Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள், சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு வைத்திருக்கும் நீண்டகால மயக்க மருந்து இனவாதம். தேர்தல் வரப் போகின்றதென்றால் அந்த இனவாத மயக்க மருந்தை இரட்டிப்பாக அள்ளி வழங்குவார்கள். இனவாதச் சேற்றில் கால் புதைத்து நிற்பவர்களின் தோள்களின் மேல் பொய்மூடைகள் ஏற்றப்படுகின்றன. அளுத்கம முஸ்லீம் மக்களின் மீதான கலவரங்கள், காணாமல் போன தம் அன்புக்குரியவர்களை தேடும் தமிழ்மக்களின் கூட்டத்தை பொதுபல சேனாவின் பிக்குகள் என்னும் குண்டர்களைக் கொண்டு குழப்புதல், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் யோகராஜா நிரோசன் என்னும் தமிழ் மாணவனை பயங்கரவாதி என்று கைது செய்தல் என்று பலவழிகளில் இலங்கை அரசு இனவாத நஞ்சை கக்குகிறது.

தமிழ்மக்களைக் கொன்று குவித்து சிங்களத் தேசிய வீரனாக தன்னைக் காட்டிக் கொண்ட மகிந்தாவின் வாக்குவங்கி கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியிருக்கிறது. இன்னும் ஒரு லட்சம் சிங்கள மக்களின் வாக்குகள் ஜக்கிய தேசியக்கட்சிக்கு செல்லுமாயின் அடுத்த தேர்தலில் தோல்வி தான் என்று அமைச்சர் ஒருவர் பேசியதாக சொல்லுகிறார்கள். அதற்காகத் தான் இந்த அவசரத் தயாரிப்புகள். கணக்கற்ற பிணங்களில் மேல் ஏறி உட்கார்ந்த சிம்மாசனம் ஆடத் தொடங்கியுள்ளதால் அடுத்த பலிக்கு ஆயத்தம் ஆகிறார்கள்.

கடந்த 06 யூலை 2014 அன்று ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைப்புகளிடையே காணப்பட்ட கொள்கை அளவிலான உடன்பாட்டின் அடிப்படையாக கொண்டு இரண்டாவது பொதுக் கலந்துரையாடல் எதிர்வரும் 16.08.2014 (சனிக்கிழமை)அன்று மு.ப. 10.30 – பி.ப. 01.30 பண்டாரவளையில் உள்ள லியோ மார்கா ஆஸ்ரமத்தில் (இல. 121ஃ1, சென் தோமஸ் வீதி, பண்டாரவளை) நடைபெறவுள்ளதாக கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ள மக்கள் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையாக தெரிவித்துள்ளார்.

சப்பிரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மீதான இனவெறி அச்சுறுத்தல், தாக்குதல், கைது நடவடிக்கை போன்றவற்றுக்குப் பின்னால் இனமத அடிப்படைவாத பாசிசக் குழுக்களும் குண்டர்களும் இருந்து வருவதாகவே நம்பப்படுகிறது.

இத்தகையோரே மருதானை சமூக சமய நிலையத்தில் இடம்பெற்ற காணாமல் போனோர் பற்றிய கூட்டத்தையும் குழப்பித் தடுத்தனர். இவ்வாறான அடிப்படைவாதப் பாசிசக் குழுக்களுக்கு அரசாங்க உயர்மட்டத்தில் அனுசரணை வழங்கப்பட்டு வருவதுடன் பொலீசாரின் அரவணைப்பும் இருந்து வருவதையே காணமுடிகிறது. இவ்வாறான இன மத அடிப்படைவாதப் பாசிசக் குழுக்களின் வளர்ச்சியானது நாட்டில் உருவாகியுள்ள புதிய அபாயமாகும். இவற்றுக்கு எதிராக அனைத்து மக்களும் ஜனநாயக இடதுசாரி சக்திகளும் விழிப்புடனும் தூர நோக்குடனும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளதாகவே எமது கட்சி உணர்கின்றது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவனான யோகராஜா நிரோஷனை உடனடியாக விடுதலை செய்ய கோரி  பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  ஒன்று நேற்று (8/8/2014) சப்ரகமுவ பல்கலைக்கழக வளாக பகுதியில் அனைத்து பல்கலைக்ககை மாணவர் ஒன்றியம் நடாத்தியது. இதில் பெரும் அளவிளான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பல்கலைக்க்கழகத்திற்கு வெளியால் ஊர்வலமாக சென்று நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.

பல்கலைக்கழகங்களின் உள் இனவாதத்தினை தூண்டிவிட்டு இரட்டை வேடம் ஆடாதே!

அரச பயங்கரவாதத்தை நிறுத்து!

போன்ற கோசங்களை முழங்கி, அரசின் இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு பலியாகப்போவதில்லை என உறுதி எடுத்துக் கொண்டனர். மேலும் போராட்டம் விஸ்த்தரிக்கப்படும் என அறிவித்தனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவனான யோகராஜா நிரோஷனை உடனடியாக விடுதலை செய்யவில்லை என்றால், பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மருதானையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜீத் இந்திக இதனைக குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (05)  சப்பரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவன் அரசாங்கத்தினால் கட்தப்பட்டுள்ளான். குறிப்பிட்ட மாணவன் வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் யோகாராஜா நிரோஜன் என சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இம்மாணவன் பல்கலைக்கழகத்தில் மூண்றாம் ஆண்டில் கல்வி கற்பதாக அறியக்கிடைக்கின்றது.

நேற்று ( 05 ) 09-12 மணிவரை பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது  பரீட்சை அதிகாரியுடன் வந்த பொலிசார் இவரை கைது செய்துள்ளனர். இதை எதிர்த்து ஏன் அவரை கைது செய்தீர்கள் என்று கேட்ட மாணவர் சங்க தலைவர்களின் பல்கைலைக்கழக அடையாள அட்டையை பல்கலைக்கழக உயர் அதிகாரி பறித்து எடுத்துள்ளார்.

அன்பான தோழர்களே, நண்பர்களே, பொதுமக்களே!

மறக்க முடியாத மாமனிதர் ஆசிரியர் தங்கவடிவேல் அவர்கள். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலையை வதிப்பிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் ஆசிரியர் என்னும் மாமனிதர் தனது 83ஆவது வயதில் இயற்கை எய்தினார். வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டியது இயற்கை நியதியே. இந்த வகையில் இவரது மரணமும் தவிர்க்க முடியாதது.

மனிதன் பிறக்கின்றான் இறக்கின்றான். அந்த இடைக்காலத்தில் அவன் என்ன பணிகளை ஆற்றியுள்ளான் என்பதே அவன் பிறந்ததன் பயனாகும். பலர் பயனில்லாமலே தமது வாழ்க்கையை முடித்துக் கொள்ளுகின்றார்கள். அமரர் தங்கவடிவேல் மாஸ்ரரும் அவரைப் போல் சிலரும் மக்களுக்கத் தொண்டர்களாக, மக்களின் பிரச்சினைகளை வென்றெடுக்கும் போராளிகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தங்கவடிவேல் தனது இளமைக்காலத்தில் காலம் சென்ற பருத்தித்துறை எம்பி பொன்கந்தையா அவர்களின் பாதங்களிலே வளர்ந்து இலங்கை கம்யூனிசக்கட்சியின் மாக்சிய லெனிசியக் கொள்கைகளை கம்பர்மலையிலும் அண்டிய ஊர்களிலும் பரப்புவதில் தீவிரமாக செயற்பட்ட ஒருவர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள் இன்று அதிகாலை பிரவேசித்த வன்முறையாளர்கள் சிலர் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட மாணவர் சங்கங்கள் தடை செய்யப்பட்டு இன்றுடன் 507 நாட்கள் கடந்துள்ள நிலையில்,இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தோழர் கணபதி தங்கவடிவேல் கடந்த 29.07.2014 இல் தனது எண்பத்திமூன்றாவது வயதில் இயற்கை எய்தினார். அவர் இளமைக்காலம் முதல் மாக்சிசத்தை ஏற்று அதன் வழியில் வடபுலத்து பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். சமூக ஏற்றத்தாழ்வையும் அதன் காரணமான சாதிய தீண்டாமைக்கெதிரான வன்மத்தையும் கொண்டிருந்தமை மட்டுமன்றி அதனை எதிர்த்து உடைத்தெறிய வேண்டும் என்ற புரட்சிகர உணர்வையும் கொண்டிருந்தார். அதன் காரணமாக சமூக அக்கறையாளனாகவும் சமூக விடுதலை நோக்கிய பாதையில் இளைஞர்களையும் மக்களையும் அணிதிரட்டி அமைப்பு வாயிலாகச் செயற்படுவதில் முன்னின்று வந்தவர்.

இழப்புகள் மிகுந்த வாழ்வு எனிலும், இழந்தவற்றை மீளப் பெறுகின்ற போரில் தம்மை எதற்கும் இழக்காத போராளிகள் சிலர் அண்மையில் மரணமடைந்தார்கள். தோழர் தவராசா, தோழர் குலரத்தினம், தோழர் தங்கவடிவேல் என்று வாழ்க்கையே போராட்டமாக, போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள் மரணமடைந்தார்கள். அவர்கள் மக்களிற்காக போராடினார்கள். சமுதாயத்தில் நிலவும் அநீதிகளிற்கு எதிராக போராடினார்கள். சமுதாயத்தை விட்டு விலகி தனித்து நின்று தாமொரு குழுவாய் போனவர்கள் போலில்லாமல், காட்டை விட்டு பறக்காத பறவையைப் போல் தம்மண்ணில் கால் பதித்து நின்று போராடினார்கள்.

இவர்கள் சாதி கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள். வாழ்நாள் முழுவதும் கரைய மறுத்த வறுமையை சுமந்த குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். கல்வியை தெய்வம் என்றும், கல்லூரியை ஆலயமென்றும் புளுகிப் பொய் சொல்லும் தமிழ்ச்சமுதாயத்தில் கோயில் உயர்சாதியினருக்கு மட்டுமே கதவை திறந்தது போல் பள்ளிகள், கல்லூரிகளும் தாழ்த்தப்பட்ட மக்களிற்கு கதவை திறக்காத கோட்டைகளாக இருந்தன. எடுத்த வெண்கட்டியால் எழுத முடியாது அவர்களை சாதியும், பணமும் தடுத்தன. எமக்கு வேறுவழி இல்லை என்று அவர்கள் அயர்ந்து போய்விடவில்லை. அஞ்சாது போரிட்டார்கள். தமக்கு மட்டுமின்றி தம் போன்ற மற்றவர்களிற்காகவும் போரிட்டார்கள்.

ஜெயலலிதா மோடிக்கு எழுதும் காதல் கடிதங்களால் எதனைச் சாதிக்கமுடியும் என்ற தலைப்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

தமிழக முதல்வர் மற்றும் இந்தியப் பிரதமர் தொடர்பில் வெளியான கட்டுரைக்காக பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு கோரியமை தொடர்பில் இந்திய அரசாங்கம் திருப்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரை பின்னர் பாதுகாப்பு இணையத்தளத்தில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளது.

மலையக படைப்பிலைக்கியத் துறையில் மறைக்க முடியாத பாத்திரமாக விளங்கும் சாரால் நாடன் அவர்களின் மறைவு ஈழத்து படைப்பிலக்கியத் துறையில் வெற்றிடத்தையும் மலையக மக்களிடயே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

படைப்பிலக்கியம், ஆய்வு என இரு துறைகளிலும் அவர் ஆற்றிய பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சி.வி. சில சிந்தனைகள், தேச பக்தர் கோ. நடேசய்யர், பத்திரிக்கையாளர் கோ. நடேசய்யர், மலையகத் தமிழர், மலையக வாய்மொழி இலக்கியம், மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும், மலைக் கொழுந்து மற்றும் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் என அவர் தந்த படைப்புகள் அவற்றின் தகவல்கள் மலையக மண் சார்ந்த வரலாற்று பதிவுகளாகவும் வரலாற்று ஆவணங்களாகவும் விளங்குகின்றன.

இலங்கை விடயத்தில் இந்தியா பாராமுகமாக இருக்கின்றதாக கூறி மு.கருணாநிதி குற்றஞ்சாட்டுகின்றார். அமெரிக்கா இலங்கையிலே தமிழ் பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து அதிருப்தி வெளியிட்டுள்ள போதும், பக்கத்திலே உள்ள இந்தியா பாராமுகமாக இருப்பது உலகத் தமிழர்களுக்கெல்லாம் வேதனையை தருகின்றதாம்.

இன்று வியாழக்கிழமை, 31.07.2014 பிற்பகல் 04 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக, பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குலை கண்டித்தும், பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தியும் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் இலங்கையின் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் பங்குகொண்டன. முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மா-லெ கட்சி, நவசம சமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மவோயிஸ்ட்) போன்ற அனைத்து இடதுசாரிக் கட்சிகளுடன் மத்திய மாகாண சபை ஐ.தே.க உறுப்பினர் அசாத்சாலி தலமையிலான தேசிய ஒற்றுமை முண்னனி ஆகியன கலந்துகொண்டன.

தரப்படுத்தல் கண்டு தனி நாடு கேட்டு ஆயுதத்தோடு கொதிந்தெழுந்த வடக்கிலே; தனிக்குவளை, சிரட்டையில் தேநீர், கிணற்றில் நீரைக் கூட வாளியால் மொள்ளக் கூடாது, உயர் சாதியினருக்கு முன்னால் தோளிலிருக்கும் சால்வையை மடித்து கமக்கட்டுக்குள் செருகியாக வேண்டும், விவசாயக் கூலிப் பெண்கள் மார்புகளை மறைக்க குறுக்குக்கட்டு அணிய வேண்டும், வள்ளியம்மை என்றோ அல்லது கந்தையா என்றோ பெற்ற குழந்தைக்கு பெயர் வைத்தால் வள்ளி என்றும் கந்தன் என்றும் சாதிக்குறியீட்டுக்காக பெயர்கள் மாற்றி பதியப்பட்டும், இன்ன இன்ன சாதி இன்ன இன்ன ஊர்களில் குறிச்சிகளில் என்றும், தப்பித்தவறி சாதிவிட்டு சாதி காதல் கொண்டால் கடலிலோ, குளத்திலோ கிணற்றிலோ அடித்தே கொலை செய்து வீசப்பட்டு, வழக்குகள் நீதிமன்றுகளில் அப்புக்காத்துக்களால் தள்ளுபடியாக்கப்பட்டும், ஆலயங்களும் அங்கு குடிகொண்டிருக்கும் கடவுளர்கள் கூட சாதிகளுக்கென்றும், பள்ளிக்கூடங்களில் நீ பள்ளனா பறையனா என்றும், முத்தன், கந்தன் என்ற பெயரைக் கண்டால் மூட்டை சுமக்கப் போகாமல் நீ எதற்கடா வகுப்பறையில் முன் வாங்கில் அமர வேண்டும் என பாடம் நடாத்தும் சாதித்துவேசம் மிக்க "முத்துக்குமாரசாமி" வாத்தியாயர்கள் என இன்னும் பற்பல சாதிக்கொடுமைகளை ஒடுக்குமுறைகளை தமிழ்த் தேசிய சாதிமான்கள் தங்கள் புறங்காலால் ஒதுக்கிவிட்டு தங்களது தங்கப் பிள்ளைகளின் பல்கலைக்கழக வாய்ப்பு பறிபோய் விட்டதே என்று வெண்கலக் குரல்களில் வீராவேச வசனம் பேசி அணிகளைத் திரட்டி ஆயுதப் போரினை மூட்டினர்.

சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்காகவே இராணுவ முகாம் அமைத்தல் என்ற போர்வையில் வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

02.07.2014 இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை அலுவலகத் திறப்பு விழா தெல்லிப்பளை, ஆனைக்குட்டி, மதவடியில் இடம்பெற்றது. அலுவலகத்தினைத் திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போது, எமது மக்கள் நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பூமியில் வாழ முடியாமல் அகதி முகாம்களிலும், உறவினர், நண்பர்கள், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள், பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வந்த விவசாயத்தையும், மீன்பிடியையும் செய்ய முடியாமல் தொழில் இழந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டு நாடோடிகளாக வாழ்கின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE