Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இன்றைய நிலையில் அனைத்துப்பிரிவு அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயற்படுகின்றார்கள். இதில் ஒருவர் ஒருவருக்கு தழைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். மகிந்தவின் மததை - இவைகள் இன்றைய அரசியல் காய்நகர்த்திற்கு பின்னால் இருக்கின்றது. வடக்கில் தேர்தல் வருவதை ஒட்டி அரசியல் நாடகங்கள், அரசியல் நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திடீரென சம்பந்தர் – ஜனாதிபதி சந்திப்பு நடைபெற்றது. அப்போ நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளும் "13' திருத்தம் உள்ளிட்ட எந்தவொரு முயற்சியிலும் அரசு முன்வைத்த காலைப் பின்வைக்கப் போவதில்லை. என இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின்போதே சம்பந்தனுக்கு ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தின் 66ஆவது படைப் பிரிவினர் பூநகரி பழைய மருத்துவக் கட்டிடத்தைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான 12காணித்துண்டுகளை சுவீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மக்கள் மதமாற்றம், ஆங்கிலக் கல்வி என்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலம் இலங்கை காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலம். ஆனால் இலங்கை மக்கள் கல்வியில் சிறப்புற வளர்ச்சி கண்ட காலமும் அந்த காலனித்துவ காலமே. இலங்கை முழுவதும் காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் யாழ்ப்பாண மேட்டுக்குடி சமூகம் கல்விக்கு கூடிய முக்கியத்துவம் வழங்கியிருந்தது. அந்த காலகட்டத்தில் அங்கு தான் கூடுதலான பாடசாலைகளும் நிறுவப்பட்டன. அந்த மக்கள் கல்வியினை நம்பி வாழ வேண்டிய தேவையும், சூழ்நிலையும் யாழ்ப்பாண சமூகத்தில் பெரியளவில் காணப்பட்டது. அல்லது அந்த மக்கள் கூலிகளாக வாழ வேண்டிய நிர்ப்பந்தமே அங்கிருந்தது.

செய்தியின் சாரல்- எகிப்து

கடந்த சில வாரங்களாக அரபு கிளர்ச்சியின் குறைப் பிரவசமாகிய எகிப்தியப் புரட்சி என்பது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் உட்பட்டது. மொகமட் இன் (Mohamed Mursi) ஆட்சியில் இருந்து அகற்றி (Adli Mansou) மன்சூர் இடைக்கால ஜனதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். 2011 இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தினையும் செல்லுபடியற்றதாக்கியுள்ளதாகவும், புதிய அரசியமைப்புச் சட்டத்தினை தயாரிக்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. அரபு எழுச்சி என்ற ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை ஜனநாயகத்தின் வெற்றியாகக் காட்டிக் கொண்ட நிகழ்ச்சியானது எதிர்காலத்தினை நிச்சயமற்ற நிலைமையை தோற்றுவித்துள்ளது. இந்த ஆட்சிக் கவிழ்பிற்கு பின்னால் முன்னாள் ஐ.நா அணுசக்தி தலைவரான ( Mohamed al-Baradei) மொகமட், கீழ்திசை வைதீக கிறிஸ்தவ சபையின் போப், சின்னி பிரிவின் (Al Azhar)அசார் பின்னணியில் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மதவாத அரசியமைப்புச் சட்டத்தினை எதிர்க்கும் பிரிவினர்கள் என்கின்ற போது ஏகாதிபத்தியங்கள் பின்னால் இருந்திருப்பதை ஊகிக்க முடியும். அரச ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை என அரச எதிர்ப்பாளர்கள் குற்றம் சுமத்தினர். ஆனால் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மதவடிப்படைவாத தொலைக்காட்சிகள் நேரலையாக ஒலிப்பதிவு செய்தது.

•மலையக மக்களிற்கு சொந்தமாக வீடு, காணி கிடைக்குமா?

• மலையக மக்களுக்காக வடக்கு கிழக்கு தமிழர்கள் குரல் கொடுப்பார்களா?

இலங்கையில் மலையகத் தோட்டப்புறங்களில் உள்ள காணிகளை ரகசியமாக வெளியாருக்கு விற்கும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை நகரில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.அரசாங்கம் இரண்டு ஏக்கர் காணியை தோட்டத் தொழிலாளர்களுக்காக வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரிட்டிஷ் படையில் தற்கொலை செய்துகொண்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மோதல்களின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகம் என்று பிபிசியின் புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது.

2012-ம் ஆண்டில் பணியிலிருந்த பிரிட்டிஷ் படைவீரர்களும் முன்னாள் வீரர்களும் அடங்கலாக 50 பேர் வரையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

செக்கல் பொழுதின் மையிருட்டில் மனமெல்லாம் கிளுகிளுக்க தவநாதன், வனிதா வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார். வாசல்படலையில் பூவரசம் குழைகள் கட்டியிருந்தன. வனிதாவின் புருசன் ஜெயக்குமார் வீட்டில் இருக்கிறார் என்பதன் சிக்னல் அது. ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார். பிறகொரு நாளில் படலையில் கட்டியிருந்த பூவரசம் குழையை ஆடு ஒன்று கடித்து தின்று விட்டது. காய்ஞ்ச மாடு கம்பிலே விழுந்தது போல தவநாதன் வீட்டிற்குள்ளே பாய்ந்தார். இண்டைக்கு இவற்றை முறையில்லையே இவரேன் வாறார் எண்டு யோசித்த வனிதா நிலைமையை விளங்கிக் கொண்டு கள்ளன், கள்ளன் எண்டு கத்தினா. கிழுவையை கடிச்சு, பூவரசை கடிச்சு கடைசியில் என்னையே கடிச்சிட்டுதே இந்த நாசமாப் போன ஆடு என்றபடி கவடு கிழிய வேலி பாய்ந்தார் தவநாதன். அப்பாவி ஜெயக்குமார் வீட்டிற்குள்ளே கள்ளன் வந்திட்டான் என்று அயல்சனங்களிற்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அயல் வீட்டுக்காரர்களிற்கு வந்த கள்ளன் யாரென்று விளங்கி விட்டுது. அன்றையிலேயிருந்து பூவரசங்குழை தவநாதனோடு ஒட்டிக் கொண்டு பூவரசங்குழை தவநாதன் என்றாகியது.

இன்றைய அரசியல் என்பது மக்கள் விரோதமாகவும் கோமாளித்தனமாகவும் மாறியுள்ளது.

இன்றைய தமிழ் கட்சிகள் மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்தினை பல வடிவங்களில் மேற்கொள்ள முடியும். சம்பந்தன், சுமந்திரன், சங்கரி, மாவை நீங்கலா மற்றவர்களுக்குத் தெரியும் எவ்வாறு போராட்டங்களை நடத்த வேண்டுமென்று. இவர்கள் மக்களை அணி திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பதனை தவிர்த்து, அன்னிய சக்திகளின் தயவை நாடி மக்கள் போராட்டங்களை மலடாக்கி மழுங்கடிக்கின்ற வேலையை செய்து கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு மாறாக முடியிழந்த புலிகளின் பழைய மன்னர்கள் புதிய புதிய பாத்திரங்களை தகவமைத்துக் கொண்டு அரசியல் கோமாளிகளாக உருவாகப்படுகின்றார்கள்.

தயா மாஸ்ரர் சொன்னது உண்மையா? உண்மையெனில் இது அரசின் படுபாதகத் துரோகம் தான்.

"காணாமல் போனவர்களின் கதை முடிந்தது முடிந்தது தான்" என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொன்சேகா அண்ணாச்சியும் தமிழ் மக்களின் இரட்சகன் ஆகியுள்ளார்!.

சர்வவல்லமை படைத்தவர் வடமாகாணசபைத் தேர்தலை நடாத்தலாமென சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓடர் போட்டுள்ளார். இவ்வறிவித்தலுடன் சகல அரசியல் கட்சிககாரர்களும் கோமணங்களை இறுகக் கட்டிக்கொண்டு தேர்தல் களம் நோக்கி கிளம்பி விட்டாங்க. இதில் நம்ம சரத் பொன்சேகா அண்ணாச்சியும் தமிழ் மக்களின் "இடைக்கால ரட்சகன்" ஆகியுள்ளார்.

இப் பொன்மனச்செம்மல் தன் பரிவாரங்களுடன் யாழ் சென்று, எப்படியோ பரிவாரங்களுக்கு ஊடாக பொது மக்களையும் சந்தித்துள்ளார். சந்திப்பில் ஒரு பெரும் ரட்சகன் ஆகி மக்களுக்கு ஜீவகாருண்ணியத்துடன் கூடிய மலைப்பிரசங்கத்தையும் செய்துள்ளார்.

alt

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ பண்டார இன்று காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சமூகமளித்திருந்த வேலையில் அவரை யூலை 17ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த மாதம் ஜீன் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் இந்திய அரசின் உளவுத்துறையின் அணுசரணையுடன் உருவாக்கப்பட்ட 'மனித உரிமைகள், உலக பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு' (Parliamentarian Forum On Human Rights – FOR GLOBAL DEVELOPMENT –PFHRGD) என்ற என்.ஜி.ஓ (NGO) மாநாட்டில், தமிழக பாராளுமன்ற (மேலவை) உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் புலம்பெயர் "தமிழர்" தலைவர்களும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களும் பங்கெடுத்துக் கொண்டது அனைவருக்கும் நினைவிருக்கக் கூடும்.

புலம்பெயர் சூழலில் நன்கு அறியப்பட்டவரும் இனியொரு வெளியீடான ஜயர் எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” நூலை புலத்தில் முன்னெடுத்து சென்றவரும் பிரான்சில் அசை (சமூக அசைவிற்க்கான எழுத்தியக்கம்) முன்னின்று நடத்திய உரையாடலில் முதன்மைபடுத்தப்பட்டவருமான தமிழ் மாணவர் பேரவையினை சேர்ந்த திரு.சத்தியசீலன் அவர்கள், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை முன்னின்று நடாத்தியதுடன் மாநாட்டில் முன்மொழியப்பட்டவைகளை தனது பெயரில் அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகர், பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மகிந்த அரசால் படுகொலை செய்யப்பட்டதை யாவரும் அறிவர்.

லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்ட அச்சுறுத்தலான சூழ்நிலையிலும் துணிச்சலுடன் முன்வந்து இலங்கையின் பிரபல பத்திரிகையான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ்.

ஈழப்போராட்டத்தின் ஆதரவுச் சக்திகளாக எமது இயக்கங்கள் இனங்கண்டு அவர்களின் ஒத்துழைப்பை பெற்றிருக்கின்றன. தமிழக ஆதரவுச் சக்திகள் தமிழீழத்தை ஆதரிக்கின்ற ஒரே காரணத்தினால் ஈழத்தின் நட்பு சக்திகளாக அடையாளம் காணப்பட்டனர். ஆனால் அந்த ஆதரவுச் சக்திகள் தமிழகத்தில் பின்பற்றும் அரசியல் என்ன என்பது பற்றிய அக்கறை அறவே அற்ற நிலைதான் ஈழவிடுதலை இயக்கத்தவர்களிடம் இருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு அரசியலைக் கொண்ட பிழைப்புவாதிகளாக இருந்துள்ளார்கள்.

1. வகுப்புவாத – சாதியக் கட்சிகள்

2. முதலாளித்துவ கட்சிகள் (திமுக, அதிமுக)

3. மார்க்சீய லெனினியக் கட்சிகள்

சாதி வெறியார்களின் பயங்கரவாதம் இளவரசனைக் கொன்று இருக்கிறது. திவியா நடைப்பிணமாகப்பட்டு இருக்கின்றாள். தன் தந்தை போல், தன் காதலன் போல், நாளை அவளும் கூடக் கொல்லப்படலாம். அவர்கள் தங்கள் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை சாதியம் தடுத்து நிறுத்தி இருக்கின்றது. தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மாணிக்க முடியாதவாறும், மரணித்து போகுமாறு சாதிய வக்கிரமும், சாதியப் பயங்கரவாதமும் கோரியிருக்கின்றது.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்திருப்பது மட்டுமின்றி, சாதியம் இவர்களை பலியெடுத்தும் இருக்கின்றது. இளவரசனின் இறப்பானது தற்கொலையா அல்லது கொலையா என்பது, சாதியப் பயங்கரவாதத்தின் தன்மையை வேறுபடுத்துமே ஒழிய, இந்த கொலைகார சாதி பயங்கரவாதத்தையும் அதன் அடிப்படையிலான அரசியலையும் மாற்றிவிடாது.

மகிந்த தலைமையிலான அரசால் இன்று இலங்கையில் முன்னெடுக்கப்படும் உலக மயமாதலுக்கும், இராணுவ பாசிசமயமாதலுக்கும் தடையாக, மாகணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கின்ற 13வது திருத்தச்சட்டம் இருக்கின்றது. அரசு தனது பாசிசமாக்கல் கொள்கையை மூடிமறைத்து செயற்படுத்த, பேரினவாதத்தின் துணை கொண்டு அதிகார பகிர்வை இல்லாதாக்க முனைகின்றது. இதற்காக 13வது திருத்தச்சட்டத்தை, தமிழ் மக்களின் பிரிவினையை அடிப்படையாக கொண்டதாக இட்டுக்கட்டிக் காட்டுகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE