Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

1948 முதல் ஆள்வோருக்கும் - ஆள விரும்புவோருக்கும் மாறி மாறி வாக்களித்ததன் மூலம் மாற்றங்கள் நடந்தனவா? இன்று ஆள்வோரை மாற்றுவதும், ஆட்சிமுறையை மாற்றுவதுமா சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு?

alt

பொது எதிர்கட்சியில் குறைந்தளவு ஜனநாயகத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது என முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்தினம் இன்று (01) அதிகாலை நாடு திரும்பியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் குமார் குணரத்னத்திற்கு இலங்கை வர தடை இருந்த நிலையில் இன்று அதிகாலை 12.15 அளவில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார். முன்னிலை சோஷலிச கட்சியின் தொடக்க நிகழ்விற்காக இலங்கை வந்திருந்த குமார் குணரத்னம், கடத்தி அச்சுறுத்தப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

அன்புக்குரிய விவசாயத் தோழர்களே, தோழியரே,

உங்களைத்தேடி மீண்டும் ஒரு தேர்தல் வந்துள்ளது. 02 வருடங்களுக்கு பின்னர் நடத்த வேண்டிய ஜனாதிபதித் தேர்தலுக்காக ஜனவரி 8ம் திகதி வாக்களிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

விவசாயிகள் என்ற வகையில் இதன்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

அன்புக்குறிய தோழரே, தோழியரே,

இன்னொரு ஜனாதிபதித் தேர்தலும் வந்துள்ளது,

இந்த தேர்தலில் உழைக்கும் மக்கள் என்ற வகையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த முதலாளித்துவ தேர்தல்களினால் எமது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட மாட்டாது. என்றாலும் மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி கதைப்பதாயிருந்தால் இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுக்க முடியும். எங்களது இந்த முயற்சிஅதற்காகத்தான்

நேற்றும் இன்றும் (28-29/12/2014) இடதுசாரிய முன்னணி தனது பிரச்சார நடவடிக்கையினை யாழ் குடாவில் முன்னெடுத்திருந்தது. இடதுசாரிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுக தலைமையில் இப்பிரச்சார நடவடிக்கை கொள்ளப்பட்டது.

ஒரு படைப்பு என்பது எப்பொழுதும் மக்களிற்கானது. மக்கள் பக்கம் இருந்து எழுதும் படைப்பாளியின் எழுத்துகள் மக்கள் விரோத கருத்துக்களை அம்பலப்படுத்தும். பொய்களை தோலுரிக்கும். நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கத்தோலிக்க திருச்சபை என்பவற்றை எதிர்த்துப் போரிட்டன மாக்சிம் கோர்க்கியின் எழுத்துக்கள். அதனால் தான் அவரின் "தாய்" இன்றைக்கும் இலட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னான தேர்தல் அரசியலும், அண்மைய மாணவர் போராட்டமும் ஒரு உண்மையை வெளிப்படையாக்கி இருக்கின்றது. மக்கள் மீதான உண்மையான அக்கறையும் அது சார்ந்த அரசியலும், மாணவர்களின் கோரிக்கைகளிலும் அதற்கான அவர்களின் நடைமுறைப் போராட்டங்களில் இருப்பதை காணமுடியும்.

தேர்தலை வெல்வதற்கான இனவாதம் போல், தோற்கடிக்கவும் இனவாதம். இந்த வகையில் தேர்தலில் யாரை ஆதாரிப்பது அல்லது தோற்கடிப்பது பற்றி, இன்று இனத்தின் பெயரால் அறிக்கைககள் வெளி வருகின்றன. இன்று இனவாதம் என்பது பெரும்பான்மையை மட்டும் சார்ந்தல்ல, மாறாக சிறுபான்மையைச் சார்ந்தும் வெளிப்படுகின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வளாகத்தில் மறுக்கப்படும் உரிமைககளுக்கா - கல்வியை தனியார் மயப்படுதலுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது அரசின் ஆயுதப்படை அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழுத்து விட்டது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்த போது மைதானத்துக்கு வெளியில் பிரதான வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்​ மேற்கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் (18.12.2015) அன்று இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழில் தமது கட்சியின், ஜனாதிபத் தேர்தல் பற்றிய நிலைப்பாடு தொடர்பாக ஒரு ஊடக சந்திப்பை, யாழ். பிரஸ் கிளப்பில் நடத்தினார். அவர், தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும். மஹிந்த என்ன மைத்ரி என்ன - இருவரும் ஒரே கொள்கை உடையவர்கள். இனவாதம் கொண்ட அரசியல்வாதிகள, தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வையும் தரமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி முன்னணியின் பொது வேட்பாளர் துமிந்த நாகமுவவின் பிரச்சார அணியினர் மீது இன்று கொலன்னாவ வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தோழர் துமிந்த நாகமுவ அவர்களை இடதுசாரிய மாற்றீடு குறித்த கருத்துருவாக்கத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் நோக்கில் இடதுசாரிய முன்னணி தனது வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE