Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

PJ_2008_1.jpg "பகலில் ஆலைகளை இயக்காமல் இரவில் இயக்குங்கள்; வாரத்துக்கு ஒருமுறை எந்திர இயக்கத்தை நிறுத்தி வையுங்கள்.'' இவையெல்லாம், கடுமையான மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நெசவாலை முதலாளிகளிடம் தமிழக மின்துறை அமைச்சர் வைத்துள்ள வேண்டுகோள்கள். உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய 1960களில் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ""வாரத்துக்கு ஒருநாள் பட்டினி கிடப்பீர்'' என்று நாட்டு மக்களுக்குச் செய்த உபதேசத்துக்குச் சற்றும் குறையாத பொறுப்பற்ற யோசனைகளே இவை.

 

பொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகத்தின் தேவையைவிட அதிகமாக மின்னுற்பத்தி செய்வதை, அது வெளியிட்டிருக்கும் நாட்காட்டிகளில் கூடச் சாதனையாக அறிவித்துள்ளது. அமைச்சர் வீராசாமியே பலமுறை இதனைப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடைமுறையில், உண்மை நிலவரமோ வேறுவிதமாக உள்ளது.

 

கடந்த மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் அறிவிப்பின்றியே அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஏற்கெனவே நேரம் தவறி விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரமும் அடிக்கடி மின்தடையால் நின்று போய், நீர்ப்பாய்ச்சலின்றி விவசாயம் தத்தளிக்கத் தொடங்கியுள்ளது.

 

விருதுநகர் மாவட்டத்துக்குக் குடிநீர் வழங்கிவரும் தாமிரபரணி மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், இம்மின்வெட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அம்மாவட்டத்தின் பல பகுதிகள் குடிநீர்த் தட்டுப்பாட்டினால் தவிக்கின்றன. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வுக்கு ஆதாரமான நெசவாலைகளுக்கும் விசைத்தறிகளுக்கும் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்காததால், கோவைதிருப்பூர் பகுதிகளில் நெசவுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 

பின்னலாடைத் தொழிலில் கூட மின்சாரத் தட்டுப்பாட்டை ஜெனரேட்டர்களை வைத்து இயக்கி சமாளித்துவிட முடியும். ஆனால், விசைத்தறியோ கடும் மனித உழைப்பைக் கொண்டு குறைந்த லாபத்தில் இயங்கும் தொழிலாகும். இத்தொழிலுக்கு தினமும் 5 மணி நேர மின்வெட்டு என்றால், அத்தொழில் எவ்வளவு பாதிக்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை. இப்பாதிப்புகள் அனைத்தும் தொழிலாளர் தலையில் சுமத்தப்பட்டு, அவர்களது ஊதியமும் கணிசமாகக் குறைந்துள்ளது.


கோவைஈரோடு மாவட்டங்கள், தமிழகத்தின் மின்சாரத்தில் 13.5%ஐ நுகரும் அளவுக்கு நெசவாலைகள், நூற்பாலைகளைக் கொண்டுள்ளன. இப்பகுதிகளில் பல சமயங்களில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிக்கிறது. இதனால் நெசவாலைகளும் நூற்பாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியால் 15%க்கு மேல் இலாபத்தில் சரிவைக் கண்டுள்ள நெசவுத் தொழிலை மின் பற்றாக்குறையானது மேலும் நலிவடையச் செய்துவிடும் என்று தென்னிந்திய ஆலை அதிபர்கள் சங்கம் (சிமா) கூறுகிறது. இதுதவிர, தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் தொடரும் மின்வெட்டால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

 

அரசு புள்ளி விவரங்களின்படி தமிழகத்தின் மொத்த மின்உற்பத்தி 10,000 மெகாவாட் ஆகும். இதில் 55% தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 28% மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 11% தனியார் மின்உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 3.5% வெளிமாநிலங்களிலிருந்தும் பெறப்படுகிறது.

 

இது தவிர, காற்றாலைகள் மூலம் ஏறத்தாழ 3000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும், மின்வெட்டு தொடரக் காரணம் என்ன? ""காற்றாலைகள் மற்றும் நீர்மின் திட்டங்களிலிருந்து அண்மைக் காலமாக மின் உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. இதுதான் மின்சாரத் தட்டுப்பாட்டுக்குக் காரணம்'' என்கிறார் அமைச்சர் வீராச்சாமி.

 

அணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் இந்நேரத்தில் மின்உற்பத்தி எப்படி முடங்கிப் போகும்? மேலும், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் மிகக் குறைவானதுதான். ஆனால், தற்போதைய மின்தட்டுப்பாடோ 30%க்கு மேலாக இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

 

கடந்த இருபது ஆண்டுகளாக மின்னுற்பத்தியிலும் மின் விநியோகத்திலும் புழங்கிவரும் எந்திரங்களோ, கருவிகளோ புதுப்பிக்கப்படவில்லை; சீரமைக்கப்படவில்லை. மின்தடையைப் பழுதுநீக்கி சரிசெய்யும் துறையிலும் பராமரிப்பிலும் பல்லாயிரக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படாமல், தற்காலிகத் தொழிலாளர்களை வைத்து சமாளித்து வருகின்றனர். சென்ற ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் இறுதியாக்கப்பட்டு முடிக்கப்படாததால் பல வேலைகள் கிடப்பில் உள்ளன. இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகளும் குளறுபடிகளுமே மின்தடைக்கு முக்கிய காரணங்களாகின்றன.

 

இதுதவிர, தினசரி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ரீதியில் கணக்கற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் தரகுப் பெருமுதலாளிகளுடனும் தமிழக அரசு போட்டுக் கொண்டிருக்கும் ஒப்பந்தங்கள் 24 மணி நேரத் தங்குத் தடையற்ற மின் வழங்கலை முன்னிபந்தனையாகக் கொண்டுள்ளன. புதிதாக உருவாகி வரும் 120 தொழில் பூங்காங்களால் மட்டும் 700 மெகாவாட்டுகள் வரை மின்தேவை கூடுதலாகியுள்ளது.

 

ஆனால், கூடுதல் மின்தேவையை ஈடு செய்யும் வகையில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. அதிக உற்பத்தியை ஈட்டி, அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வெல்லும் மேட்டூர் மின்நிலையத்திலும் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதிலிருந்தே அரசின் நிர்வாகச் சீர்கேட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

 

பத்தாண்டுகளுக்கு முன் தனியார் மின் உற்பத்தி 0.4 சதவீதமாக இருந்தது. தனியார்மயம் தேசியக் கொள்கையாகிவிட்ட பிறகு, இன்று தனியார் மின் உற்பத்தி 28.18 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இத்தனியார் நிறுவனங்களிடமிருந்து பல மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்தி தமிழக அரசு மின்சாரத்தை வாங்குவதால் ஆண்டுக்கு ரூ. 1216 கோடி வரை நட்டமடைந்து வருகிறது. இதனால் மின்னுற்பத்தியை அதிகரிக்கவோ, பராமரிப்புப் பணிகளைச் செய்யவோ முடியாமல் மின்வாரியம் தடுமாறுகிறது.

 

உள்ளூர் தொழிலுக்கும் விவசாயத்துக்குமான மின்சாரத்தை வெட்டி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசு, அதேநேரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழில் பூங்காக்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலானவற்றுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், அரசின் மின் விநியோகத்தின் மீது அவநம்பிக்கை உருவாகவும், தனியார் மின்சார விநியோகத்தை மக்கள் இயல்பாக ஏற்றுக் கொள்ளச் செய்யவுமான எதிர்விளைவையே உருவாக்கி வருகிறது.

 

மின்வெட்டால் கடும் பாதிப்புக்குள்ளான தமிழகம், நிர்வாகக் குளறுபடிகளைச் சீரமைத்தால் நெருக்கடியிலிருந்து மீண்டு விட முடியும். ஆனால் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கமோ, தமிழகம் உள்ளிட்டு நாட்டு மக்கள் அனைவரையும் மீள முடியாதபடி மரணக் குழியில் தள்ளும் பேரபாயமாகும்.

 

தாராளமயம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை தற்கொலைச் சாவுக்குத் தள்ளியுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் முதலாகத் தொடரும் டாலர் மதிப்புச் சரிவினால், ஏற்றுமதியைச் சார்ந்துள்ள ஜவுளித் தொழிலும் ஆயத்த ஆடைத் தொழிலும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளன. இத்தொழில்களை நம்பியுள்ள 3.5 கோடி தொழிலாளர்களின் எதிர்காலமோ இருண்டு கிடக்கிறது. இந்திய ரூபாய்க்கு நிகராக, டாலரின் மதிப்பு 12%க்கு மேல் குறைந்து விட்டதால், மும்பையில் பல நிறுவனங்கள் ""லேஆப்'' அறிவித்துள்ளன. ஏறத்தாழ 70,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். திருப்பூரில் ஏற்கெனவே 10,000 பேர் வேலையிழந்து, மேலும் 50,000 பேர் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர். ஜவுளித் தொழிலில் மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாலர் மதிப்புச் சரிவானது, நாடெங்கும் 80 லட்சம் பேரின் வேலையைப் பறித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

 

தமிழகத்தையும் நாட்டையும் மறுகாலனியாக்கம் எனும் கொள்ளைநோய் சூறையாடிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளோ மின்வெட்டினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வைத்து போராட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடுவதைப் போல நாடகமாடுகின்றன. மறுகாலனியாக்கம் எனும் மையமான விவகாரத்தை விட்டுப் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டு சூரத்தனம் காட்டும் இந்த ஓட்டுக் கட்சிகள், தலைக்கே பேராபத்து வந்துள்ளபோது தலைவலிக்கு மருந்து கேட்கின்றன.


· தனபால்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது