Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த இரு நாட்களாக (06-07/04/2016) யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த மீனவ ஒத்துழைப்பு அமைப்பினர், யாழ் மாவட்டத்தின் பல பகுதி மீனவ அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடினர். தென்னிலங்கையில் மீனவரின் உரிமைகளிற்க்காக போராடி வரும் நாமல் தலைமையில் வந்திருந்த குழுவினர்; வலலாய், பருத்தித்துறை, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, தொண்டமானாறு, குருநகர் மற்றும் தீவக மீனவர்களையும், அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாடினர். குறிப்பாக யாழ் மாவட்ட மீனவர்களின் வாழ் நிலை, தொழில் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் போர் காரணமாக அவர்களின் வாழ்வில் ஏற்ப்பட்ட இடர்கள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கை அரச படைகளின் வான் மற்றும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாக அழிந்து போன வலலாய் மீன்பிடி கிராமத்திற்கு விஜயம் செய்த குழுவினர் அங்கு அண்மையில் குடியேறியுள்ள மக்களை சந்தித்து உரையாடியதுடன் முற்றாக அழிகப்பட்ட சென்மேரீஸ் கிறிஸ்த்தவ ஆலயத்தையும் பார்வையிட்டனர்.