Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குமார் குணரட்ணத்தின் வழக்கு இன்று கேகாலை நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சில வாரங்களாக நடந்து வந்த வழக்கு விசாரணையில், இன்று தோழர் குமார் குணரத்தினம் சாட்சியம் அளித்தார். அவர் தமது சாட்சியத்தில், தனது குடும்பப் பின்னணியில் ஆரம்பித்து; தற்போது தான் அரசியற் கைதியாக உள்ள சூழ் நிலை பற்றிய வரலாற்றை அரசியல் உரையாக நிகழ்த்தினார்.

தனது உரையில் நாட்டை ஆளும் அரைகுறை முதலாளித்துவ சக்திகள் எவ்வாறு இனவாதம் மூலம் நாட்டை சீரழித்தார்கள் என்றும் அவ் அழிவு அரசியலுக்கு எதிரானதே தனது அரசியல் செயற்பாட்டின் வரலாறு என்றும் விவரித்தார். உரையில் நிறைவில், இன்றுள்ள அரச கட்டமைப்பில் தனக்கு எந்தவித நியாயம் கிடைக்கும் என நம்பவில்லை எனவும், தன்னை உலகிலுள்ள எந்த தேசதிற்கு நாடு கடத்தினாலும் ஒரு மார்சிசவாதியாக - இடதுசாரியாக, மக்களை நேசிப்பவனாக தொடர்ந்தும் இந்த முதலாளித்துவ கட்டமைப்பை ஒழிக்க, மக்கள் நலன் சார் சமூகத்தை உருவாக்கப் போராடிக் கொண்டே இருப்பேன் எனக் கூறினார். வழக்ன் தீர்ப்பு 31 பங்குனியில் வழங்கப்படவுள்ளது .