Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altஎன்னை 3வருடங்களாக வெளித்தொடர்புகள் இன்றி சிறிலங்கா இராணுவத்தினர் அடைத்து வைத்தனர். இந்தக்காலப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட தரம் என்னை அவர்கள் பாலியல் வன்புணர்வுக்கும் உட்படுத்தினார்கள்' இவ்வாறு அதிர்ச்சியூட்டும் தகவலை லண்டன் ஐ.ரி.வி க்கு வெளியிட்டுள்ளார் முன்னாள் பெண் போராளி ஒருவர். சனல் - 4வெளியிட்டதைப் போன்று இறுதிக்கட்டப்போரில் இலங்கை இராணுவத்தினர் புரிந்த அட்டூழியங்களை தொகுக்கும் முயற்சியில் ஐ.ரி.வி இறங்கியுள்ளது.

இதன்போதே குறித்த முன்னாள் பெண்போராளியின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் கிடைத்துள்ளது. அந்தப் பெண்போராளி மேலும் தெரிவிக்கையில்,

'நான் முள்ளிவாய்க்காலில் காயங்களுடன் இருந்த போது இராணுவத்தால் பிடிக்கப்பட்டு முகாமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டேன் எனது காயங்களுக்கு மருந்து கட்டிவிட்டு தொடர்ந்து விசாரணை செய்வார்கள்,. அநேக சமயங்களில் விசாரிக்க வரும் சிப்பாய்களாலும், படையதிகாரிகளாலும் நான் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டேன். கிட்டத்தட்ட 300தரத்துக்கு மேல் இவ்வாறு அவர்கள் என்னை வன்புணர்வு மூலம் சித்திரவதை செய்தார்கள்.அவர்களுக்கு விசாரிக்க எதுவுமில்லாவிட்டாலும் கூட , என்னை பாலியல் வன்புணர்வு செய்வதற்காகவே அவர்கள் வேண்டுமென்றே விசாரிப்பது போலவும் வருவார்கள்.

3 வருடங்களாக வெளித்தொடர்புகள் எதுவுமற்ற முகாமில் அடைத்து வைத்திருந்து விட்டு, அங்கு நடைபெற்ற கொடுமைகளை யாருக்கும் சொல்லக்கூடாது என்று எச்சரித்து தடுப்பு முகாமுக்கு புனர்வாழ்வு பெற அனுப்பினர். ' என்று அந்தப்போராளி கண்ணீர் மல்க வாக்குமூலம் கொடுத்துள்ளார். அநேகமாக இந்த போர்க்குற்ற ஆதாரம் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறும் சந்தர்ப்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.