Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அம்மா பசிக்குது பசிக்குது என்ற குழந்தைகளின், அழுகுரலை இனிமேலும் தாங்கமுடியாது. அது இதுவெண்டு சொல்லி இனியும் சமாளிக்கவும் முடியாது, கடைசியாக மிஞ்சியிருந்த இந்த தோட்டையாவது விற்று சமைக்க வேண்டும்.

குழந்தைகள் இரண்டையும் பக்கத்து வீட்டு சரஸ்வதியாச்சியோடு விட்டிட்டு கிளிநொச்சி நகருக்குள் வந்து சேர்ந்த போது எல்லாமே அவளுக்கு புதிதாகவும் சூனியமாகவும் இருந்தது.

புதிதாக புனரமைக்கப்பட்ட நெடுவீதிகளும் ஆங்காங்கே எழுந்து நிற்கும் புத்தம்புதிய கட்டிடங்களும் புதிபுதிதாய் முளைத்திருக்கும் கடைகளும் அதன் அலங்காரங்களும் பீறேமாவை ஒரு கணம் திக்குமுக்காடச் செய்தது.

altஹலால் சான்றிதழ் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவிப்பையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்தாலும் எமது இலக்னை நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என பொது பல சேனா தெரிவித்துள்ளது.

ழப்போரின் இறுதிக் கட்டத்தில் (2009-ஆம் ஆண்டு மே மாதம்) இலங்கையின் இனவெறி பாசிச, பயங்கரவாத அரசும் இராணுவமும் நடத்திய ஈழத் தமிழின அழிப்புப் படுகொலைகள் மிகக் கொடூரமாகவும் வக்கிரமாகவும், மனிதத் தன்மைகள் சிறிதுமற்றதாக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள்தாம் என்பதை நிரூபிக்கும் ஏராளமான ஆதாரங்கள் ஏற்கெனவே தொடர்ந்து வெளிவந்துள்ளன.

இந்த போர்க் குற்றங்களை நடத்திய இலங்கை அரச பயங்கரவாதிகள் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை, கடும் தண்டனை என்பதற்கு பதிலாக “மனித உரிமை மீறல்கள்” என்ற நீர்த்துப்போன பெயர் சூட்டி குற்றவாளிகளே விசாரித்து, நிவாரணம் தேடிக் கொள்ளச் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பு நிறைவேற்றி ஓராண்டாகப் போகிறது. அதன் மீதான பரிசீலனை இம்மாதம் அவ்வமைப்பில் வரவிருக்கும் சூழலில் சேனல்-4 என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி “நிகழாத அமைதி மண்டலம் – இலங்கையின் படுகொலைக் களம்” என்ற ஆவணப் படத்தை அவ்வமைப்பின் ஜெனிவா மாநாட்டில் முன்வைக்கப் போகிறது.

altஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக உருவாகியிருக்கும் அழுத்தங்களைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று(12) செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடத் தப்படவுள்ளது. இதற்காக வன்னியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையானவர்கள் அச்சுறுத்தப்பட்டு பஸ் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்சியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், யப்பான் போன்ற நாடுகள் தனியாகவும், இவை ஐரோப்பிய ஒன்றியம் என்ற நிதிமூலதனக் கூட்டுக்கு ஊடாகவும், சீனா போன்ற சமூக ஏகாதிபத்தியமும் உலகைப் பங்குபோட நாயாய் பேயாய் அலைகின்றன. உலகை பங்குபோடும் வேலையில் மூன்று துருவங்களாக (அமெரிக்காவும் அதன் அடிவருடி நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம், சீனா – ரஷ்யா) பிரிந்துள்ள ஏகாதிபத்திய நாடுகளான இவை, தேவையானபோது சேர்ந்தும் அந்தந்தச் சூழலின் பொருட்டு தனியாகவும், இயற்கைவளம் பொருந்திய நாடுகளின் மீது தாக்குதல் நடாத்தி ஆக்கிரமிக்கின்றன.

போராளி அந்தஸ்து சுமத்தப்பட்டது

எனது விசாரணையின் பின் நான் எனது கிராமத்திற்கு வந்தபோது என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னைப்பற்றி பலவாறு பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் என்னுடன் தொடர்புகளைக் குறைத்துக் கொண்டனர். மேலும் சிலர் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனது கல்லூரியிலும் பலர் தாங்களாகவே பல கதைகளை உருவாக்கி என்னைப் பற்றி ஒரு மாயையை உருவாக்கிக் கொண்டார்கள். அதன் பின் எவரும் என்னுடன் பிரச்சினைப் படுவதில்லை. என்னைவிட வயதில் மூத்தவர்களும் என்னை மரியாதையாக நடத்தினார்கள்.

சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு - Free Women, சர்வதேச ஒடுக்கப்பட்ட  பெண்கள் போராட்ட தினத்தை முன்னிட்டு, மாபெரும் ஆர்பாட்ட பேரணியை இன்று தலைநகரில் நடாத்தியது . பிற்பகல் 2.00 மணிக்கு, ஹைட்பார்க் மைதானத்திலிருந்து ஆரம்பமாகிய ஆர்பாட்ட பேரணியில் நான்கயிரதுக்கு மேற்பட்ட தோழர்களும், மக்களும் பங்கு கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடுக்கப்பட்ட பெண்களே,

அடிமைப்படுத்தலும், அடிமைப்பட்டிருத்தலும் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விதிகள். அடிமைப்படு, அடிமைபட்டிரு இதுவே முதலாளித்துவத்தின் தாரக மந்திரம். முதலாளித்துவத்திற்கு அடிமைப்பட்ட உழைக்கும் வர்க்க சமூகத்தில் பெண்களை அடிமைபடுத்தி வைத்திருக்கின்றனர் ஆண்கள். பழமையான கலாசாரம் பாரம்பரியம் என்பவற்றை எல்லாம் பெண்களை பின்பற்ற நிர்பந்திக்கும் ஆண்கள் தாங்கள் மட்டும் காலத்திற்கு ஏற்ப புதியனவ்ற்றிற்கு மாறி விடுகின்றனர். ஒரு நாளில் வன்முறைக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கையை விட ஒவ்வொரு நாளும் பாலியல் சுரண்டலை மேற்கொள்ள நேர், எதிர் வழிகளில் திட்டமிடும் ஆண்களின் எண்ணிக்கையே பாரதூரமான விடயம். ஒரு சிலரை தண்டித்து ஒட்டு மொத்த சமூகத்தின் ஊனத்தை களைந்திட முடியாது. மனிதநேயம் மரணித்த மனித சமூகத்திற்கு பதிலாக அன்பு மலரும் சமூகத்தை அமைத்திடுவதே ஒரே வழியாகும்.

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரின் அளவை விட இரண்டு மடங்கு தோட்டாக்கள் ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆயுத வன்முறைகளால் ஒவ்வொரு நாளும் ஆயிரத்து ஜநூறிற்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள்.

சட்டங்களிற்கு உட்பட்ட உத்தியோகபூர்வமான ஆயுத விற்பனை ஒரு வருடத்திற்கு நாற்பது பில்லியன்கள்.

பிரித்தானிய அரசு ஆயுத தயாரிப்பு நிறுவனங்களிற்கு ஆராய்ச்சிகளிற்காக வருடாந்தம் எழுனூறு மில்லியன் பவுண்டுகள் வரிவிலக்கு அளிக்கிறது.

மனித உரிமை பற்றிப் பேசுகின்ற போது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுட்பட, சரத் பொன்சேக்கா போன்றோருக்கு பிடிப்பற்ற விசயமாகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் காரணமாகவே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதற்கு ஏதுவாக அமைந்தது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று எதிர்க்கருத்துகளும், கோட்பாடுகளும், முரண்பாடுகளை மறுக்கும் தூய்மைவாதம் சார்ந்த வரட்டுவாதமாக முன்தள்ளப்படுகின்றது. இதேபோல் அவதூறுகள் என்பது இட்டுக்கட்டப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒழுக்கம் சார்ந்த தூய்மைவாதமாகவும் திணிக்கப்படுகின்றது. இன்று பலமுனையில் பரவலாக இவை இரண்டும் சோடி சேர்ந்து, மக்கள் போராட்டங்களை மறுக்கும் பொது அரசியலாக பயணிக்க முனைகின்றது.

தென்னமெரிக்காவின் சமூக மாற்றத்திற்கான நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட வெனிசுவேலா நாட்டின் அதிபர் சாவேஸ் மரணமடைந்தார். அவர் தனது 58வது வயதில் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.25 மணிக்கு தலைநகர் கரகாஸில் உயிரிழந்தார். சாவேஸ் 1998ம் ஆண்டு முதல் அதிபராக 14 ஆண்டுகளாக பணியாற்றினார்.

சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு - Free women, சர்வதேச ஒடுக்கப்பட்ட  பெண்கள் போராட்ட தினத்தை முன்னிட்டு, நடாத்தப்படும் பேரணியிலும், "அன்பு பிறக்கும் சமூகம்" என்ற தொனிப்பொருளில் நடைபெறும்   கருத்தரங்கிலும் பங்குகொள்ளுமாறு சகோதர, சகோதரிகளையும்  தோழர்களையும்  அழைக்கின்றது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வு தற்பொழுது வவுனியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

altஇந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கதிர் வீச்சுகசிவு தொடர்பாக வெளியான தகவலை தொடர்ந்து அதற்கு இந்திய மத்திய அரசு பதிலளிக்க வலியுத்தி இன்று(05) பிற்கல் ஒரு மணியளவில் இந்தியாவின் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் மாபெரும் ஆர்பாட்டம் இடம் பெற்றுள்ளது.

கொழும்பில் நாளை 06/03/2013 புதன்கிழமை நடைபெறவிருக்கும் காணாமல் போனோர் மற்றும் தடுப்பு முகாமில் உள்ளவர்களின் உறவினர்கள் யாழ்பாணம், கிளிநொச்சி, மன்னர் மற்றும் வவுனியாவில் இருந்து பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்த உறவினர்களை பொலிசார் வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக இந்தப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE