Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

குழந்தைகளின் அவலம்

நிலத்தை மீட்டிருக்குமாயின்

உலகப்பரப்பில்

இன்று சுதந்திரக்காற்றல்லவா வீசும்

பாலச்சந்திரன்கள்

ஏதுமறியாமல் படைகளிடம் சிக்குண்டிருப்பதும்

படுகொலை செய்யப்படுவதுமாய்

மனதைச் சுக்குநூறாய் நொருக்கிப்போடும்

காட்சிகளால்,

நிறைக்கப்பட்டும் மறைக்கப்பட்டும்

ஜநா கோப்புக்களில் சிறைப்பட்டுக்கிடக்கிறது

altதாம் எதிர்நோக்கிவரும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு நிர்வாக அதிகாரியை வலியுறுத்தி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் இன்று (21) காலை பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இனவாதிகள் தங்கள் "காயடிப்பு" அரசியலை பாதுகாக்கும் போராட்டத்தை, சமவுரிமை இயக்கத்துக்கு எதிராகத் தொடங்கி இருக்கின்றனர். சமவுரிமைக்கான பிரச்சாரமும், போராட்டமும் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக, வலதுசாரிய புலி ஆதரவு தளத்தில் இருந்தும் எதிர்வினைகள் வரத்தொடங்கி இருக்கின்றது. இந்த வகையில்  "சிங்கள தேசத்தின் பேரினவாத ஆயுதத்துடன் புலம்பெயர் களத்தில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி!" என்று தலைப்பிட்ட கட்டுரை, தொடர்ச்சியாக பல வலதுசாரிய தமிழ்தேசிய இணையங்களில் வெளியாகியுள்ளது. இதில் "சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தியல் கத்தியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படு"வதாக கூறியிருக்கின்றது. சமவுரிமை இயக்கம் "பேரினவாத ஆயுதத்துடன்" செயற்படுவதாகக் கூறி எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.

கடந்த 20 வருடங்களாக உழைக்கும் மக்களின் எதிரிகளுக்கு எதிரான கருத்துத்தளத்தில் போராடி வந்தவர்கள் இன்று நடைமுறையில் செயற்படத் தொடங்கியுள்ளார்கள். புலிகள் இருந்த போது பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாம் காட்டிக் கொடுப்புக்கள், குழிபறிப்புகளால் சிதைந்தது தான் வரலாறு. இன்று நடைமுறைரீதியாக செயற்படும் போது வர்க்க எதிரிகள் எதிர்ப்பிரச்சாரங்களை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாது வெறும் அவதூறுகளை அள்ளிவீசுகின்றார்கள்.

இவர்கள் மக்களிடம் கருத்துக்கள் சென்றடைவதை தடுக்கின்ற வேளையில், மனிதர்களின் உயிருடனும் விளையாடுகின்றார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராக இலங்கையில் இருந்து போராடுபவர்களுக்கு உயிராபத்து ஏற்படுத்துகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி சிவில் குடும்ப வாழ்க்கையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் குடும்பஸ்தர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள குடும்பஸ்தர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

மேற்கு ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சியுடன் முரண்படும் இலங்கைக்கு எதிரான, ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் அரசியல் எடுபிடிகளாக தமிழ்த்தேசியமும், தமிழ் ஊடகங்களும் இயங்குகின்றது. இலங்கை அரசுக்கு எதிராக இன்று பல முனையில் முன்னெடுக்கும் ஏகாதிபத்திய பிரச்சாரங்கள், தமிழ் மக்களின் மீட்புக்கான ஒன்றாக காட்டுகின்ற அரசியலுக்குள், வலதுசாரி தேசியம் முதல் இடதுசாரிய தேசியம் வரை புரளுகின்றனர். இதைத் தாண்டி மக்களைச் சார்ந்த எதையும் முன்வைப்பதில்லை. மக்களைச் சார்ந்து போராடும் அரசியலை எதிர்க்கும் இவர்கள், மாற்றாக மக்கள் அரசியல் எதையும் நடைமுறையுடன் முன்வைப்பதுமில்லை. இந்த அரசியல் பின்புலத்தில் தான், கொல்லப்பட்ட பிரபாகரனின் மகனின் படங்களை புதிதாக வெளியிட்டு செய்திகளையும், போர்க்குற்றங்கள் பற்றியும் பேசுகின்றனர்.

2009 இல் நாம் மட்டும் இந்தப் படுகொலைகளை அம்பலப்படுத்தி படங்களை வெளியிட்டதுடன், இலங்கையரசின் போர்க்குற்றத்தை தொடர்ச்சியாக அம்பலப்படுத்திய வண்ணம் இருந்தோம். அப்போது நாம் வெளியிட்ட காட்சியையும் போர்க்குற்றங்களையும் உறுதி செய்யும் வண்ணம், இன்று புதிய படங்கள் வெளியாகி இருக்கின்றது. 2009 ஆனி மாதம் இதை அம்பலப்படுத்தி நாம் எழுதிய போது

மறுபிரசுரம்:

புலிகள் சிறுவர்களை தம் படையணியில் இணைத்ததற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள், 12 வயது அப்பாவி சிறுவனை அவனின் தந்தையின் முன் படுகொலை செய்ததையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. இந்தப் படுகொலையை, மனிதவுரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கை, மீள உறுதி செய்துள்ளது.

பேரினவாத பாசிசம், இதில் எப்படிப்பட்ட குற்றத்தை இழைத்துள்ளது.

1. சரணடைந்தவர்களை படுகொலை செய்து, பாரிய யுத்த கிரிமினல் குற்றத்தைச் செய்துள்ளது

2. குழந்தைகளை படுகொலை செய்து, குழந்தைக்கு எதிராக சதி மற்றும் சித்திரவதையுடன் கூடிய கொடூர குற்றத்தை செய்துள்ளது.

எல்லாம் வல்ல தேவனின் உலகபிரதிநிதி, ஆண்டவனுடைய ராச்சியத்தை பூமியிலே வரப்பண்ணுகிற ஏஜெண்ட்டு, போப்பு உடல்நிலை காரணமாக பதவி விலகுகிறார். இளம் வயதிலே கிட்லரின் நாசியாக இருந்தவர் பின்பு கத்தோலிக்க துறவியாகிறார். இரண்டுமே தொடர்ச்சியானவை தான். சொல்லப் போனால் நாசிகள் ஒரு குறிப்பிட்ட பத்தாண்டுகளிற்கு தான் தமது அரசியல் மூலம் கொன்றார்கள். மதவாதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொல்கிறார்கள். கொலைகாரர்களிற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஆன்மீகம் என்ற மயக்க மருந்து மூலம் மூளைச்சலவை செய்கிறார்கள். வெளிநாடுகளிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சிக்காரன் பத்து பேரில் ஒருத்தனையாவது அனுப்பி வைப்பான். ஆனால் சொர்க்கலோகத்திற்கு ஆட்களை அனுப்புவோம் என்று வாக்குறுதி கொடுக்கும் சோம்பேறி மடத்துக்காரர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெறும் வாய்ப்பேச்சிலேயே மக்களை மயக்கி வைத்திருக்கிறார்கள். ஊசியின் துவாரத்தினூடாக ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரனால் சொர்க்கம் போக முடியாது என்றொரு வசனம் பைபிளில் வருகிறது. அந்த பைபிளை புனிதவேதம் என்று சொல்லும் இந்த போப்புகள், பிசப்புகள் மாளிகைகளில் பட்டாடை உடுத்தி பவனி வருகிறார்கள்.

altமட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரானால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய எம் மீதும், எமது அரசியல் முன்னெடுப்புகள், கோட்பாடுகள் சார்ந்து பல மட்டங்களிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. விமர்சனங்கள் ஒவ்வொன்றும், அதை முன்வைப்பவர்களின் அரசியற் கோட்பாடு, வர்க்கநிலை, அவர் சார்ந்த அமைப்பின் அரசியல் கண்ணோட்டம், சுயவிருப்புகள் போன்றவற்றை பிரதிபலிக்கின்றன. தமிழ்தேசிய விடுதலை மற்றும் வர்க்கவிடுதலைப் போராட்டங்களை முன்னெடுக்கும் கோட்பாட்டு முரண்பாடுகளும், கருத்து வித்தியாசங்களும் இவ் விமர்சனங்களின் பிரதான உள்ளடக்கமாக, பேசுபொருளாக இருக்கின்றன. பெரும்பான்மையான விமர்சனங்கள் எம்மிடம் நேரடியாக எழுத்து மூலமும், தோழர்களுடனான விவாதங்கள் மூலமும் முன்வைக்கப்படுகிறது. வெகு சில விமர்சனங்களே இணையத் தளங்கள் மூலமும், மற்றும் பத்திரிகையூடாகவும் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய எம் மீதும், எமது அரசியல் முன்னெடுப்புகள், கோட்பாடுகள் சார்ந்து பல மட்டங்களிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. விமர்சனங்கள் ஒவ்வொன்றும், அதை முன்வைப்பவர்களின் அரசியற் கோட்பாடு, வர்க்கநிலை, அவர் சார்ந்த அமைப்பின் அரசியல் கண்ணோட்டம், சுயவிருப்புகள் போன்றவற்றை பிரதிபலிக்கின்றன. தமிழ்தேசிய விடுதலை மற்றும் வர்க்கவிடுதலைப் போராட்டங்களை முன்னெடுக்கும் கோட்பாட்டு முரண்பாடுகளும், கருத்து வித்தியாசங்களும் இவ் விமர்சனங்களின் பிரதான உள்ளடக்கமாக, பேசுபொருளாக இருக்கின்றன. பெரும்பான்மையான விமர்சனங்கள் எம்மிடம் நேரடியாக எழுத்து மூலமும், தோழர்களுடனான விவாதங்கள் மூலமும் முன்வைக்கப்படுகிறது. வெகு சில விமர்சனங்களே இணையத் தளங்கள் மூலமும், மற்றும் பத்திரிகையூடாகவும் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சிகள், இந்திய ஆதரவு போன்றவை மக்கள் சார்ந்த சில கூறுகளைச் சார்ந்திருப்பதால் அவை மக்கள் சார்ந்ததாகிவிடுமா? இவை இலங்கை அரசுக்கு முரண்பாடாக இருப்பதால், இது முழுமையான உண்மையாகிவிடுமா?


மக்களைப் பார்வையாளராக்கிய கடந்தகால அரசியல், அன்னிய சக்திகளால் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று வழிகாட்டிய எமது கடந்தகாலப் போக்கு, சமூகத்தை மந்தையாக்கி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சி, இந்திய ஆதரவு மீது குருட்டுத்தனமாக அவற்றை நம்பிப் பின்பற்றுகின்ற, அதை அரசியல் வழிகாட்டுகின்ற பின்புலத்தில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். உண்மைகள் புதைக்கப்படுகின்றது. நீதி மறுக்கப்படுகின்றது. தங்கள் குறுகிய நோக்கத்துக்கு ஏற்ப இவைகள் உண்மையைப் புதைப்பதில் இருந்து தான் தொடங்குகின்றது. அது என்ன என்பதையும், எதற்காக இவை என்பதையும், தெரிந்து கொள்வதன் மூலம், இந்தச் சதியை, சூழ்ச்சியை நாம் இனம் காணமுடியும்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா கொச்சான்குளம் பிரதேசத்தில் மேலும் 700சிங்கள குடும்பங்களை குடியேற்றவும், கொச்சான்குளம் பிரதேச சபையை வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தின் (சிங்கள பெரும்பான்மைப் பிரதேசம்) கீழ் இணைக்கடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிடுகிறார்.

"மக்கள் மீது குண்டு வீசவில்லை":

இறுதி கட்டப்போரை மனிதநேய நடவடிக்கை என்று அரசு வர்ணித்த சொற்றொடரைப் பயன்படுத்தும் இந்த ராணுவ நீதிமன்றம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறப்பித்த 'ஒரு சிவிலியன் கூட கொல்லப்படக்கூடாது' என்ற உத்தரவை இலங்கை ராணுவம் எல்லாக் கட்டங்களிலும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டது என்று கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள், துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுட்ட போதும் கூட, இலங்கைப் படையினர், திரும்ப அந்தப் பகுதிகளுக்குள் குண்டு வீசவில்லை என்றும்  நீதிமன்றம் கூறியது.

இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகள் என்று வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேல் இன்னும் ஒரு 500 மீட்டர் தூரம் வரை , இராணுவத் தளபதிகள் துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக விஸ்தரித்துக் கொண்டனர் என்றும் அது கூறுகிறது.

சர்வதேச மனித நேய சட்டங்களையும், போர்ச் சட்டங்களையும் , போரின் எல்லா கட்டங்களிலும் அனுசரித்த ஒரு கட்டுப்பாடான ராணுவமாகவே இலங்கை ராணுவம் இருந்திருக்கிறது என்றும் இந்த ராணுவ நீதிமன்றம் கூறியது.

சிவிலியன் உயிரிழப்புகள் எல்லாம், விடுதலைப்புலிகளின் சட்டவிரோதச் செயல்களாலேயே நிகழ்ந்ததாக அது கூறியது.

சானல் 4 பதில்

'இதுபோல குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்களைத் தாங்களே விசாரித்துக்கொண்டு தங்களை நிரபராதிகளாக அறிவித்துக்கொள்ளும் வரலாறு இங்கே இருக்கிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம் ஏதும் இல்லை. இது புதிதாக எதையும் சொல்லவில்லை.

'இலங்கை ராணுவம் குண்டுத்தாக்குதல் நடக்கக்கூடாத பகுதி என்று அறிவித்த பகுதிகளிலும் குண்டு தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுபகுதிகளை இலக்கு வைத்தார்கள். அவர்கள் பலரை கொன்று குவித்தனர். உண்மைகள் தெளிவாக இருக்கின்றன. இது ராணுவம் தன்னைத்தானே விசாரித்து, தன்னை நிரபராதி என்று முடிவு கட்டும் மற்றுமொரு விசாரணை. இதில் எதையும் மாற்றாது'

எமது கருத்து

இந்த மனிதநேய மக்கள் மீட்பு ராணுவமும் மகிந்தா அரசும், தமிழர் பிரதேசங்களில் எங்கும் ராணுவத்தினை நிறுத்தி வைத்துக் கொண்டு புதிய முகாம்களை அமைப்பதும், தமிழர் நிலங்களை பலாத்காரமாக பறித்துக் கொள்வதும், மக்கள் வாழ்ந்த பிரதேசங்களை பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து இங்கு ராணுவ குடியேற்றங்களை நிறுவுவதும், மீனவர்கள் சுயாதீனமாக தொழில் செய்தனை தடுப்பதும், மக்கள் ஒன்று கூடி தமது ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பதனை அச்சுறுத்தி கைது செய்து புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைத்திருப்பதும், புலிகளுடனா யுத்தம் முடிவுக்கு வந்து ஏறத்தாழ நான்கு வருடங்களாகியும் இன்னமும் பலர் உயிருடன் உள்ளனரா இல்லையா என அறியத்தராது இழுத்தடிப்பதும், தெற்கிலே எழுகின்ற தமிழ் மக்களிற்க்கான ஆதரவு குரல்களை அச்சுறுத்தி அவர்கள் மீது வன்முறையினை கட்டவிழ்த்து விட்டிருப்பதுவும், தமிழ் மக்களின் மனித நேய அக்கறையின் பாற்பட்டதே என நம்புவோமாக!

சண்டே லீடர் பத்திரிகையின் செய்தியாளர் பராஸ் சவ்க்காரலி நேற்று நள்ளிரவு கல்கிஸ்சை, ஹோட்டல் வீதியிலுள்ள அவரது இல்லத்தினுல் வைத்து இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தின் போது அவரது கழுத்துப் பகுதியில் காயமடைந்த நிலையில் அவர் உடனடியாக களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக சிகிச்சைக்காக

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

altவலி.வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் இனந்தெரியாதோர் நுழைந்து ஊடகவியலாளர்களின்  கமராக்களை அடித்து நொருக்கியதுடன் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE