Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

நாம் 21ம் நூற்றாண்டில் கால் பதித்துள்ளோம். சர்வதேசம் எங்கும் பெண்கள் மீதான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் எந்தவிதமான மாறுதலுக்கும் உள்ளாகி விடவில்லை. அவை தொடர்ந்த வண்ணமே உள்ளன.குறிப்பாக இலங்கையில் பெண்கள், பெண்கள் என்ற வகையில் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் அரச பயங்கரவாதத்தாலும், இன-மத ஒடுக்கமுறை காரணமாகவும் மேலதிகமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர்.

முன்னொரு காலத்தில் ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது சிங்கள-தமிழ் மேட்டுக்குடி மேலாதிக்கவாதிகள் இணைந்து "இலங்கைத் தேசிய காங்கிரஸ்" என்ற அமைப்பை 1919ல் நிறுவினார்கள். 1935ல் பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட படித்த சிங்கள கனவான்கள் சிலர் சேர்ந்து லங்கா சம சமாஜக் கட்சியை உருவாக்கி தொழிலாள வர்க்க ஆட்சி அதிகாரம் கொண்ட சுதந்திர இலங்கைக்காக செயற்படத் தொடங்கினார்கள்.

தேர்தலின் போது மட்டும் அரசியலில் ஈடுபட்டுவிட்டு தேர்தல் முடிந்த பின்னர் வாழாதிருப்பின் மக்களால் எந்த வெற்றியையும் பெற முடியாது எனக் கூறும் முன்னிலை சோஷலிஸ கட்சி 100 நாட்களுக்குள் பாரிய மாற்றத்தை செய்ய முடியாவிட்டாலும், ஆகக் குறைந்த மறுசீரமைப்புகள் சிலதையாவது பெற்றுக் கொள்ள மக்கள் போராட வேண்டுமெனக் கூறுகிறது.

எதிர்வரும் சனிக்கிழமை (07/03/2015) அன்று  கனடா ஸ்காபரோ சிவிக் சென்றரில்  "இஸ்லாமிய அச்சக்கோளாறும், இஸ்லாமிய எதிர்ப்புணர்வும்" என்னும் தலைப்பில் உரையும், கலந்துரையாடலும் மாலை 4 மணிக்கு இடம்பெற இருக்கின்றது.

பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கை இருந்தபோது 1927 ம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி நாட்டிலிலுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் வாக்குரிமை உண்டு என பிரகடனப்படுத்தப்பட்டு முதலாவது சட்டசபைத் தேர்தலை பிரித்தானிய அரசு இலங்கையில் நடத்தியது. இலங்கைக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கூறி சிங்கள தமிழ் தலைவர்கள் அத்தேர்தலை பகிஸ்கரிப்பது என்று முடிவு செய்தார்கள்.

மலையக மக்களுக்கு 20 பேர்ச் காணி வீட்டுரிமையை வழியுறுத்தி, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு மாத்தளையில் 2015.03.01 (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடாத்தியிருந்தது.

நேற்றைய தினம் ஞாயிறு (01/03/2015) காலை 10:00 மணி தொடக்கம் டென்மார்க் கொஸ்ரபரோவ் நகரில் தோழர் M.C. லோகநாதனின் இறுதி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு ஏறத்தாள ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை தந்திருந்தனர்.

தனக்காகவும், தன் குடுப்பத்திற்காகவும் மட்டும் வாழ மனிதர்களை நிர்ப்பந்திக்கும் தனியுடமை உலகில் தன் சக மனிதர்களிற்காக வாழுதல், சமுதாயத்திற்காக போராடுதல் என்ற கல் நிறைந்த பாதையில் கால் வலிக்க நடந்த போதும் களைக்காமல் பொதுவுடமை என்னும் போர்க்கொடியை தூக்கிப் பிடித்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன்.

சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன் மகேந்திரனுக்கு 24 மணித்தியாளங்களுக்குள் இலங்கை பிரஜாவுரமை வழங்கவும், இலங்கையில பிறந்த தன்னை நாடு கடத்தவும் நல்லாட்சிக்கான அரசாங்கம் எடுக்கும் முயற்சி கவலையளிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் கூறுகிறார்.

இலங்கை சென்றிருந்த வேளையில் இயற்கை எய்திய எமது தோழன் M.C.லோகநாதன் அவர்களின் இறுதி நிகழ்வு டென்மார்க் கொஸ்ரப்ரோவ் நகரில் எதிர்வரும் ஞாயிறு 01/03/2015 காலை 10 மணி முதல் நிகழவுள்ளது.

தோழனே,

காலம் பறிக்கமுடியா வலிமை

தோழமையின் துடிப்புக்கிருக்கிறது

மானுடத்தின் விடியலிற்காய்

உன்வீச்சு

முரசறைந்திருக்கிறது

மக்களோடு கரம் இணைத்து

முன்னிலை சோஷலிசக் கட்சியினால் நாடுபூராகவும் நடத்தப்பட்டுவரும் ​காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோரை கண்டுபிடிக்குமாறு கோரிய கையெழுத்து போராட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தன்னை கைது செய்து நாடு கடத்துவதை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி குமார் குணரத்னம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.

எமது நேசத்துக்குரிய தோழன் M.C. லோகநாதன், இன்று செவ்வாய் கிழமை  18.02.2015, யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார். முப்பது வருடங்களுக்கு மேலாக சமூக - மற்றும் தேசிய விடுதலைக்காக போராடிய போராளியை எமது சமூகம், தேசம் இழந்து விட்டது. 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE