Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குமார் குணரத்தினத்தின் பிரஜா உரிமையினை வழங்கி,  அவரை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ச்சியான சத்தியாகக்கிரக போராட்டத்தினை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக முன்னிலை சோசலிசக் கட்சியினர் நடாத்தி வருகின்றனர்.  இந்த தொடர்ச்சியான சத்தியாககிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தினர்கள், உறவினர்கள், குமாரின் பல்கலைக்கழக நண்பர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என இன, மொழி வேறுபாடுகளை கடந்து எல்லோரும் தொடர்ச்சியாக இதில் பங்கு பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

உலகமே நத்தார் பண்டிகையினை கொண்டாடுவதற்க்காக பரபரப்பாக இருந்த நேற்றைய தினம், அந்த கொண்டாட்டத்தினை ஒதுக்கி வைத்து விட்டு; குமாரின் பிரஜாவுரிமையினை மீள வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி பலர் தமது குடும்பத்தினருடன் சிறு குழந்தைகளையும் கூட்டி வந்து இரவு வேளையில் சத்தியாககிரகத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் மேடையை சூழவுள்ள வீதியில் இரவில் குடும்பத்தினருடன் படுத்து இருப்பதனை படங்களில் காணலாம்.

இந்தப் போராட்டம் வெறுமனே குமார் என்ற தனி மனிதனுக்காக நடாத்தப்படும் போராட்டம் அல்ல. கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் எல்லாரும் ஆட்சிக்கு வரும் போது ஜனநாயகத்தை உறுதிப்படுத்தப்போவதாகவே கூறி ஆட்சியை பிடிப்பதும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனநாயகமா அது என்ன என  மக்களை பார்த்து கேள்வி கேட்டதும் தான் வரலாறு. இந்த வரலாற்றை மாற்றி அமைக்கபோகும் நீண்ட மக்கள் போராட்டத்தின் ஆரம்பம் தான் இந்த போராட்டம். உண்மையான ஜனநாயகத்தை வெற்றி கொண்டு சகல இன மக்களும் சமவுரிமையுடன் இந்நாட்டில் வாழும் வரை இந்தப் போராட்டத்திற்கு ஓய்வே கிடையாது.