Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று (04/08/2016) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து பிக்குகள் மற்றும் மருத்துவ பீட மாணவர் நடவடிக்கை குழுவினர் நாடு பரவலாக மாலாபே போலி மருத்துவக் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் குறித்து பொது மக்கள் மத்தியில் பொது விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டிலுள்ள 19 மாவட்டங்களில், 200 நகரங்களில் துண்டுப்பிரசுர விநியோகம், பதாகைகளில் கையெழுத்து  நிகழ்வுகள் மற்றும் மாணவர்கள் - மக்களுடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகள் இன்று இடம்பெற்றிருந்தன.

அம்பாறை, நுகேகொட, பேராதனை, பொரளை, மொரட்டுவ, கேகாலை, வெலிமடை, வவுனியா, நாவலப்பிட்டி, திருகோணமலை, குருநாகல், பிலிமதலாவை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, ஹிக்கடுவ, களுத்துறை, நீர்கொழும்பு, கொழும்பு, மத்துகம, கெகிராவ, அனுராதபுரம், பதுளை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, வரகாபொல, திகன, ஹொரணை, வலஸ்முல்ல உள்ளிட்ட பல நகரங்களில் இந்த மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றன.