Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அனைவரது கவனத்தையும் பொது வேட்பாளர் குறித்தும், மீண்டும் மகிந்தா போட்டியிட முடியாது என்ற பிரச்சாரத்துக்குள் கொண்டு வரும் வண்ணம், செய்திகளையும் கருத்துக்களையும் திட்டமிட்டு அன்றாடம் கொண்டு வருகின்றனர்.

15.11.2014 சனி அன்று, டென்மார்க்கின் கொல்ஸ்ரப்புறோ நகரில் சம உரிமை இயக்கத்தின் "வசந்தத்தை தேடுகிறோம்" விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சம உரிமை இயக்கத்தின் செயல் வடிவமான இனவாதம் - மதவாதம் - குலவாதம் என்ற சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்துகளும், நிகழ்வுகளும் மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டன.

நேற்றைய தினம் லண்டன் கரோ நகரில் முன்னிலை சோசலிச கட்சியினரால் 87-89 போராட்டத்திற்கு 25 வருடங்கள் நிகழ்வு இடம்பெற்றது. போராட்டத்தில் மரணித்த போராளிகளிற்கு அகவணக்கம் செலுத்துதலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.

"இரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே! மண்ணுக்குள் மக்கிப் போக எனக்கு விருப்பமில்லை. என் கண்களும், பிஞ்சு இதயமும் தூசியாகிப் போவதை நான் விரும்பவில்லை.

நாளை சனிக்கிழமை 15.11.2014 அன்று மாலை 3 மணிக்கு முன்னிலை சோசலிச கட்சியினரால் 87-89 போராட்டத்திற்கு வருடம் 25 ... நிகழ்வு லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மலையக மக்களுக்கான 20 பேர்ச் காணி, வீட்டுரிமையை வலியுறுத்தியும்  உயிரிழந்த மீரபெத்த மக்களுக்கான அஞசலிப்பேரணியும் 2014.11.13 வியாழனன்று மாத்தளை, எல்கடுவ, உண்ணஸ்கிரிய தோட்டத்தில் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நடைப்பெற்றது.

1987-1989 போராட்டம் இன்றுடன் 13-11.2014 - 25 வருடங்கள். இந்த போராட்டத்தை நினைவுகூரும் முகமாக இன்று நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்று ஒரு வழக்கு இருக்கிறது. இன்றைய (11.11.2014) வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம் அந்த வழக்கிற்குச் சரியான உதாரணமாக  இருக்கிறது. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுபவர்கள் இரண்டுவிதமானவர்கள் ஒருவகையினர் அறியாமையால் அதைச் செய்பவர்கள். மற்றவகையினர் விஷக்கருத்துக்களைப் பரப்புவதற்காகச் செய்பவர்கள். வலம்புரியின் இன்றைய ஆசிரியர் தலையங்கம் இந்த இருவகையினதாகவும் இருக்கிறது.

ஆசிரியர் தலையங்கத்தின் முற்பகுதி விளக்கமற்ற கதையைச்சொல்ல,  இரண்டாம் பகுதி இந்துக்கள் மட்டுமே வாழ்கின்ற யாழ்ப்பாணத்தை உருவாக்க முஸ்லிம் மாட்டிறைச்சிக் கடைகளை மூடி உதவவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது. இதற்காக 'ஹெல உறுமய'வின் தலைவர் ஓமல் பி சோபித தேரர் ''முஸ்லிம் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது '' என்று வெளியிட்ட கருத்தை மேற்கோள் காட்டி வலியுறுத்துகிறது. தொடர்ந்து நஞ்சை விதைக்கும் அவ்வாசிரியர் தலையங்கத்தை அவ்வாறே தருகிறோம்.

சென்னை மட்ராஸ் என்று இருந்தது. அண்ணாசாலை மவுண்ட் ரோட்டாக இருந்தது. மவுண்ட் ரோடில் இருந்து கஸ்தூரி ரங்க அய்யங்காரினால் "இந்து" பத்திரிகை பிரசுரிக்கப்பட்டது. பத்திரிகையின் பெயர் "இந்து". அதாவது பிராமணர்கள் மேலானவர்கள் உழைக்கும் மக்கள் கீழானவர்கள் என்று மனிதனைப் பிரிக்கும் உழைப்பை கேவலப்படுத்தும் சமயத்தின் பெயர். பதிப்பாளர் கஸ்தூரி ரங்க அய்யங்கார் விஷ்ணுவைக் கும்பிடும் கும்பகோணத்து வைணவ பிராமணர். சக மனிதனை தொடுவது தீட்டு என்று சொல்லும் மண்டை கழண்ட கூட்டத்தின் மதியுரைஞர்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்) நிறுவனர்களில் ஒருவரான கே.ஜி.கண்ணபிரான் நினைவுச் சொற்பொழிவு 9-ம் தேதி சென்னை தி.நகர் வித்யோதயா பள்ளி அரங்கில் நடைபெற்றது. அதில்  "குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரஹ குரு சாட்சாத் பரப்ரம்மாஹ் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ...' என்று கூறி முதலாமைச்சார் விக்னேஸ்வரன் பேச்சைத் தொடங்கினார்.

வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூற்று இது. ஆக தங்களால் முடியாது என்று கூறுகின்றவர்கள், தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனர் என்பதே வரலாற்று உண்மை.

"மலையக மக்களை பெருந்தோட்ட தொழிலாளர்கள் என அழைக்காமல் மலையக தமிழர்கள் அல்லது கண்டிய தமிழர்கள்" என அழைக்கும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளாராம். இனரீதியாக மக்களை பிரித்து வாக்கு வங்கிகளை கவரும் பூர்சுவா வர்க்கம் பெருமையுடன் இதை கொண்டாடுகின்றது.

ஸ்ரொக்கோம் நோய்க்குறி (Stockholm syndrome) என்பது பணயக்கைதிகள் தம்மை கடத்தியவர்களின் மீது அனுதாபம் கொள்ளுவதைக் குறிக்கும். ஸ்ரொக்கோம் நோய்க்குறி கொண்டவர்கள் தம்மை துன்புறுத்துவர்களின் சித்திரவதைகளையும்,முறைகேடுகளையும் தம் மீது காட்டப்பபடும் கருணையாக எடுத்துக் கொள்ளுவார்கள். தம்மை அடிமைப்படுத்துபவர்களுடன் மற்றவர்களிற்கு அதிர்ச்சியை உண்டாக்கும் ஒரு பிணைப்பை வளர்த்துக் கொள்ளுவார்கள்.

கொஸ்லாந்தை மீரியபத்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவுடன் கடந்த சில நாட்களாக தோட்டத்தொழிலாளர்கள் விடயத்தில் என்றுமில்லாதவாறு நாட்டின் கவனம் திரும்பியது. சர்வாதிகாரி உட்பட கட்சித்தலைவர்கள் அங்கு சென்றனர்.

நாளை ஞாயிறு 9ம் திகதி காலை 10.00 மணிக்கு, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முன்னிலை சோசலிச கட்சியினது "வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்தல்" கருத்தரங்கு தவிக்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE