Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இன்று நினைவு கூறப்படும் மே தினம் அதன் உண்மையான அர்த்தத்தோடு நினைவு கூறப்படுவதில்லை. அது ஒரு போலியாக மாற்றப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் தனித்தனியாக மே தினத்தை நினைவு கூறுகின்றன. அதேபோல், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் ஒன்றாக இணைந்து மே தினத்தைக் கொண்டாட முடியுமென்றும் சில செஞ்சட்டை மேதாவிகளும் கூறுகின்றனர். இந்த போலி தர்க்கங்களுக்குப் பதிலாக முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராடும் அரசியலை சமூகமயப்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

உக்ரைன் கிழக்குப் பகுதியில் முகாமிட்டுள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களுடன் ரஷிய ராணுவத்தினரும் அதன் உளவுத்துறை அதிகாரிகளும் உள்ளனர் என்பதற்கான புகைப்பட ஆதாரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் அந்தப் பிராந்தியத்தில் தங்கள் ராணுவம் ஊடுருவவில்லை என்று மறுத்து வரும் ரஷியாவின் கூற்றினை பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இன்று நினைவு கூறப்படும் மே தினம் அதன் உண்மையான அர்த்தத்தோடு நினைவு கூறப்படுவதில்லை. அது ஒரு போலியாக மாற்றப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் தனித்தனியாக மே தினத்தை நினைவு கூறுகின்றன. அதேபோல், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் ஒன்றாக இணைந்து மே தினத்தைக் கொண்டாட முடியுமென்றும் சில செஞ்சட்டை மேதாவிகளும் கூறுகின்றனர். இந்த போலி தர்க்கங்களுக்குப் பதிலாக முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராடும் அரசியலை சமூகமயப்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பாரிஸ் கூட்டத்தில் முன்னிலை சோஸலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் - தோழர் பூபுடு ஜெயக்கொட

 

கடந்த அரை நூற்றாண்டிற்கு மேற்பட்ட இனவாத அரசியலால், நாடு இனவாத சகதிக்குள் மூழ்கியுள்ளது. இதனால் எம்நாட்டின் இனப்பிரச்சினை தீர்வில்லா பிரச்சினையாகவே தொடர்கின்றது. இந்நிலையில் எம்மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், நாம் தமிழ்மக்கள் பிரச்சினைகளை, சிங்கள மக்கள் மத்தியில் நேர்மையாக எடுத்துச் சொல்லி வருகின்றோம். இலங்கை அரசு இன்று தமிழ்-முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இன அடக்கு முறைகள், திட்டமிட்ட முறையில் அம்மக்ககளின் பிரதேசங்கள் மீது செய்துவரும் இனவொழிப்பு நடவடிக்கைகளை ஏன்தான் செய்கின்றது.? என்பதையும் விளக்கி வருகின்றோம்.

மரபணு விதை ஆய்வில் அடிப்படையான விஷயம் விதையில் உள்ள பாரம்பரிய உயிர்மங்களை மாற்றியமைப்பதின் மூலம் புதிய விதை வடிவம் பெறுகிறது. பசுமைப் புரட்சியின் தந்தை என்று கூறப்படும் விஞ்ஞானி நார்மன் பார்லாக் கண்டு பிடித்த குன்னரக மெக்சிகன் கோதுமையில் நார்ச்சத்து மாவுச்சத்தாக மாறிய அதிசயம் உண்டு. அதாவது வைக்கோல் குறைவாகவும் மணி அதிகமாகவும் பெறப்பட்டது. இதே ஆய்வு நெல், கம்பு ஆகியவற்றிலும் மேற்கொள்ளப்பட்டது. இதுவே மரபணு மாற்றத்தின் அடிப்படை.

பா.ஜ. பிரதமர் வேட்பாளர் மோடி பிரதமரான ஆறு மாதங்களில் பல விதங்களில் நமக்கு தொந்தரவு செய்து வரும் பாகிஸ்தான் அழியும் என மகாராஷ்டிராவில் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கடம் கூறியுள்ளார்.!

ராஜீவ் காந்தியின் மூவர் வழக்கு தீர்வில்லா தீர்ப்புகளுடன் தொடர்கின்றது. "அரசியல் சாசன பெஞ்செனச்" சொல்லி, உங்களுக்கு நடப்பில் உள்ள தொடர் தண்டனைதான் எங்கள் தீர்ப்பென…. உச்ச நீதிமன்றம் ஓர் அதியுயர் நவீன தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. உலக அரசியல் அரங்கில் ராஜீவ் கொலை போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் உலக வரலாற்றில் குற்றவாளிகளுக்கு இதுபோன்றதொரு கேவலமான இழுத்தடிப்புத் தண்டனை வழங்கப்படவில்லை எனலாம்.

முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட தமது சொந்த இடங்களிலேயே முஸ்லிம் மக்கள் குடியேறியுள்ளனரே தவிர, வில்பத்து காட்டுக்குள் எவரும் குடியேறவில்லை என சர்ச்சைக்குரிய முஸ்லிம் குடியேற்றம் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார் வை.எம்.எஹியான்

'முசலி பிரதேசசபைக்கு உட்பட்ட 27 கிராமங்கள் இருக்கின்றன. இதில் முதன்மையான நான்கு கிராமங்களாக மறிச்சிக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகியன விளங்குகின்றன. முள்ளிக்குளம் தமிழ் மக்கள் வாழ்கின்ற கிராமமாகும். ஏனைய கிராமங்களில் 90 சதவீதமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்தனர்.

உழைக்கும் மக்களாகிய நாங்கள் எமது பின்னடைவுகளையும் தோல்விகளையும் பற்றி மட்டுமே கவலைபடுகின்றோம். அதற்கான காரணங்களை கண்டறியாது விடுகின்றோம். மூளை உழைப்பாளிகள் மட்டுமன்றி உடல் உழைப்பாளர்களில் சிலரும் இன்னும் தங்களை தொழிலாளர்கள் என்று ஏற்றுக் கொள்வதில்லை. தங்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்றும் ஏற்பதில்லை. தற்போது மூளை, உடல் உழைப்பாளர்கள் அனைவரும் புதிய பாணிகளில் சுரண்டப்படுவதுடன் பிறரை நம்பி வாழும் புதியவகை ஏழைகளாக்கப்பட்டுள்ளனர் என இலங்கை கொம்யூனிஸ்ட்; ஐக்கிய கேந்திரத்தின் இணை அமைப்பார்களான தோழர் டபில்யூ.வீ. சோமரத்ன தோழர் இ. தம்பையா வெளியிட்டுள்ள மேதின அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அத்துடன் மக்கள் தொழிலாளர் சங்கம் காவத்தையில் ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டத்தில் பங்குகொள்ள கேந்திரம் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன் அதில் பங்குகொள்ளுமாறு ஜனநாயக, இடதுசாரி அமைப்புகளுக்கும் நபர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மே தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய முறையிற் பல பிரசாரங்களை முன்னிலை சோசலிசக் கட்சி அதன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்ளுகின்றது. இதன் ஒரு அங்கமாக , நேற்று (24.04.2014), இடதுசாரிய கட்சிகளுடன்- தமிழ் தளத்தில் மிக முக்கிய கட்சியான புதிய ஜனநாயக (மா- லெ) கட்சி உட்பட்ட கட்சிகளுடன் இணைந்து தலைநகர் கொழும்பில் வெற்றிகரமான கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது. இதன் தொடர்ச்சியாக, ஐக்கிய சோசலிசக் கட்சி (United Socialist Party), சோசலிசக் கட்சி (Socialist Party), சோஷலிச நடைமுறைக் கூட்டுவாழ்வு (Praxis Collective) போன்ற கட்சிகளுடன் இணைந்து, கொழும்பில் நடந்தது போல"மே தினத்தில் பச்சோந்தியும் சிவப்பாகும்" என்ற கருப் பொருளில் கருத்தரங்கும் உரையாடலும் கண்டி நகரில் ஒழுங்கு செய்துஉள்ளது.

றோட்டால் போகும் வெறிகாரனைப் பார்த்து சனங்கள் சிரித்தால்..., பார் எனக்கு வெறியாமென இதுகளும் சிரிக்குதுகள் என சனத்தைப் பார்த்து கோபப்படும் சண்டித்தனப் போதையர்களும் உண்டு. இதுபோல் நாடே கை கொட்டிச் சிரிக்கும் அளவிற்கு, நாட்டில் பொதுபல சேனாவின் இன-மத-வெறியுடன் கூடியதும், சாராய-மதுபோதையுடன் கூடியதுமான காடைத்தன கானமழை பொழிந்து கொண்டிருக்கையில், எவன்டா சொன்னான் என்னாட்சியில் இன-மத-வெறி இருக்கின்றதென மகிந்த ராஜபக்சரும் கோபப்படுகின்றார். உண்மையில் இவ்வெறியர்களில் முதலாமவர், மதுவெறியிலும், நம்ம ஜனாதிபதி சுத்த-இன-மத வெறியிலும் உளறுகின்றார்கள்…

தனக்காக மட்டும் வாழாது, பிறருக்காக வாழ்தலே உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற மனிதர்களின் உயரிய பண்பு. தங்கள் வாழ்கையில் இருந்தும், தம்மைச் சுற்றிய மனிதர்களின் வாழ்க்கை சார்ந்தும், சமூக உணர்வு பெற்றவர்கள், சோசலிச சமுதாயத்தை படைக்கப் போராடுவதன் மூலம் மகிழ்சியான சோசலிச வாழ்க்கையை உருவாக்க முனைகின்றனர்.

 

சுரண்டலும், சாதியமும், இனவாதமும், ஆணாதிக்கமும்... கொண்ட இன்றைய வாழ்க்கை முறை ஏற்படுத்தும் மனித அவலங்களையும் துயரங்களையும் இல்லாதொழிக்க, உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற போராட்டமே மிகச் சிறந்த மனிதர்களை மட்டுமல்ல முன்னுதாரணம் மிக்க வாழ்கையையும் உருவாக்கின்றது.

தனக்காக மட்டும் வாழாது, பிறருக்காக வாழ்தலே உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற மனிதர்களின் உயரிய பண்பு. தங்கள் வாழ்கையில் இருந்தும், தம்மைச் சுற்றிய மனிதர்களின் வாழ்க்கை சார்ந்தும், சமூக உணர்வு பெற்றவர்கள், சோசலிச சமுதாயத்தை படைக்கப் போராடுவதன் மூலம் மகிழ்சியான சோசலிச வாழ்கையை உருவாக்க முனைகின்றனர்.

சுரண்டலும், சாதியமும், இனவாதமும், ஆணாதிக்கமும்.. கொண்ட இன்றைய வாழ்க்கை முறை எற்படுத்தும் மனித அவலங்களையும் துயரங்களையும் இல்லாதொழிக்க, உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற போராட்டமே மிகச் சிறந்த மனிதர்களை மட்டுமல்ல முன்னுதாரணம் மிக்க வாழ்க்கையையும் உருவாக்கின்றது.

அப்பப்பா என்னமா புழு(ங்)குது

யுத்தம் முடிந்தது சத்யம் ஜெயித்தது

புத்த பகவானின் கருணையோ கருணை

பிதற்றித்திரியும் பக்ச நாடு நா(யா )டாய் !

 

வாய் திறந்தால் அபிவிருத்தி

வயிற்றுப் பசியாலோ மக்கள் அவதி

மந்திரிக்கும் தொண்டர்களுக்கும் சலுகை

வகை தொகை இன்றி மக்கள் பஞ்சத்தால் அழுகை!

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மே தினக் கூட்டமும் கருத்தரங்கும் வீடு காணி சம்பள உரிமைகளை வெற்றெடுப்போம் என்ற தொனிப்பொருளில் காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் காலை 10 மணி முதல் இடம்பெற உள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா குறிப்பிட்டுள்ளார்.

மேதினம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் எட்டு மணித்தியாலம் மட்டுமே வேலை நேரம் என்ற உரிமையை வென்றெடுத்த தொழிலாளர் போராட்ட மேதினத்தை நினைவூட்டும் இவ்வேளையில் அவ்வுரிமையை இழந்து விட்ட நாம் இன்று பல மணிநேரம் ஓய்வின்றி வேலை செய்து மாய்கிறோம். ஆரம்பத்தில் காடு வெட்டி மேடு திருத்தி பெருந்தோட்டங்களை அமைத்து பிரிட்டிஷ் கம்பனிகளுக்கு உழைத்த கொடுத்த பரம்பரைகள் இன்றில்லை. பின்னர் அரச நிறுவனங்களுக்கும் உழைத்து கொடுத்த பரம்பரைகள் போய், இன்று பெருந்தோட்ட பல்தேசிய கம்பனிகளுக்கும் சிறுதோட்ட உடைமையாளர்களுக்கும் உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எமது பரம்பரையான வர்க்க அடையாளம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்பதாகின்ற அதே வேளை எமது அதிகப் பெரும்பான்மையினரின் இன அடையாளம் மலையகத் தமிழர்களே.

- புதிய ஜனநாயக (மா -லெ ) கட்சி

- புதிய சமத்துவ சமூகக் கட்சி

- முன்னிலை சோசலிசக் கட்சி

- இலங்கை முன்னிலைக் கட்சி

ஆகிய கட்சிகள், மேதினத்தை முன்னிட்டு நாடுதழுவிய முறையிற் பல பிரசாரங்களை மேற்கொள்ளுகின்றன. இதன் தொடர்ச்சியாக, கட்சிகள் இணைந்து:

"மே தினத்தில் பச்சோந்தியும் சிவப்பாகும்" என்ற கருப் பொருளில் கருத்தரங்கும் உரையாடலும் ஒழுங்கு செய்துள்ளன .

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE