Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சகல இனவாத மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் 4 அமைச்சர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டாளர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க, றிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் வழிநடத்தி வரும் அமைப்புகள் நாட்டில் அவ்வப்போது மோதல்களை ஏற்படுத்தி வருகின்றன.

இலங்கை அரச அதிகாரத்தை வைத்திருக்கும் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பொதுபல சேனா மற்றும் மதவாத - இனவாத சக்திகள் முஸ்லீம் சகோதரகளுக்கு எதிராக நட்த்தும் பயங்கரவாத வன்முறையினைக் கண்டித்தும், நீதிகோரியும் இன்று 18.08.2014 கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக சமவுரிமை இயக்கம் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது .

அனைத்துச் சமூகத்தினரும், கட்சிகளும், மதத்தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதிக அளவில் சிங்கள மொழி பேசும் மக்களுடன் பிக்குகள் பலரும் கொழும்பு வாழ் முஸ்லீம் சகோதர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் வடக்கின் பிரபல அரசியல்வாதியும் வடமாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம், முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்கள், நவசமாசக் கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சம உரிமை ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே  உரையாற்றுகையில்,

தற்போது நாட்டில் உருவாகியுள்ள இன மற்றும் மதவாத வன்முறைப்போக்கிற்கு பிரதான காரணம் எமது நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் பிழையான அரசியல் முறைமையே என்று குற்றஞ்சாட்டியதுடன் இந் நிலைமையை மாற்றி அமைக்க நடை முறைச்சாத்தியமான அரசியல் மாற்றம் ஒன்றின் அவசியத்தை வலியுறித்தினார்.

இதே கருத்தையே அங்கு தமிழில் உரையாற்றிய முஹமட் பாரூக் அவர்களும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாம் இத்துண்டுப்பிரசுரம் ஊடாக உங்களைச் சந்திப்பது நாட்டின் ஒருபகுதியில் இனவாத, மதவாத கொடுந்தீ கொழுந்துவிட்டு எரியும் சந்தர்ப்பத்திலாகும். அண்மையில் தர்க்கா நகரில் ஆரம்பித்த இந்தத்தீ அளுத்கம, பேருவளை வழியாக பரவி வருகிறது. மதப்பற்றுள்ள சிங்கள பௌத்தர்களுக்கும் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம்களுக்கும் இடையிலான சிறு சிறு பிரச்சினைகளுக்காக, குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் படுகொலையாவுமளவுக்கு சென்றதேன்?. தற்போது வியாபார நிலையங்கள் பல தீயிடப்பட்டுவிட்டது, பல உயிர்கள் பலியாகியுள்ளன, மேலும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தனை கொடுமைகளும் எதனை பகிர்ந்து கொள்ள முடியாமல் போனதற்காக? இந்த வன்முறை ஆரம்பமாகியது எப்படி?

காடுகள் மேடுகள் திருத்தி

மக்கள் உழுதுண்டு வாழ்ந்திடும் போது

கொடிய மிருகத்தின் இரையென மனிதரை

முறைவைத்துக் கொன்று கொழுக்கிற கூட்டத்தை (வர்க்கத்தை)

அடியொடு அழித்து மனித விடுதலை காண

எழுந்து வாருங்கள்

அனைவரும் இணைந்து வாருங்கள்.

அண்மைக் காலங்களில் முஸ்லீம் மக்களுக்கும் அவர்களது பள்ளிவாசல்களுக்கும் எதிராகப் பேரினவாதிகளும் பௌத்த மத அடிப்படைவாதிகளும் மேற்கொண்டு வந்த மிகமோசமான பிரசாரங்களினதும் நடவடிக்கைகளினதும் ஒரு பகுதியாகவே அளுத்கம முஸ்லீம் மக்கள் மீதான வெறித்தனத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் இரண்டு முஸ்லீம்கள் கொல்லப்பட்டதுடன் குழந்தைகள் சிறுவர்கள் உட்பட அறுபது பேர் வரை காயப்பட்டுள்ளனர். வீடுகள் வர்த்தக நிலையங்கள் உட்பட மக்களின் உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வீடு வாசல்களை விட்டு வெளியேறிய மக்கள் பள்ளிவாசல்களிலும் பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் போன்று வேறுசில பிரதேசங்களுக்கும் இதனை விரிவுபடுத்துவதற்கு பௌத்தமத அடிப்படைவாத வெறியர்கள் முயன்று வருகின்றனர். எனவே அளுத்கம முஸ்லீம் மக்கள் மீதான மிலேச்சத்தனத் தாக்குதலை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்கள்களைத் தடுத்து நிறுத்துவதற்கு பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனாவையும் அதனை ஒத்த ஏனைய பேரினவாத வெறிபிடித்த அமைப்புகளையும் தடை செய்வதே ஒரேவழியாகும்.

இலங்கையில் இன்று முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் திட்டமிட்ட இனக்கலவரம், கொலைகள், சொத்துகளைச் சூறையாடுதல்- அழித்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டித்து சமவுரிமை இயக்கம், நாளை (18.06.204) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சமவுரிமை இயக்கம் விடுத்துள்ள அழைப்பு:

யுத்தம் நடைபெற்ற காலத்தில் சிங்களவர்களின் எதிரிகளாக தமிழர்களையும், தமிழர்களின் எதிரிகளாக சிங்களவர்களையும் காண்பித்தார்கள். தற்போது எழுச்சி பெற்றிருக்கும் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான நம்பிக்கையீனம், சந்தேகம், எதிரித்தன்மை போன்றவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இந்த கொடுந்தீக்கு பெற்றோல் ஊற்றியவர்கள் வெவ்வேறு இனவாத, மதவாத குழுக்களாகும். இக்குழுக்கள் இயங்குவது அரச அதிகார வர்க்கத்தின் அங்கீகாரத்துடன் என்பது ஒன்றும் ஒளிவுமறைவானதல்ல!

முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன முறுகல் நிலை நேற்று அளுத்கமயில் உக்கிரமடைந்து மூன்று அப்பாவி உயிர்களை காவு கொண்டு விட்டது. இவ்வாரானதொரு சூழல்தான் வடக்கு கிடக்கில் யுத்தத்திற்கு மூல காரணியாக காணப்பட்டது.

30 வருட யுத்தம் முடிவடைந்து. 05 வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னமும் அந்த வடுக்கள் மக்கள் மத்தியில் ஆறவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில், நேற்று அளுத்கமயில் நடந்திருக்கும் சம்பவமானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் என்று முன்னிலை சோசலிச கட்சி இன்று (16) ராஜகிரியவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் உறுப்பினர் ரவீந்திர முதலிகே மற்றும் புபுது ஜாகொட ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

அளுத்காமவில் பொதுமக்களுக்கு இடையில் எற்பட்ட முறுகல்களை, இன-மத வன்முறையாக்கியது அரச ஆதரவு பெற்று இயங்கும் பொது பல சேனா. பொலிஸ் - இராணுவம் குவிக்கப் பட்டு ஊராடங்குச் சட்டம் அமுலிருந்த வேளையில், பல கடைகள் தீக்கிரையாகப்பட்டும், வீடுகள் தாக்கப்பட்டுமுள்ளது. முஸ்லிம் மக்கள் அடைக்கலங்  கோரி பொது இடங்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.

அளுத்காமவில் பொதுமக்களுக்கு இடையில் எற்பட்ட முறுகல்களை, இன-மத வன்முறையாக்கியது அரச ஆதரவு பெற்று இயங்கும் பொது பல சேனா. பொலிஸ் - இராணுவம் குவிக்கப்பட்டு ஊராடங்குச் சட்டம் அமுலிருந்த வேளையில், பல கடைகள் தீக்கிரையாகப்பட்டும், வீடுகள் தாக்கப்பட்டுமுள்ளன. முஸ்லிம் மக்கள் அடைக்கலங்கோரி பொது இடங்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.

இதை அடுத்து பலர் காயமடைந்தும், சிலர் கொல்லப்பட்டும் உள்ளனர். இதில் மிகவும் கவனிக்கப் படவேண்டிய விடயம் என்னவென்றால் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தூப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி இருப்பது தான். தங்கள் மீது இன-மத வன்முறைலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொது இடங்களில் தஞ்சம் கோரிய மக்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அரசு ஆதரவு பெற்ற இனக் கலவரங்கள் முதல் அரசு நடத்திய போர் குற்றங்கள் வரை, சட்டத்தின் முன் கொண்டு வந்தது கிடையாது. அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் மேலான தொடர் வன்முறைகள் தொடக்கம், வழிபாட்டு தலங்களை "பௌத்த புனித பூமி" என்ற பெயரில் அகற்றுவது வரை அரசின் கொள்கையாகவே நடைமுறையில் இருந்த வருகின்றது.

இலங்கையின் தென்மாகாண நகரமான அளுத்கம மற்றும் தர்கா நகரில் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தக்கொண்டிருக்கின்றன.

ஒரு பௌத்த பிக்குவை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதாக பொய்க் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தி பௌத்த இனவாதிகளால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது.

அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும்இ அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதல் இன்று இடம்பெற்றது. உஜீர்தப்படுத்தப்படாத செய்திகளின் படி 7 பேர் இறந்துள்ளதாகவும் 10 இற்கு மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அறியக் கிடக்கின்றது. இந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும்இ சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்ததை அடுத்துஇ அங்கு இன்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம் ஒன்றை நடத்த பொலிஸார் அனுமதி அளித்ததை அடுத்தே இந்த மோதல்கள் நடந்துள்ளன.

அளுத்கமையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தி தெரிவிக்கிறது. பலர் காயமுற்ற நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இவ்வுயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, இன்னமும் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

 

 

இறுதியாக கிடைத்த செய்திகளின்படி,  தெகிவளையில் உள்ள முஸ்லீம் ஒருவருக்கு உரித்தான மருந்து விற்பனை கூடம் சிங்கள இனவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

நடப்பு அரசியல் பற்றி பேசுவதற்காக முன்னிலை சோசலிச கட்சி ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு நாளை(16)பொது நூலக கேட்போர் கூடத்தில் நடை பெறவுள்ளது. மேற்படி தலைப்பில் கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ உரையாற்ற உள்ளார்.

சாக எத்தனிக்கும் போதெல்லாம் தனது பிள்ளைகளின் முகங்களும், அவர்களின் எதிர்காலமுமே அவளுக்கு கண்முன் வருகின்றது. வாழ நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு நடந்த கொடுர சம்பவங்கள் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் சாவுவரை துரத்துகிறது. சாகவும் துணிவற்றவளாகவும் வாழவும் பிடிக்காதவளாகவும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கனடாவுக்கு நடைப்பிணமாக வந்து சேர்ந்தாள் ஆதிரையாள்.

புது நாடு, புது இடம், பார்க்குமிடமெல்லாம் மேகத்தை எட்டித்தொட நிற்கும் கட்டிடங்கள், புது மனிதர்கள், சட்டென்று ஒட்டமுடியாத சூழல், புது மொழி, ஏதிலியாய் பிடுங்கி எறியப்பட்ட மன உறுத்தல். எல்லாவற்றையும் மீறி இவற்றுக்குள் தானும் கால் பதித்திடவேணும் என்ற பறப்பு. அவளுடைய பழைய நினைவுகள் எல்லாவற்றையும் ஒரு புறம் பின்னுக்கு ஒதுக்கி ஒடுக்கிவிட்டு மற்றவர்களோடு சேர்ந்து தானும் ஓட எத்தனித்து விட்டாள். இவை எல்லாவற்றுக்குமப்பால் அவள் நாளாந்தம் சந்திக்கும் உடன் பிறவா சக மனிதர்கள் அவள் மனதில் ஏதோ ஒரு மூலயில் ஒடுங்கிக் கொண்டிருக்கும் பழைய ஞாபகங்களை ஒருக்காவேனும் தட்டியெழுப்ப முயற்சிக்காமல்லில்லை. எப்போதெல்லாம் அவளுக்கு மனம் சலித்துப்போகுதோ அப்போதெல்லாம் தன் பிள்ளைகளின் முகங்களை கண்ணுக்குள் கொண்டு வந்து தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்வதில் தேற்சிபெறத் தொடங்கினாள். இன்னமும் மாறாமனங்களை கொண்ட மனிதர்களை எண்ணி அவள் மனதில் ஒரு மூலையில் இங்கும் நிம்மதியாக இருக்க முடியுமால் போய்விடுமோ என்ற பயம் அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது. எதெல்லாவற்றையும் மறக்கவேணும் என்று இங்கு வந்தாளோ அதற்கு எதிர்மாறாகவே இங்கும் அவளுக்கு இருந்தது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கூட்டமைப்பின் பிறேமச்சந்திரன் மக்களிடம் அபிப்பிராயம் கேட்கும் படலத்திற்கு சென்றுள்ளார். இதை தமிழ் தேசிய அரசியல் இயலாமையின் பாற்பட்ட நிகழ்வாக கொள்ளலாம்.

நாங்கள் சொல்வதை நீங்கள் (மக்கள்) செய்யுங்கள் உங்களுக்கானவற்றை நாங்கள் செய்வோம். இதுவே தமிழ் தேசிய அரசியலின் கடந்தகால வரலாறு. பாராளுமன்ற அரசியலானாலும் சரி தமிழீழப்போராட்ட அரசியல் ஆனாலம் சரி தமிழ் மக்கள் பார்வையாளர்களாகவே வைக்கப்பட்டுள்ளனர்.

ரலாற்றில் பல்வேறு சமூக காரணங்களால் தோற்றுவிக்கப்படும் பாரதூரமான முரண்பாடுகளை, குறிப்பிட்ட சமூகம் தீர்க்காத வரையில் அது ஆறாத வடுவாக மட்டுமல்ல உடலுக்கு கேடு விளைவிக்கும் ஆழமான புண்ணாகவும் அழுகிக் கொண்டிருக்கும்.

சுவாரஸ்யத்தை படைப்பதான முகாந்திரத்தில், திட்டமிட்டே அரசியல் நீக்கம் பெற்ற அல்லது மக்களுக்கு எதிரான அரசியலின் எழுத்துக்களால் மக்களை பாதிக்கும் சமூக பிரச்சினைகளை ஒருக்காலும் உள்ளன்போடு தொட முடிந்ததில்லை. மார்க்சிய/ சமூகவியல் ஆய்வு நூல்களே அந்த பணியை நிறைவு செய்து வருகின்றன.

கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா ஆகிய இரு பத்திரிக்கையாளர்களின் பெருமுயற்சியில் வெளிவந்துள்ள அயோத்தி: இருண்ட இரவு’ என்ற நூல் இந்த உண்மையை உணர்த்தும் உரைகல் எனலாம். பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறை சரியாகச் சொன்னால் சதியை, ஒரு புனைவுக்குரிய நீரோட்டத்துடன் நமக்கு உரைக்கும் அதே நேரத்தில் அதோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், மனிதர்களையும் அரசியல் துணிவோடு அடையாளம் காட்டுகிறது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE