Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று பேராதெனிய பல்கலக்கழக வளாகத்திலிருந்து இலவசக் கல்வி உரிமையினை வலியுறுத்தி பிரச்சாரா நடவடிக்கையினை மேற்கொள்ளும் முகமாக அனைத்து பல்கலக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் மாபெரும் பாதயாத்திரை ஒன்று இன்று காலை புறப்பட்டு கொழும்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த பாதயாத்திரை எதிர்வரும் 27ம் திகதி கொழும்பை சென்றடையவுள்ளது. இந்த பாதயாத்திரையின் பிரதான நோக்கமாக மக்கள், மாணவர்களை நவதாராளவாத கல்விக் கொள்ளையான இலவசக்கல்வியினை பறிக்கும் கொள்கைக்கு எதிராக விளிப்பூட்டுவதே. கல்வியை விற்பனை பண்டமாக்கும் நவதாராளவாத கொள்கை காரணமாக  தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையக என அனைத்து மாணவர்களினதும் கல்வி உரிமை இன-மத வேறுபாடு இன்றி பறிபோகவுள்ளது.

கடந்த மகிந்த ஆட்சியல் மாலபேயில் தனியார் கல்விக்கடை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2012 இல் இது போன்ற ஒரு பாதயாத்திரயின் போது மகிந்த அரச படை குண்டர்களால் இரு மாணவர் தலைவர்கள் போலி விபத்தில் கொலை செய்யப்பட்டது இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். மைத்திரி - ரணில் அரசு தேர்தல் காலத்தில் கல்வி கொள்கை பற்றி பொய் வாக்குறுதிகளை வழங்கினர். ஆனால் இன்று மைத்திரி - ரணில் தேசிய கூட்டாட்சியில் மகிந்த அரசினை விட வேகமாக நவதாராளவாத கொள்கைகள் முன்னெடுக்கப்'படுவதுடன் கல்விக்கான அடுத்த நிதியாண்டு தொகை வரவு செலவு திட்டத்தில் குறைக்கப்பட்டு கொடுத்த வாக்குறுதியினை கைவிட்டுள்ளது.

 1. மாலபே SATIM உள்பட அனைத்து கல்விக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூடு!

2. பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் இணைப்பை அதிகரி!

3. பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சகல விதமான கட்டண அறவீடுகளையும் நிறுத்து!