Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மகிழ்ச்சியில்லை... சுதந்திரமில்லை...

சம்பளமில்லை... வாழ்க்கையில்ல...

மாற்றமில்லை- திரும்புவோம் இடதுபக்கம்

விரைவில் நடத்துவதாகக் கூறும் தேர்தலின் பக்கம் பெரும்பாலான மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஜனநாயகம், நல்லாட்சி, ஊழல் முறைகேடுகளை ஒழித்தல் போன்ற கோசங்கள் வெறும் வார்த்தைகளாகி விட்டன. ஜனாதிபதித் தேர்தலின்போது அள்ளி வீசிய வாக்குறுதிகள் இந்த வெற்று வார்த்தைகளுக்குள் நீர்த்துப் போய்விட்டன. ஜனாதிபதித் தேர்தலின் போதும் எமது உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகள் மறைக்கப்பட்டு உண்மையான ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினை கைவிடப்பட்டு வேறு பொய்யான பிரச்சினைகளுக்குள் நாங்கள் சிறைபடுத்தப்பட்டோம்.

வருகின்ற மே மாதம் 23ம் திகதி (23rd May 2015) சனி அன்று "வெல்வோம் அதற்க்காக....! புத்தக வெளியீட்டு நிகழ்வு லண்டனில் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வு குறித்த மேலதிக விபரங்கள் மிக விரைவில் அறியத் தருகின்றோம்.

"எண்பத்துமூன்று (1983) ஆடி இனக்கலவரம். இனவெறி அரசின் காடைத்தனம் கண்டு பொங்கி எழுகிறார்கள். இனி இது பொறுப்பதில்லை என்று ஆண்களும், பெண்களும் வீடுகளை விட்டு வீதிக்கு வருகிறார்கள். மக்களிற்காக, மண்ணிற்காக மரணத்தையும் எதிர்கொள்வோம் என்று அலை அலையாக எழுந்தார்கள். பெற்ற தாய், தந்தையரை விட்டு, காதலுக்குரியவர்களை விட்டு, கைக்குழந்தைகளைக் கூட விட்டு விட்டு இனி ஒரு விதி செய்வோம் என்று விண்ணதிர வந்தார்கள். பாசம் அறுத்து, நேசம் மறந்து, ஆசை துறந்து நம்தேசம் மீட்போம் என்று வெஞ்சமர் புரிய வந்தார்கள்."

அப்படி வந்த ஒரு போராளி, விடுதலையின் பேரால்  தனக்கு நடந்த சித்ரவதையினை, கொடூரத்தை, கொடுமைகளை நூலாக எழுதியுள்ளார்.

-முன்னணி வெளியீட்டகம்.

"வெல்வோம்-அதற்காக": மரணத்தின் வெளிகளில் வாழ்ந்த ஒரு போராளியின் பதிவுகள்!!

கொடிமரம் என்ன உயரம் இருக்கும்?. கோயில் கொடிமரத்தின் உயரத்தைக் கேட்கிறேன். குறைந்தது இருபது அடி இருக்கும். யாழ்ப்பாணத்து மானிப்பாய் மருதடிப்பதியில் இரு மரபும் துய்ய வந்த சைவ வேளாள பெருங்குடிகளின் கண் கண்ட தெய்வமான பிள்ளையாரின் கொடிமரம் காணாமல் போய்விட்டது. மருதடி பிள்ளையார் கோயிலில் சித்திரை மாதம் கொடியேறி சித்திரை புதுவருட தினத்தன்று தேர்த்திருவிழா நடக்கும். மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயிலில் பல வருடங்களாக கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. இந்த வருடம் கட்டிட வேலை முடிந்து திருவிழாக்கள் தொடங்க இருந்த நேரத்தில் வேலைகளிற்காக கழட்டி வைக்கப்பட்ட இருபது அடி உயர கொடிமரம் காணாமல் போய் விட்டது.

"ஆயுத எழுத்து" ஒரு கற்பனை நாவல் அல்ல. அது சுயவிமர்சனமோ, சுயவிளக்கமோ அல்ல. மாறாக புலிகளின் இனவாத அரசியல், இராணுவ நடத்தைகள் இந்த நாவல் மூலம் நியாப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

2011ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் தங்களது அரசியல் கடமைக்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்கள். அப்படி புறப்பட்டுச் சென்றவர்கள் இன்றுவரை திரும்பவில்லை. முதலாளித்துவ அரசாங்கத்தின் ஏவலாளர்கள் அவர்களை கடத்திச் சென்று விட்டார்கள்.

அண்மைக் காலமாக புலிகளின் காலத்தைய ஒட்டிய இலக்கிய படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புலிகளின் அதிகாரம் நிலவிய காலத்தையும், இறுதி யுத்தம் நடந்த காலத்தையும், யுத்தத்துக்கு பிந்தைய காலத்தையும் மையப்படுத்திய இந்த இலக்கியங்களின் அரசியல் தான் என்ன? இவை ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களில் இருந்து வெளிவருகின்றனவா? என்பது சமூக அக்கறையுள்ளவர்கள் முன்னுள்ள கேள்வியாகும்.

44 வருடங்களிற்கு முன்னர் 1971ம் ஆண்டு ஏப்பிரல் 5ம் திகதி  உழைக்கும் மக்களின் விடுதலைக்காக இடதுசாரிய சிந்தனை கொண்ட இளைஞர்களினால் திடீர் கிளர்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது. இந்த கிளர்ச்சி இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காகிதம் போட்டான் வெள்ளக்காரன். தன் கரங்களால் நாட்டி நீர்ப்பாய்ச்சி பராமரித்து விளைச்சலாக்கும் சாதாரண வெள்ளரிக்காய் பிஞ்சின் மேல்கூட அவனுடைய உழைப்புடனோ அல்லது நிலத்துடனனோ சம்பந்தப்படாத வேற்று நாட்டவன் முழுஅதிகாரத்தையும் கொண்டுள்ளான் என்ற அவலத்தை அச்சொட்டாகச் சொல்கின்ற இந்த சொற்கோவைகளை அந்த உழைப்பாளியின் வேகும் மனதுக்குள் புகுந்து படம் பிடித்துக் காட்டுகின்ற இந்தக் கலைஞன் யார்?

வாழ்வை மீழமுடியா

இராணுவமுற்றுகைக்குள் அடக்கப்பார்ப்பது

போராயுதங்கள் மட்டுமல்ல,

நல்லிணக்கம்

மனித உரிமைமீறல்

போர்க்குற்றம்

காணொளிகள்

காட்சிப்பதிவுகளும்தான்

மலாலா மீதான இரக்கத்தை

எல்லாக்

குழந்தைகளிடம் காட்டத்தயங்குவதேன்

பிஞ்சுகள் அஞ்சுகின்றன

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய போராட்டம், 44 ஆண்டுகள் கடந்து விட்டது. அந்தப் போராட்டத்தின் படிப்பினைகள், அது விட்டுச் சென்றுள்ள கேள்விகள், செய்யவேண்டிய பணிகள் குறித்த கலந்துரையாடல்.

மலையக மக்களுக்கு 20பேர்ச் காணி வீட்டுரிமையை வழியுறுத்தி சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, கொம்யூனிச தொழிலாளர் சங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, முன்னிலை சோசலிசக்கட்சி, மலையக சமூக ஆய்வு மையம் என்பன ஒன்றிணைந்து இரத்தினபுரியில் 2015.03.29(ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்மொன்றை நடாத்தியிருந்தது.

தமிழ்மக்கள் மீது இலங்கைப் பேரினவாத அரசு தொடுத்த போரின் பின்பு மயான அமைதி நிலவியது. இலங்கை அரச கொலைகாரர்களின் அராஜகங்களின் முன் பிள்ளைகளைப் பறி கொடுத்தவர்கள் கூட வாய் விட்டு விம்ம முடியாமல் கொலைக்கரங்கள் தொண்டைகளை நெரித்துக் கொண்டிருந்தன. முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர்கள் காணாமல் போனவர்களின் விபரங்களைத் திரட்டினார்கள். பெற்றோர்களிற்கு, அன்புக்குரியவர்களிற்கு நம்பிக்கை ஊட்டினார்கள். ஏழை மக்கள், உழைக்கும் மக்கள், வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் மக்கள் ஒற்றுமையுடன், ஒன்று சேர்ந்து போராடும்போது மக்கள் எதிரிகள் காற்றுக் கிழித்த தலையணைப் பஞ்சு போல பதறிப் போவார்கள் என்று மக்கள் சக்தியின் வலிமையை உணர்த்தினார்கள். காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் சேர்ந்து கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்தினார்கள்.

இன்று (31.03.2015) கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது, கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து அதிரடிப்படை மற்றும் பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் அமைதியாக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை பிரயோகித்து, மாணவர்கள் பலரைக் கைது செய்துள்ளனர்.  

"பூப் பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ, கல்லுண்டாயில் பூத்திருக்கும் பூ அது என்ன பூ? அப்பாவும் அம்மாவும் உப்பு என்று சொல்லுவினை. அது இப்போ தப்பு. வண்ணத்துப் பூச்சி போல வானமெங்கும் பறக்குதிங்க பொலித்தீன் பூ". அந்த நாளில இருந்த டிங்கிரி சிவகுரு இன்று இருந்திருந்தால் இப்படித்தான் பாடியிருப்பார்.

இலங்கை சுதந்திரம் அடையுமுன்பே நாம் கேட்டது (பாரராளுமன்றத்தில்) சம அந்தஸ்து. சுதந்திரம் கிடைத்ததும் நாம் கேட்டது கூட்டாட்சி. பின்னர் நாம் மாவட்ட ஆட்சி கேட்டோம். இவைகள் கிடைக்காத போது தனி அரசு அமைப்பதற்காகப் போராடினோம். இன்று நாம் மாகாண ஆட்சி வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் நமக்குள்ளேயே கட்டிப் புரண்டு அடிபட்டுக் கொண்டு நிற்கிறோம். அத்துடன் ஆளுக்கு ஆள் தலைமை வகித்தபடி இந்தியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் மண்டியிடுவதில் நான் முந்தி நீ முந்தியென முண்டியடித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

அன்புள்ள தாய், தந்தையரே, சகோதர, சகோதரியரே!

உங்களுக்கு தெரியும் கடந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நாம் அனைவரும் கடுமையான துன்பங்களை எதிர் நோக்கினோம். தண்டனை, கடத்தல், காணமலாக்குதல், கைது, கொலை இவைகளுக்குள் முழு நாடும் சிக்குண்டிருந்தது. இப்படியான பல சம்பவங்களுக்கு மத்தியில் லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டது பலத்த எதிர்ப்புக்குள்ளான பிரச்சினையாகும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE