Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

நீர் இன்றி அமையா உலகமிதில்

நிலம் உறையும் மசகுப் பொருளெடுத்து

விற்போரிடம், வாங்க மட்டும் தெரிந்த

சிறிலங்கா - சுன்னாக மின்சார சபையே..!

ராஜபக்ஷ ஜனநாயக விரோத ஆட்சியை தோற்கடித்து அதிகாரத்திற்கு வந்த ஆட்சியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது மக்களின் அடிப்படை உரிமைகளான அரசியல் - குடியியல் உரிமைகளையே. பதவிக்கு வந்துள்ள புதிய அரசு இவை பற்றி கொடுத்த வாக்குறுதிகளை மறந்து முன்னைய அரசு போலவே ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது.

நாம், கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பலவகைப்பட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாக அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளாக்கப்பட்ட சமூகமாக உள்ளோம். காணாமலாக்கல், கடத்திச் செல்லல், கொலை செய்தல், பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும்போது கொலை செய்தல், வெள்ளை வேன் கோஷ்டியினால் கடத்தப்படுதல், வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்தல், வேலை நிறுத்தங்களை அடக்குமுறை செய்வதற்கு உத்தரவிடுதல், நாட்டின் சிவில் பிரச்சினைகளில் இராணுவம் தலையிடுதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இராணுவப் பயிற்சி வழங்குதல், பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொண்ட அடக்குமுறைகள், ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல் மற்றும் வெடிவைத்தல் போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான சம்பவங்கள் மலிந்திருந்தன.

மகிந்த பாசிச அரசால் மறுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் மக்களிற்கு உறுதி செய்வதாக கூறி அமோக ஆதரவுடன் புதிய மைத்திரி தலைமையிலான அரசு பதவிக்கு வந்தது. கூடவே நூறு நாள் திட்டம் ஒன்றினையும் அறிவித்திருந்தது. ஆனால் நடைமுறையில் மகிந்த அரசைப் போலவே இந்த அரசும் செயற்பட ஆரம்பித்துள்ளது தான் உண்மை.

கருத்துப் படத்தை முதன்மையாகக் கொண்டு பாரிசிலிருந்து வெளியாகும் "சார்லி எப்டோ" வாரச் சஞ்சிகை மீதான தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்ட யூதர்கள் உள்ளிட மேலும் ஐவர் கொல்லப்பட்டனர். இந்த தொடர் வன்முறையில் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதாக கருதப்பட்டவர்களால் பலர் பணயம் வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் ஆட்சி மாறினாலும் கடந்த காலங்களில் மறுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் மாற்றம் நிகழக்கூடிய நடவடிக்கைகள்  எதனையும் காண முடியாதுள்ளது.

பிரான்ஸ் -பாரீஸ் இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் 06.02.2015 வெள்ளிக்கிழமை, மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் பின்வரும் கோசங்களை முன்னிறுத்துகிறது:

•  சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய் !

2015 - 02 -01

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு - 01

கௌரவ பிரதமர் அவர்கள், பிரதமர் அலுவலகம் கொழும்பு - 07

ஜனாதிபதி அவர்களே, பிரதமர் அவர்களே,

குமார் குணரத்தினத்திற்கு இலங்கைக்குள் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை குறித்து

கடந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நாட்டின் ஜனநாயகம் பாரதூரமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்தது என்பதில் விவாதமில்லை. பல்வேறு ஜனநாயக விரோத செயல்கள் ஊடாக அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் நாங்கள் அதனை நன்றாகவே அனுபவித்துள்ளோம்.

தோழர் குமார் குணரத்தினத்தின் இலங்கை வருகையும் அவர் இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் குறித்து நாட்டில் கருத்தாடலொன்று நடந்து வரும் இச்சந்தர்ப்பத்தில், அதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள் சம்பந்தமாக உங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

மைத்திரி - ரணில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் செலுத்தவில்லை.

தோழர் குமார் குணரத்தினத்தினை நாடு கடத்தும் நோக்கில் விசாரணை மற்றும் கைது முயற்சியினை எதிர்த்து இன்று 31/01/2015 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான தோழர் குமார் குணரத்தினம் அவர்களை நாடு கடத்த தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள மைத்திரி ஸ்ரீசேன அரசு முயன்று வருகிறது. இதை எதிர்த்து முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரிக் கட்சிகளும் இணைத்து நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இப்போராட்டம் கீழ் வரும் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து நடத்தப்படுகிறது.

தமிழர்கள் அதிகாரங்களில் அமர்த்தப்படுகின்றனர். கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இராணுவம் தமிழ் மக்களின் காணிகளில் இருந்து வெளியேறும். இவை போன்ற பல பத்து விடயங்களை தமிழ் மக்களின் நலனுக்காக மைத்திரியின் அரசு செய்வதாகவும்- செய்யும் என்ற நம்பிக்கையிலும், நம்மில் பலர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம்.



ஜனநாயக விரோதமான அரச ஒடுக்குமுறையால் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள், நாடு திரும்பலாம் என்ற அரசின் அண்மைய அறிவிப்பும், தோழர் குமாரை நாடு கடத்த முனையும் 100 நாள் முகமாற்ற ஜனநாயகமும் அரசியல் அரங்கு வந்துள்ளது.

தோழர் குமாரின் விசா முடிய முன்னமே விசாரணை, கைது, நிதிமன்றம்.., புதிய அரசின் செயற்பாடுகள், இன்று (30.01.2015) முதல் சட்ட ரீதியானதும் ஜனநாயக ரீதியானதுமான வெளிப்படையான போராட்டத்துக்கு கொண்டு வந்துள்ளது.

கிரேக்கத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிய கட்சிகளின் முன்னணி (SYRIZA) வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கின்றது. SYRIZAவின் இவ் வெற்றியானது ஐரோப்பிய அரசியலில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடவுளே..!

கடவுள்களே..!!

கடவுளின் நம்பிக்கைகளே..!!!

 

கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள்

மற்றும் கடவுளுடன் தனித்தனி

கதைப்பவர்கள் ஆனோர்களே..!

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE