Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

உயிர்ப் பலிகளினால்

இயற்கையை அழித் தொழிக்க

அறிவிலி அரசியலில்

கங்கணம் கட்டி நிற்கும்

பாரதத் தமிழ் நாட்டின்

கூடங்குள அணுமின்னிலை முன்

அல்லும் பகலுமாய்

ஆயிரம் மக்கள் கூடி

இலங்கை வரையான

பல்லாயிரம் மக்களின்

எதிர்கால இயல் வாழ்வை

மீட்கப் போராடும் நிலையில்...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களது ஆட்சியும் எதிர்வரும் 15ம் 16ம் 17ம் திகதிகளில் கொழும்பில் நடாத்தும் பொதுநலவாய நாடுகளது அமைப்பின் மாநாட்டின் மூலம் நாட்டு மக்கள் எவருக்கும் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை.

குறிப்பாக வாழ்க்கைச் செலவின் உயர்வால் வாட்டி வதைக்கப்பட்டு வரும் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதுவித பயன்களும் கிடைக்கப் போவதில்லை. அதே போன்று பேரினவாத ராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் தமிழ் மக்களுக்கோ ஏனைய தேசிய இனங்களுக்கோ இது எவ்வித நன்மைகளையும் கொண்டு வந்து விடமாட்டாது. மக்களின் வரிப்பணத்திலிருந்து பலநூறு கோடி ரூபாய்கள் செலவு செய்யப்பட்டு ஆடம்பரமாக நடத்தப்படும் இம் மாநாடு மகிந்த சகோதரர்களது ஆட்சி அதிகார நிலைப்பிற்கும் நீடிப்புக்கும் மட்டுமே பயன் தர உள்ளதாக இருக்குமே தவிர நாட்டு மக்களுக்கானதாக அமைய மாட்டாது. எனவே அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் இம்மாநாடு பற்றி அக்கறைப்படுவதோ ஆதரவு தெரிவிப்பதோ அர்த்தமற்ற ஒன்றாகும்.

கேள்வி: யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிந்த கையோடு வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியது. அந்த வாக்குறுதி நிறைவேறியுள்ளதா?


ஜுட்: வடக்கு கிழக்கு ம்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறிய அரசாங்கம், உரிமைகளுக்குப் பதிலாக மக்களுக்க மிலிடரி மாதிரியான ஆட்சியைக கொடுத்திருக்கிறது. தொடர்ந்தும் தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டு தமது இனவாத அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்துகொள்வதற்காக யுத்த வெற்றியை பயன்படுத்தி வரும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தாலேயே இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் விஷேட அடக்குமுறை வேலைத் திட்டம் பாரதூரமானதாகும்.

தமிழ்மக்கள் மீதான சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் ஊடகவியலாளர்களாலும், மனித உரிமைச்செயற்பாட்டார்களாலும் தொடர்ந்து வெளிக்கொணரப்படுகின்றன. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை சர்வதேசமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டிய கடைமைப்பாடு கொண்டது என்று சொல்லிக் கொள்ளும் அய்க்கிய நாடுகள் சபை வன்னியில் போர்க்குற்றங்களை முன்னின்று நடத்திய சவேந்திர சில்வாவை இலங்கையின் பிரதிநிதியாக அங்கிகரித்துள்ளது. இனப்படுகொலையின் பின் வன்னி சென்று வந்த பான் கி மூன் இலங்கை அரசின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்று நற்சான்றிதழ் கொடுக்கிறார்.

கடந்தமாத போராட்டத்தில், பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரைத் தொடரின் முதற் பாகத்தின் இறுதியில் '1983 இல் வடபகுதியின் அதி உச்ச மீன்பிடி காரணமாக, நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத்தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தேன். வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் (one day boats -3 ½ Tonners) 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோரத் தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்களாலேயே பிடிக்கப்பட்டது.

வலி வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவப் பிடிக்குள் இருந்து வரும் மக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்படுவது இராணுவத்தின் நிரந்தர இருப்பையும் விஸ்தரிப்பையும் நோக்காகக் கொண்டதாகும்.

1990ல் வலிவடக்கில் இருந்து துரத்தப்பட்ட மக்களில் இன்னும் தமது சொந்த நிலங்களுக்கு மீளக்குடியமர செல்லவிடாது தடுக்கப்பட்டுள்ள சுமார் 3இலட்சம் மக்கள் அவல வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது வீடுகளில் ஒருபகுதியே தற்போது இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை மறுத்து இவ்வீடுகள் அழிக்கப்பட்டு வருவதை எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

CHOGM அல்லது பொதுநலவாய அரசத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடக்கவிருக்கின்றது. இதற்காக முழு நாடும் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த மாநாடு முடிந்த பின்னர் நாட்டு மக்கள் அனைவரினதும் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று அரசாங்கம் கூறுகின்றது. அது உண்மைதானா? பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது இருமடங்காகுமா? இது குறித்து நாங்கள் ஆழமாகாச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக பெரும்பங்காற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இன்னும் வீட்டு உரிமையோ அல்லது காணி உரிமையோ இல்லை. இதை தட்டிக்கேட்க மலையக தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மந்திரிமார்களுக்கு எவ்வித திறமையோ அல்லது அறிவோ இல்லை. ஆனால், அவர்கள் ஊடகங்களிலும் கூட்டங்களிலும் சிங்கங்களைப் போல் கர்ச்சிப்பதை மட்டும் காணமுடிகின்றது. தங்களது உதிரத்தையும் வியர்வையையும் சிந்துகின்ற மக்கள் தொடர்ந்தும் இப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்து கொண்டே வாழ்வதா?

மனிதர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களைப் பெறுவதற்கான மனித உழைப்புக்குள்ளும், நுகர்வுக்குமுள்ளுமான முரண்பாடுகள் பற்றி முரணற்ற வகையில் விளக்குகின்றது மார்க்சியம். உழைப்பு மற்றும் நுகர்வில் இருந்து மனிதனை அந்நியமாக்கும் முரண்பாடுகள், மனித உறவுகளை வர்க்கரீதியான உறவாக்குகின்றது. மனிதனுக்கு எதிரான இந்த தனிவுடமை சமூக அமைப்பை, மார்க்சியம் தலைகீழாகப் புரட்டிக் காட்டுகின்றது. சாராம்சத்தில் மனித வாழ்விற்கான வர்க்கப் போராட்டமாகவே மனித வாழ்வு இருப்பதை மார்க்சியம் எடுத்துக் காட்டுவதால், மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமாக இருக்கின்றது. மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமே ஒழிய, வெறும் அறிவு சார்ந்த தத்துவமல்ல. வர்க்கப் போராட்டத்தின் மீதான இயங்கியல் தான் மார்க்சியம். வர்க்கங்களற்ற சமுதாயத்தை படைக்கும் போராட்டமாகவே வாழ்வுக்கான மனிதப்போராட்டம் இருப்பதை, சமூக விஞ்ஞானமான மார்க்சியம் முரணற்ற வகையில் முன்வைத்து அமைப்பாக்கி இருக்கின்றது.

 

 

மனிதர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களைப் பெறுவதற்கான மனித உழைப்புக்குள்ளும்,  நுகர்வுக்குமுள்ளுமான முரண்பாடுகள் பற்றி முரணற்ற வகையில் விளக்குகின்றது மார்க்சியம்.  உழைப்பு மற்றும் நுகர்வில் இருந்து மனிதனை அந்நியமாக்கும் முரண்பாடுகள், மனித உறவுகளை வர்க்கரீதியான உறவாக்குகின்றது. மனிதனுக்கு எதிரான இந்த தனிவுடமை சமூக அமைப்பை, மார்க்சியம் தலைகீழாகப் புரட்டிக் காட்டுகின்றது. சாராம்சத்தில் மனித வாழ்விற்கான வர்க்கப் போராட்டமாகவே மனித வாழ்வு இருப்பதை மார்க்சியம் எடுத்துக் காட்டுவதால், மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமாக இருக்கின்றது. மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமே ஒழிய, வெறும் அறிவு சார்ந்த தத்துவமல்ல. வர்க்கப் போராட்டத்தின் மீதான இயங்கியல் தான் மார்க்சியம். வர்க்கங்களற்ற சமுதாயத்தை படைக்கும் போராட்டமாகவே  வாழ்வுக்கான மனிதப்போராட்டம் இருப்பதை, சமூக விஞ்ஞானமான மார்க்சியம் முரணற்ற வகையில் முன்வைத்து அமைப்பாக்கி இருக்கின்றது.

altகாலி, போகஹகொட பகுதியில் மேலும் ஒரு இளைஞர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். போகஹகொட சுகாதார மற்றும் சூழல் பாதுகாப்புக் கமிட்டியின் முக்கிய செயற்பாட்டாளரான நுவன் சமீர என்பவரே நேற்று இரவு 11.00 மணியளவில் கைது செய்யப்பட்டவராவார்.

altதமக்கெதிரான கருத்துக்களைக் கூறுபவர்கள் அடக்குமுறை செய்யப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதாக சம உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர முதலிகே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

"30ம் திகதி ஊடக அமைப்புக்களால் நடத்தப்பட்ட ஊடக நிக்ழவொன்றின் போது திடீரென அங்கு நுழைந்த பொலிஸார் அங்கிருந்த ஐ.எப்.ஜே. அமைப்பைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்களை பலவந்தமாக இழுத்துச் சென்றுள்ளனர். அக்டோபர் 31ம் திகதி மட்டகளப்பிலிருந்து வெளிவரும் @வார உரைகள்" பத்திரிகையின் ஆசிரியர் எம்.ஐ. ரஹ்மத்துல்லா பொய்க் குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு தமிழ்மக்களுக்கு குரல் கொடுக்கும் மாநாடாக அமைய வேண்டும் எனும் பாங்கில் இருந்து, தேசிய-சர்வதேசியத்தின் தமிழ் உணர்வாள சக்திகள் பற்பல பிரச்சாரப் பிரயத்தனங்களைச் செய்கின்றன.

தமிழ்நாட்டில் தியாகு ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரதம், அவரை சாகாமலே காப்பாற்றிற்று. தவிரவும் ஓரிருவரை தீக்குளிக்கவும் வழிவகுத்தது. இப்போ எல்லோருடைய குவிமையக் குரலானது இந்தியப் பிரதமர் வருகை பற்றியதாகியதுடன், அதனூடே மாபெரும் வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்துள்ளன.


வடக்கு-கிழக்கில் பெண்கள் போராளி குழுக்களில் இணைந்து ஆயுதமேந்தி வீரத்துடன் ஆண்களுக்கு நிகராக, ஆண்களுடனே மோதி இருந்தார்கள். இந்நிலைமை சமூகத்தில் பெண்கள் தொடர்பான முன்னேற்றமான நிலைமைகளை உருவாக்கியிருந்தமை குறிப்பிடதக்கது. ஆனால், அவர்கள் மீதும் இன்று அதிகமான அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. அவர்கள் யுத்தத்தின் போது கீழ்த்தரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன. அண்மையில் வன்னிப்பிரதேசத்தில் இராணுவத்திற்கு பலவந்தமாக பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படடதாக செய்திகள் வெளியாகின. வடக்கு-கிழக்கில் நடைபெறுபவற்றில் பெருமளவிளானவை வெளியுலகிற்கு தெரிய வருவதில்லை என சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பின் தலைவி திமுது ஆட்டிகல தெரிவித்தார். போராட்டம் பத்திரிக்கைகாக திமுது ஆட்டிகல வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவிபரம் பின்வருகிறது.

தோழர் மனுவேல் 10 வருடங்களுக்கு மேல் பல்வேறு சமூக பிரச்சினைக்களுக்காக உழைக்கும் மக்களுடனும், ஒடுக்கப்படும் மக்களுடனும், மாணவர்களுடனும் சேர்ந்து பலதரப்பட்ட ஜனநாயகவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இவர் சட்ட கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து மாணவர் பிரச்சினைகளுக்காக முழுவீச்சாக “பொதுநலமாணவர் எழுச்சி இயக்கத்தில்” தன்னை இணைத்துக் கொண்டு கல்லூரி, பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளை, மாணவர் தற்கொலை, மாணவிகளின் மீதான பாலியல் வன்கொடுமை போன்ற பிரச்சினைகளுக்காக போராடி வருபவர் மீது இந்த அரசும் அதன் ஏவல் ஆட்களான காவல் துறையும் தொடர்ச்சியாக, பல பொய் வழக்குகளை போட்டு மக்களிடம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறது.

கடந்த மாதம் செப்டம்பர் 23ம் திகதி அன்று Brussel நகரில் யூரோப்பியன் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள போல்கென்றி ஸ்பாக் கட்டிடத்தில் (7வது மாடி BLOCK: C) அறை எண் 50-ல் IBON International என்ற சர்வதேசிய NGO (பிலிப்பைன்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட) அமைப்பினரால் ஜனநாயகம், சுயநிர்ணயம் மற்றும் மக்கள் விடுதலை என்ற தலைப்பில் ஒரு அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

பல்வேறு அரசு சார நிறுவனங்களும் (NGO) இந்நிகழ்வுக்கு நிதி உதவி வழங்கிய அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தன. IBON அமைப்பே அழைப்பிதழையும் நிகழ்ச்சி நிரலையும் தொகுத்திருந்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE