Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும்  - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய  இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013

{play}http://www.tamilcircle.net/audio/Ilakkiya_london_raya/Ilakkiya_raya2.mp3{/play}

இடதுசாரிகளின் தாக்குதலா?

இடதுசாரிகளின் பலம் ஐரோப்பாவில் ஒங்கியுள்ளதாக கொள்ளப்படுகின்றது. குறிப்பாக மாகிரட் தட்சர் சிலி நாட்டின் சர்வாதிகாரியான பினோச்சே மீதான கைதைத் தொடர்ந்து தட்சர் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்தார். இவர் இடதுசாரிகளின் தாக்குதலாக கணித்தார். அத்துடன் பினோச்சேவிற்கு நிபந்தனையற்ற ஆதரவினை தெரிவித்துக் கொண்டார். யூக்கோ மீதான தாக்குதலை இடதுசாரிகளின் தாக்குதலாக கணித்திருந்தனர். இந்தக் கட்சியில் 1989 பின்னால் இருந்த பிரதமர், நிதி மந்திரிகள் இடம் பெறுகின்றனர்.

altயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந் அவர்களின் வீடு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது.

அவன் எந்த நாளும் ஒரே குடிதானே, ஏதோ ஈரலிலே தான் பிழையாம், சீ சீ.... அவனுக்கு இரண்டு கிட்னியும் பெயிலாப் போச்சாம், ஏற்கனவே ஆளுக்கு நல்ல சுகர் வருத்தமுமாம், அதோடை கைப்பிறஸர்... எண்டும் குளஸ்ரோல் எண்டும் சொல்லினம்... இப்படி ஆயிரம் ஆயிரம் கதைகள்.

ஆனா... எது உண்மை, எது பொய்யெண்டு ஒருத்தருக்கும் சரியாகத் தெரியாது. ரவீந்திரனை கொஸ்பிற்லிலே விட்டிருக்காம் என்ற சேதி கேள்விப்பட்ட பிறகு இந்தச் தமிழ்ச் சனங்கள் மத்தியிலே இப்ப இது தான் பெரிய கதை.

தனித்து ஒரு விசேட பிரிவிலே அனுமதிக்கப்பட்டிருந்ததால் பார்வைக்காக ஒருத்தரும் அனுமதிக்கபடவில்லை. என்னுடைய மகனோடு தான் கதைக்க அனுமதிக்க வேண்டும் என்ற ரவியின் விருப்பத்தின் பேரில் மகன் சுரேந் இன்று வந்திருந்தான்.

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 05

பனாமா நாட்டின் அதிபராக இருந்த மனுவல் நொரேகா என்பவர் அமெரிக்காவின் நண்பானாக இருந்தார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் ஒத்துழைக்காத காரணத்தினால், அல்லது அமெரிக்காவிற்கு வரவேண்டிய போதைப் பொருளினால் வரவேண்டிய வருமானத்தை தடைசெய்ததால் என்னவோ பனாமாமீது ஆக்கிரமித்து அமெரிக்கா கைது செய்தது.

இதற்கு இன்றுமொரு உதாரணமாக சிலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த பினோச்சே பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு, ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதே நேரத்தில் ஸ்பானிய நீதிமன்றத்தில் காணாமல் அல்லது கொல்லப்பட்ட ஸ்பானிய தேசத்தவர்களின் மறைவிற்கு பினோச்சே பொறுப்பாளி என குற்றம்சாட்டப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது. வழக்கைத் தொடரும் பொருட்டு பினோச்சேயை ஒப்படைக்கும் படி ஸ்பானியா கோரிக்கை விட்டது. இதனைப் பரிசீலனை செய்த பிரித்தானிய நீதிமன்றம் இறுதியாக ஸ்பானியாவிடம் ஒப்படைக்கும் படி தீர்ப்புக் கூறியுள்ளதுடன், ஒப்படைக்கக் கூடிய நிலையில் பினோச்சேயின் உடன் நிலை இருக்கின்றதா என மருத்துவ பரிசோதனை செய்யும் படி உத்தரவும் இட்டுள்ளது.

 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சப்ரகமுவ பல்கலைக்கழக நான்கு மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இம் மாணவர்கள் நேற்று (28) மாலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் எங்கும் இராணுவம் போலிசார் என்று குற்றச்சாட்டுகள்

இலங்கையில் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம் இல்லை என்று ஐஎம்ஏடிஆர்(இமாதார்) எனப்படும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திடம் எழுத்துபூர்வமாக தெரிரிவித்துள்ளது.

ஜெனீவாவில் ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையிலேயே இந்தக் கடிதம் அந்தக் கூட்டத்தினருக்கு எழுதப்பட்டுள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தில், உலகப் பெருமட்டான யுத்தமாக்கி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆணிவேரை சிறிலங்காவின் அரசு அறுத்தழித்தது. அந்த அழிவுக்குள் எந்தவித நாதியும் அற்று நின்ற ஒரு தொகை தமிழ் மக்களின் உயிர்கள் தொலைக்கப்பட்டது. இதன் போது, புலிமீதான அழிப்பை மட்டும் வல்லாதிக்கர் தனித்து நடந்தியிருந்தால், அது புலியழிப்பு மட்டுந்தான். ஆனால் இவ்வழிவுக்குள் இலங்கையின் ஒரு தேசிய இனம் தொகை மதிப்பின்றி அழிக்கப்பட்டது. அதில், புலிகள் மக்களை யுத்தப் பகுதிக்குள் முடக்கி வைத்திருந்தார்கள் என்பதாகும். ஆனால், அந்தச் சூழலை அரச யுத்தத் தரப்புகளும் தமது யுத்த தந்திரத்தில் அதனையே விரும்பினர்.

சிவராசா வாத்திக்கு பொம்பிளைகளை பிடிக்காது. அதனாலே பட்டினத்தாரை பிடிக்கும். வாத்திக்கு கர்ணகடூரமான குரல். இப்ப இருந்துதென்றால் கட்டாயம் இந்தக்கால தமிழ்படங்களில் பாட சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். அவ்வளவிற்கு சகிக்க முடியாத குரல் ஆனாலும் தாளம் போட்டுக் கொண்டு பட்டினத்தார் பாடல்களை பாடும்.

கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே !

சாந்தி தியட்டருக்கு பக்கத்திலே இருந்த ஒரு ரியுட்டரியில் தான் வேலன், விஜயன், தேவன், லோகன் எல்லாம் சிவராசா வாத்தியிட்டை கெமிஸ்ட்ரி படித்தார்கள். சிவராசா வாத்தியை யாழப்பாண தனியார் கல்வி நிலையங்களில் பாணியிலே சொல்வதென்றால், யாழ் பிரபல இரசாயனவியல் ஆசிரியர் என்று சொல்லலாம். தீவிர இடதுசாரி, ஆனால் அந்த நேரத்தில் காட்டுத்தீ போல கனன்றெழுந்த ஈழத்தேசிய விடுதலைக்குப் பிறகு தான் தமிழ்தேசமும், சிங்கள தேசமும் பொதுவுடமையை நோக்கி பயணிக்க முடியும் என்ற சிந்தனையைத்தான் அவரும் கொண்டிருந்தார். பிரசுரங்கள் எழுதுவது, அரசியல் வகுப்புகள் எடுப்பது, உழைப்பதில் பெரும்பகுதியை அவர் சார்ந்த இயக்கத்திற்கு கொடுப்பது என்று தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். அவருடைய நெல்லியடி ஊர்ச்சனம் நல்ல மனிசன் ஆனால் என்று ஒரு இழுவை இழுப்பார்கள். அந்த இழுவைக்கு மண்டை கழண்டு போச்சு என்பது தான் அர்த்தமாக இருக்கும். வாத்திக்கு ஏன் பெண்களை பிடிக்காமல் போனது என்று இவனுகளிற்கு தெரியாது. கேட்கவும் துணிவில்லை.


மலையக மக்கள் "தேசமாக" வளர்வதை இல்லாதாக்கும் திட்மிட்ட நடவடிக்கை! 

பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி 25000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்கபெற்று அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. !

"தமிழ்" "தமிழ்" என தமிழக மக்களையும், தொப்புள்கொடி உறவென இலங்கைத் தமிழ் மக்களையும் வைத்து காமடி அரசியல் செய்வதில் கருணாநிதிதான் "முன்னிலைக் கோமாளி" என்றால் முஸ்லீம் மக்களை வைத்து காமடி அரசியல் செய்வதில் மந்திரி ஹக்கீம் அவர்களும் கருணாநிதியின் "காமடி நேர்கோட்டில்தான்" சஞ்சரிக்கின்றார்.

"கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது" எனகிறார் அமைச்சர் ஹக்கீம்.

பிறப்பால் கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது வாழ்க்கை என் கோப்பாய்க் கிராமத்திலுள்ள தேவாலயத்தினைச் சுற்றித்தான் அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்திற்குச் செல்வதுடன் ஆரம்பித்துப் பின்னர் வாலிபர் சங்கம், ஆலய நிர்வாகம் போன்ற பல மட்டத்திலும் சமூகம் எதிர்பார்த்த மாதிரி வாழவும் தொடங்கினேன். 1970களின் கடைசிப் பகுதியில் எமது ஆலயத்தில் கடமையாற்றிய மதகுருவும் அதற்குக் காரணம். அவரின் தமிழ் அறிவும் தமிழ்ப் பற்றும் மற்றைய மதங்களையும் மக்களையும் மதித்து நடந்து கொள்ளும் பண்பும் என்னையும் அவற்றில் ஈடுபாடு உள்ளவனாக ஆக்கியது.

சப்ரகமுவ பல்கலைகழகத்தில் மாணவர் போராட்டம் நடந்த வண்ணமுள்ளது. காரணம் , அரசியல் ரீதியாக, இயங்கிய மாணவர்களை பலகைக்கழகத் தலைமை பொய்க் காரணங்களைக் கூறி அம் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை மறுத்ததனாலாகும்.

இப்போ, அம்மாணவர்கள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அனுசரணையுடன், பல்கலைக்கழகத் தலைமையின் முடிவுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் கொட்டில்கள் அமைத்து, அங்கிருந்தபடி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் , பிரச்சாரத்தையும் முன்னெடுக்கின்றனர் .

இந்நாடகத்தை நடத்தியது அரசா? அல்லது தமிழ் இனவாதிகளா?

மட்டக்ககளப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பிரதேச செயலாளர் பிரிவில், இந்திய அரசின் துணையுடன் அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டம் நேற்று மீள் குடியேற்றத் திட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மீள்குடியேற்றம் சிங்கள - தமிழ் - முஸ்லிம் கிராமங்களில் (மங்களகம, பெரியமுல்லுமலை, உறுகாமம்) நடைபெற்றது.

இவ்வைபவத்திற்கு முன்பாக, முஸ்லிம் மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில், இந்திய அரசின் வீட்டுத் திட்டமா? "இஸ்லாமிய குடியேற்றத்திட்டமா?" எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்று தமிழ் - சிங்கள மொழியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தேசிய கலை இலக்கியப் பேரவை 2013இல் தனது 40வது ஆண்டில் கால் பதிக்கிறது. இதன்முகமாக விபுலானந்தர் ஆய்வரங்கும் கலை நிகழ்ச்சிகளும் எதிர்வரும் 26ம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் காலை 9.00 மணிமுதல் நடைபெறும்.

விபுலானந்தர் ஆய்வரங்கின் காலை அமர்வு பேராசிரியர் சி. சிவசேகரத்தின் தலைமையில் இடம்பெறும். இதில் ‘விபுலானந்தரும் சமூக அமைப்புகளும்’ என்ற தலைப்பிலான ஆய்வுரையை ஆய்வுரை: ச. சத்தியதேவனும் கருத்துரையை ஜெ. சற்குருநாதனும் நிகழ்த்த ‘விபுலானந்தரை உருவகப்படுத்தல்’ என்ற தலைப்பில் ஆய்வுரையை சு. நிர்மலவாசன், து. கௌரீசன் ஆகியோரும் கருத்துரையை சோ. தேவராஜாவும்; ‘ஒடுக்கப்படவர்களினதும் சுரண்டப்படுகின்றவர்களினதும் விமோசனம்’ என்ற தலைப்பில் தி. அனோஜன் ஆய்வுரை நிகழ்த்த த.கோபாலகிருஷ்ணன் கருத்துரை நிகழ்த்துவர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE