Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

altபல்கலைக்கழத்திற்கு தகுதிபெறும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கட்டாய இராணுவ பயற்சியின்போது லஹிரு சந்தருவன் என்ற பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். அடுத்த பலி உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாமென அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கிறது. ஆகவே இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் அணிதிரள வேணடுமென ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

எம் நாட்டடின் 66-வது சுதந்திர தினத்தில் எம் நாட்டு மக்கள் சகல "சௌபாக்கியங்களுடனும் வாழ்கின்றார்கள்" என சுதந்திரப் பள்ளு பாடலாம்.

சுதந்திரத்தின் பின்னான காலனியம்-நவகாலனியம் போன்றவற்றின் தொடரான நவதாராளமய பொருளியல் மகிநத குடும்பத்திற்கும் அதன் சொந்த பந்த உறவுகளுக்குமான மயமாகியுள்ளது. நாட்டின் அதியுயர் பெருவளங்களையும்-பெருவருமானங்களையும் ஈட்டக்கூடிய அத்தனை துறைகளும் இக்குடும்ப மந்திரிகளின் மயமாகவே உள்ளது. இது 300-ற்கு மேற்பட்ட குடும்ப உறவுகளின் கூடாரமாகியுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் இன்றைய அரசியல், பொருளாதார நிலையும் எதிர் காலத்தில் ஆற்றவேண்டிய பணிகளும்

சிறப்புப்பேச்சாளர்: கலாநிதிசிவச்சந்திரன்

முஸ்லிம் மக்களின் இன்றைய அரசியல், பொருளாதார நிலையும் எதிர் காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகளும்.

சிறப்புப்பேச்சாளர்: கல்பிகா

மெல் குணசேகர இலங்கையின் முன்னணி பெண் ஊடகவியலாளரான மெல் குணசேகர குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

மெல் குணசேகரவின் சடலம் கூரிய ஆயுதமொன்றால் குத்தப்பட்ட காயங்களுடன் கொழும்பிலுள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்காலத்தில் ஏஎஃப்பி செய்திச் சேவைக்காக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொழும்பிலிருந்து பணியாற்றினார்.

தண்ணீர், நிலம், விதை... முதல் கல்வி வரை, தனியார் சொத்துடமையாக்கி வருகின்றது அரசு. அதாவது பன்நாட்டு மூலதனங்களின் சொத்துடைமையாகின்றது. இலங்கையின் கல்வியும், பல்கலைக்கழகங்களும் உலக வங்கியின் உத்தரவுக்கு ஏற்ப, தனியார் மயப்படுத்தும் அரசின் செயற்திட்டம் இன்று மாணவர்களின் தொடரான கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகின்றது.

இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் போராட்டங்களை ஒடுக்க, அரசு பாரிய அடக்குமுறைச் சட்டங்களை ஏவி வருகின்றது. கடந்த 4 வருடங்களில் அண்ணளவாக 1400 மாணவர்கள் கல்வி கற்றலில் இருந்து இடை நிறுத்தப்பட்டனர்.

உதயன் பத்திரிகை ஒரு கோடம்பாக்கத்து கோமாளியின் மூன்றாந்தர தமிழ்ப்படக் குப்பைக்கு விமர்சனம் எழுதியதற்காக பொங்கியெழுந்த கலாரசிக கண்மணிகள் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். தங்கத்தலைவனின் தமிழ்ப்படத்தை அவமதித்தவர்களை எதிர்த்து குரல் எழுப்பிய போராளிகளின் பெயர்கள் தமிழர்களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. மனோகரா தியேட்டரிலோ, ராஜா தியேட்டர் சுவரிலேயோ கல்வெட்டாக செதுக்கி வைக்கப்பட வேண்டிய செயற்கரிய செயல் இது. தமிழர்களிற்கு எதிரான போரில் ஆயிரம் தலைகளை வீசித்தள்ளியதால் தளபதி பட்டம் பெற்றவரை, ஒற்றைக்கையால் ஒரு நூறு பேரை அடித்து நொருக்கும் மாவீரனை, புவியீர்ப்பு விசை என்ற ஒன்றே இல்லாமல் பறந்து, பறந்து காற்றில் சண்டை போடுபவரின் படத்தை ஒரு பத்திரிகை எப்பிடி விமர்சிக்க முடியும் என்ற விசிலடி வித்துவான்களின் கோபம் போற்றுதலிற்குறியது.

அது ஒரு உல்லாசப் பயணிகள் நாடி வரும் அழகிய கடற்கரை. இரு உல்லாசப் பயணிகள் அன்று அங்கே தற்செயலாய் சந்தித்துக் கொண்டார்கள். ஒருவர் நோர்வேஜியர் மற்றவர் ஆங்கிலேயர். நோர்வேஜியருக்கு நீண்டகாலமாக இருந்த ஆசைகளிலொன்று, தான் இந்திய பெருநாட்டை ஒருமுறையாவது சுற்றிப் பார்த்துவிடுவதென்ற சிறுவயதிலிருந்தே வளர்ந்து விட்டிருந்த பெருவிருப்பு. நிறையவே இந்தியாவைப் பற்றி தான் கேள்விப்பட்டவற்றை தரிசிக்க வேண்மென்ற ஆவல் அவருக்கிருந்தது. தனது இளவயதில் தனது வருமானத்திற்கு கட்டுப்படியாகாதிருந்தும் தனது இந்தக் கனவை நிறைவேற்றும் எண்ணத்துடன், தான் சிறிதுசிறிதாக சேமித்து வைத்திருந்த பணத்துடன் தனது காதலியுடன் அவர் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

மழை போல் பொழிந்து தள்ளபட்டுக்கொண்டிருந்த குண்டுகளிடம் இருந்து தப்ப பதுங்கு குழிகளை தேடி பாய்ந்து ஓடினார்கள். காடுகளிற்குள் பாம்புகள் சீறிக் கொண்டிருந்த பற்றைகளிற்கு பக்கத்தில் பயந்து ஒளிந்திருந்தார்கள். ஆண்களிற்கும், பெண்களிற்கும் மரணம் அங்கு பொதுவாக இருந்தது. ஆனால் பெண்கள் மீது அங்கு இன்னுமொரு கொலை நடந்தது. அது மரணத்தை விட கொடுமையானது. மரணத்துடன் எல்லாம் முடிந்து விடும். ஆனால் கரும் பச்சை சீருடை அணிந்தவர்களால் சிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும். அவர்கள் சிறுமிகள், இளம் யுவதிகள், நடுத்தரவயது பெண்கள், உடல் தளர்ந்த முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்கவில்லை. இறந்த பெண் போராளிகளின் உடல்களை கூட வெறி கொண்டு சிதைத்தார்கள்.

நேற்றைய தினம் கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற, கல்வியை தனியார் மயமாக்கி இலவசக் கல்வியை எதிர்காலத்தில் இல்லாதாக்க முனையும் அரசிற்கு எதிரான போராட்டங்களிற்கு ஆதரவாகவும், நவதாராளமயமாக்கலிற்கு மாணவர், மக்கள் இணைந்து தொடர்ச்சியான எதிர்ப்பினையும், போராட்டங்களையும் முன்னெடுக்குமுகமாகவும் மாணர்கள், இடதுசாரிகள் இணைந்து நிகழ்த்திய கூட்டம் நிகழ்ந்துள்ளது.

கலைஞர் குடும்பத்தின் சமகால அரசியல் நிகழ்வுகள் கிட்டத்தட்ட இராமாயண காண்டம்-போல்தான் உள்ளது. தசரத-கைகேகி-கோசலை, பரத-சத்துருக்கன், இராம-லட்சுமணன் வாரிசு-முடியாட்சி கொண்டதொரு அயோத்திய நிலையில் உள்ளது.

அண்ணன் அழகிரியை காடேக வைத்து, தம்பி ஸ்டாலினிற்கு பட்டாபிஷேகம் செய்ய முயலும் தி.மு.க. அரச படலத்திற்கு தசரதன்போல், கலைஞர் தன் "அம்மாக்களுக்கும்" கொடுத்த வரங்களும் ஏதெனும் உண்டோ? எனவும் கேட்கத் தோன்றுகிறது.

விடைபெற்றுச் செல்லும் 2013 புதிய செய்திகளையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு விடைபெற்றுச் செல்கிறது. இலங்கையிலே CHOGMஒரு சர்வாதிகாரத்திற்கு மகுடம் சூட்டியதோடு அதற்கான செலவை நாட்டு மக்களின் தலையில் சூடிவிட்டு நடையைக் கட்டிவிட்டது. அனைத்து சர்வாதிகார, முதலாளித்துவ நாடுகளின் தலைவர்களும், காலனித்துவ எஜமானர்களும் ஆசி வழங்கி விட்டு சென்று விட்டார்கள்.


களியாட்டங்களில் குதூகலித்த மக்கள், செய்த தவறுக்காக தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏதோவொரு பகுதியில் தேர்தலை நடத்தும் ஒரே நாடான இலங்கையின், வடக்கு மக்கள் தாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டார்கள். அரசாங்கமோ தேர்தலை கொடுத்தது. இனவாதம் நன்றாகவே விலைபோன தேர்தலில் அதிகார வர்க்கத்தோடு இன்னொரு குழுவையும் மக்கள் சேர்த்துக் கொண்டார்கள். இப்போது தங்களை ஆள்வது யார் என்று தெரியாத நிலையில் மக்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவம் ஆள்கிறதா, ராஜபக்ஷ ஆள்கிறாரா அல்லது விக்னேஸ்வரன் குழு ஆள்கிறதா என்பதை தெரியாமல் மக்கள் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

எமது நாட்டில் கல்வி உரிமையைப் பற்றி மேடைகளில் பேசாத அரசியல்வாதிகளை காண்பது அரிது. இது அரசியல்வாதிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் தோற்றப்பாட்டை வழங்கினாலும், மக்கள் கல்விக்கு வழங்கும் முக்கியத்துவத்தின் காரணமாக அதற்கு ஏற்றப்படி அரசியல்வாதிகள் தம்மை தகவமைத்திருக்கின்றமையின் வெளிப்பாடாகும். மலையக அரசியல்வாதிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மலையக மக்களுக்கான கல்வி உரிமை வரலாற்று ரீதியாக மறுக்கப்பபட்டு வந்த நிலையில் இன்று முறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் மலையக சமூகத்தவரிடையே அதிக அக்கறைக் காணப்படுகிறது. கல்வி மீதான மலையக மக்களின் அக்கறை அவர்களின் அரசியல் வரலாற்றின் அடிப்படையிலான வெளிப்பாடாகும். அந்நியர்கள் என்றும் உழைப்பதற்கு மட்டுமே உரிமையுடையவர்கள் என்றும் அங்கீகாரம் அற்றவர்களாக ஒடுக்கப்பட்டு வாழும் நிலையில் இருந்து மீளுவதற்கான ஒரே ஒரு மாற்று வழியாக கல்வியின் முன்னேற்றத்தை மலையக மக்கள் காணுவதே இந்த அக்கறை வெளிப்படுத்தி நிற்கிறது.

நன்னீரின் பொசிவு நிலத்திலே இருந்தால் அறுகம் புல்லினங்கள் வேர்பரப்பி பசுமையுடன் படர்ந்து வளர்வது போலவும், மிகச் சிறிய விதையில் முளைத்து, கிளைகளும் விழுதுகளுடன் சாலப் பரந்து நிற்கும் ஆலமரத்திற்கு ஒப்பாகவும், மனித இனங்களின் வாழ்வும் வரலாறுகளும் உலகெங்கும் உள்ளன.

இதில் மிக நீண்டதோர் பூர்வீகத்தைக் கொண்ட வரலாறு தனித்து தமிழ் இனத்திற்கே உள்ளது என்பதான கருத்துகளும் - எடுகோள்களும் - ஆதாரங்களும் - வாதாட்டங்களும் என, வாய்ப் பேச்சாகவும் - ஊடகங்கள் மூலமாகவும் - அரசியற் பரப்புரையாலும் இலங்கை, இந்தியா என நடைபெற்ற விடயம், இலங்கை தமிழரை உலகெங்கும் சிதறடித்து உலகின் பட்டிதொட்டி எங்கும் இடம் பிடித்துள்ளனர்.

விடைபெற்றுச் செல்லும் 2013 புதிய செய்திகளையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு விடைபெற்றுச் செல்கிறது. இலங்கையிலே CHOGMஒரு சர்வாதிகாரத்திற்கு மகுடம் சூட்டியதோடு அதற்கான செலவை நாட்டு மக்களின் தலையில் சூடிவிட்டு நடையைக் கட்டிவிட்டது. அனைத்து சர்வாதிகார, முதலாளித்துவ நாடுகளின் தலைவர்களும், காலனித்துவ எஜமானர்களும் ஆசி வழங்கி விட்டு சென்று விட்டார்கள்.

களியாட்டங்களில் குதூகலித்த மக்கள், செய்த தவறுக்காக தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏதோவொரு பகுதியில் தேர்தலை நடத்தும் ஒரே நாடான இலங்கையின், வடக்கு மக்கள் தாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டார்கள். அரசாங்கமோ தேர்தலை கொடுத்தது. இனவாதம் நன்றாகவே விலைபோன தேர்தலில் அதிகார வர்க்கத்தோடு இன்னொரு குழுவையும் மக்கள் சேர்த்துக் கொண்டார்கள். இப்போது தங்களை ஆள்வது யார் என்று தெரியாத நிலையில் மக்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவம் ஆள்கிறதா, ராஜபக்ஷ ஆள்கிறாரா அல்லது விக்னேஸ்வரன் குழு ஆள்கிறதா என்பதை தெரியாமல் மக்கள் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

மகிந்தா யாழ் வந்தார். தெல்லிப்பளையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். வடமாகாண முதலமைச்சரும் கலந்து கொண்டார். இருவரும் ஒரே மேடையில் பரஸ்பரம் கருத்து மோதலில் ஈடுபட்டனர். யாழிற்கு வந்த மகிந்தா தானொரு "இனவாத புற்றுநோயாளிதான்" என நிரூபித்து சென்றுள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மூன்றாவது தீர்மானம் மார்ச் மாதம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது இலங்கை அரசாங்கத்திற்கு பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிப்பதாக அமைவதோடு ஆட்சியாளர்களிடத்தில் போர்க்குற்ற பீதியையும் வலுத்துள்ளது. இந்நிலையில் வழமை போலவே சர்வதேச அழுத்தங்களை தமது அரசியல் ஸ்திரத்துக்கு பயன்டுத்துவதற்கு ஏற்ற வகையில், மார்ச் மாதம் கடைசியில் தேர்தல் வரும் வகையில் மேல் மற்றும் தென் மாகாண சபைகள் அதன் ஆட்சி காலம் முடிடைவதற்கு முன்னமே கலைக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதற்கு உள்ளூரில் தமக்கு கிடைக்கும் தேர்தல் வெற்றிகளை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளமையும் கவனிக்கத்தக்கது. எனவே ஜனாதிபதி அண்மைகாலமாக பல கூட்டங்களிலும், விழாக்களிலும் கலந்து கொண்டு பரப்புரைகளை செய்து வருகிறார். அண்மையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி தமது அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி உட்பட ஏனைய அபிவிருத்திகள் யார் தடை விதித்தாலும் தொடரும் என்று குறிப்பிட்டதோடு தனது அரசாங்கத்தின் கீழ் ஹெரோயின், எத்தனோல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு நுவரெலியாவில் நடந்த பொங்கல் விழாவில் தோட்டங்கள், கிராமங்கள், நகரங்கள் என்று இல்லாமல் எமது அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE