Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது மீதொட்டுமுல்ல போராட்டம் தொடர்கிறது!

alt

மீதொட்டுமுல்ல குப்பை மேட்டை அகற்றுமாறுகோரி அப்பிரதேச மக்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகம் இன்றும் இடம் பெற்றது.இன்று காலையில் அப்பிரதேச மக்கள் நகர அபிவிருத்தி ஆணையர் மற்றும் பிரதிப்பொலிஸ் அதிபர் அனுரசேனாநாயக்க ஆகியோரோடு பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளனர். அதன் போது குப்பைமேட்டை அகற்றுமாறு கோரி எழுத்து மூலமான உறுதி மொழி ஒன்றை தறுமாறு பிரதேச மக்கள் விடுத்தகோரிக்கையை நகர அபிவிருத்தி ஆணையாளர் நிராகரித்துள்ளார். அதற்கேற்ப அந்தப்பேச்சு வார்த்தை எவ்வித தீர்மானமும் இன்றி முடிவுற்றது.

குறுக்குகட்டோட விறுக்கென்று

மணலில் எட்டி நடக்கின்ற மீன்காரப் பெண்டு

குனிந்து மீன்கூடை இறக்கி வைக்கையில்

மொய்க்கிற ஈயோடு அவளுடல் மேயும் உன் கண்கள்

 

இன்று லண்டனில் 1971 ஏப்ரல் எழுச்சியில் உயிர்நீத்த 10 ஆயிரம் வீரர்களை நினைவு கூரும் நிகழ்வு லண்டனில் வெம்பிளியில் இடம்பெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக முன்னிலை சோசலிச கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் தோழர் குமார் குணரட்னம் கலந்து கொண்டு தியாகிகளை நினைவு கூர்ந்ததுடன் அந்த மாபெரும் தோல்வியிலிருந்தும் கடந்த கால அரசியல் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொண்டு போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதே இந்த வீரர்களின் தியாகங்களிற்கு பெறுமதி சேர்க்கும் எனக் குறிப்பிட்டார். மேலும் பல தோழர்களும் உரையாற்றினர்.

altசவூதியில் இலஙகை பணிப் பெண்கள் தங்கியிருக்கும் இடத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த பரிதாப சம்பமொனறை இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இரகசியமாக வீடியோ படமெடுத்துள்ளார்.

இலண்டனில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற 40வது இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட தோழர் இரயாகரன் அவர்களால் , 6/4/2013 அன்று "சம உரிமை இயக்கம்" குறித்து ஆற்றிய உரை இது:

ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியம் என்பது இன்று ஒரு புதிய சிந்தனை முறை மட்டுமல்ல, வாழ்க்கை முறையுமாகும். இதனால் இன்று புரட்சிகரமான அரசியல் கூறாக இருக்கின்றது. புரட்சிகரமான சிந்தனையையும், நடைமுறையையும் கொள்ளாது, மக்களுக்கு எவரும் வழிகாட்ட முடியாது. இவ்வகையில் அனைத்துவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடுபவராக இல்லாத வரை, மக்களை வழிகாட்டிச் செல்ல முடியாது. இவ்வாறில்லாமல் நாங்கள் நேர்மையானவராகவும், உண்மையுள்ளவராகவும், வெளிப்படையானவராகவும் இருக்க முடியாது.

ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியம் என்பது இன்று ஒரு புதிய சிந்தனை முறை மட்டுமல்ல, வாழ்க்கை முறையுமாகும். இதனால் இன்று புரட்சிகரமான அரசியல் கூறாக இருக்கின்றது. புரட்சிகரமான சிந்தனையையும், நடைமுறையையும் கொள்ளாது, மக்களுக்கு எவரும் வழிகாட்ட முடியாது. இவ்வகையில் அனைத்துவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடுபவராக இல்லாத வரை, மக்களை வழிகாட்டிச் செல்ல முடியாது. இவ்வாறில்லாமல் நாங்கள் நேர்மையானவராகவும், உண்மையுள்ளவராகவும், வெளிப்படையானவராகவும் இருக்க முடியாது.

கடந்தகால தேசியம் பற்றிய மீள்பார்வை, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்துக்கு முன்நிபந்தனையானது. இன ஐக்கியம் என்பது தொடரும் அரசியலின் நீட்சியல்ல. ஜக்கியத்தின் தேவை என்பது இன்று தவிர்க்க முடியாத அரசியல் தெரிவல்ல. மாறாக மறுக்கப்பட்ட மனிதப்பண்புகளை மீட்டெடுக்கும் போது அதுவே ஐக்கியமாகவும், அந்தத் தெரிவே மனித இருப்பின் தேவையுமாகும். இந்த அடிப்படையில் சமவுரிமைக்கான அமைப்பு தன்னை முன்னிறுத்தி இன்று போராடுகின்றது. சமவுரிமைக்கான புரட்சிகர அரசியல் போராட்டம் என்பது இன்று அனைவருக்குமான மறு அரசியல் சந்தர்ப்பமாகவும் இருப்பதோடு, விமர்சனபூர்வமாக கடந்தகாலத்தை மீள்பரிசீலனை செய்வதற்குரிய அரசியல் வாய்ப்பையும் வழங்குகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியத்துக்காகப் போராடுவது என்பது, சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரதும் அரசியல் தெரிவாக மாறவேண்டும்.

வடக்கில் தொடரும் வன்முறைத் தாக்குதல்களுக்குப் பின்னால் பேரினவாதப் பாசிசத்தின் அடக்குமுறைக் கரங்கள் இருந்து வருகின்றன. இதனை ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், ஊடகப் பணிமனைகள், பல்கலைக்கழக மாணவர்கள், மக்கள் போராட்டங்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றின் மீது தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் மோசமான வன்முறைத் தாக்குதல்கள் நிரூபித்து வருகின்றன. அண்மையில் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பணிமனையும் அதனைத் தொடர்ந்து உதயன் பணிமனையும் குண்டர்களின் வெறித்தனத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. இவற்றின் மூலம் கருத்துரிமைச் சுதந்திரமும் அரசியல் கட்சிகளுக்கு உரிய ஜனநாயக உரிமைகளும் அப்பட்டமாகவே மறுக்கப்பட்டுள்ளன. இவற்றை எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இவற்றுக்கு மக்கள் மௌனம் சாதிப்பதற்குப் பதிலாக அணிதிரண்டு எதிர்ப்புத் தெரிவித்து நியாயம் கேட்க வேண்டும். இதில் கட்சிகளின் தலைமைகள் ஒன்றினைந்து பொதுக் கோரிக்கைளை முன்வைத்து வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லாதுவிடின் அடக்குமுறையானது மேன்மேலும் விரிவடைந்து செல்லவே செய்யும்.

alt71 இன் தோல்வி மாபெரும் தோல்வியென முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ கூறினார். காலி தெளிகடை பிரதேசத்தில் நடைபெற்ற 71 ஏப்ரல் வீரர் நினைவு கூறலின்போது நேற்று உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

altகிளிநொச்சி மாவட்டத்தில் 2012-2013ம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெற்செய்கையில் 27ஆயிரத்து 851ஏக்கர் வயல்நிலம் முழுவதுமாக அழிவடைந்துள்ள நிலையிலும் 8ஆயிரத்து 516 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் எந்தவிதமான நஷ்டஈடும் பெறாத நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் அலவுக்கு மனம் உடைந்திருப்பதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

alt71ம் ஆண்டு புரட்சி செய்தஉயிர் நீத்த ஏப்ரல் வீரர்களை நினைவு கூறும் முகமாக கம்பஹா நகர சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு கம்பஹா நகர சபைத்தலைவர் எரங்க சேனாநாயக்க மற்றும் உறுப்பிணர் குணவர்தன உள்ளிட்ட காடையர் குழு பலவந்தமாக நுழைந்து இடையூறு விளைவித்துள்ளனர்.

ஊமையாகிக் கிடக்கின்றது உலகம்
ஆயினும் அது
அடிக்கடி சில
குசுக்களை நசுக்கியே விடுகின்றது
இந்திய தமிழ் நாட்டின்
மாணவர் போராட்டத்தைப் பார்த்து
அட்காச அறிக்கை விடும்
அவ்விட அரசியல் அறிவாளிகளைப் போல.

காணாமல் போன தங்கள் உறவுகளை மீட்டு தாருங்கள் எனக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடாத்த வடக்கிலிருந்து வரவிருந்த மக்கள் வவுனியாவில் வைத்து பாதுகாப்பு தரப்பினரின் கூட்டு முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 5 ம் திகிதி இரவு வவுனியா நகரசபை மைதானத்திலிருந்து சுமார் 700 பேர் வரை 10 ற்கும் மேற்பட்ட பேருந்துகளில் கொழும்பு நோக்கி புறப்பட ஆயத்தமான மக்களை வவுனியாவிற்கு அப்பால் பாதுகாப்பு தர முடியாது என்றும் அனர்த்தம் இருப்பதாகவும் 6 ம் திகதி காலை புறப்படுமாறு கூறி மக்களை பொலீசார் தடுத்து நிறுத்தினர்.

பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடிகளில் ஒருவரும் மூத்த தோழரும் புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்து போராட்டத் தழும்புகள் பெற்றவரும் லங்கா சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்கத் தலைவரும் புதிய பூமி – புதிய நீதி பத்திரிகைகளின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தனது ஐம்பத்தைந்து வருடகால அரசியல் பணியில் பல் வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவரும் முன்னுதாரணம் மிக்க கம்யூனிஸ்ட் போராளியுமான தோழர் இ.கா.சூடாமணி கடந்த 29-03-2013 அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார்.

பால் வைச்சு தண்ணியும் வாத்து பிள்ளை குளிச்சிட்டும் வந்திட்டுது. இனிமேல் பிள்ளை வெளிக்கிட்டு வெளியாலவர எப்பிடியும் குறைந்தது மூண்டுமணித்தியாலம் எண்டாலும் எடுக்கும். சொந்த பந்தங்கள் எண்டு நிண்ட சனங்களும் திருப்பி வெளிக்கிடவெண்டு வீடுகளுக்குப் போனதாலேயும், வீடீயோ அண்ணையும் கோலை ஒருக்கா படம் பிடிக்க போனதாலேயும், மேக்கப்புக்காரியும்

பிள்ளையின்றை அம்மாவும், நானும் தான் வீட்டில தனியா நிண்டோம். எனக்கு பொழுது போகாதபடியால் அங்கு மேசையில் இருந்த சில விளம்பரப் பேப்பர்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிசன் மெல்லெனக் கதவைத் திறந்து அடிக்குமேல் அடிஎடுத்து.., கிட்டத்தட்ட ஒரு வெறிகாரன் போல பக்கத்திலிருந்த கதிரையையும் பிடித்து நடந்து வந்து, மூச்சையிழுத்துக் களைப்பாறுவது போல், சாடையாக என்னையும் பார்த்துப் புன்னகைத்தபடி முன்னிருந்த சோபாவில் அமர்ந்தார். என்னடா இந்த மனுசன் விடிக்காலையிலேயே வெறியுடன் வந்திருக்கிறாரே எண்டு மனம் சங்கடப்பட்டுக் கொண்டது.

altகிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். உதயன் பத்திரிகை அலுவலகம் இன்று (03) அதிகாலை 5மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE