Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வரிச் சலுகை தடை என்பது, அரசியல் ரீதியானவை. அரசியல் பொருளாதார நலன் சார்ந்ததும், உள்நோக்கம் கொண்டதுமாகும். உலக மயமாக்கலுக்கு உட்பட்டவை. சர்வதேச நாடுகளின் முரண்பாடுகளுக்கு உட்பட்டவை.

மறுபக்கத்தில் இலங்கை அரசு சுய பொருளாதார முன்னிறுத்திய தேசியம் சார்ந்தோ, மக்கள் நலன் முன்னிறுத்தியோ இந்தத் தடை வரவில்லை. இலங்கை அரசின் மக்கள் விரோத பாசிச நடத்தைக்கு எதிரானதல்ல இந்த தடை. தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்தல்ல, இந்தத் தடை. மனித உரிமை சார்ந்தல்ல இந்தத் தடை. 

 

மாறாக இது உலகளாவிய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளின் அடிப்படையிலானது இந்தத் தடை. இதற்கு இலங்கை அரசின் போர் குற்றங்கள் உட்பட மனித விரோத கூறுகளை முன்னிறுத்தியே, இந்த விசேட வரிச் சலுகையை இரத்து செய்துள்ளது. புலிகள் மேலான தடையின் போதும், இப்படித் தான் செய்தது.

 

மனித உரிமை, மக்கள் நலன் சார்ந்த விடையங்களை முன்னிறுத்தி, இலங்கை அரசை தனிமைப்படுத்தி வருகின்றது. இதன் மூலம் மற்றைய எகாதிபத்தியங்களுடன், அதன் நலன்களுடன்  மோதுகின்றது. ஒருபுறம் குடும்ப சர்வாhதிகார இராணுவ பாசிசம், மறுபக்கம் எகாதிபத்தியங்களின் மோதல்கள் என்று, இதற்குள் இலங்கை மக்களை நிறுத்தி ஒடுக்கத் தொடங்கியுள்ளது இந்த அரசு. 

 

இதன் விளைவு என்ன?

 

சிறப்பு வரிச் சலுகை நீக்கமோ, பாரிய பின் விளைவைக் கொண்டது. ஜரோப்பிய யூனியன் 7200 இலங்கை பொருட்களுக்கு ஏற்றுமதி செய்ய வழங்கிய வரிச் சலுகையை நிறுத்தியுள்ளது. இதனால் சலுகையற்ற நிலையில், சந்தையில் போட்டியிடும் நிலைக்கு இலங்கை பொருட்களுக்கு எற்பட்டுள்ளது.

 

இதனால் இதுவரை சலுகை பெற்ற எற்றுமதியான பொருள் சந்தையில் முடங்கும். பொருளின் விலை வரியினால் அதிகரிக்கும். அதேநேரம் பொருள் தேக்கம், மற்றைய இறக்குமதி நாடுகள் குறைந்த விலையில் பொருளை கோரும்;. இலங்கையின் எற்றுமதி சந்தையில் ஒரு பாரிய நெருக்கடி உருவாகும். உற்பத்தி செய்யும் தொழிளார்கள் கூலி குறையும். பொருளின் தேக்கம், கூலி குறைப்பும், இயல்பாக, பாரிய வேலை இழப்பை உருவாக்கும்;. எற்றுமதியைச் சுற்றி உப உற்பதிகள் முடங்கும். இப்படி பாரிய பொரளாதார நெருக்கடி உருவாகும். எற்றுமதியை நம்பி கட்டும் கடன் தவனைகள், நெருக்கடிக்கு உள்ளாகும். இலங்கை மக்களை வேறு வகையில் சுரண்டி கடன் கொடுக்கும் போக்கு அதிகரிக்கும்.     

 

இன்று இலங்கை அதிகளவு எற்றுமதி செய்வது ஐரோப்பிய யூனியனுக்குத்தான். அதாவது 33 சதவீகிதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு எற்றுமதி செய்தது வந்தது. இலங்கையின் பிரதான எற்றுமதியான புடைவத் துறை இதனால் முற்றாக பாதிக்கும்;. இது இலங்கை மொத்த எற்றுமதியில் 41 சதவீதமாகும். இதைவிட பல பொருட்களின் எற்றுமதியம் இதனால் பாதிக்கப்படும்.

 

புடவைத் துறையில் 2.75 லட்சம் பேர் இன்று நேரடியாக தொழில் பெற்றுவருகின்றனர். இவர்களை இது நேரடியாக பாதிக்கும்;. இதை சுற்றி இயங்கும் 10 லட்சம் தொழிளார்கள் தங்கள் வேலையை இழப்பர். இலங்கை மொத்த எற்றுமதி வர்த்தகத்தில் 36 சதவீதம் இந்த வரிச்சலுகை உட்பட்டது.

 

பாதிப்பு பாரியது. அரசியல் ரீதியாக பாரிய நெருக்கடி கொடுக்கக்கூடியது.

 

அரசு இணங்கிப் போகுமா? போகாதா?

 

குடும்ப சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தி அதை பாதுகாக்க முனையும் அரசு, இணங்கி போகும் நிலையில் இல்லை. ஐரோப்பிய யூனியன் வெளிப்படையாக முன்னிறுத்தி இருப்பது, போர் குற்றம் உட்பட மனித உரிமை விடையங்களைத்தான். அரசு மக்களின் மனித உரிமைகளை வழங்கி, போர் குற்றவாளிகளை நிதியின் முன்னிறுத்தி, எகாதிபத்திய நலனை முறியடிக்காது. இந்த அரசு ஏகாதிபத்திய நலனை பாதுகாக்கும் அரசு தான். தங்கள் குடும்ப சர்வாதிகார நலன் சார்ந்தும், தங்கள் குற்றங்கள் சார்ந்து, ஒரு எகாதிபத்தியாத்துக்கு எதிராக மற்றைய எகாதிபத்தியத்தை முன்னிறுத்தி தன்னை தற்காத்து நிற்கின்றது. 

 

இதன் விளைவுகளை மக்கள் மேல் சுமத்தும். இந்த வகையில் ஐரோபிய யூனியனின் வரித் தடையை, தொழிலாளர் வர்க்கத்தின் மேலான சுமையாக மாறும். அடக்குமுறைகள் அதிகரிக்கும்;. இதனால் தான் இந்த அரசு மேலும் கடன்வாங்கி, இராணுவத்தை பலப்படுத்தி வருகின்றது. ஒரு இராணுவ ஆட்சியை, குடும்ப சர்வாதிகாரம் மூலம் மக்கள் மேல் படிப்படியாக  எவிவருகின்றது.

 

எல்லையற்ற சுரண்டலையும், ஒடுக்கு முறையை மக்கள் மேல் எவும். இதற்கு அமைவாகவே, ஐரோப்பிய தடையை இந்த அரசு கையாளும். வேறு மாற்றுத் தீர்வு அதனிடம் கிடையாது.

 

பி.இரயாகரன்
08.02.2010