Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஏமாறுவது யார்? ஏமாற்றுவது யார்? ஏமாறுவது மக்கள். இதற்கு இனம், மொழி, மதம், சாதி.. எதுவும் பிரிப்பதில்லை. மக்களை ஏமாற்றுவதில் கூட இனம், மொழி, மதம், சாதி பிரித்து இருப்பதில்லை. சுரண்டும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. அந்த வர்க்கம் சார்ந்த ஆளும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. "தமிழன் இன்னுமொரு முறை ஏமாறக் கூடாது" என்பது கூட, தமிழனை தமிழன் ஏமாற்றுகின்றான்; என்பதை மறைப்பதற்கு "தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது" என்ற தர்க்கம் இனவாதமாகும் மறுப்பதற்குமான தர்க்கமாகும். இதுதான் 60 வருட தமிழனின் வரலாறு.

இந்தவகையில் இன்று யாரெல்லாம் மக்களுடன் இணைந்து போராடுவதை நடைமுறையில் ஒரு வாழ்வாக, உணர்வாக கொள்ளவில்லையோ, அவர்கள் மறுதளத்தில் நின்று கேள்வி கேட்கின்றார்கள். போராடாமல் இருப்பதற்காக, தாங்கள் இருப்பதை நியாயப்படுத்த கேள்வி கேட்கின்றனர். போராட்டத்தைச் சிதைப்பதற்காக கேட்கின்றனர். தங்கள் அறிவைக் காட்டிக் கொள்ள, பிரமுகராக இருக்க கேள்வி கேட்கின்றனர். போராடியபடி கேட்கவும், கேட்கப்படவும் வேண்டிய கேள்வியில் இருந்து இவை வேறுபட்டவை. எந்தக் கேள்வியையும் மக்களுக்காக போராடியபடி கேட்பதே உண்மையான ஒரு அரசியல் வேலைமுறை.

இது ஒரு புதிய ஆரம்பம், புதிய முறை, புதிய வழிதேடி, புதிய சந்தர்ப்பங்களை தேடி, புதிய இலக்கைத் தேடி ஆரம்பமாகின்றது. நாம் செல்லவேண்டிய இலக்கு வெகுதூரத்தில் உள்ளது. இன்று சமவுரிமை இயக்கத்தினரால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டங்களில் பங்கு பற்றியவர்களின் தொகையல்ல, கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கையல்ல, கையெழுத்திட்டவர்களின் வயதல்ல முக்கியம். இந்த அடையாளப் போராட்டம் புதிய பாதைக்கான வழிகோளாக மாற்றப்பட வேண்டும். சமூகம் அடக்குமுறைக்குள் எந்தக் காலத்திலும் வாழ்ந்து விடப்போவதில்லை. எல்லாச் சமூகங்களின் எழுச்சி வீழ்ச்சியடைந்த பின்னர் மீளவும் எழுந்து வந்துள்ளது.

சமூகத்தளத்திற்கு பிரச்சனையை கொண்டு செல்லும் வேலையை செய்வதற்கு பற்பல முறைமைகளை சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் மேற்கொள்கின்றனர். சமூகத்தளத்திற்கு பிரச்சனைகளை கொண்டு செல்வதும், சமூக மாற்றத்தை கோரும் நிலைப்பாடுகளை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளவைப்பதும் பெரும் சவாலான பிரச்சனையாகும். சமூகத்தளத்திற்கு கொண்டு செல்கின்ற போது ஏற்படும் சிக்கல்களை ஆராயந்து புதிய புதிய வடிவங்களில் மறுசீரமைத்து சமூகத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளை இடையறாது சமூக மாற்றத்தை விருப்பும் சக்திகள் மேற்கொள்வார்கள். சமூகத்தளத்திற்கு பிரச்சனையை கொண்டு செல்வதற்கு ஒரு திட்டமிட்ட முறைதான் இருக்கின்றது என்றோ அல்லது இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்றோ எந்தவொரு நியதியும் இல்லை. அது நாட்டுக் நாடு சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. சமூகத்தளத்திற்கு பிரச்சனையை கொண்டு செல்வதும் மக்களை புரிந்து கொள்ளவைப்பதும் சவாலுக்கு உரியதாகும்.

ஆனால் எங்களுடைய மெத்தப்படித்த ஆய்வாளர்கள் ஏதோ சமூகத்தளத்திற்கு கொண்டு செல்வது அற்ப விடயம் போல புரிந்து கொள்கின்றார்கள். இவர்கள் எழுத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைப் புரிந்து கொள்வதற்கோ பொறுப்புடன் செயற்படுவதற்கோ தயாராக இல்லை. சமூகத்தளத்திற்கு செல்லும் முறைமையை சரியாக புரிந்து கொள்ளாது அவதூறு கற்பிப்பவர்களும் இந்தச் சமூக அமைப்பை பாதுகாப்பவர்களாக உள்ளார்கள்.

ஆசியா கண்டத்தையே ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தின் காவலர்கள் 1945 உலக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தங்கள் கட்டுப்பாட்டில் அடிமை ராஜ்ஜியங்களாக வைத்திருந்து சுரண்டிக் கொண்டிருந்த தெற்காசிய நாடுகள் சிலவற்றிற்கு சுதந்திரம் வழங்க ஆரம்பித்தனர்.

"நடைமுறை எழுப்பும் பிரச்சனைகளுக்கு கோட்பாடு பதில் சொல்லியாக வேண்டும்" லெனினின் இக் கூற்றுப் போல், நடைமுறைப் போராட்டம் கோட்பாட்டுரீதியாக பதில் சொல்லும். நடைமுறை ஒன்றாக, கோட்பாடு வேறொன்றாக இருக்க முடியாது. நடைமுறை மூலம் உருவாகும் வர்க்க சக்திகள், வேறு வர்க்க சக்தியாக மாற முடியாது. கோட்பாடு மற்றும் நடைமுறைக்கும் உள்ள உறவே இதுதான்;. இனவாதத்துக்கு எதிரான நடைமுறை என்பது கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இங்கு கோட்பாடு தன்னை வெளிபடுத்த முன் நடைமுறை முந்திக் கொள்கின்றது. கோட்பாட்டை முன்வைத்து கீழிருந்து மேலாக ஒரு கட்சியை உருவாக்காத இலங்கை சூழலில், இன்று ஒரு கட்சி நடைமுறை மூலம் கோட்பாட்டை கீழ் இருந்து மேலாக கொண்டு செல்லும் வர்க்க நடைமுறையைக் கொண்டு உருவாகின்றது. நடைமுறை மூலமான மறுகல்வி மறுப்பது வர்க்க ஆய்வு முறையல்ல, வர்க்க அரசியலுமல்ல.

"நடைமுறை எழுப்பும் பிரச்சனைகளுக்கு கோட்பாடு பதில் சொல்லியாக வேண்டும்" லெனினின் இக் கூற்றுப் போல், நடைமுறைப் போராட்டம் கோட்பாட்டுரீதியாக பதில் சொல்லும். நடைமுறை ஒன்றாக, கோட்பாடு வேறொன்றாக இருக்க முடியாது. நடைமுறை மூலம் உருவாகும் வர்க்க சக்திகள், வேறு வர்க்க சக்தியாக மாற முடியாது. கோட்பாடு மற்றும் நடைமுறைக்கும் உள்ள உறவே இதுதான்;. இனவாதத்துக்கு எதிரான நடைமுறை என்பது கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இங்கு கோட்பாடு தன்னை வெளிபடுத்த முன் நடைமுறை முந்திக் கொள்கின்றது. கோட்பாட்டை முன்வைத்து கீழிருந்து மேலாக ஒரு கட்சியை உருவாக்காத இலங்கை சூழலில், இன்று ஒரு கட்சி நடைமுறை மூலம் கோட்பாட்டை கீழ் இருந்து மேலாக கொண்டு செல்லும் வர்க்க நடைமுறையைக் கொண்டு உருவாகின்றது. நடைமுறை மூலமான மறுகல்வி மறுப்பது வர்க்க ஆய்வு முறையல்ல, வர்க்க அரசியலுமல்ல.

 

புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்

பிரான்ஸ் :CHANTIER - 24 Rue Antoine julien henard - 75012 Paris. (Metro: Montgallet ou  Reuilly Diderot ) என்னும் முகவரியில் 10.02.2013 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.

இன்று ஞாயிறு லண்டனில் நிகழ்ந்த சம உரிமை இயக்கத்தின் அங்குராப்பண கூட்டத்தில் இலங்கையின் மூவினங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அண்ணளவாக நூற்றிக்கு மேல் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தோழர்கள் சேனகா, சபேசன், குமார், சீலன், மகிந்தா, சுகத் உட்பட பலர் சம உரிமை இயக்கம் குறித்தும் இலங்கையில் இனவாதத்திற்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் குறித்தும் உரையாற்றினார்கள்.

யாழ். தொண்டமானாறு தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான உயர் பாதுகாப்பு வலயங்களினுள் அமைந்துள்ள வீடுகள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வலி. வடக்கில் இருந்து 23 வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் 7 ஆயிரத்து 60 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 328 பேர் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் வீடுகளே இவ்வாறு தற்போது இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு வருகின்றன.

இதனை தடுத்து நிறுத்துவது தொடர்பாக வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சி.சிறிதரன், ஆகியோருடன் வலி. வடக்கு பிரதேச மக்கள் நேற்று (01) காலை 10 மணியளவில் வலி.வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இக் கலந்துரையாடலில் இது வரை மீள்குடியேற்றம் செய்யப்பாடாத பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நாடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் படி எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாமையால் முன்னிலை சோசலிசக் கட்சியை, இனவாதிகளாக, திரிபுவாதிகளாக, சந்தர்ப்பவாதிகளாக காட்டுகின்ற அரசியல் கேலிக்கூத்தைக் காண்கின்றோம். இப்படி இட்டுக்காட்டி கூறுவது திரிபுவாதமாக, இனவாதமாக இருக்கின்றது. இப்படி திரிக்க தேசிய சுயநிர்ணயம் தொடர்பாக ரோசா லக்சம்பேர்க்குடனான லெனினின் விவாதத்தை எடுத்துக் காட்டுகின்றனர். லெனின் சுயநிர்ணயம் ஏற்க மறுத்த ரோசா லக்சம்பேர்க்கை இனவாதியாகவோ, திரிபுவாதியாகவோ முத்திரை குத்திக் காட்டி விவாதிக்கவில்லை. அவரை எதிரியாகக் காட்டவில்லை, எதிரியாக்கவில்லை. மாறாக அவரை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தி, அரசியல் விவாதத்தை முன்னெடுத்தார். தமிழ்தேசியம் மட்டும் தான் தன்னுடன் அல்லாத அனைத்தையும் எதிரியாகச் சித்தரித்துக் காட்டுகின்றது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் 23வருடங்களாக தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி அந்தப்பகுதி மக்கள் மீள் குடியமர்வதற்கு அனுமதி மறுத்துவரும் படையினர், தற்போது அந்தப் பகுதியில் 180ஏக்கர் நிலப்பரப்பில் தொழில்முறை ரீதியான விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாது தாம் அந்தரித்து வரும் நிலையில் படையினரின் இந்த நடவடிக்கை தம்மை மேலும் விசனமடையச் செய்வதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

உண்மைக்கு புறம்பான தகவல்களை பிரச்சாரப்படுத்தி  சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே குரோதத்தையும் மோதலையும் தோற்றுவிப்பதற்காக இனவாதம், மதவாதம்  மற்றும் அடிப்படைவாதத்தை தூண்டிவிடும் வகையில் செயற்படும் அமைப்புகளை அம்பலபடுத்தி  மக்களை தெளிவுபடுத்தும் வகையில் நாடு பூராகவும் இன்றைய தினம் (ஜனவரி 31) துண்டுபிரசுரம் விநியோகித்த  சம உரிமை இயக்கத்தின்  செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்க கட்சியினர், பொலிசார் மற்றும் குண்டர்கள்  தடங்கல்களை ஏற்படுத்தியமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

FIRSTAUDIO.NET இணைய வானொலியில், காற்றலையின் அனுமதியோடு, "சம உரிமை இயக்கம்" பற்றிய அறிமுகமும் அதன் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும்.  இந்நிகழ்வில் புதிய திசைகள் பாலன் அவர்கள் ஜரோப்பிய சமவுரிமை இயக்க உறுப்பினர்களுடன், இலங்கையிலிருந்து தோழர் பழ.ரிச்சார்ட் (இணை ஏற்பாட்டாளர், சமஉரிமை இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை ஒலி வடிவில் கேட்க

ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்சியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், யப்பான் போன்ற நாடுகள் தனியாகவும், இவை ஐரோப்பிய ஒன்றியம் என்ற நிதிமூலதனக் கூட்டுக்கு ஊடாகவும், சீனா போன்ற சமூக ஏகாதிபத்தியமும் உலகைப் பங்குபோட நாயாய் பேயாய் அலைகின்றன. உலகை பங்குபோடும் வேலையில் மூன்று துருவங்களாக (அமெரிக்காவும் அதன் அடிவருடி நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம், சீனா – ரஷ்யா) பிரிந்துள்ள ஏகாதிபத்திய நாடுகளான இவை, தேவையானபோது சேர்ந்தும் அந்தந்தச் சூழலின் பொருட்டு தனியாகவும், இயற்கைவளம் பொருந்திய நாடுகளின் மீது தாக்குதல் நடாத்தி ஆக்கிரமிக்கின்றன. இதற்கு சமீபகால உதாரணமாக ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, எகிப்து என்ற தொடர்ச்சியில்; இன்று சிரியா மீது இவை தமது கோரப் பற்களைப் பதித்து, தமது அடிவருடிகள் மூலமான ஏவல் ஆட்சியை உருவாக்கப் பாடுபடுகின்றன.

40 க்கு மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட இக் கூட்டம், இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணரும் வண்ணம் உணர்வூட்டக் கூடியதாக அமைந்து இருந்தது. பெரும்பான்மையானவர்கள் இதன் அவசியத்தை உணர்ந்ததுடன், தங்களாலான பங்களிப்பை வழங்கவும் உறுதியேற்றனர். கேள்வி பதில்களும், கூட்டத்தை அடுத்து தனிப்பட்ட உரையாடல்கள் இதை வளர்த்தெடுக்கும் வண்ணம் ஆரோக்கியமானதாக இருந்தது. யாராலும் மறுக்க முடியாத, யாராலும் நிராகரிக்க முடியாத, சமவுரிமைக்கான அவசியத்தை முன்னோக்காகக் கொண்டு நடக்க கூட்டம் வழிகாட்டியது.

altநெல்லையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி நாராயணசாமி, கூடங்குளம் அணு உலையை பொறுத்தவரை மக்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்று கூறியிருக்கிறார். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்துள்ள கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றும் பணிகள் நடந்து வரும் காரணத்தால்தான் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று அவர் கூறியிருக்கிறார். அப்படி என்றால் கூடங்குளம் அணுஉலை இதுவரை பாதுகாப்பாக இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE