Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தேர்தல் வெற்றிகள் தரும் பாடங்கள் என்ன?

அரசிற்கொதிரான சக்திகள் எல்லாம் தங்களவில் தாங்கள் பலமாக இருக்கின்றோம் எனும் தற்திருப்தி மாயையைக் களைந்து, மக்கள் மத்தியில் பலமாக இல்லையென்ற பெரும் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் தோல்விகளுக்கு ஊடாக வாக்கு வங்கியில் பலமாக (விழுந்தும் மீசையில் மண் படவில்லை) இருக்கின்றோம் எனும் தேர்தல்கால மார்தட்டலை விடுத்து, தேர்தலுக்கு அப்பாலும் மக்களின் விடியலுக்கான பலதரப்பட்ட ஜனநாயக வெகுஜனப் போராட்ட மார்க்கங்கள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இத்தொடர் போராட்டங்கள்தான் எதிர்காலத்தில் உங்களை பலமான சக்தியாக்கும் என்பதையும் உணருங்கள்.

மலையக தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆரோக்கியமான கருத்தடல்களை ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுக்கிறது.

இவ்வழைப்பை மக்கள் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாநாட்டின் போது பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி இ. தம்பையா அச்சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் பேசும் போது தெரிவித்தார்.

இலங்கையையும், சிங்கள மக்களையும், புத்த மதத்தையும் காப்பாற்றிய இலங்கேஸ்வரன், துட்ட கைமுனு எல்லாளனோடு வாள் சண்டை போட்டு தமிழர்களிடமிருந்து இலங்கையை காப்பாற்றினான். நவீன கைமுனு மகிந்தா கொழும்பிலிருந்து கொண்டே இலங்கையை காப்பாற்றினார் என்றெல்லாம் மண்டையில் மயிரை வழித்தால் மட்டும் போதும் புத்த பிக்குவாகி விடலாம் என்ற மகத்தான கொள்கை கொண்ட இலங்கை பிக்குகளால் போற்றப்படும் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த கவலையோடு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். அடுத்த தேர்தலிலே வெல்ல முடியுமா என்ற பெரும் கவலையில் அவர் ஆழ்ந்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் இடம்பெற்ற மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் தேசியப் போராட்டம் முடிவுக்கு வந்த 2009 யுத்தத்தின் பின்னான காலத்தில், அப்போராட்டத்தை தொடர்வதற்கான பலவகையான அரசியல் வழிமுறைகள் புலம்பெயர் தேசங்களில் விவாதிக்கப்படுகிறன. பெரும்பான்மையான புலிகளின் ஆதரவாளர்கள், அவர்களின் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அரசியற் சிந்தனைக்கேற்ப மேற்கு ஏகாதிபத்தியநாடுகைளைச் சார்ந்து நின்று தமிழ் ஈழத்தைப் பெறுவதே தமது அரசியல் நடைமுறையாகக் கொண்டுள்ளனர். இதற்கு வெளியில் உள்ள இடதுசாரியம் கதைக்கும் உதிரிகளும், சிறு சிறு குழுக்களும் அவர்களின் இணையங்களும் மேற்படி புலிகளின் ஆதரவாளர்களின் அரசியலை விமர்சித்த வண்ணம், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பல வழிகளை முன்வைக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் தேசியப் போராட்டம் முடிவுக்கு வந்த 2009 யுத்தத்தின் பின்னான காலத்தில், அப்போராட்டத்தை தொடர்வதற்கான பலவகையான அரசியல் வழிமுறைகள் புலம்பெயர் தேசங்களில் விவாதிக்கப்படுகிறன. பெரும்பான்மையான புலிகளின் ஆதரவாளர்கள், அவர்களின் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அரசியற் சிந்தனைக்கேற்ப மேற்கு ஏகாதிபத்தியநாடுகைளைச் சார்ந்து நின்று தமிழ் ஈழத்தைப் பெறுவதே தமது அரசியல் நடைமுறையாகக் கொண்டுள்ளனர். இதற்கு வெளியில் உள்ள இடதுசாரியம் கதைக்கும் உதிரிகளும், சிறு சிறு குழுக்களும் அவர்களின் இணையங்களும் மேற்படி புலிகளின் ஆதரவாளர்களின் அரசியலை விமர்சித்த வண்ணம், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பல வழிகளை முன்வைக்கின்றனர்.

தமிழ் ஈழத்திற்கு ஆதரவில்லை: பா.ஜ.க அறிவிப்பு!

இக்கட்சியின் குளறுபடிகள் நிறைந்நத தேர்தல் காலப்பரப்புரைகளில் "தமிழ்ஈழ" அறிவிப்பு முன்மாதிரியானது. தமிழ்ஈழக் கனவில் இருந்து பாரதிய ஜனதாவை வில்லாக வளைத்து தமிழ்ஈழ நாண் பூட்டி, இதோ தன் தோழில் போட்டுவிட்டேன் பாருங்கள் என்ற வை.கோ.வின் பாமரக் கணிப்பிற்கு விழுந்த இடி இது. 21-ம் நூற்றாண்டிலும் அரசியலை பாமரம் கொண்டு சிந்திப்பதை விடுத்து, குறைந்தது "அண்ணாவின் அறிவு" கொண்டாவது சிந்திப்பார்களா? இந்த தம்பிகளும், "ஐயா" நெடுமாறன் போன்றவர்களும்!…

இல்லாத ஒன்றிற்கு இருப்புகள் உள்ளதாக இட்டுக்கட்டுவது, ஜெனிவாப் பொறிக்குள் இருந்து தவறியோடும் தந்திரோபாயமாக கருதலாம். ஆனால் மூல-உபாயத்தில் அடிமுட்டாள்த்தன செயற்பாடுதான் என்பதை அறிவிலி அரசு அறியாதது பெரும் வியப்பல்ல. தன் கால் சிதறவுள்ளது… தான் தூக்கியுளள் பெரும் புலிப் பாறாங்கல்லால் என்பதை இவர்கள் உணர்ந்து செயற்பட்டால் அதை சமயோசித புத்தியாக கொள்ளலாம். இதுவெல்லாம் இவர்களுக்கு எப்படி வரும?

எப்போதுமே கோமா நிலையிலிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தேர்தல் வந்து விட்டால் விழித்துக்கொள்கிறார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் அந்த கட்சிகளுக்கு தொற்றிக் கொள்வதற்கு இடம் இல்லை என்று மத்திய மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார். அண்மையில் பொதுபலசேனாக்களுக்கு இவ்வளவு அதிகாரங்களை கொடுத்தவர்கள் யார் என கேள்வியெழுப்பினார். இவ்வாறான கேள்விகளை அமைச்சரவை அமைச்சராக இருக்கும் இவர் அமைச்சரவையில் அல்லவா கேட்க வேண்டும். அதனை விடுத்து மக்களிடத்திலா கேட்பது?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்ய தயக்கம் காட்டினர். இப்பேடித்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் திட்டமிட்டு எம்மை பழிவாங்காதே பொலிசே மாணவரை பொங்க வைக்காதே பொலிசாரே பக்கச் சார்பாக நடக்காதீர்கள், விபூசிகா-ஜெயக்குமாரியைக் கைது செய்த நீ… இவர்களை ஏன் கைது செய்யவில்லை போன்ற பதாதைகள் மற்றும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2011 நவம்பர் 16ம் திகதி கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அரசாங்கத்தின் செயல் திட்டமொன்று வெளியிடப்பட்டது. 2000மாம் ஆண்டு இலக்கம் 49 நகர மற்றும் கிராம நிர்மாணம்( திருத்தம்) சட்டமூலத்தின் 3(1) உறுப்புரைக்கு ஏற்ப ஜனாதிபதியால் 2011 ஜனவரி 13ம் திகதி நியமிக்கப்பட்ட தேசிய இயற்பியல் நிர்மாண சபையின் மூலம் 2011 மற்றும் 2030க்கிடையிலான 20 வருடகாலத்துக்குமாக தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம் 'தேசிய இயற்பியல் வரைவு" (National Physical Plan) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வரைவு தொடர்பான அரசாங்கத்தின் விளக்கத்திற்கு ஏற்ப, இலங்கையின் பூகோள அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அதனை பஞ்ச மகா சக்திகளின் கேந்திரஸ்தானமாக்குவதேயாகும்.

கடந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் 78 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். 78 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதானது யுத்தத்துக்கு பின் வந்த காலத்தில் நடந்த கைதுகளில் மிக அதிகமானதாகும். இலங்கைக்குச் சொந்தமான விசேட பொருளாதார கடல் வலயத்தில், சர்வதேச சட்ட அடிப்படைக்கு முரணாக, நடாத்தப்படும் இந்த கடல்வளக் கொள்ளையானது, தற்போது 2009 இக்கு முன்னிருந்த நிலையை விட அதிகரித்துள்ளது.

இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையிலான இருவேறு போராட்டங்கள் நடந்திருக்கின்றன.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளரைக் கோரி மன்னாரிலும், ஆறுமாதங்களுக்கு முன்னர் காணாமல் போய் எலும்புக் கூட்டு எச்சங்களாக மாங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசிரியர் கார்த்திகேசன் நிருபனின் மரணத்திற்கு காவல்துறையினர் சரியான விசாரணைகளை நடத்த வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் வெள்ளியன்று நடத்தப்பட்டிருக்கின்றன.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாநாடு, பொதுக்கூட்டம் எதிர்வரும் 29.03.2014 அன்று இரத்தினபுரியில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பெருந்தோட்ட தொழில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மட்டுமன்றி இலங்கையின் அனைத்து உழைப்பாளர்களினதும் சவால்களை எதிர்நோக்கும் வகையில் தொழிற்சங்கம்ஃசங்கங்களை கட்டுவது தொடர்பான வர்க்க ரீதியான முடிவுகளை ஏதுவதற்கான விவாதங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

கார்ல் மாக்ஸ் சிந்திக்க நிறுத்தி 14.03.2014வுடன் 131 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கார்ல் மாக்சை நினைவு பேருரையை இலங்கை கொம்யூனிஸட் ஐக்கிய கேந்திரம் 15.03.2014ம் திகதி கொழும்பில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிலைய கேட்போர் கூடத்தில் நடாத்தியது. 'ஏகாதிபத்தியத்தின் நவ-கொலனித்துவ, நவ-தாராளவாத தாக்குதலுக்கு எதிராக இலங்கை மக்களின் பணிகள்' எனும் தலைப்பில் கேந்திரத்தின் இணை இணைப்பாளர் இ.தம்பையா நினைவு பேருரையை நிகழ்த்தினார். நிகழ்விற்கு கேந்திரத்தின் இணை இணைப்பாளர் டிபில்யூ.வீ. சோமரத்ன தலைமை தாங்கினார்.

உள்நாட்டில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ள முடியாவிட்டாலும் அநீதி இழைக்கப்பட்டவர்கள் உள்நாட்டு பொலிஸ் நிலையங்களையும் நீதி மன்றங்களையும் நாடுகின்றனர். உள்நாட்டில் நீதி மறுக்கப்படும் போது சர்வதேச பொறிமுறையை நாடுவதற்கு வழிவகைகள் இருக்கின்றன. இதில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிடினும் நீதி கேட்கும் உரிமை போராட்டத்தை கைவிட வேண்டியதில்லை. அப்பேராட்டத்தை அங்கும் கொண்டு சொல்லலாம். இவ்விதமான நீதி கேட்கும் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு பல படிப்பினைகளை கொண்டு வந்து சேர்க்கும். அவற்றினூடே எதிர்கால அரசியல் மார்க்கங்களை வளர்த்து கொள்ள முடியும் என்று இலங்கை கொம்யூனிஸட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE