற்றி….

வடபகுதியில் மக்கள் இதுவரை மீளக்குடியமர இராணுவத்தால் அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பாலில் இருந்து உற்பத்தி செய்யும் "யோக்கட்' உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகத்தமிழர் பேரவையின் முதலாவது தலைவரும், நிறுவன உறுப்பினருமான கலாநிதி எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாண ஆளுனர் மேஜர்.ஜெனரல் சந்திரசிறீயின் ஆலோசகராகப் பதவியேற்றுள்ளார். அன்று இனத்தின் விடுதலை குறித்து பேசிய கயவர்கள் தமது உண்மை ரூபத்தை மக்களுக்கு அம்பலப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறான மக்கள் விரோதிகள் இன்னும் மறைந்து இருக்கின்றார்கள். இவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய, நோர்வே, இந்திய அரசுகளின் நலன்களின் பின்னால் செயற்படுகின்றார்கள்.

போராட்டத்திற்கு அணிதிரண்ட போராளிகளினதும், இறந்த மக்களின் தியாகம் வீணாகக் கூடாது. மக்களின் உரிமைக்கான போராட்டம் தொடரப்பட வேண்டும். போராட்டத்தின் வடிவம் மாற்றம் பெற்றுள்ளது. மாற்றம் பெற்ற போராட்டம் எவ்வித மாற்றுதலுக்கும் உள்ளாக்காது பழைய பாதையில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறுவோர் சரியான பாதையை தெரிவு செய்ய தயாரில்லை என்பதையும் அவர்களது வர்க்க நலனும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

altருஹுணு பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் தலைவர் நேற்றிரவு இனந்தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலைக் கண்டித்து  மேற்படி பல்கலைக் கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சம உரிமை இயக்கத்தினால் இணையத்தள மகஜர் கையெழுத்திடல் இன்று ஆரம்பிக்கப்பட்டது. http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் மகஜரில் கையெழுத்திட முடியும்.

2012 நவம்பர் 30ம் திகதி யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மாணவர் தலைவர்கள் மற்றும் மாணவர் செயற்பாட்டாளர்களை அரசாங்க பாதுகாப்பு படையினர் கைது செய்ததோடு அவர்களில் நான்கு பேரை அதாவது பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்ஷனாத், தலைவர் வேலுதுரை பவானந்த், கலைப்பீட மாணவர் சங்கத்தின் தலைவர் கனகசுந்தரஸ்வாமி ஜனமேஜயன் மற்றும் விஞ்ஞானபீட மாணவர் சங்கத்தின் உறுப்பினர் சன்முகம் சொலமன் ஆகிய மாணவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.

யாழ்மண் வந்த உறவுகளை

அழைத்துக் காலாறியெம்

வாழ்வைக் கதைத்து

ஓரு பிடி சோறுண்ணக்

கேட்கமுடியா பாசிசப்பிடிக்குள் நாம்,

காலமொருநாள்

கூடியிருக்கும் நாளைத்திறக்கும் தோழர்களே!

அநியாயமான முறையில் அவதூறு செய்யப்பட்டு பழிசுமத்தப்பட்டவராக எவ்வித ஏதுக்களும் இன்றி உதறி எறியப்பட்டவளாக நான் இன்று உங்கள் முன்னிலையில் நிற்கிறேன். கடந்த சில வாரங்களாக என் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடும் நடவடிக்கைக்கு இந்தக் குடியரசின் ஒரு பிரதம நீதியரசர் மட்டுமல்ல எந்தவொரு குடிமகனும் உள்ளாகக்கூடாது என்று பதவி விலக்கப்பட்டுள்ள கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க நாடான மாலி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் பெருகிக் கொண்டு வருவதாக செய்திகள் வருகின்றன. ஏப்பிரல் மாதம் அல்கொய்தாவின் ஆதரவு பெற்ற கிளர்ச்சிப் படை மாலியின் வடபகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். தென்பகுதியில் உள்ள கோன்னா நகரை கைப்பற்றியுள்ளனர்.

அரச படைகளினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி சமஉரிமை இயக்கத்தினால் எதிர் வரும் 17ம் திகதி ராஜகிரிய லயன்ஸ் கழகத்தில் இணைய வழி மகஜர் கையெழுத்திடும் போராட்டம் ஆரம்பிக்கப்பட விருக்கின்றது. இவ் இணையத்தள மகஜர் கையெழுத்து போராட்டத்தில் தங்களையும் நேரடியாகவோ இணையம் மூலமாகவோ தங்களின் பங்குபற்றலையும் அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.

-சம உரிமை இயக்கம்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE