Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கடந்த பல வருடங்களாக நகரசபை ஊழியர்களுக்கு வழங்கிய கூலி உயர்வை தொழிலாளராகிய தமக்கு வழங்க மறுக்கும் சாதிய கொடுமைக்கு எதிராகவும்!

தற்காலிகமான தங்கள் வேலையை நிரந்தரமாக்க மறுக்கும் சாதிய கண்ணோட்டத்தை எதிர்த்தும்!

கல்விகற்ற தங்கள் குழந்தைகளுக்கு வேலை வழங்க மறுக்கும் சாதிய ரீதியான ஒடுக்குமுறையை எதிர்த்தும்!

பெருந்தோட்ட பாடசாலைக்கு வழங்கப்பட இருந்த 3026 ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்களில் 1688 நியமனங்கள் மாத்திரமே 08.05.2015ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளன. இதில் மீதமுள்ள நியமனங்கள் வழங்கப்படுமா, அப்படி வழங்கப்படுமாயின் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பில் கல்வி அமைச்சோ கல்வி இராஜாங்க அமைச்சோ உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

கடந்த வைகாசி மாதம் 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் திருகோணமலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தைப் பற்றி தமிழ் தேசிய ஊடகங்களோ அல்லது இலங்கை ஆதிக்க நிலையிலுள்ள ஊடகங்களோ கணக்கிலெடுக்கவில்லை. காரணம், திருகோணமலையின் நகரசபை உப-நகரபிதா சேனாதிராஜா ஸ்ரீஸ்கந்தராஜா கூறியது போல, போராட்டத்தை நடாத்தியவர்கள் "வழமையான மனிதர்கள்" அல்ல என்ற காரணமாக இருக்கலாம்.

இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னிலை சோசலிச கட்சியும் சமவுரிமை இயக்கமும் மேதின ஊர்வலங்களில் பங்கு கொண்டதுடன் இலங்கையில் கூட்டத்தினையும் நடாத்தியுள்ளனர்.

மே மாத "போராட்டம்" பத்திரிகை சமகால அரசியல் விடயங்கள் குறித்து "மக்கள் போராட்ட இயக்கத்தின்" அரசியல் கண்ணோட்டத்துடன் வெளிவந்து விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றது என்பதனை எமது வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.

ஜே.வி.பி முன்னாள் தலைவரும், இன்று அக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராக இருந்த சோமவன்ச அமரசிங்க, அக் கட்சியில் இருந்து விலகி புதியதொரு கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அண்மையில் அறிவித்ததுடன், தனிநபர் அரசியல் கேலிக்கூத்துக்களையும் நடத்திவருகின்றார்.

 

19வது திருத்தச் சட்டம் "ஜனநாயகத்தைக்" கொண்டுவந்து விட்டது என்கின்றனர். "ஜனநாயக இடைவெளியை" ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர். "தேர்தல் வாக்குறுதி" இனை மைத்திரி நிறைவேற்றி விட்டார் என்கின்றனர். இது "நல்லாடசியின்" ஆரம்பம் என்கின்றனர். "வரலாற்று சிறப்பு" என்கின்றனர். இப்படி பல வியாக்கியானங்களை கூறுகின்றனர். இவை உண்மையா?

1.    அரச, தனியார், தோட்டத்துறை அனைத்து தொழிலாளர்களினதும் சம்பளத்தை அதிகரிக்க போராடுவோம்!


2.    தோட்டத் தொழிலாளர்கள் நிரந்தர மாதச் சம்பளம் பெற போராடுவோம்


3.    சமயாசமய, ஒப்பந்த, Man Power    உழைப்புக் கொள்ளையை ரததுச் செய்!


4.    நீர், நிலம், விதைகள் கொள்ளைக்கு எதிராக விவசாயிகளின் உரிமைக்காக போராடுவோம்!

பரிஸ் மற்றும் லண்டனில் எதிர்வரும் மே 1 அன்று நிகழவுள்ள உலக நாடுகளின் கம்யூனிச அமைப்புக்களின் கூட்டு மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கம், முன்னிலை சோசலிச கட்சியுடன் இணைந்து பங்கு கொள்கின்றது.

தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி தொடரும் பேரினவாத  ஒடுக்குமுறையினை எதிர்த்து அரசியல் தீர்வை வற்புறுத்தி "மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுப்போம்" எனும் தொனிப் பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி எதிர்வரும் மேதினத்தை முன்னெடுக்க இருக்கிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வையும் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையையும் வலியுறுத்தியும், இலங்கையின் அனைத்து மக்களினதும் ஜனநாயக, மனித உரிமைகளையும் வென்றெடுக்கவும் ஐக்கியப்பட்ட சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்பவும் ஜனநாயக இடதுசாரி சக்திகளின் கூட்டு மே தின நிகழ்வு மே முதலாம் திகதி காலை 10 மணிக்கு கஹவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறும்.

19 பெருந்தோட்டக் கம்பனிகள் 2014ஆம் ஆண்டில் தேயிலை, இறப்பரில் 2850 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளதாக தோட்டத்துறைமார் சம்மேளனத்தின் தலைவர் ரொசான் ராஜதுரை அவர்களை மேற்கோள்காட்டி ஆங்கில நாளேடுகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதில் இந்த விடயத்திற்கு மேலாக பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் நிலையில் கம்பனிகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்து.

ஜே.வி.பி முன்னாள் தலைவரும், இன்றைய அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராக இருந்த சோமவன்ச அமரசிங்க, கட்சியில் இருந்து விலகி புதியதொரு கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஜே.வி.பியின் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்த சோமவன்ச, புதிய தலைவர் அநுரகுமார திஸாநாயக்காவின் தலைமையிலான கட்சி "கட்சிக்கொள்கைக்கு முரணாக" செல்வதாக கூறி வெளியேறியுள்ளார்.

உழைப்புக்கு என்ன நடக்கின்றது என்று தெரியாது மனிதன் வாழ்கின்ற போது, தனிவுடமை வீரியம் பெற்று மனித இனத்தை நுட்பமாக அடிமை கொள்வதே நவீன சமூகமாகின்றது. மனிதன் இந்த சமூக அமைப்பில் தன்னிலை அறியாது வாழ்தல் முறையே, தனிவுடமை அமைப்பின் சாரமாகும்.

போராட்டம் ஏப்பிரல் மாத பத்திரிக்கை வெளிவந்து விட்டது. இந்த பத்திரிக்கையில்.....

1. இலங்கை மக்களை பலியிடும் ஒப்பந்தத்தில் மைத்திரி ஒப்பம்!

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE