Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கடந்த எட்டு வருடங்களாக நாடு சென்று கொண்டிருக்கும் பாதை கவலைக்குரியதாக இருக்கின்றது. நவ தராண்மைவாத ((Neo – liberalism)) பொருளாதரம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த பொருளாதார கொள்கையின் பிரதான இயல்பான தனியார் மயமாக்கம் எல்லா துறைகளிலும் பரவி வருகின்றது. குறிப்பாக இலங்கையில் நடைமுறையில் இருக்கும் இலவச கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் பிரதிபலன்களை பெற்றோர்கள் இன்று உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். அதேவேளை இலவச கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக இந்த விடயத்தில் மாணவர்களும் விரிவுரையாளர்களும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் ஒன்றினைந்து போராடும் சூழல் உருவெடுத்திருக்கின்றது. இதற்கெதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறைகளும் வன்முறைகளும் உச்ச கட்டத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

 

வெல்வேரிய தந்த தண்ணீர்

அப்பூமியின் ஆதி ஆதியிருப்பு- தங்கம்போல்

நிலத்தடிநீர், நீர்ஊற்று, சலசலத்துச் செல்லும் ஆறுகள்

அனைத்தும் அவ்வகையே!

முஸ்லீம் மக்களின் பள்ளிவாசல்கள் மீது பௌத்த அடிப்படைவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நீண்ட நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதியாகவே கடந்த பத்தாம் திகதி கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதி மக்களின் வீடுகள் கடைகள் உடைக்கப்பட்டும் உள்ளதுடன் முஸ்லீம் மக்களில் சிலர் படுகாயங்களும் அடைந்துள்ளனர். இவ்வாறான பள்ளிவாசல்கள் மீது தொடரும் தாக்குதல்களுக்குப் பின்னால் இன்றைய ஆட்சியினரின் உயர்மட்ட ஆதரவுக் கரங்கள் இருந்து வருவதாகவே நம்பப்படுகிறது. எனவே மேற்படி தாக்குதல் சம்பவத்தையும் அதன் மூலம் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டுள்ள பதற்ற நிலையையும் எமது புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அதே வேளை கடந்த முதலாம் திகதி வெலிவேரியாவில் சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலின் எதிர்ப்பு அலையை திசை திருப்புவதற்கு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆகஸ்ட் 10ம் திகதி மாலை கிராண்டபாஸ் ஸ்வர்ன சைத்திய பாதையில் அமைந்துள்ள முஸ்லிம் வணக்கஸ்தலமொன்றின் மீது சிலர் தாக்குதல் நடத்தியதன் பின்னர் தோன்றியுள்ள இனவாத மற்றும் மதவாத மோதல் நிலைமைகள் சம்பந்தமாக ஒட்டுமொத்த சமூகமும் கவனம் செலுத்த வேண்டுமென எண்ணுகிறோம்.

எந்தளவுக்கு மதம், இனம் .. என்று பிரிந்து நிற்கின்றோமோ, அந்தளவுக்கு எம் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்கும். அரசு என்பது மக்களைப் பிரித்து ஒடுக்குவது தான். அதே பிரிவினையையும், பிளவையும் நாங்களும் வரிந்து கொள்வது, எம்மீதான ஒடுக்குமுறையை வரைமுறையற்றதாக்குவது தான். அரசு மட்டும் ஒடுக்குவதல்ல, ஒடுக்கப்பட்ட மக்களும் தமக்குள் தாம் மோதிக்கொள்கின்ற நிலையை உருவாக்குகின்றது. அரச பாசிசம் இன்று இதைச் சார்ந்து மேலும் தூண்டி விடுகின்றது.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவும் அதனருகில் உள்ள பழைய பள்ளிவாசலை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பௌத்த சாசனம் மற்றும் மதவிவகார அமைச்சில் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பழைய பள்ளிவாசலை அகற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்கனவே எடுத்திருந்த தீர்மானத்தை ரத்துசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

பழைய பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள போதி மரத்தை (அரச மரம்) அகற்றிவிட்டு, அந்த இடத்தை பள்ளிவாசலுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று மாலை ஊடகங்களுக்கு அரசின் முடிவை அறிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார்.

அரச செலவில் பழைய பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்வதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்ததாக பேச்சுவார்த்தையில் பங்கெடுத்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பான பேச்சுவார்த்தை முஸ்லிம்களுக்கு முழுத் திருப்தியளிப்பதாக இருக்கவில்லை என்று மேல்மாகாண சபை ஆளுநர் அலவி மௌலானா கூறினார்.

முன்னதாக, நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்ட கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரதேசத்திற்கு இன்று காலை சென்ற அமைச்சர்களிடம், தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றக் கூடாது என்று முஸ்லிம்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஊரடங்கு உத்தரவு

இதற்கிடையே, சிறப்பு அதிரடிப் படையினர், கலகத்தடுப்பு பொலிசார் என்று பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் இன்று கிராண்ட்பாஸ் பகுதியில் தாக்குதல்கள் நடந்துள்ளன.

சிங்கள மக்களுக்குச் சொந்தமான வீடுகளும் தாக்கப்பட்டிருந்தன. அடிக்கடி மோதல்கள் மூளும் சூழ்நிலையால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவியதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலையில் தளர்த்தப்பட்டிருந்த போதிலும், இரண்டாவது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரவும் காலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதற்கு முன்னர் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதபடியாலேயே இனவாத சக்திகள் தொடர்ந்தும் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக முஸ்லிம் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலில் இருந்து பிறக்கின்றது!

வெலிவேரியாவில் தனது குடும்ப அரசின் அண்ணன்மார்களால் செய்யப்பட்ட படுகொலைகளுக்கு, தம்பி பசில் ராஜபக்ஸ கவலை தெரிவித்துள்ளார். இதுவும் காலம் கடந்த முதலைக் கண்ணீர்ப் புலம்பல்தான்.

குடிதண்ணீர் கேட்டு ஜனநாயகத்தின் பாற்பட்டு நியாயம் கேட்ட மக்கள் மீது, பாசிஸ சர்வாதிகாரத்தின் வெறிகொண்டு நடாத்திய வெறித்தனங்கள் எதன்பாற்பட்டவை.?

மக்களின் நியாயமான போராட்டங்கள், சட்டத்தை மீறும்போது, முதலில் அவ்விடத்திற்கு செல்ல வேண்டியவர்கள் பொலீசார்தான். ராணுவத்தை அங்கு அனுப்பியது யார்?

பசியும், பயமும் பின் தொடரும் நிழல்களாக துரத்த அவர்கள் மரணத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். கனத்த மழை பெய்து கரிய இருள் போர்த்திய இரவு நேரத்திலும் அவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், குருதிப்போக்கு குறையாமல் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்தவர்கள் மனிதத்தின் எதிரிகளிடம் போய்க் கொண்டிருந்தார்கள். காத்திருப்பது மரணம், சித்திரவதை, பாலியல் வன்முறை, பரிகாசம் என்று தெரிந்தும் அவர்கள் பிணம் தின்னும் கழுகுகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.

மறைந்த தோழர் குமரன் (வி. பொன்னுத்துரை) அரம்ப காலங்களில் இலங்கை கம்யூனிச கட்சி (மாஸ்கோ பிரிவு), செந்தமிழர் இயக்கம், காந்தீயம் ஆகிய அமைப்புக்களில் செயற்பட்டவராகவும் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் அரம்ப கால உறுப்பினராகவும் அதன் மத்திய குழுவிலும் பங்காற்றியவராவார். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் நிகழ்ந்த உட்கட்சி போராட்டத்தில் முக்கிய பாத்திரத்தை வகித்து தள மாநாட்டை நடத்துவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

இன்று போல் 1980 களில் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாணவர்கள் எதிர் கொண்டனர். இதன் போது 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அடங்கி, ஒடுங்கி உறைந்து கிடந்த தமிழ் சமூகம், மாணவர் போராட்டத்துடன் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பியதால், தன்னையும் கூட இணைத்துக் கொண்டது.

இலங்கையின் வெலிவேரிய பகுதியில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து இலங்கையின் தெரண எப்.எம் என்ற வானொலியின் நிகழ்ச்சி ஒன்றில் , அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை அடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

தலைமை அரசுத் தலைவர் ராஜபக்சவின் பேச்சியை தாராக மந்திரமாக உச்சரித்துக் கொண்டிருக்கும் அரச தொங்கு தசைகள் தமது பதவி ஆதாரயத்திற்காக மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

அரச தொங்கு சதைகள் மக்களை பொருளாதார ரீதியாக அன்னிய சக்திகளிடமும், அரசியல் ரீதியாக இலங்கை பாசீச அரசிற்கும் அடிமையாக இரு என்று போதிக்கின்றார்கள். அரச தொங்குசதைகள் மக்களை அரசியல் உரிமைக்காக போராடக் கூடாது என்று போதனை செய்கின்றார்கள்.

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த மாபெரும் இன அழிப்பு குறித்து அழிப்பு நடாத்திய ராணுவமே நீதி விசாரணை நடத்தி எழுதிய தீர்ப்பு குறித்து உலக மக்கள் அதிசயத்தில் மலைத்துப்போயுள்ளனர். அந்த மலைப்பு தணிவதற்குள் இதோ மற்றுமொரு இராணுவ விசாரணை. கம்பகாவில் குடிக்க சுத்தமான நீர் கேட்டு அமைதி வழியினில் போராடிய மக்கள் மீது மகிந்த பாசிச கூலிப்படை, இலங்கையின் மனித மற்றும் கனிப்பொருள் வளங்களை கொள்ளையிட திறந்து விடப்பட்டுள்ள பன்னாட்டு கம்பனிகளில் ஒன்றான இந்திய கம்பனிக்கு எதிராக போராடிய மக்களை அடித்து துவசம் செய்து படுகொலையும் புரிந்து விட்டு அது குறித்து அவர்களே நீதி விசராணையும் செய்து தீர்ப்பு வழங்க இருக்கிறார்களாம்.

சுத்தமான குடிநீர் கேட்டுத் திரண்டு நின்ற கம்பஹா மாவட்ட வெலிவேரிய ரதுபஸ் ஹெலவில் மக்களுக்கு அரசாங்கம் ராணுவ வேட்டுக்கள் மூலம் துப்பாக்கி ரவைகளை வழங்கி உள்ளது. வடக்குக் கிழக்கில் தமது இன உரிமைகளையும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் கேட்டு நின்ற மக்களின் உயிர்களைக் குடித்த அதே இராணுவம் இப்போது சுத்தமான குடிநீர் கேட்ட சிங்கள மக்கள் மீது பாய்ந்து துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளது.

"இனி இலங்கையில் சிறுபான்மையினரே கிடையாது. நாட்டை நேசிப்பவர்கள், நேசிக்காதவர்கள் என்ற பிரிவுகள் மட்டுமே உண்டு" -அதி உத்தம ஜனாதிபதி மகிந்து.

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களின் இரத்தம் குடித்து முடித்து சிங்கள தேசத்தையும், அகிம்சை தத்துவத்தை அகிலத்திற்கு அரும்கொடையாக அளித்த மதங்களில் ஒன்றான பெளத்த மதத்தையும் காப்பாற்றிய பிறகு வெற்றிவீரன் மகிந்து, நாடாளுமன்றத்தில் வைத்து பொழிந்த பொன்மொழிகள் இவை. சிங்களதேசத்திற்கு, சிங்கள மக்களின் பிரச்சனைகளிற்கு, துன்பங்களிற்கு வறுமைக்கு தமிழ்மக்களும், தமிழ்பயங்கரவாதிகளும் தான் காரணம் என்று காலங்காலமாக சேனநாயக்காகள், பண்டாராநாயக்காகள், ஜெயவர்த்தனா என்று வந்த பொய்யர்களின், கொள்ளையர்களின், கொலைகாரர்களின் பொய்மொழிகள் இவை. பாமர மக்களை இனம், மதம், சாதி, பிரதேசம் என்று பிரித்து இரத்தம் சிந்த வைத்து விட்டு தமது கொள்ளைகளை, கொலைகளை தடங்கலின்றி கொண்டு போவதிற்கு உலகம் முழுக்க உள்ள பயங்கரவாதிகள் பிரயோகிக்கும் பச்சைப்பொய்கள் இவை.

5வது அனைத்திலங்கை மாநாட்டின், 3வது நிறைபேரவைக் கூட்டம் 27,28-07-2013

தோழர்களே!

நாம் புதிய–ஜனநாயக மாக்சிச–லெனினிசக் கட்சியின் 5வது அனைத்திலங்கை மாநாட்டின் மூன்றாவது நிறைபேரவைக் கூட்டத்தில் கூடியிருக்கின்றோம். நாட்டின் சமகால அரசியல் பொருளாதார சமூகப் பண்பாட்டுத் தளங்களில் கட்சியின் மாக்சிச லெனினிச மாஓசேதுங் சிந்தனை அடிப்படையிலான கொள்கை நிலைப்பாடு பற்றியும் அதன் நடைமுறை முன்னெடுப்புகள் பற்றியும் 2010 யூனில் நடைபெற்ற கட்சியின் 5வது அனைத்திலங்கை மாநாடு தெளிவான கொள்கையை முன்வைத்திருந்தது. அதன் பின் 2011 யூனில் இடம் பெற்ற முதலாவது நிறைபேரவைக் கூட்டத்தில் உடனடியானதும் நீண்ட காலத்திற்குமான வேலைத்திட்டத்தையும் முன்வைத்திருந்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE