Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியினை மூடும்படி கோரி மருத்துவ மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பில் இடம்பெற்றது. இதற்கு முன்னரும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களிற்கு எதிராக பல ஆர்ப்பாட்ட பேரணிகள், கண்டனங்கள், போராட்டங்கள் பல தடவைகள் நடைபெற்றுள்ளன.

மருத்துவ பீட மாணவர்கள் தொடர் சத்தியாககிரக போராட்டம் 100 நாட்களை கடந்து சுழற்சியாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை ஆட்சியாளர்கள் கண்டும், கேட்டும் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் தனியார் போலி மருத்துவக் கடையினை பாதுகாப்பதிலேயே ஆட்சியாளர்களின் கவனம் தொடர்கின்றது.

இந்த கண்டன ஊர்வலத்தினை  மருத்துவ பீட மாணவர்கள் "நடவடிக்கைக் குழு" ஏற்பாடு செய்திருந்தது. எதிர்ப்பு பேரணியில்  ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரிய பல்கலைக்கழக கூட்டமைப்பு   மற்றும் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போலீஸ் தண்ணீர் தடுப்புக்களை பயன்படுத்தியும்  கண்ணீர்ப்புகை குண்டுகளை கருணையற்ற தனமாக வீசியும்   மாணவர்களை தாக்கி  பேரணியினை தடுத்து கலைக்க முயற்சி செய்தனர். மாணவர்கள் கலைந்து போகும் வண்ணம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மாணவர்கள் கலைந்து போகாது கொள்ளுப்பிட்டி சந்தியில் அமர்ந்திருந்து தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்திருந்தனர்.