Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று காலை கேகாலை நீதிமன்றில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட குமார் குணரத்தினத்தினத்தை தொடர்ந்தும் எதிர்வரும் டிசம்பர் 30ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிபதி உத்தர விட்டுள்ளார். குமாரிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஜனவரி 1ம் திகதி நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு ஜனவரி 8ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக்கோரியும், அவரின் அடிப்படை மனித உரிமைகளை அங்கீகரிக்கக்கோரியும் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் அறிவிப்பு விடுத்துள்ளன.