Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கைப் பாதுகாப்புப் படையினர் , விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்பட்டு , போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, சர்வதேச மனித உரிமைக் குழுவான, ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியிருக்கிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாதை

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கோரி, மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் அழைப்பில் மன்னார் செம்மந்தீவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் கனடாவில் காலமானார். நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த சண்முகலிங்கம் அவர்கள் 22 மாசி 2013 அன்று ரொறன்ரோவில் காலமானார்.

இளம் வயதிலேயே சமூக அநீதிகளைக் கண்ட சண்முகலிங்கம் அவர்கள் இடதுசாரி அரசியலில் நாட்டம் கொண்டு தொழிற்சங்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மலையக மக்களுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர், இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வன்னிக்கு இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கான சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். கலாநிதி ராஜசுந்தரம், டேவிட் ஐயா, சந்ததியார், சுந்தரம் ஆகியோருடன் இணைந்து, காந்திய அமைப்பின் இறுதிக்காலம் வரைக்கும் மலையக மக்களின் விடிவுக்காக உழைத்தவர் இவர்.

altதமிழ் அரசியல் கைது ஒருவர் தங்காலை சிறைச்சாலையில் கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளார். மகசின் சிறைச்சாயில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மட்டக்களப்பு வெல்லாவெளியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளார்.

சமவுரிமை இயக்கம் பிரான்ஸ் அங்குரார்ப்பண உரைகளின் காணொளிகள்

Movement for Equal rights – Inauguration – France – 10.02.2013- Video footages

Movement for Equal rights – Inauguration – France – 10.02.2013

Speeches delivered by

இன்று இனவாத்தினை மறுத்து நிற்கின்றார்கள் தென்னிலங்கை பல் கலைக்கழக மாணவர். தம்மோடு சக தமிழ், முஸ்லீம் மாணவர்களை இணைத்து சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள இனவாதத்தினை எதிர்த்து நிற்கிறார்கள். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் இனவாத உணர்வினை விதைத்து பிழைப்பு அரசியல் நடாத்தும் நிலையில் ஒருமைப்பாட்டினை வலியுறுத்தும் இந்த மாணவ சமூகத்தினை மனம் திறந்து வரவேற்போம்..!

2009ம் ஆண்டின் இறுதி யுத்தத்தின் போது இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மனிதாபிமான யுத்தம் என்னும் பெயரில் முன்னெடுத்த கொடூர ராணுவ நடவடிக்கைகளின் படுபாதகச் செயல்களை எத்தகைய பொய்கள் புனைவுகளாலும் மூடிக் கட்ட முடியாது. அவை பற்றிய தகவல்கள் ஆதாரங்கள் ஏற்கனவே சர்வதேச ஜனநாயக – மனித உரிமை அமைப்புகளால் வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் சனல் 4 தொலைக்காட்சி பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை பற்றிய படங்களை வெளியிட்டுள்ளது. ஒரு பச்சிளம் பாலகன் பழிவாங்கும் நோக்குடன் கொல்லப்பட்டிருப்பதானது ஒவ்வொரு தாய் தந்தையரையும் அனைத்து மக்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இப் படங்கள் காலம் கடந்து வெளிவந்திருப்பினும் அதன் ஊடாக யுத்தத்தின் கொடூரங்களும் யுத்த விதிகளின் மீறல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை எமது புதிய ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

புலம்பெயர் தமிழர்கள் தமது தோல்வி மனப்பான்மையை இலங்கையிலிருக்கும் தமிழர்க்கும் பரப்புகின்றார்கள். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இனி போராட்ட தேவையில்லை. புலம்பெயர் தமிழர்களிடம் தான் போராட்டம் களமாறியிருப்பதாக கூறிக் கொள்வதன் ஊடாக, ஒரு போராட்டச் சக்தி சொந்த மண்ணில் சொந்தக் காலில் நிற்கத் தேவையில்லை என பிரச்சாரம் செய்கின்றார்கள். இவைகள் தான் அரசியல் மோசடி, அன்னியச் சக்திகளை நம்பி பிழைக்கும் அரசியல் அயோக்கியத்தனம்.

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய வரலாற்றுக் கடமையை எவரும் மறுதலித்து விடவில்லை.


இலங்கை இனவாத அரசின் திட்டமிட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் மண் அபகரிப்பை நிறுத்தக் கோரியும், இராணுவ ஆட்சியை நீக்கக் கோரியும் சமஉரிமை இயக்கத்தினால் மட்டக்களப்பு நகரில் இன்று இடம்பெற்ற கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு கையெழுத்து இட்டதாக அங்கிருத்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை இனவாத அரசின் திட்டமிட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் மண் அபகரிப்பை நிறுத்தக் கோரியும், இராணுவ ஆட்சியை நீக்கக் கோரியும்  சமஉரிமை இயக்கத்தினால்  மட்டக்களப்பு நகரில் இன்று இடம்பெற்ற கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு கையெழுத்து இட்டதாக அங்கிருத்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய திசைகள் அமைப்பு, இன்று இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைக்களுக்கான போராட்டத்தில் இணைந்தும், அமைப்பாகியும், ஆதரவளித்தும் இயங்கும். குறிப்பாக வடகிழக்கு தமிழ் மக்களின் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் நேரடிப்பங்காளியாக செயற்படும், போராடும். இலங்கை சமூகத்தின் முன்னோக்கிய நகர்வில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான சம உரிமை அல்லது விடுதலை என்பது முன்னிபந்தனை என்ற அடிப்படையில் இலங்கை சமூக மாற்றத்திற்காக போராடும் சக்திகளுடனும், ஜனநாயகத்திற்காக போராடும் சக்திகளுடனும் ஒரு பொது தளத்தில் இணைந்து இயங்கும். எமது அரசியல் நிலைப்பாட்டின் விரிவாக்கத்தை ஓர் அரசியல் வேலைத்திட்ட வடிவில் வெகு விரைவில் உங்கள் பார்வைக்கு கொண்டுவர இருக்கிறோம்.

குண்டுவீச்சுகள், கூக்குரல்கள், சரிந்து கிடக்கும் உடல்கள், வலி தாளாமல் முனகியபடி கடைசி மூச்சை விடும் மனிதர்கள், பயத்திலும் பசியிலும் பார்வை மங்கிப்போன சிறுவர்கள், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் உயிர் வரண்டு போன குஞ்சுகள். ஒரு குழந்தை இவைகளைப் பார்த்து எப்படிப் பயந்த்திருக்கும், எனினும் வேறு வழியின்றி தனது பாதுகாவலர்களுடன் எதிரிகளிடம், மனிதத்தின் விரோதிகளிடத்தில் சரணடைய போகிறது. ஒரு குழந்தையை, ஒரு சிறுகுஞ்சை யார் காயப்படுத்துவார்கள், யார் கொல்லப்போகிறார்கள் என்று அதனது தாய், தந்தையர்கள் நினைத்திருக்கலாம். எல்லாமே முடிந்தது, எல்லாமே முடிந்தது என்று ஏங்கும் போது கடைசியில் இந்த சின்னஞ்சிறு குஞ்சையாவது காப்பாற்றுவோம் என்று ஒரு நினைப்பு அந்த தாய்க்கு ஆபத்துகளை மறந்து கொலைகாரக் கூட்டத்திடம் அனுப்பி வைக்க செய்திருக்கும்.

சிறப்பு பெட்டகம்-பகுதி ஒன்று

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்து வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து மோசமாகவே இருந்து வருவது இன்றளவும் யதார்த்தமாக உள்ளது.

எமது நாடுகளிலிலே எமது தாய், தகப்பன் கஸ்டப்பட்டு வளர்த்து அதாவது வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி படிப்பித்து பெரியவர்களாகி எமது வரிப்பணத்தில் உயர் கல்விகற்று வெளிநாடு சென்று தமது உழைப்பைச் செலுத்துகின்றனர்.

இதில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு தகுந்த கூலி என்பது கிடைப்பதில்லை. பணிப் பெண்கள் நீண்ட மணிநேரம் உழைக்கின்ற போதும் அவர்களுக்கு போதிய சம்பளம் கிடைப்பதில்லை. இவர்களின் சம்பளம் இலங்கையில் பெறும் வருவாயை விட அதிகமாக இருப்பதுடன் இது மாதாந்த வருமானமாகக் கிடைக்கின்ற காரணத்தினால், எத்தனையோ பலர் கடன்பட்டும் அதிக வட்டி கொடுத்தும் வாழ்வின் விழிம்பில் இருந்து வெளிவரத் துடிக்கின்றனர்.

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் கடற்தொழில் செய்வதற்கு நடைமுறையில் உள்ள கெடுபிடியான நடைமுறைகளை நீக்க வேண்டும் எனக் கோரி அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.

மன்னாரில் மீனவர்களுக்கென நடைமுறைப்படுத்தப்படுகின்ற பாஸ் நடைமுறையினாலும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின் மூலம் சிலிண்டர்களைப் பயன்படுத்தி அட்டை மற்றும் சங்கு குளிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதனால், தமது வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக மன்னார் மீனவர்கள் கூறுகின்றனர். இந்திய இழுவைப்படகுகளினாலும் தமது தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

இது மக்கள் தொழிலாளர் சங்கம் உங்களைச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம். மக்களுக்கான தொழிற்சங்கம் என்ற ரீதியில் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிற்சங்க, அரசியல் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அன்று முதல் இன்றுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சிகளை அவர்கள் எடுத்ததில்லை. கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிக்காரர்கள் கூறும் அதே பொய்களை கூறிக் கொண்டு மக்களை தொழிற்சங்கங்கள் ஏய்த்தும் வருகின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE