Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்பது, பாட்டாளி வர்க்க நலனில் இருந்து நோக்கப்படுகின்றது. இந்த வகையில் தேர்தல் அரசியலை பகிஸ்கரிக்காது அதில் பங்குகொள்ளும் நாம், எதிர் நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். அதாவது தேர்தலில் பங்குகொள்வதையும் பங்கெடுப்பதையும் பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், தேர்தல் அரசியலில் பங்குகொள்ளுமாறு கோருகிறோம். இதன் மூலம் இனவாதத்தையும், ஏகாதிபத்திய நலனையும் முன்னிறுத்தி, மக்களை இனரீதியாக பிளந்து ஒடுக்கும் ஜனநாயக விரோத தேர்தலில் பங்குகொள்ளாது பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், இந்த தேர்தலில் விவகாரமாக்கப்படும் அரசியலை தேர்ந்தறிந்து முன்னெடுக்கக் கோருகின்றோம்.

பொதுபல சேனாவிற்கு கொள்ளி தூக்கி கொடுக்கும் வேலைதான்…

வட மகாணசபைத் தேர்தல் களம் தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது என்ற நினைப்பில் இருந்து கருமங்கள் ஆற்றப்படுகின்றன. அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் தேர்தல் பிரசாரங்கள் மிடுக்கி விடப்படுகின்றன.

மாகாண சபையால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது எனவும், அதற்குள் இருக்கும் சில அம்சங்களை அலகாகக் கொண்டு சிலவற்றை அனுபவிக்கவும் பிரயோசனப்படுத்தவும் முடியும் எனவும் ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார செயற்பாட்டுக்களம், இப்போ தமிழ்ஈழம் நோக்கி நகர்கின்றது.

altயாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் காணாமற்போனாரின் உறவினர்கள் இன்று (27) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நூலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலகில் வாழும் எந்தவொரு சிறு உயிரினமும் தான் வாழும் சூழலில்  போராடி தான் உயிர் வாழ வேண்டும். போராடினால் தான் உயிர் வாழ முடியும். இது இயற்கை விதி. உலக பொது   நியதி.  எம் வாழ்விற்கும் இருத்தலிற்கும் அச்சுறுத்தல்   ஏற்படும் போதெல்லாம் போராடினால் தான் நிலைக்க முடியும். அப்படி தான் உயிர் வாழ்வதற்கும் உரிமைக்கும் அச்சுறுத்தல், உத்தரவாதமற்ற நிலை தோன்றிய போது தமிழினம் போராடியது. இன்றும் போராடினால் தான் பிழைக்க முடியும் என்ற சூழலில் வாழ்கின்றோம். மக்கள் விரோத சக்திகளுக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கும் எதிராக போராட வேண்டியதொரு சூழலில் எம் தேசியம் நிற்கும் நிலைமையில், மாணவர்களாகிய எமக்கும் அதில் முக்கியமானதொரு பாகம் இருக்கின்றது.

இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்தக்காலத் ஆசிரியரில் பலர்

எதுக்கெடுத்தாலும் தடி தண்டுகளால் அடிச்சு

தங்களின் வீட்டுச் சுமைகளை

மாணவரான எங்களுக்கு எம்மீது பதித்து

தேடலற்ற கல்வியினை திணிச்சுப் படிப்பிச்சதால்..!?

அவையே சரியான கருத்தென..,

எம்மனதில் அச்சடித்த பதிவாகி

எமது எதிர்காலம் நோக்கி..,

எமை வடம்பிடிக்கச் சொல்கின்றது.

ஒருவார கால விஜயமாக இலங்கை சென்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை, காணாமல்போனவர்களின் உறவினர்களை எதிர்வரும் 29ம் திகதியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை 30ம் திகதியும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இறுதிப் போரின்போது காணாமல் போனவர்களும் சரணடைந்தவர்களில் பலரும் ரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் தமக்கு முறையிட்டிருப்பதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய காணாமல்போனவர்களை தேடியறியும் குழுவினர் சுட்டிக்காட்டினர்.

பல ஆண்டுகளாக காணாமல்போயிருந்த பலர் முகாம்களிலிருந்து விடுதலையாகி வந்துள்ளதாகவும் காணாமல்போன பலர் இவ்வாறு ரகசிய முகாம்களில் இருப்பதாக உறவினர்கள் முன்வைக்கும் முறைப்பாட்டை ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரிடம் சுட்டிக்காட்ட இருப்பதாகவும் காணாமல்போனவர்களை தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறினார்.

alt"ஜப்னா முஸ்லிம்" இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக, அதன் ஆசிரியபீடம் தெரிவித்துள்ளது. இதன்பின்னால் இலங்கை அரசும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதி ஒருவரின் அயராத கையும் இருப்பதாக அவ்விணையம் குற்றம் சாட்டியுள்ளது.

 

ஊடகவியலாளர் மந்தனா இஸ்மையிலை கடத்திச் செல்ல சென்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் இலங்கை இராணுவத்தின் சிங்க படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் என கொழும்புச் செய்திகள் சொல்கின்றன. அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகன் ஒருவரே அவர்களை அங்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்புதலை வழங்கியதாகவும் அதில் கூறப்படுகின்றது.

அரசுக்கெதிரான எச்சரிகையாக காட்டமுனையும் பிரச்சாரப் போக்குகள்!

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரியான நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவரின் வரவுக்கூடாக இலங்கையில் மகிந்த ஆட்சிக்கு ஏதோ பிரளயம் ஏற்படுமாப்போல் பிரச்சார ஊடக உலகம் உவகை கொள்கின்றது.

இலங்கை விஜயத்தின் போது முன் கூட்டிய தீர்ப்புக்கள் எதனையும் எடுக்கப் போவதில்லை எனவும், பக்கச்சார்பாக செயற்படhமல் நியாயமான முறையில் நிலைமைகளைக் கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அறுவைதாசனிற்கு நீரிழிவு, சலரோகம், சர்க்கரை வியாதி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் வியாதி வந்து விட்டது. எத்தனையோ மருந்து சாப்பிட்டும் அது கட்டுக்குள் அடங்கவில்லை. வைத்தியரைப் போய்ப் பார்த்தான். இரவு உணவு சாப்பிட்ட உடனே நித்திரை கொள்ளக் கூடாது. கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு பிறகு படும் என்று அவர் ஆலோசனை சொன்னார். அறுவைதாசன் அதைப் போய் மனிசியிடம் சொல்லி விட்டு இரண்டு பேரும் சேர்ந்து படுக்கப் போக முதல் உடற்பயிற்சி செய்வோம், உமக்கும் நல்லது தானே என்று மெதுவாக ஜஸ் வைத்தான். நீர் உடம்பை கொஞ்சம் அசைத்தாலே பெரிதாக சத்தம் போடுவீர், இந்த லட்சணத்திலே உமக்கு சேர்ந்து செய்ய வேணுமோ நீர் மட்டும் தனியாக வெளியிலே நடந்து விட்டு வாரும் என்று ஒரேயடியாக மறுத்து விட்டா. இந்தக் கவலையோடு இருந்த நேரத்திலே அய்யாமுத்து வந்து சேர்ச்சிற்கு போக வேண்டும் என்றான்.

ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது, "ஜனநாயகம்" முழு நிர்வாணமாக அம்பலமாகும். இன்று எகிப்தில் நடப்பது, சுரண்டல் வர்க்கத்தின் அடிப்படையிலான அதன் வன்முறையின் சாரம்தான். முதலாளித்துவ "ஜனநாயகம்" எங்கெல்லாம் நிலவுகின்றதோ, அதனுள் காணப்படும் வர்க்க சர்வாதிகாரத்தின் பண்புரீதியான வெளிப்பாடுதான் எகிப்திய சம்பவங்கள்.

எகிப்தில் வாக்களித்த மக்கள், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவால் வீதிவீதியாக சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தேர்தல் "ஜனநாயகம்" மூலம் ஆட்சியேறியவரை சட்டவிரோதமான முறையில் கவிழ்த்து, சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். "ஜனநாயக"த்;தின் காவலனாக பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா, எகித்திய இராணுவம் போல் மறு தேர்தல் பற்றி பேசுகின்றது.

யாழ்-தேர்தல் களம் அரச காடைகளின் கைகளில் சிக்கித் தவிக்கின்றது. தேர்தல் விதிகள் மீறப்பட்டும், அரசுக்கு எதிரானவர்கள் தாக்கப்பட்டும், வடக்கின் வசந்த "ஜனநாயகத் தேர்தல்" குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலையாகியுள்ளது.

அரச-தரப்பு ராணுவத்திடம் சேர்ந்து தேர்தல் சட்ட விதிகளை மீறி செயற்படும் சமப்வங்கள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கினறன.

கடந்தவாரம் நாவாந்துறைப் பகுதியில் அரச தரப்பு வேட்பாளர் ஓருவர் ராணுத்திடம் சேர்ந்து களியாட்ட விழா ஒன்றை நடாத்தி, அதில் பங்கு பற்றிய மக்களுக்கு தேர்கால சலுகைகளைச் வழங்கியபோது, திடீரென அங்கு தேர்தல் அதிகாரிகள் சென்றடைந்தனர். அதிகாரிகளைக் கண்ட அரச வேட்பாளர் ஓடிய ஓட்டம் களியாட்ட விழாவின் சிறப்பு மரதன் (ராணுவ-வேட்பாளர்) ஓட்டப் போட்டியாக அமைந்ததாம்.

கல்வி அறிவை பெறும் செயற்பாடாகும். எமக்கு முன் இருந்த அனைத்து தலைமுறைகளும் பெற்றுக்கொண்ட அனுபவங்களே அறிவு எனப்படுகிறது. இந்த அனுபவங்கள் அதாவது அறிவு மாபெரும் கடல் போன்ற களஞ்சியமாகும். இந்த களஞ்சியம் மனிதகுலத்தின் மாபெரும் சொத்து. இதற்குள் தான் எம்முன்னோரின் அனுவங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கின்றன. நியுட்டன், ஐன்ஸ்டீன், எடிசன், லிங்கன், ஹெகல், பிளேட்டோ, ஒளவையார்,வள்ளுவர், மார்க்ஸ், சித்தார்த்தன், விவேகாநந்தர், சேகுவேரா, பாரதி, கமல், கலாம், பிரபாகரன் ஏன், குப்புசாமி, வீரகத்தி, ரவி, அகிலா, விஜி என எல்லோரினதும் அனுபவங்களும் அடங்கும். இந்த அனுபவங்களே எமக்கு அறிவாக கிடைக்கின்றன. இந்த அறிவை பெறுவதற்காகவே நாம் கற்கின்றோம்.

“நவீன உலகில் அணுசக்தி எதிர்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை…” இது 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சிசெய்து வரும் இருவரில் ஒருவரான கருணாநிதியின் மகள் கனிமொழி இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையில் குறிப்பிட்ட விடயம். அதிகரித்த சக்தி தேவையின் இடைவெளி ஏற்படுத்திய தடுமாற்றமாகவே அன்று இக் கூற்று கணக்கிடப்பட்டது.

தொழிற்துறையின் அதிவேக வளர்ச்சி சக்தி தேவையை அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற் போல மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது. மின்சாரமானது, பெரிய டைனமோ ஒன்றை சுழல செய்வதன் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது.

இரு மனங்களைப் பிளக்கும் சாதியையும், பெண்ணை வதைக்கும் தாலியையும், மனித உணர்வைக் கெடுக்கும் சாத்திரங்களையும், மனித இரத்தத்தையே கறக்கும் சீதனத்தையும் கடந்து, தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது சமூகத்தை நேரெதிராக எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. சமூகம் இதை மீறுவதைக் குற்றமாகக் காண்கின்றது. தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாக இழிவாக காண்கின்றது. தங்கள் வாழ்க்கைத் துணையை எந்தக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாகவே தேர்ந்தெடுப்பது என்பது, போராட்டமின்றி சாத்தியமில்லை. வாழ்க்கை சுமையாக்கப்பட்டு மகிழ்ச்சியே காவு கேட்கப்படுகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE