Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்களை கொள்ளையிடும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக பரந்து பட்ட அளவில் போராட்டத்தை ஆரம்பிக்கும் முதல் நடவடிக்கையாக நாளை 14-12-2015 மருதானை CSR நிறுவனத்தில் பத்திரிகையாளர் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த பத்திரிகையாளர் கூட்டத்தை பல தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் இணைந்து நடாத்த இருக்கின்றன.

கொள்ளைக்கார  வரவு செலவு திட்டத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இதுவரை  அகில இலங்கை சுகாதார தொழிலாளர் சங்கம், ஒருங்கிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், தேசிய தொழிற்சங்க மையம், சுகாதார தொழிற்சங்க மையம், பணியாளர் சுகாதார மையம், மீடியா ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, அரச முகாமைத்துவ உதவியாளர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இணைந்த ஆசிரியர்கள் சங்கம், சுதந்திர ஆசிரியர்கள் சங்கம், அனைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கம், அகில இலங்கை பொது தொழிலாளர் யூனியன், பொறியியல் ஊழியர் சங்கம, சோசலிஸ்ட் தொழிலாளர் சங்கம், இலங்கை சுகாதார தொழிலாளர் சங்கம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம், அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து போராட முன்வந்திருக்கின்றன.

கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளயனர்.

1. ஓய்வூதிய திட்டத்தை ஒழிக்காதே!

2.  ஊழியர் சேமலாப நிதியை பறித்து விட்டது  PMD திட்டம்

3. உரமானியம் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வாகாது!

4.ஒரு உண்மையான கல்வி விதிகளை உருவாக்கு!

5.சுகாதார துறைக்கு  போதுமான நிதியை ஒதுக்கு!

6. பொது மற்றும் தனியார் துறை வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளத்தை உறுதி செய்!

7. தொழிலாளர் சட்டங்கள் - MAN POWER  சேவை மற்றும் PMD 8 மணி நேரம் வேலை நாள் முன்மொழிவுகள்

8. தோட்ட தொழிலாளருக்கு  ஒரு மாதாந்த கொடுப்பனவு வழங்கு! - தினசரி சம்பள அதிகரிப்பு செய்!

9. பட்டதாரிகள்இ  இளம் ஜோடிகள்  வேலை கொடுப்பு சம்பந்தமாக ஒரு தேசிய கொள்கையினை உருவாக்கு!

10.அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலைக்கு  உத்தரவாதம் வழங்கு

-
தொழிலாளர் போராட்ட மையம்