Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இலங்கை பெயர் பெற்ற நாடாகவே இருந்து வருகிறது. ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு என்பதெல்லாம் போலித்தனமான பசப்பு வார்த்தைகள் என்பதையே அண்மைய ஓமந்தைச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது. யாழ்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பயணித்த தமிழ் ஊடகவியலாளர்கள் இனம் தெரியாதோரால் பின்தொடரப்பட்டதும், ஓமந்தைச்சோதனைச் சாவடியில் படையினரால் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டதும், அதனிடையே கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டதும் பின்பு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதும் திட்டமிடப்பட்ட வகையிலே அரங்கேற்றப்பட்டவைகளாகும். இச்சம்பவத்தையும் அதன்பின் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு நடைபெற இருந்த ஊடகப்பயிற்சிச் செயலமர்வு குழப்பப்பட்டு நிறுத்தப்பட்டவையும் ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டவையாகும். இவை யாவும் வடபகுதி தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திப் பழிவாங்குவதற்கும் அடிபணிய வைப்பதற்கும் எடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளே ஆகும்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லியின் இக் கூற்றானது, இலங்கை அரசைப் புனிதப்படுத்தும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க கருத்தாகும். இலங்கையில் யுத்தத்தை நடத்திய இந்தியா, இன்று அதை புனிதப்படுத்தும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.

எதிர்வரும் வியாழக்கிழமை, 31.07.2014 பிற்பகல் 04 மணிக்கு, கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்தின் முன்பாக பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தியும், அவர்களுக்கு ஆதரவாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் இலங்கையின் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் பங்குகொள்ளவுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிகின்றனர். அத்துடன் உழைப்பாளர்கள், மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாக கோட்டே புகையிரத நிலையத்தின் முன்னாள் அணிதிரளுமாறு ஏற்பாட்டாளர்கள் தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.

இன்று தேசத்தில், நாடு தழுவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பல போராட்டங்களை சமவுரிமை இயக்கம் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக இனவாததுக்கு எதிரான நிகழ்வுகளை அது தென்பகுதியில் முன்னெடுத்து வருகிறது. ஆனி மாதம் முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிரான மதவாத, இனவாதத் தாக்குதல்களின் பின்னால் உள்ள இனவாத- மேலாதிக்க  சிந்தனை, அரச ஆதிக்க சக்திகளுக்கு   மக்களைப் பிரித்தாள சாதகமான காரணியாக உள்ளது . இதை முறியடிக்கும் நோக்கிலேயே கடந்த ஆடி மாதம் முழுவதும் "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற தொனிப் பொருளில் கையெழுத்துப் போராடத்தையும், இன, மத, சாதிய வாதங்களுக்கு எதிரான ஒரு மாநாடையும் சமவுரிமை இயக்கம் நடத்தியது.

ஈராக்கிய சுன்னி ஜிகாதி குழுவான ஐசிஸ் பெண்ணுறுப்பைச் சிதைக்க கோரியுள்ளதாக ஐ.நாவின் செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. இது மதங்கள் ஆணாதிக்கமானவை என்பதையும், பெண்களுக்குரியனவல்ல என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

மதத்திடம் ஜனநாயக தன்மையோ, சுதந்திர தன்மையோ கடுகளவும் கிடையாது என்பதுடன், அதன் காட்டுமிராண்டித்தனத்தையும் இது எடுத்துக் காட்டுகின்றது.

கடந்த 22 ஆம் திகதி இறக்குவானை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்பாட்டம் பற்றி அச்சு, இலத்திரனியல் ஊடகங்களில் நிறைய செய்திகள் வந்த வண்ணமுள்ளன. நண்பர் ஒருவரிடம் இது பற்றி விசாரித்த போது, அங்கு இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு பற்றி வந்த செய்திகளில் அச்சம்பவத்திற்கும் அதன் பின்பு இடம்பெற்ற பொலிசாரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் தொழிற்சங்கங்களின் கோமாளித்தனங்கள், காட்டிக்கொடுப்புக்கள் அரசியல்வாதிகளின் அநீதியான தலையீடுகள் பற்றி வெளிப்படுத்தப்படாமை துரதிஷ்டவசமானது. இதன் உண்மை தன்மை பற்றி அறியவென நேற்று இறக்குவானை டெல்வின் “B” பகுதிக்குச் சென்றோம். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமியின் பெற்றோருடன் கதைக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அச்சிறுமியின் தந்தை இறக்குவானை நகரத்தில் பொதி சுமக்கும் தொழிலாளியாக வேலை செய்கின்றார். அச்சிறுமிக்கு சகோதரிகள் மூவரும் ஒரு சகோதரனும் உள்ளனர்.

இலங்கை ஜனநாயக "சோஷலிஸ குடியரசு" அதி விஷேட வர்த்தமான அறிவித்தல்களை வெளியிடுவதில் கைதேர்ந்ததாக இருக்கின்றது. அதன்படி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் மாலபே பட்டதாரி பட்டம் வழங்கும் கடை என்பது மாலபே பிரதேசத்தில் 'சவுத் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னோலொஜி அன்ட் மெடிசின்' (South Asian Instititute of Tecnology And Medicine) சுருக்கமாகக் கூறுவதாயிருந்தால் SAITM என்ற பெயரில் தனியார் மருத்துவக் கல்லூரியொன்று இங்குவதாக தற்போதைய உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக அந்த விஷேட வர்த்தமானி அறிவித்தலை தலைமேல் வைத்துக் கொண்டு பெருமையடித்துக் கொள்கிறார். மேற்படி நிறுவனம் தொடர்பில் இம்மாதம் 26ம் (October 2013) திகதி மீண்டும் ஒரு அதிவிஷேட வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குவானை டெல்வின் தோட்ட பி பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய அல்லது பாலியல் வன்முறைக்குட்படுத்திய சந்தேக நபரை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மக்கள் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுப்பதுடன், அச்சமூக விரோத குற்றச்செயலை வன்மையாக கண்டிக்கிறது.

கறுப்பு ஜூலை தினத்தில் "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என கோரி யாழில் நேற்று (23) கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நேற்று காலை 10 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமானது. நேற்று யாழ்ப்பபாணத்தில் இடம் பெற்ற கையெழுத்து வேட்டையில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். யுத்தம் முடிந்ததற்கு பின்னரும் யாழ்ப்பாண மக்கள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு கையெழுத்து வைக்க வந்த தாய் ஒருவர் இப்படிச் சொன்னார். நான் எனது 04 பிள்ளளைகளை யுத்தத்திற்கு பலி கொடுத்து விட்டு நிற்கின்றேன் என்றார். இது ஒரு உதாரணமே. வடக்கு கிழக்கு மக்களின் ஒட்டு மொத்த நிலையே இந்த தாயினது போன்றது தான்.

"மத்தளை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தின் மே மாதத்திற்கான மொத்த வருமானம் அண்ணளவாக 16000 ரூபா என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியன்கர ஜயரட்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்."

வட்டிக்கு காசு கொடுகின்றவன் தன் காசை கொடுத்து வட்டி வாங்க கட்டுவித்த விமான நிலையத்தின் கதி இதுவென்றால்,  வட்டியை கட்டுவதோ மக்கள். மக்களின் உழைப்பையும், சொத்தையும் புடுங்கிதான் கொடுக்கின்றனர். இந்த மாமாத் தனத்தைத்தான் அரசாங்கம் செய்து வருகின்றது. மே மாத வருமானமான 16000 ரூபா மூலம் இதை ஒரு நாளும் கொடுக்க முடியாது.

"இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஈழத் தமிழர் தேசம் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது!" என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக விசுவநாதன் ருத்ரகுமாரன் கூறுகின்றார். சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் மனிதர்கள் வாழ முடியாது என்ற உண்மை, சிங்கள மக்களுடன் வாழ்வதற்கு தடையானதல்ல. இந்த உண்மையை இவர்கள் முன்வைக்க தயாராகவில்லை.

தமிழர்களுக்கு எதிராக ஜே.ஆரின் இனவாத அரசின் கீழ் 1983 இல் இடம்பெற்ற யூலை வன்முறைகளின் 31 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று  மீண்டும் ஒரு கறுப்பு யூலை வேண்டாம் என்ற தலைப்பில் கொழும்பு (பொரல்ல), காலி, பண்டாரவளை, யட்டியாந்தோட்ட(கேகாலை), நாவலப்பிட்டிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் சமவுரிமை இயக்கத்தால் கையெழுத்து இடும் போராட்டம் இடம் பெற்றுள்ளது.

வெள்ளை நிற-இன வெறிக் கொள்கையை அமுல்படுத்த முனையும் அவுஸ்திரேலியாவானது, இலங்கை - இந்தியாவுடன் கூட்டுக் கொள்கையை முன்னெடுக்கின்றது. அண்மையில் சர்வதேசக் கடலில் வைத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவால் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளின் ஒரு பகுதியை இலங்கைக்கு நாடு கடத்தியவர்கள், மிகுதிப் பேரை இந்தியாவுக்கு நாடுகடத்தும் கூட்டுச் சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமஉரிமை இயக்கத்தினர் இம்மாதம் 15ஆம் திகதி கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடாத்திய இனவாதத்திற்க்கும், மதவாதத்திற்கும், குலவாதத்திற்கும் எதிரான நாங்கள் மனிதர்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கில்  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வட இலங்கை முக்கியஸ்தர்   ஏ.எம்.சி.இக்பால் ஆற்றிய உரை!

ஜூன் 15 ஆம் திகதி பேருவளை, தர்காநகர், அளுத்கம, வெளிப்பனை போன்ற இடங்களில் பரம்பரை பரம்பரையாக வாழும் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டும் அவர்களது வீடுகளும் கடைகளும் கொள்ளையிடப்பட்டு எரியூட்டப்பட்டது. மூன்று பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதுடன் நான்கு பேர் கொல்லப்பட்டுள்னர். சிறிய எண்ணிக்கையான அங்கத்தவர்களை கொண்ட பொதுபல சேனாவினர் மிகப்பெரிய கலவரத்தை பேருவளை பிரதேசத்தில் நடாத்தியுள்ளனர். L.T.T.E இயக்கத்தை தோற்கடித்த இந்த அரசுக்கோ, முப்டைகளுக்கோ அஞ்சாமல் இந்த வன்முறையை அரங்கேற்றிள்ளனர். இந்த வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்யவோ தடுத்துவைக்கவோ இல்லை. அரசும், அரசபடைகளும் பொதுபலசேனா என்ற இயக்கத்துக்கு அஞ்சுகிறார்கள் போலும். இதுபெரும் ஆச்சரியத்துக்குரிய விடயமாகும்.

தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற அரசியல் தீர்வைப் பெற நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கூறுகின்றார். அவரிடம் இரண்டு கேள்விகள்.

"மார்க்கியம் - கம்யூனிசம் - வர்க்கப்போராட்டம்" லேபலிலும், "இடதுசாரியம்" என்ற முகமூடியிலும் அரசியல் செய்து பிழைக்கும் விக்கிரமபாகு, உழைக்கும் மக்கள் மத்தியில் எந்த அரசியலையும் நடைமுறையையும் கொண்டிருப்பதில்லை. மாறாக தனிப்பட்ட பிழைப்புவாதத்துக்காக சந்தர்ப்பவாதத்தை கையாளுபவர். இந்த வகையில் லெனின் வர்க்கப் போராட்டத்தை நடத்த முன்வைத்த "சுயநிர்ணயத்தை", தன் தனிப்பட்ட தேவைக்காக திரித்து வரும் அவர், அதை வைத்து வாக்குக்கோரப் போவதாக அறிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE