Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தமிழ்-சிங்கள மொழி பேசும் மக்கள் இணைந்து பார்த்த சினிமாவின் கதை உள்ளடக்கம், தமிழ்-சிங்கள சார்ந்து இருவர் ஒன்றிணைந்து வாழ்வதில் சந்திக்கின்ற வாழ்வியல் பிரச்சனையை பற்றியது. எதார்த்த படைப்பு என்ற வகையில், இன்றைய வாழ்வில் காட்சிகளை அதன் முரண்களையும் கலையாகத் தந்திருக்கின்றது.

மோடி பதவியேற்ற பின்பாக உள்துறை அமைச்சு மே 27 இல் வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு சார்ந்த அனைத்து ஆவணங்களும் இந்தியில் பதிய வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. இணையங்கள், சமூகவலைத்தளங்களும் இந்தியில் தான் இயங்க வேண்டுமாம். இதே போல் கல்விப் பாடத்திட்டத்தில் வேதம் - உபநிபடதங்களை இணைக்க வேண்டும் என்றும், சமஸ்கிருத மொழி மூலம் பதவியேற்ற அமைச்சர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட 25 வது ஆண்டு நினைவை ஒட்டி, அதற்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என்று பிபிசி சம்பந்தனிடம் கேட்டது. அதற்கு அவர் கொலையை அன்று கண்டித்திருந்தால் பலர் பாதிக்கப்படைந்திருக்கலாம் என்ற காரணத்தினாலேயே, தமிழ் அரசியல் தரப்பில் அவரது இழப்பு குறித்து மௌனம் சாதித்ததாக கூறுகின்றார்.

கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு 'அரசியல் விலங்கு' அல்ல. இவர் ஒரு 'இராணுவ விலங்கு' ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணுவக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார்.

இவ்வாறு SriLanka Guardian இணையத்தளத்தில் அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான Victor Ivan எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராகிய பின்னரே கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைய முடிந்தது. கோத்தபாய இராணுவத்திலிருந்து விலகிய பின்னர், கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளாக, அமெரிக்காவில் வசித்தார். இவரது சகோதரர் சிறிலங்கா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னரே கோத்தபாய ராஜபக்ச பிரபலமான, அதிகாரம் மிக்க ஒருவராக மாறினார். கோத்தபாய அரசியலுக்குள் நுழைந்த பின்னர் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டார்.

சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதம், சாதியம் (குலவாதம்) போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து மாநாடொன்றை கொழும்பில் நடாத்தவுள்ளது. இனவாதத்துக்கு எதிராக -குறிப்பாகத் தெற்கில் வேலைகளை முன்னெடுத்துவரும் அதேவேளை, இலங்கையில் அனைத்துப் பகுதியிலும் முளைவிட்டுக் கிளர்தெளுந்துள்ள மதவாததுக்கும், ஏற்கனவே ஆழ வேரூன்றியுள்ள சாதியத்துக்கு/ குலவாதத்துக்கு எதிராகவும் தனது வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது .

நாடு தழுவி தொடரும் போராட்டம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக நடந்து வருகின்றது. இன-மத வாதத்தை யாரைச் சார்ந்து அரசு முன்னெடுக்கின்றதோ, அந்த மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சாரத்தை சமவுரிமை இயக்கம் குறிப்பாக்கி கூர்மையாக்கி வருகின்றது.

(பொலன்நறுவை)

வடமாகாண ஆளுநராக G.A.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாக்குறுதி மீறப்பட்ட மற்றொரு சம்பவமாக உள்ளது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் கூற்று, தொடர்ந்து கனவுலகில் மிதப்பதைக் காட்டுகின்றது. அரசு பற்றிய மாயைக்குள், இணக்கமாக அதிகாரத்தை அடையக் காத்திருந்திருக்கும், தமிழ் மக்களின் தலைமைகளே தாங்கள் என்பதை தங்கள் இவ் எதிர்வினை மூலம் எடுத்துக்காட்டி இருக்கின்றது.

மகிந்த அரசை எதிர்க்கின்றவர்கள், மீனவர்கள் கைதுகளை சட்டவிரோதமானதாகக் காட்டுகின்றனர். இதைத் தடுக்க மோடி அரசு வக்கற்றுள்ளதாக கூறி, மோடி அரசை இதன் மூலம் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

இந்திய இனவாதிகள் முதல் இடதுசாரிகள் வரை, மீனவர் விடையத்தில் முரணற்ற வகையில்  இதையே செய்தியாகவும், அரசியலாகவும் முன்வைக்கின்றனர். இலங்கைத் தமிழினவாதிகளும் இதையே தங்கள் கொள்கையாக கொள்கின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு அன்றாடச் செய்திகளையும், ஆக்கங்களையும், அரசியலையும் முனனெடுக்கின்றனர்.

இன்றைய உலகமயமாதலில் உலகின் மக்கள் ஏதாவதொரு தேசியப் பிரச்சினைக்குள் சிக்காமல் இல்லை. நம் நாட்டு மக்களும் வெறி கொண்ட சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் தீவிர வாதத்திற்குள் சிக்கித் தவிக்கின்றனர். இதை முஸ்லீம் மக்களுக்கு எதிரான கடந்த ஒருவார கால இன வெறிக் கோரத் தாண்டவத்தின் அகோரத்திற்கு ஊடாக கண்டுகொண்டோம். இந் நிகழ்வுகள்..,

டென்மார்க் வழங்கிய வட்டிக் கடனில் கட்டப்பட்ட ஒலுவில் துறைமுகத்துக்கு, இன்று வரை ஒரு கப்பல் கூட  வரவில்லை. இப்படி வாங்கிய 678 கோடி (6780 மில்லியன்) ரூபா கடனுக்கு வட்டி கட்டும் அரசு, அதை பத்து வருடத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

கடந்த 06.07.2014 அன்று மக்கள் தொழிலாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில் ஹட்டனில் இடம்பெற்ற மலையக மக்களின் காணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கோரிக்கைகள், பொது வேலைத்திட்டம் மற்றும் பொது அமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் மற்றும்; ஆர்வலர்களிடையே ஒரு பொது இணக்கப்பாட்டை காண்பதற்கான கலந்துரையாடலிலே மலையக மக்கள் தனி வீடு அமைத்துக் கொள்ள காணித்துண்டுகள் உரித்துடனும் சுய தொழில், விவசாயத்திற்கான காணியும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டது.

பலஸ்தீனத்தின் மேலான இஸ்ரேலின் தாக்குதல்கள் பல அப்பாவி பொதுமக்களை பலிகொண்டுள்ளது. காசாப்பகுதி மீதான இஸ்ரேலியப் விமானப்படைகளின் மிகவும் தீவிரமான குண்டுதாக்குதல்களினால் குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி கண்மூடித்தனமாக தாக்கியழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 80 பலஸ்தீனப் பொதுமக்களும் 3 இஸ்ரேலியர்களும் தாக்குதல்கள் ஆரம்பித்த நாட்களிலிருந்து இன்று வரையான சில நாட்களுக்குள்ளாகவே பலியாகியுள்ளனர். இது வரை 500 க்கு மேற்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல்களால் காசாப்பகுதி நிலைகுலைந்து அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


இனவாதத்தை மக்களிடம் இருந்து அகற்றவும் மாற்று கலாச்சாரங்களை அங்கீகரிக்கவும் சமவுரிமை இயக்கத்தால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தில் பொதுமக்களை இணைக்கும் முன்முயற்சியே இவ் கையேழுத்து போராட்டம். இதனை பல பகுதிகளில் முன்னெடுத்து வருவதுடன் மேலும் பல பகுதிகளில் நடத்தவும் சமவுரிமை இயக்கம் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச கடற்பரப்பிலே தான் மீன்பிடி நடப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன கண்டு பிடித்துள்ளார். மீனை அள்ளிச் செல்லும் பன்நாட்டு மீன்பிடி ஒப்பந்தங்களைப் போடும் அரசு, அதை சர்வதேச கடலில் மீன்பிடி என்று திரித்து இலங்கை மீனவர்களின் முதுகில் குத்திவிடுகின்றனர்.

பொருளாதாரரீதியானதும், அரசியல்ரீதியானதுமான அகதிகளை உற்பத்தி செய்து கொண்டு, அந்த மக்களை கூட்டாகத் தண்டிகின்றதையே அவுஸ்திரேலியா நடவடிக்கை மூலம் காண்கின்றோம். எந்த மக்களும் தன் தாய் நிலத்தையும், சொந்த பந்தங்களையும் விட்டு, நாடு கடந்து வாழ்வதை விரும்புவது கிடையாது. மக்கள் வாழக்கூடிய நிலை வகையில் நாட்டை ஆள முடியாதவர்கள், வாழப் புறப்படும் மக்களையே குற்றவாளியாக்கி தண்டிக்கின்றனர்.

எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும்.

அப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள்...

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE