Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற கருப்பொருளில் சம உரிமை இயக்கத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்துவேட்டை இன்று இரத்தினபுரி அகலியகொட நகரில் இன்று நடைபெற்றது. மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

இது தொடர்பாக சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே, 1983யூலை மாதம், கடந்த 31வருடங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்ளால் செய்த மிகவும் அபகீர்த்தியான செயற்பாடு தான் இந்த கறுப்பு ஜூலை. இதன் விளைவாக பாரிய இன, மத வாதங்களால் மீண்டும் மீண்டும், அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மக்கள் இது தெடர்பான விழிப்புனர்வு மக்களுக்கு அவசியம் என்று அவர்  தெரிவித்தார்.

வைஸ்ணவ பிரபந்தங்களிற்கு பெரியவாச்சான்பிள்ளை, சிறியவாச்சான்பிள்ளை என்று இருவர் பொழிப்புரை எழுதினார்கள் என்று சொல்லுவார்கள். சமவுரிமை இயக்கம், முன்னிலை சோசலிசக்கட்சியின் கோசங்களிற்கு, அறிக்கைகளிற்கு இன்று சில வாச்சான்பிள்ளைகள் பொழிப்புரை எழுதுகிறார்கள். அன்றைய வாச்சான்பிள்ளைகள் பிரபந்தத்தில் என்ன சொல்லியிருந்ததோ அதை விரித்து, விளக்கமாக எழுதினார்கள். இன்றைய வாச்சான்பிள்ளைகள் சமவுரிமை இயக்கம் சொன்னதிற்கு நேரெதிராக விளக்கம் எழுதுகிறார்கள். சமவுரிமை இயக்கம் இனங்களின் ஒற்றுமைக்காக போராடும் போது இந்த வாச்சான்பிள்ளைகள், சமவுரிமை இயக்கமும் அதன் தோழமை அமைப்புக்களும் இனவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற சமவுரிமை இயக்கத்தின் முழக்கம் தரும் செய்தி என்னவாக இருக்கும். 1983 இல் நடந்த தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை இன்னொருமுறை, இனியொருமுறை வேண்டவே வேண்டாம் என்பது தான் என்றது பச்சைக்குழந்தைக்கும் விளங்கியிருக்கும். இனப்படுகொலையை வேண்டாம் என்று சொல்பவர்கள், அதற்கான கையெழுத்து போராட்டம் ஒன்றை நடத்துபவர்கள், இனப்படுகொலைக்கு எதிரானவர்கள் என்பதும் எந்தக் குழந்தைக்கும் விளங்கியிருக்கும்.

சமவுரிமை இயக்கம் "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்!" என்னும் கருப்பொருளுடன் கூடிய இன - மத வாதத்துக்கு எதிரான வேலைத்திட்டத்தை நாடுமுழுவதும் முன்னெடுத்து வருகிறது. இப்பிரச்சார வேலைதிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜூலை 3அன்று, கொழும்பில் நடைபெற்றது .

அதன் தொடர்ச்சியாக நேற்று (5/7/14) கண்டியில் சமவுரிமை இயக்கத்தினால், இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான மக்கள் விழிப்பு நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் இனவாதம் மதவாதத்திற்கு எதிராக தமது கண்டனங்களை அங்கு வைத்திருந்த பாரிய பதாகைகளில் கையொப்பங்களை இட்டு பதிந்து சென்றனர்.

'சிறிய சம்பவங்களுக்காகக் கூட சிலர் பெரிய ஹர்த்தாலை செய்கின்றனர்' என ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் நடந்த விழாவொன்றின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிண்டலாகக் கூறியிருந்தார்.

அளுத்கமை முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து முஸ்லிம் மக்கள் கடையடைப்பு நடத்தினர். இந்த ஹர்த்தால் நடவடிக்கையை ஏற்பாடு செய்த குற்றத்தின் பேரில் "முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்கும அமைப்பைச்" சேர்ந்த நான்கு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு, ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் விசாரிப்பதற்கு மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புலனாய்வுப் பிரிவினரால் நான்காம் மாடிக்கு ஜுன் 25ம் திகதி அழைக்கப்பட்டார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டில் தாண்டவமாடிய இனவெறியை சர்வதேச கவனத்திற்கு கொண்டு வந்தமையை சிங்கள ஊடகங்கள் 'நாட்டை காட்டிக் கொடுக்கும் செயல்' என குறிப்பிட்டிருந்தன.

'சிறிய சம்பவங்களுக்குக் கூட பெரிய ஹர்த்தால் செய்கிறார்கள்' என்று ஜனாதிபதி கூறியதின் அர்த்தம் என்ன? 'சிறிய சம்பவம்' என அவர் எதைக் கூறுகிறார்? பொது பல சேனா என்ற சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் தூண்டுதல்களால் முஸ்லிம்களில் சிலர் படுகொலை செய்யப்பட்டும், கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் அளுத்கம, பேருவளை, தர்கா நகர் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களும், சூறையாடல்களும் இவருக்கு சிறிய சம்பவமா?

காங்கிரஸின் பத்தாண்டு கால ஆட்சியால் வெறுப்புற்ற மக்கள் சரியான மாற்றில்லா நிலையில் மோடியின் இந்துவக் கூட்டமைப்பை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல, பிரான்ஸின் உள்ளாட்சித் தேர்தல்களிலும், இங்கிலாந்தின் உள்ளாட்சித் தேர்தலிலும், ஐரோப்பிய ஒன்றிய யூனியன் தேர்தலிலும் மக்கள் தீவிர வலதுசாரிகளை வெல்ல வைத்ததை காண முடிகின்றது.

நடைபெற்ற இந்தியத் தேர்தலில் மக்களின் காங்கிரஸ் வெறுப்பை இந்தியத் தீவிர வலதுசாரிய பெருந்தேசியமும், சர்வதேசிய நவதாராளவாதப் பன்னாடுகளின் கடை கோடிப் பிரச்சார சாதனைகளும் "மோடி அலை", "மோடியின் குஐராத் ஸ்ரைல்" எனப்பட்ட பிரச்சார மாய வடிவங்களுக்கு ஊடாக பெரு வெட்டெடுத்தனர். இப்பிரச்சார உத்திகளும் இப் பெரும் வெற்றிக்கு பெரும் காரணமாயின.

இன்று காலை கொழும்பு, கோட்டை புகையிரத நியைத்திற்கு முன்பாக சமவுரிமை இயக்கத்தினால் "மீண்டும் ஒரு கறுப்பு ஜீலை வேண்டாம்!" என்னும் கருப்பொருளுடன், இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான மக்கள் விழிப்பு நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் இனவாதம் மதவாதத்திற்கு எதிராக தமது கண்டனங்களை அங்கு வைத்திருந்த பாரிய பதாகைகளில் தமது கையொப்பங்களை இட்டு பதிந்து சென்றனர். சமவுரிமை இயக்கத்தினால் "இனவாதத்திற்கு - மதவாதத்திற்கு "இல்லை" என்போம்!" துண்டுப்பிரசுமும் விநியோகிக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதத்திற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பிரசன்ன விதானகே இயக்கிய "பிறகு" (WITH YOU, WITHOUT YOU) சிங்களமொழி திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. இத்திரைப்படம் புலம்பெயர் நாடுகளிலும், தமிழ்நாட்டின் சென்னையிலும் திரையிடப்பட்ட போது நாம் தமிழர் அமைப்பு போன்ற தமிழின வெறியர்களும், சில புலம்பெயர் அறிஞர் பெருமக்களும்  இது தமிழ்மக்களிற்கு எதிரான படம் என்றும் இலங்கை அரசையும், இராணுவத்தையும் நியாயப்படுத்தும் படம் என்றும் கண்டு பிடித்திருந்தார்கள். இன்று போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களிற்கு எதிரான படம் என்று எவரும் யாழ்ப்பாணத்தில் சொல்லவில்லை. அறிஞர் பெருமக்களும், ஆசாமிகளும் எங்கே காணாமல் போய் விட்டார்கள்?. இவர்களின் பொய்களையும், திரிபுகளையும் எதிர்த்து அன்று வெளிவந்த கட்டுரை.

தி இந்து ஆங்கில இதழில் வெளியானது. சுதீஷ் காமத்தின் கேள்விகளுக்கு பிரசன்ன விதானகே மின்னஞசலில் அளித்த நேர்காணல்.

காதல் மூலம் வேறுபாடுகளை களைய முயற்சிக்கும் ஒரு திரைப்படம், வெறுப்பரசியலுக்கு இலக்காகியிருப்பது விசித்திரமாக இருக்கிறதல்லவா? இப்படி நடக்குமென நினைத்தது உண்டா?

கலையின் எந்த ஒரு படைப்பும் இங்கு இலக்காகும், ஏனெனில் நம் துணைக்கண்டம் இன அடையாளத்தினால் துருவமயப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி நான் எதிர்கொள்வது முதல் முறையல்ல. அடையாள அரசியலை ஆதரிக்கும் அரசியல் குழுக்கள் வெறுப்பை ஊக்குவித்து வளர்க்கின்றன. துரதிஷ்டவசமாக, இதுவே யதார்த்தம். தமிழ் நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. எனினும் இதற்கு நான் முகம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

எமது நாடு இனவாத, மதவாத தீயில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாங்கள் உங்களை சந்திக்க வருகிறோம். 1983 ஜுலை மாதம் -இற்றைக்கு 31 வருடங்களுக்கு முன்னர், அன்றைய ஆட்சியாளர்களாலேயே நடத்தப்பட்ட கறுப்பு ஜுலையின் பின்னர் உக்கிரமடைந்த யுத்தத்தினால் துன்பப்பட்டோம். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் அங்கவீனர்களாக்கப்பட்டனர். அனாதைகளாகினர். எல்லாவற்றையும் விட எமது சமூக மனச்சாட்சி, பகுத்தறிவு, மனிதநேயம் அனைத்தும் இழக்கப்பட்டது. அந்த பாரிய அழிவின் பின்னர், யுத்தம் முடிந்து விட்டது என ஆறதலடையும் சமயத்தில் மீண்டும் இனவாத- மதவாத பொறியில் சிக்கவைக்க அழுத்கம, பேருவள பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் நாம் கண்டோம். இந்த பொறியை நிர்மாணித்தவர்கள் ஆட்சியாளர்களே மீண்டும் யுத்தத்திற்கு பாதை அமைக்கப்படுகிறது. அந்தப் பாதையில் செல்வது எந்தளவு அழிவைத்தரும் என்பதை அனுபவ வாயிலாக கண்டோம். நாங்கள் அந்த வழியில் மீண்டும் சென்று பொறியில் சிக்க வேண்டுமா?

மக்கள் தொழிலாளர் சங்கம் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான பொது அடையாளத்துடன் பொது வேலைத்திட்டத்திற்கு அழைப்பை விடுத்துள்ளதுடன், அது பற்றிய பொது கலந்துரையாடல் ஒன்றை எதிர்வரும் 06.07.2014 அன்று மு.ப. 10.30 – 01.30 வரை ஹட்டன் சமூக நல நிறுவன (CSC) மண்டபத்தில் (இல.30, புகையிரதவீதி, ஹட்டன்) நடாத்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா குறிப்பிட்டுள்ளார். மலையகத்தில் செயற்படும் தொழில் சங்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், மலையகத்தை சார்ந்த சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் உட்பட பல தரப்பினருக்கும் இக்கலந்துரையாடலுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அதேவேளை ஏனைய துறைசார் தொழிற்சங்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் 0714302909/ 0716275459 என்ற தொலை பேசி இலக்கத்துக்கு அழைத்து அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் ஊடாக உறுதிசெய்யலாம். குறித்த கலந்துரையாடலுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆவணம் குறிப்பிடப்பட்டிருந்தாவது:

மகிந்த அரசு தான் சொல்வதெல்லாம் உண்மையென பொய், புரட்டு, பித்தலாட்டத்தையே தன் அரசியல் வாழ்வாதாரம் ஆக்கியுள்ளது. அண்மைக் காலமாக நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவெறி நடவடிக்கைகளில் சொல்வதும் - செய்வதும் மாபெரும் அரசியல் பித்தலாட்டம் தான் என்பதை ஊர் உலகு அறியும்.

அனைத்துலக சக்திகளே நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக அண்மையில் அரசியல் பித்த வாந்தி எடுத்துள்ளார் மகிந்த ராஜபக்ச. கடந்த 15ஆம் 16ஆம் (யூன் 2014) திகதிகளில் அளுத்கம வேருவளைப் பகுதிகளில் நடாத்தப்பட்ட பொதுபல சேனாக் காடைக் கும்பலின் தாக்குதலின் போது, கோத்தபாயவும், இக் காடையர் கும்பலும் நின்றதான புகைப் படம் மகிந்த அரசிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தூதரக இணையத்தில் வந்த இக் காணொளித் தகவலில் என்னதான் பொய் உள்ளதோ? மத - மது வெறிப் போதைகளில் இன வெறித் தாக்குதல் புரியும் போது இக் காணொளிகளை கச்சிதமாக எடுப்பதை உங்களால் எப்படிக் கண்காணிக்க முடியும்.

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் சமூக - மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து, தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராடும் மாணவர்கள் அரசியல் மற்றும் மனித உரிமைகளைக் கோரியும், கல்வி உரிமைகள் பறிக்கப்படுவது, கல்வியைத் தனியார் மயமாக்குதல், கல்வியைத் தரம் குறைதல் போன்றவைகளை நிறுத்தும் படியும் கோரிப் போராடங்களை நடத்துகின்றனர். இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக, போராடும் மாணவர்களின் தலைவர்கள் 13 பேரது வகுப்பு தடைக்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் ஏனைய விரிவுரையாளர்களை, மாணவர்கள் தடுத்து வைத்திருந்தனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுவரொட்டிகள் மட்டக்களப்பு நகரெங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.

இணைந்த சுகாதாரப் போராட்டத்தை வெற்றி கொண்டுள்ளோம்,  இலவச கல்வியையும் சுதந்திர சுகாதார சேவையையும் வெற்றி கொள்ளத் தொடர்ந்து போராடுவோம் என்ற வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும்.

அப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள்...

இலங்கையில் முஸ்லீம், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் நிறுத்தக்கோரி ஒஸ்லோ வாழ் தமிழ்பேசும் மக்கள் நடாத்தும் அடையாள அணிவகுப்பு. அடக்கு முறைகளுக்கும், வன்முறைமுறைகளுக்கும் எதி‌ராக அணிதிரள்வோம் வாருங்கள். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

முஸ்லிம் மக்கள் மீதான தி;ட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது பல சேன என்கின்ற அமைப்பு ஈடுபட்டு வந்திருக்கின்றது. இவ்வமைப்பானது தனது இனவாதத்தைக் கக்குகின்ற விஷம் பொதிந்த பேச்சுக்களாலும் மற்றும் பலாத்காரமான தீவிரவாத நடவடிக்கைகளாலும் முஸ்லிம் சமூகத்தை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதன் உச்சக் கட்டமாக கடந்த யூன் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகரில் நடைபெற்ற கலவரம் அமைந்துள்ளது.

இந்தச் சம்பவங்களிற்கு பிரதான காரணியாக செயற்படுகின்ற அமைப்பொன்றின்மீது அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், ஊடக வெளிகளில் இவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் நடந்ததென்பது தங்களிற்கு தெரியாதது போன்றும் அப்படி ஏதாவது நடந்திருந்தாலும் அவை ஒன்றும் பாரதூரமான விடயங்கள் அல்லவென்றும் தொடர்ந்து தெரிவித்தபடி இருக்கிறார்கள்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE