Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இந்தியாவின் அடுத்த பிரதமராக சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர் நரேந்திரமோடி அவர்கள் அரியணை ஏறுவது கண்டும் அவர் தலைமையின் கீழ் அமையும் இந்திய பெரும் முதற்சபையில், தமிழர்களின் உணர்வு பூமியாம் தமிழ்நாட்டில் இருந்து தனித்தொரு பெண்ணாய் வரலாற்றுப் பக்கங்களில் சாதனைகளுக்குச் சொந்தக்காரியாய் திகழும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் வழிகாட்டலின் கீழ் நிகரற்ற பெரு வெற்றிபெற்று தமிழர் குரலாய் செல்ல இருக்கும் பெரு மாண்புக்கும், போர் நடந்த ஈழத்தமிழ் மண்ணில் இருந்து தமிழ் மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இலங்கை அரசு தனது உள்நாட்டு இனவாத அரசியலைத் தொடர்வதற்காகவும், தொடர்ந்தும் தன் அரச அதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் அரசியலாக புலிகளின் மறு உருவாக்கம் என்ற பூச்சாண்டிக் கதைகள்  கடந்த மாசி மாதம் ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியது .

யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னும்,  புலிகளின் மறு உருவாக்கம் என்ற பொய்யைக் கசியவிட்டுப்  பின்,  அப் பொய்யை உண்மையென நிருபிக்க வேண்டிய தேவை,  ஏன் இலங்கை அரசுக்கு உள்ளது ஏன ஆராய்ந்தால்-   அது தற்போது பல இக்கட்டான  நெருக்கடிகளுக்கிடையே சிக்கியுள்ளது இலகுவாகத் தென்படும்.

தனிநபரொருவரின் ஏக அதிகாரங்கள் அதவாது நிறைவேற்று ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்கள் மற்றும் அவரது குடும்ப, உறவினர் நலன்சார்வாதம் என்பவற்றால் கட்டமைக்கப்பட்ட மஹிந்த ஆட்சியின் சர்வாதிகாரத்திலிருந்தும் நாட்டின் மீதான வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்தும் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கருத்தாடலை நோக்கி இலங்கை மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே என பிரகடனப்படுத்திக் கொண்டு, தனிநபர் படுகொலை, சாதாரண மக்களை பலி எடுத்தல் போன்ற தவறாக வழி நடத்தப்பட்ட போராட்ட தந்திரோபாயங்களை முன்னெடுத்தப் போதும் 2009 மே வரை அரசிற்கு எதிராக ஆயுத நடவடிக்கைகளை முன்னெடுத்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை வெளிநாட்டுச் சக்திகளின் கூட்டு ஒத்துழைப்புடன் தோற்கடித்த மஹிந்த அரசாங்கத்தின் இராணுவ வெற்றிவாதத்தினால் மக்களின் கவனத்திற்குரிய விடயம் தொடர்பான விவகாரங்கள் பலவீனமான தன்மை மேலும் மோசமடைந்தது.

இந்நாட்களில் பிரபலமான தொனிப்பொருள் எது?

சமீபகாலமாக நாட்டில் பேசப்பட்ட தொனிப்பொருட்களில் முக்கிய இடத்தை வகித்தது போதைப்பொருள் பாவனை. நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்யும் பொது வேட்பாளர் குறித்த பிரச்சினை. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி கொண்டு வந்தாலும், அதையும் கடந்து, அதிகாரமாற்றம், ஆட்சிமாற்றம் குறித்துப் பேச்சுக்களும் அடிபடுகின்றன. சிலர் அதற்காக பொதுவேட்பாளரைத் தேடுகின்றனர். இவற்றுக்கிடையில் எந்த வித்தியாசமுமில்லை.

உலகில் நவீன அடிமை முறைகளில் ஒன்றான கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் தொழில்முறைகளை ஒழிப்பதற்காக உலக நாடுகளை சட்டப்படி நிர்ப்பந்திக்கும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் அரசுகள் கைச்சாத்திட வேண்டும் என்று அடிமைத்தனம், குடியேறிகள் மற்றும் மனிதக் கடத்தல்கள் தொடர்பாக ஆராயும் ஐநாவின் சுயாதீன நிபுணர்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

உலகில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுமார் இரண்டு கோடிப்பேர் கட்டாய வேலைவாங்கல் முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறுகின்றது.

'லாபங்களும் வறுமையும்: கட்டாய தொழிலின் பொருளாதாரம்' என்ற பெயரில் ஐஎல்ஓ என்ற சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் இந்தவாரம் வெளியிட்டுள்ள புதிய புள்ளி விபரங்களில், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விடவும் மூன்று மடங்கு அதிகமாக, அதாவது ஆண்டுக்கு சுமார் 150 பில்லியன் டாலர்கள் கட்டாய வேலை வாங்கல் முறைகள் மூலம் லாபம் ஈட்டப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரும் மே 28-ம் திகதி நடக்கவுள்ள உலக தொழிலாளர் மாநாட்டில், அரசுகளை சட்டப்படி நிர்ப்பந்திக்கும் உடன்படிக்கை ஒன்றுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி ஐஎல்ஓவின் உறுப்புநாடுகளை மனித உரிமை ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலைமையில், இலங்கையில் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் இன்றளவும் நவீன அடிமைமுறைகள் நீடிப்பதாக சமூக ஆர்வலர்களும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நூற்றாண்டு காலமாக தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் குடியிருப்புகள், அவர்களுக்கு சொந்தமாக்கப்படாத சூழ்நிலையை தோட்டக் கம்பனிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் இ. தம்பையா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தோட்டக் கம்பனிகள் தமது நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்படாத தொழிலாளர்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுகின்ற போக்கு பல தோட்டங்களில் இன்னும் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத் தோட்டமொன்றில், '30 நாட்களும் வேலைசெய்ய தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதற்கு முடியாதபோது தோட்டக் காவலாளிகளை வைத்து தொழிலாளர்களைத் தாக்குகின்ற சூழ்நிலையும் காணப்படுகின்றது' என்றார் வழக்கறிஞர் தம்பையா.

தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சனைகளை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாத விதத்தில் தோட்டக் கம்பனிகள் மலையகத் தொழிற்சங்கங்களை முடக்கி வைத்திருப்பதாகவும் வழக்கறிஞர் தம்பையா கூறினார்.

-http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/05/140523_sri_lanka_forced_labour.shtml

இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு யாழ்ப்பாணத்து இளைஞர், யுவதிகளை இணைப்பதற்குரிய மாபெரும் வேலைத் திட்டத்தை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். இராணுவத் தொண்டர் படைக்கு ஆள்களைத் திரட்டித் தருமாறு ஒவ்வொரு பிரதேச செயலாளர்களையும் கோரியுள்ள இராணுவத்தினர், கிராம சேவையாளர்கள் ஊடாகக் கிராமம் கிராமமாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மீண்டும் அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் அந்த துண்டுப்பிரசுரங்களில் குடாநாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளின் பத்திரிகையாளர்கள் இருவரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வாளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் 20.05.2014 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் போது காலை முதல் மதியம் வரை சுமார் 15 புலனாய்வாளர்கள் ஆலயத்தின் உள்ளே காணப்பட்டனர் என்றும் என்ன காரணத்துக்காக பூசைகள் நடைபெறுகின்றன என்பது குறித்த விவரங்களை அவர்கள் சேகரித்துக் கொண்டிருந்தனர் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தே இன முரண்பாடுகளை கழைய முடியும் என்ற அரசியல் உண்மை இன்று அரசியல் ரீதியாக முன்னுக்கு வருகின்றது. அதேநேரம் எல்லாவிதமான இனவாத குறுந்தேசியவாத அரசியல் போக்குகளும் அம்பலமாகி முட்டுச்சந்திக்கு வருகின்றது.

இனவாதமும் குறுந்தேசியவாதமும் முந்தைய வியாபாரிகளினதும் பிழைப்புவாதிகளினதும் தொங்கு சதையாக எஞ்சிக் கிடக்கின்றது. இப்படி வலதுசாரியக் கூறுகள் மக்களில் இருந்து தனிமைப்பட்டு விட இடதுசாரிய வேடம் போட்டோர், சீரழிந்த தேசியவாதத்தை நடைமுறையற்ற "சுயநிர்ணயம்" என்ற வெற்றுக் கோசம் மூலம் மூடிமறைத்து மீண்டும் அரங்கேற்ற முற்படுகின்றனர். இந்த வகையில் இன்று தனிநபர்கள் தொடக்கம் குறுங்குழுக்கள் வரை "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்திக் கொண்டு இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தங்களைப் போன்றோரை அணிதிரட்ட முற்படுகின்றனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டமைக்கும் அவர்கள் மீதான தாக்குதலுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று மேற்கொண்டனர். பதாகைகளையும் கோசங்களையும் எழுப்பிய வண்ணம் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நான்கு வருடகால சுகாதார பட்டப்படிப்பை மூன்று வருடமாக குறைத்தமை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்பாக செய்த ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் போது பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.அத்துடன் இவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதி யுத்தத்தின்போது, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு மே மாதம் 18 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் நினைவஞ்சலி செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன்கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் புதன்கிழமையன்று திறக்கப்பட்டபோது இராணுவ அச்சுறுத்தலையும் மீறி, இனப்படுகொலைக்கு பலியாகிய போராளிகள் உறவினர்கள் மற்றும் மற்றும் மக்களிற்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை அரசு தனது உள்நாட்டு இனவாத அரசியலைத் தொடர்வதற்காகவும், தொடர்ந்தும் தன் அரச அதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் அரசியலாக புலிகளின் மறு உருவாக்கம் என்ற பூச்சாண்டிக் கதைகள் கடந்த மாசி மாதம் ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியது .

யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னும், புலிகளின் மறு உருவாக்கம் என்ற பொய்யைக் கசியவிட்டுப் பின், அப்பொய்யை உண்மையென நிரூபிக்க வேண்டிய தேவை, ஏன் இலங்கை அரசுக்கு உள்ளது ஏன ஆராய்ந்தால், அது தற்போது பல இக்கட்டான நெருக்கடிகளுக்கிடையே சிக்கியுள்ளது இலகுவாகத் தென்படும்.

இணைந்த சுகாதார பட்டப்படிப்பிற்கான நான்காண்டு கால வகுப்புகளை மூன்றாண்டு காலமாக குறைத்தமைக்கு எதிராகவும் பல்கலைகழக மாணவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்பு கோரியும் அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரத்தில் அரசாங்கம் கண்டுகொள்ளா கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இதனை கண்டித்து அனைத்து பல்கலைகழக மாணவர்கள் 16ஆம் திகதி பல்கலைகழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு விட்டு கலைந்து சென்ற மாணவர்களை சிவில் உடை தரித்த பொலிசார் அடாத்தான முறையில் கைது செயத்துடன் கண்மூடித்தனமாக தாக்கி விளக்கமறியலில் வைத்துள்ளனர். அரசாங்கம் பல்கலைகழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராகவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் 17ஆம் திகதி 'நிப்போன் ஹேட்டலில்' ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினர். அதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்களின் சாரம்சம்:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தாவிற்கு எதிராக நிறுத்தப்படவுள்ள பொது வேட்பாளருக்கு ஆதரவு குறித்து எதிர்க்கட்சிகளுடன் இரகசியமாக தொடர்பிலுள்ள அமைச்சர்கள் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜபக்ஸ அரசாங்கம்அடையாளம் கண்டுள்ளது என்று தெரியவந்ததுள்ளது. மேலும் ஆளும் மகிந்த தரப்பினர் இவர்களின் ஊழல் சம்பந்தமான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதன் மூலம் பொது வேட்பாளர் ஒருவரை ஆதரிக்க கூடிய ஆளும் கட்சி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மறைமுகமாக மிரட்டும் வேலைகளை ஆரம்பித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE