Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கொழும்பில் தற்போது நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக துமிந்த நாகமுவ அறிவிக்கப்பட்டுள்ளார்.

சமூக நடத்தையில் இருந்தான அன்னியமாதல், தான் அல்லாத அனைத்தையும் அரசு சார்பானதாகக் காட்டிவிட முற்படுகின்றது. அரசுக்கு எதிரான போராட்டங்களை, அரசுக்கு ஆதரவானதாக இட்டுக் காட்டுகின்ற பலவிதமான முரண்பட்ட போக்குகளை, அரசியலில் காண முடிகின்றது. இவை மக்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடாக மாறி இருக்கின்றது.

பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி

தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் 25வது ஆண்டு நினைவுக் கூட்டம்

கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபம்

29.11.2014 சனிக்கிழமை பி.ப. 4.00 மணி

எதிர்வரும் நவம்பர் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ;ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் நடைபெறும்.

ஆட்சி மாற்றத்தைக் கோரி ஆள்வோரை 1948 முதல் மாறி மாறி தெரிவு செய்கின்றோம். நடப்பது என்ன? ஆள்வோர் மாறுகின்றனரே ஓழிய, மாற்றம் நடப்பதில்லை. மக்கள் ஒடுக்கப்படுவதும், வாழ்வு சீரழிக்கப்படுவதும் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து அதிகரித்தே வருகின்றது.

தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் லண்டன், கரோவில் (Harrow) 15ம் திகதி நவம்பர் 2014 அன்று முன்னிலை சோசலிச கட்சியின் “போராட்ட நினைவுகளுடன் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்” நிகழ்வில் ஆற்றிய உரையினது சாராம்சம்.

தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் லண்டன், கரோவில் (Harrow) 15ம் திகதி நவம்பர் 2014 அன்று முன்னிலை சோசலிச கட்சியின் “போராட்ட நினைவுகளுடன் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்” நிகழ்வில் ஆற்றிய உரையினது சாராம்சம்.

சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு [லங்காசிறீ , ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 08:34.26 ஆM GMT ]

உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கியூப இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்ட சேகுவாரா ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு கியூப இராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜனாதிபதி முறையை மாற்றக் கோருகின்றவர்கள், ஜனாதிபதி முறையை சர்வாதிகாரமானதாகவும், தனிமனித ஆட்சியாகவும், குடும்ப ஆட்சிக்கு காரணமானதும் என்கின்றனர். இவை அடிப்படையான உண்மைகளை மூடி மறைக்கின்ற, வெளிப்படையான வடிங்வகளைக் கொண்டு மக்களை கவருகின்ற தேர்தல் அரசியல் புரட்டாகும்.

அறுவைதாசனிற்கு வேலை போய்விட்டது. அய்யாமுத்து ஒரு தமிழரின் கடையில் வேலை இருக்கிறது போய்ப் பார்ப்போம் வா என்று கூட்டிக் கொண்டு போனான். இவர்கள் போன போது முதலாளி கடைக்குள் போன ஒரு பெண்ணை பின்னுக்கு நின்று வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றார். முதலாளியின் பார்த்த விழி பார்த்தபடி பூத்துக் கிடந்தது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான இயற்கை அனர்த்தம் ஏற்படாத இடங்களில் 20 பேர்ச் காணி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டு அதில் வாழ்வதற்கேற்ற வசதிகளுடன் கொண்ட தனி வீடு கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் அல்லது வீடுகளை கட்டிக் கொள்வதற்குகேற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி கூறுவதுடன் இது மக்கள் தொழிலாளர் சங்கத்தினது கோரிக்கை மட்டுமன்றி பல தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், தனிநபர்கள் அங்கம்வகிக்கும் பெருந்தோட்ட நடவடிக்கை குழுவினது கோரிக்கையுமாகும் என்பதையும் எடுத்தக் காட்டியுள்ளது.

1972ம் ஆண்டு உழைத்து வாழும் மக்களை ஏமாற்ற இலங்கையை "ஜனநாயக சோஷலிச குடியரசு" என்று ஆளும் வர்க்கம் போலி இடதுசாரிகளுடன் சேர்ந்து அறிவித்தது. இது அரசியல் மோசடியானது.

இன்று அரசும் - மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களும் ஜனாதிபதி முறை எப்படி தோன்றியது பற்றி, சுயநலத்துடன் கூடிய பலவிதமான சந்தர்ப்பவாதக் கருத்துகளை மக்கள் மத்தியில் கூறி வருகின்றனர். யுத்தம் - புலிகள் - தனிமனித அதிகாரத் தன்மை என்று, இதற்குள்ளாகவே இதைக் காட்டிவிட முனைகின்றனர்.

 
இலங்கைத் தமிழர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்காமல் சீமான் போன்ற இனவெறியர்கள் ஓயப்போவதில்லை. இலங்கைத் தமிழர்களிற்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இலங்கையின் யதார்த்தம், புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் உள்ள உலக அரசியல் நிலைமைகள் என்பவற்றை பற்றிய எந்தவிதமான அறிவுமின்றி இவர்கள் ஊளையிடுகிறார்கள்.

‘வாக் பிறீ’ என்ற அடிமைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாய உழைப்பு, கடன் பெற்றவர்களின் உழைப்பு, பணத்திற்காக மனிதனை விற்பது,  கட்டாயத் திருமணம் .. சார்ந்து 3 கோடி பேர் அடிமைகளாக வாழ்வதாக தெரிவித்துள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன் சோசலிச விடுதலைக்காக போராடி மரணித்த தோழர்கள் தோழியர்களின் பாரிஸ் ஞாபகார்த்த நினைவுக் கூட்டத்தில் உரையாற்றிய குமார் குணரத்தினம் அவர்கள் ஜனாதிபதி முறையை மாற்றும் பொது வேட்பாளர் குறித்து தனது நீண்ட கருத்துக்களை சிங்களம் - தமிழ் மொழிகளில் மாறிமாறி வழங்கினார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE