Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பெரும் போர் முடிந்து அழிவுகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் இன்று மெல்ல மெல்ல நிசப்தத்திலிருந்து மீளத்தொடங்கியிருக்கிறது. பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் ஏ35 வீதி புழுதியால் நிறைந்து கிடக்கிறது. இடைவிடாமல் செல்லும் கனரக வாகனங்கள் ஒருபுறம், தென்பகுதியிலிருந்து முள்ளி வாய்க்காலைப் பார்க்கச் செல்வோர் ஒருபுறம், புதுக்குடியிருப்புச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிக் கூடத்தைப் பார்க்கச் செல்வோரென ஏ35 வீதி தினமும் பரபரப்பாக இருக்கிறது.

ஆளரவமற்று உடைந்து சிதைந்து கிடக்கும் வீடுகள், எரித்தும் வெட்டப்பட்டும் தலையற்றுக் கிடக்கும்பனை மரங்கள், இடிபாடுகளைச் சுமந்து நிற்கும் சந்தை மற்றும் பாடசாலைக் கட்டிடங்கள், எரித்தும் நொறுக்கியும் குவிக்கப்பட்டு குவியல்களாய்க் கிடக்கும் பல்வேறு வகைப்பட்ட வாகனங்கள், தகர்ந்தும் எரிந்தும் தூர்ந்துபோய்க்கிடக்கும் பங்கர்கள், பத்து மீற்றர் இடைவெளியில் நிற்கும் படையினர் என மரணங்களால் மலிந்த நிலம் மனிதப்பேரவலத்தின் நினைவுகளை தற்பொழுதும் நினைவூட்டியவாறு காட்சியளிக்கிறது.

ஒரு மனிதன் தான் பிறந்து வளர்ந்த சூழல் - உறவுகள் - நண்பர்கள் - அயலவர்கள் இப்படி எத்தனையோவற்றினை இழந்துவிட்டு, இன்னொரு அன்னிய தேசத்தில் அகதிகளாக வாழும் வாழ்க்கை என்பது மிகவும் கொடுமையானது. சொந்த பந்தங்களின் இன்ப துன்பங்கள் எதிலுமே பங்கேற்க முடியாது, பெற்ற தாய் தகப்பனுக்கு கொள்ளி வைக்க கூட முடியாத வகையில் எமது நாட்டில் நிலவிய அந்த கொடிய போரானது எம்மை அகதிகளாக புலம் பெயர் மண்ணில் நிலை கொள்ள வைத்து விட்டது. இந்த கொடுமையினை ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோரும் அனுபவித்தவர்கள் ஆகத் தான் இருக்கின்றோம்.

26.01.2013- அன்று சுவிஸ்ட்சர்லாந்தில் சமஉரிமை இயக்கத்தின் ஆரம்பமும் கொள்கை விளக்க கூட்டமும் நடைபெற்றது. சிங்கள, தமிழ் மக்கள் என கிட்டத்தட்ட நாற்பது பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தோழர் குமார் குணரட்ணம் (மு.சோ.க) சிங்களத்திலும் தமிழிலும் விசேட உரையாற்றினார். தோழர் றயாகரனும் சிறப்புரையாற்றினார்.

இனவாதத்தை தந்திரமாக தக்கவைத்துக் கொண்டிருக்கும் இலங்கை முதலாளித்துவ ஆட்சியாளர்களையும் அனைத்து சிங்கள, தமிழ், கட்சிகளின் இனவாதத்தில் குளிர்காயும் போலித்தனங்களையும் அம்பலப்படுத்தினார். அங்கு சமூகம் தந்திருந்தவர்கள் இனவாதத்திற்கு எதிரான ஆதரவையும், இவ்விடயம் வளர்த்துச் செல்லப்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அத்தோடு அதற்கான பங்களிப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்தனர். மேலும் சம உரிமை இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" என்னும் பத்திரிகையை அனைவரும் பெரும் ஆர்வத்துடன் வாங்கிப்படித்தனர்.

ஐயா தாங்கள் அன்னிய தேசங்களிடம் முறைப்பாடு செய்யப்போவதாக கூறுகின்றீர்கள். இப்படித்தான போராட வேண்டுமென்று 1983களில் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தீர்கள். சரி ஆயுதப் போராட்டம் இப்போ அவசியமற்றது என்று எடுத்துக் கொண்டாலும், போராட்ட வழிமுறைகள் பல இருக்கின்றனவே. இந்த பலஸ்தீனம் எத்தனையோ பின்னடைவுகளைக் கண்டாலும் விழ விழ எழுந்து நிற்கின்றது. அங்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை போராடுகின்றார்கள். அங்கு ஆயுதம் என்பது சிறு விகிதம் தான். ஆனால் சிறுவர்களின் கல்லெறிக்குத் தான் எதிரி பயப்படுகின்றான். சிறுவர்களின் வீரம் தான் பலஸ்தீனத்தின் இருப்பை காப்பாற்றிக்கொண்டிருக்கின்றது.

ஆனால் நீங்கள் சொந்தக் காலில் நிற்காது தொடர்ச்சியாக அன்னியச் சக்திகளை நம்பி அல்லவா அரசியல் நடத்துகின்றீர்கள்.

மக்கள் சார்ந்த ஜனநாயகத்திற்காக போராடுவது என்பது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல் அல்ல. மக்களுக்கு துன்பம் கொடுப்பதை, வதைப்பதை நிறுத்தும் முறையில் அமைந்த செயற்பாடுகளே சரியான பாதையாகும்.

ஒரு ஒடுக்குமுறை இயந்திரத்தில் அங்கம் வகித்துக் கொண்டு சுதந்திரமாக விமர்சிக்கும் செய்திகள் மூலம் ஒடுக்குமுறை இயந்திரத்தில் அங்கம் வகிப்பதை நியாயப்படுத்துகின்றார். மேலும் விமர்சிப்பதன் ஊடாக நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக மறைமுகமாக பிரச்சாரம் செய்கின்றார் இந்த முதியவர். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே இதனை யாரும் மறுக்க இயலாது என ஆளும் கட்சி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மகிந்தரின் தம்பி கோட்டபாயர் நூறு வீதம் சுத்த-சுவாதீனமற்ற நிலையில் உள்ளார். அந்தளவிற்கு அவர் சொல்லும் கூற்றுக்கள் மெய்ப்பிக்கின்றன.

"காணாமல் போனவர்கள் என்று யாருமில்லை" என்கின்றார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் அறிக்கை, பாதுகாப்பு செயலர் கோத்தாபாய ராஜபக்ஷவிடம் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய இன்று கையளித்தார்.

போர்க் குற்றவாளிகள் தாம் குற்றம் செய்தே இல்லை என்று தம்மை பரிசோதித்து அறிக்கை விட்டுள்ளார்கள்.

altஅரியாலை கிழக்கு பகுதியில் இராணுவத்தினரின் உதவியுடன் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு நடைபெறுவதாக அப்பகுதி பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியிலிருக்கும் மணல் வளத்தை அழிக்கும் நோக்குடன் இரவு நேரங்களில் இராணுவத்தினரது உதவியுடன் இப்பகுதியிலிருந்து மணலானது உழவு இயந்திரங்களில் ஏற்றப்படுகின்றதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

FIRSTAUDIO.NET இணைய வானொலியில், காற்றலையின் அனுமதியோடு, "சம உரிமை இயக்கம்" பற்றிய அறிமுகமும்  அதன் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும் நிகழவுள்ளது. புதிய திசைகள்  பாலன் அவர்கள் இந்த சந்திப்பை நடத்தவுள்ளார்.

இந்நிகழ்வில் ஜரோப்பிய சமவுரிமை இயக்க உறுப்பினர்களுடன், இலங்கையிலிருந்து தோழர் பழ.ரிச்சார்ட் (இணை ஏற்ப்பாட்டாளர், சமஉரிமை இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

இலங்கையில் நூற்றாண்டு காலமாக சிங்கள- முஸ்லிம் மக்களுக்கிடையே நிலவி வந்த நல்லுறவிற்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் கடும்போக்கு பௌத்த குழுக்களினால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

ஒற்றுமையாக சகோதரத்துவ மனப்பாங்குடன் வாழ்ந்த சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் இனவாதத்தை தூண்டியதன் காரணமாக நாட்டை பிணக்காடாக்கிய யுத்தம் மூன்று தசாப்தங்களாக நடந்தது. அதன் காரணமாக இந்த நாட்டின் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இன, மத வேறுபாடின்றி சாகடிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவுற்று அதன் வடுக்கள் ஆறுவதற்கு முன்பாகவே முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மத்தியில் குரோதத்தை வளர்த்து இன்னொரு இனவாத யுத்தத்திற்குள் நாட்டு மக்களை இழுத்து வீசுவதற்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் செயற்பட்டு வரும் பௌத்த இனவாத கும்பல் தயாராகி வருவது தெரிகின்றது.

யாழ். மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களின் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஐ.நா சபையினால் வழங்கப்பட்ட 350 மில்லியன் ரூபா நிதி உதவியில் விளையாட்டு உபகரணங்களை நாமல் ராஜபக்ச கலைத்தூது மன்றத்தில் வைத்து விளையாட்டுக்கழகங்களிடம் கையளித்தார். யாழ். மாவட்டத்தில் உள்ள 20 விளையாட்டுக்கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க, இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் லலித் திரு பெரேரா யாழ். மாவட்ட விளையாட்டு உதவிப்பணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் விளையாட்டு கழகங்களுடைய உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

“புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் மறைக்கின்ற வளர்ச்சியும் மாற்றமடைந்து வருகின்ற நிலவரங்களும்” எனவும் வன்னிக்கு சென்று வருகின்ற புலம்பெயர்ந்தவர்கள் “அரசியல் பிரச்சனை இல்லை சமூகப் பிரச்சனைதான் இருக்கின்றது” எனவும் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திற்கு இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பென்னாம் பெரிய தலைகளும், அறிஞர் பெருமக்களும் வந்திருந்தார்கள். அவர்களின் வரலாற்று முக்கியம் வாய்ந்த சந்திப்பினையும், அவர்கள் அள்ளிவிட்ட அரும்பெரும் உரைகளையும் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆதரவு இணையத்தளமான லங்காசிறி, "டாப்ஸியை புகழ்ந்து தள்ளும் ஆதி", "பரதேசியால் தன்ஷிகாவிற்கு அடித்த அதிஸ்டம்" போன்ற ஈழமக்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளுடன் சேர்த்து இலவச இணைப்பாக வெளியிட்டிருந்தது. குறுகத் தறித்த குறள்போல அவர்கள் ஆற்றிய உரைகளையும், வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றித் தவிக்கின்றேன் என்பது போல அவர்கள் சொல்லாமல் விட்ட வார்த்தைகளையும் இங்கு பதிவு செய்யாவிட்டால் வருங்காலம் எம்மை கேள்விக்கு மேலே கேள்வியாக கேட்கும் என்பதால் சொல்வெட்டாக இங்கு பொறிக்கிறேன்.

சினிமா நடிகன்போல், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசியலில் எத்தனை வேசமும் போடுவார். நீதி அமைச்சராக, மகிந்த விசுவாசியாக, அரச எதிர்ப்பாளராக முஸ்லிம்மக்கள் காவலனாக, தேவைப்பட்டால் "அசல் இனவாதியாகவும்" நடிப்பார். இதை எப்படித்தான் மக்களை விட, இந்த அரசால் ரசிக்க முடிகிறது.

"நாட்டில் முஸ்லிம் விரோத நடவடிக்கை மேலும் கட்டுமீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. பலமான இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுவதற்கு நான் விரும்பவில்லை"

 

அந்த வாளாகத்தினுள் ஒரு சிறிய ஷெல்லும் ஒரு பெரிய ஷெல்லுமாக இரண்டு ஷெல்கள் இருந்தன. இரண்டுக்கும் பொதுவாக ஒரு தண்ணித்தொட்டியும் இரண்டு மலசல கூடமும் காணப்பட்டது. இரண்டு ஷெல்லையும் பிரிக்குமாற்போல் கழிவுநீர்கால்வாய் போய்க் கொண்டிருந்தது. இங்கே எப்போதும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். கிறவல் நிலத்தில் ஆங்காங்கே கல்லுக்குவியல்களாகவும் காணப்பட்டது.

நான்கு ஐந்து பேராய் கூட்டம் கூட்டமாய் ஆங்காங்கே நின்று கதைத்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் கல்லுக்குவியலுக்குமேல் குந்தியிருந்தனர்.

தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் தண்ணீர் முடிவதற்கிடையில் மேலைக் கழுவி விடவேணும் என்ற அவசரத்தில் சிலர் முண்டியடித்து தகரப்பேணியை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுக்கொண்டிருந்தனர் ஒருவருடைய பேணியுடன் மற்றவருடைய பேணி மோதியடித்து அரைகுறைபேணி தன்ணீரையே வெளியே கொண்டுவந்தது. ஒரு சிலர் பிளாஸ்டிக் வாளிகளையும் வைத்திருந்தனர்.

எதிர்வரும் சனியன்று (26/01/2013) லண்டன் இந்திய தூதரகத்தின் முன்னால் இந்தியாவின் 63வது குடியரசு தினத்தினை பகிஸ்கரிக்கக் கோரியும் பெண்களிற்கு எதிராக இந்தியா எங்கும் நிகழும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழவிருக்கின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் புலனாய்வாளர்களாலும் பொலிஸாராலும் கண்காணிக்கப்படுகின்றனர் என நாம் இலங்கையர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அண்மையில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் பகுதியில் பொலிஸார் சாதாரண உடைகளில் மாணவர்கள் மீது கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர் என்று நாம் இலங்கையர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE