Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குறிப்பு : ஐந்தாம் படை பற்றி கேள்வி கேட்டு, அதைப் பற்றி விளக்கமும் தந்தார்.

விளக்கம் : நீங்கள் எல்லாம் ஐந்தாம் படை என்று மிரட்டியதுடன், கைக்கூலிகள் என்றார். யாருடைய கைக்கூலிகள் என்றதை மட்டும் அவர்கள் சொல்லவில்லை. அதாவது நாங்கள் மக்களின் கைக்கூலிகள் என்பதால், அதை மட்டும் அவர் சொல்லவில்லை. மக்களின் விடுதலையை நேசிப்பது கைக்கூலித்தனம் என, புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. மக்கள் நிலவும் சமுதாயத்தில் எதிர்கொள்வது, வெறும் இனவாத ஒடுக்குமுறையை மட்டுமல்ல. சாதியம், ஆணாதிக்கம், சுரண்டல், பிரதேசவாதம் என்று பரந்த தளத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். இதற்கு எதிராக போராடுவது, கைக்கூலித்தனம் என்று தான் வலதுசாரிய புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. தாம் மட்டும் அரசுக்கு எதிராக போராடுவதையே, விடுதலைப் போராட்டம் என்கின்றனர். சாதியத்தை, ஆணாதிக்கத்தை, வர்க்க ஒடுக்கமுறையை எதிர்த்து போராடுவது, ஐந்தாம் படைக்குரிய செயல் என்றான். மக்களின் அடிப்படையான விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகள் சுரண்டி வாழும் பாசிச சொகுசு வாழ்க்கையை அழித்தொழிக்கும். அதனால் இதை ஐந்தாம் படைக்குரிய செயலாக வருணித்து, மக்களை நேசித்த தேசப் பற்றாளர்களை கொன்று ஒழித்தனர்.

 

அரசுடன் கூடித்திரியும் துரோகக் குழுக்களின் நடவடிக்கை, முற்றிலும் இதில் இருந்து வேறானது. அவர்கள் தமிழ் மக்களின் தேச விடுதலைப் போராட்டத்தையே மறுத்ததுடன், அவர்களும் மக்கள் போராடுவதையே அனுமதிப்பதில்லை. புலிகளும் இதை மக்களுக்கு மறுத்து, அதற்காகவே போராடுகின்றனர். மக்களிடம் இருந்து அன்னியமான ஒரு பாசிசக் குழுவாக, மக்களை அடிமைப்படுத்தி அவர்கள் மேல் சிம்மாசனத்தை நிறுவ, அரசுக்கு எதிராக அவர்கள் போராடுவது அவசியமாகவிருந்தது.

குறிப்பு : தமது இயக்கத்தில் தவறுகள் செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என மாத்தையா கூறினான். அந்த வகையில் முன்பு ஒரு சிறு களவுக்கு கொண்டு வந்த ஒருவனை, கண் கட்டாமல் கொண்டு வந்ததால் அவனைச் சுட வேண்டி ஏற்பட்டதாம். இதனால் அதனைச் செய்த அனைவரும் பதவியிறக்கப்பட்டதாக கூறினான்.

விளக்கம் : தமது இயக்கத்தில் தவறு இழைத்தவர்களை தாம் தண்டிப்பதாக கூறுவது ஒரு மோசடித்தனமானது. தவறு என்பது என்ன? பாசிசமே அதாவது புலிகள் என்பதே தவறானதாக இருக்கும் போது, தண்டனை என்பது மோசடியானதே. எம்மண்ணில் சில ஆயிரம் பேரின் உயிரை, தண்டனையின் பெயரில் புலிகள் கொன்றொழித்த போது, அங்கு எந்தவிதமான நியாயங்களும் இருந்ததில்லை. ஏன் அவைகளில் 90 சதவீதமானோர் இரகசியமாகவே உரிமை கோராது படுகொலை செயப்பட்டனர். இதன் மூலம் தமது சொந்தத் தவறுகள், வெளியில் தெரிவதை மூடிமறைத்தனர். உரிமை கோராத கொலைகள், இரகசிய கடத்தல்கள், நீதி விசாரணையற்ற சித்திரவதைகள், தண்டனைகள் எல்லாம், தவறுகளை மூடிமறைக்க செய்யும் பாசிச வடிவங்களே. மக்களின் விமர்சனச் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் அழித்து விடுவதே, தமது சொந்த தவறுகளை நியாயப்படுத்தவே ஒழிய தவறுகளை திருத்த அல்ல. தவறுகள் என்று சில விதிவிலக்கான சம்பவங்கள் மீதான தண்டனை, இயக்க பாசிசக் கட்டுப்பாட்டை மீறிய போது வழங்கப்பட்டவை தான். சொந்த பாசிச இயக்க கட்டுப்பாட்டை மீறிய போது தண்டனை என்பது, தமது சொந்த நலன் சார்ந்த, தனிமனித சர்வாதிகார தலைமையைப் பாதுகாக்க செய்யப்பட்டவை தான். ஆனால் அவை எப்போதும் தவறுகளாக இருந்ததில்லை. மக்களுக்கு எதிராக தவறு இழைத்தமைக்காக சுயவிமர்சனமோ, தண்டனையோ, புலிகளின் பாசிச வரலாற்றில் கிடையாது. அனைத்தும் நியாயப்படுத்தப்பட்டன. அதை பாசிசமாக்கி புதிய அடக்குமுறைகள், புலிகளின் தண்டனைகள் தான் புலிகளின் அரசியல் அகராதியாகியது.

தண்டனை பற்றிய வரையறை, மக்களுடன் என்ன உறவை இயக்கம் கொண்டுள்ளது என்பதுடன் தொடர்புடையது. மக்களின் உழைப்பில் இருந்து அன்னியமான புலிகள், மக்களை சுரண்டி கொழுப்பேற்றுபவர்கள். மக்களை ஒரு இழிவான பிறவியாக கொத்தடிமையாக நடத்தும் புலிகள், அவர்களைச் சுரண்டி கொழுக்கும் புலிகள், துப்பாக்கி முனையில் அனைத்தையும் அடிமைப்படுத்தும் புலிகளின் தண்டனை என்பது, தமது பாசிச கட்டமைப்பை மீறுவதற்கு எதிராகவே எப்போதும் இருந்தது. பாசிச கட்டமைப்பில் ஏற்படும் சிதைவுகளை தற்காக்கவே, அதை மீறுவது குற்றமாக்கப்பட்டது. இயக்கத்தினுள், இயக்கத்துக்கு வெளியில் இதுவே ஒரேயொரு அரசியல் மொழியாக இருந்தது.

குறிப்பு : லெப்டினன் கேணல் அருணாவை தனியறையில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறினார். நான் ஈ.பி.ஆர்.எல்.எப் யைச் சேர்ந்த 54 பேரை சுட்டதற்கா என கேட்க, ஆம் என்றார்.

விளக்கம் : கிட்டு மேலான குண்டுவீச்சை அடுத்து லெப்ரினன் கேர்ணல் அருணா, கைதிகள் மேலான ஈவிரக்கமற்ற படுகொலையை நடத்தினான். வெலிக்கடை சிறைப் படுகொலை போன்று இதுவும் நடந்தேறியது. யார் இந்த லெப்ரினன் கேணல் அருணா?

மட்டக்களப்பு மாவட்ட புலியின் தளபதி. இவர் இராணுவ மோதல் ஒன்றில் இறந்து விட்டதாக கருதிய புலிகள், இவருக்கு லெப்.கேர்ணல் பதவி வழங்கி வீர அஞ்சலி செலுத்தினர். ஆனால் அருணாவை இராணுவம் கைது செய்திருந்தது. இவர் சிறையில் இருந்தார். 1987 இல் உயிருடன் பிடித்த இராணுவ வீரர்களை கைமாற்றிய நிகழ்வின் போது, அருணா மற்றும் பின்னால் சுவிஸ்சுக்கு புலிப் பொறுப்பாக இருந்து துரோகியாக அறிவிக்கபட்ட முரளியையும் கைதிப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

முரளியின் சுவிஸ் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வர முன், பாரிசில் நாதன், கஜன் இருவரினதும் படுகொலைகளை நடத்தினார்கள் புலிகள். வெளிநாட்டு புலித் தலைவர்களின் தன்னிச்சையான செயல்களையும், வன்னியில் ஏற்பட்ட உள் அதிகார பிளவுகளின் பின்னணியில் இது நடந்தேறியது. பாரிசில் நாதன், கஜன் என்ற இருவரினதும் படுகொலை மூலம் இதைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். முரளியை பெரும் தொகை பணத்துடன் சுவிஸ் பொலிசார் கைது செய்தனர். சிறை சென்றவரை வீரனாக்கி பெரும் புகழை சூட்டி புலி பிரச்சாரம் செய்த போதும், தளத்தில் இருந்த புலிகள் இவரை இயக்கத்தில் இருந்தே வெளியேற்றினர். அப்போது வைத்த குற்றச்சாட்டு, அவர் பல பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்ற அவதூறே. இப்படி எல்லாம் சோடித்து கதை சொல்லி அனைத்து நாட்டு புலித் தலைமையும் மாற்றத்துக்குள்ளாக்க முன்பு, நாதன் மற்றும் கஜன் கொலை மூலம் தான் அவர்களை மிரட்ட வேண்டியிருந்தது.

அருணா நடத்திய இந்தப் பாசிச படுகொலை, வெலிக்கடை படுகொலை நிகழ்ச்சியின் கொடூரத்துக்கும் பயங்கரத்துக்கும்  ஈடானதான மக்கள் முன் அம்பலமானது. புலிகளின் பாசிச படுகொலை அரசியல் அம்பலமாவதை தடுக்க, அருணாவை விசாரணையின் பெயரில் கைதாக்கினர். அத்துடன் புலியின் தலைமைக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகவும், முன்பு சயனைட் குடித்து இறக்காமல் இராணுவத்திடம் பிடிபட்டமைக்காகவும், அவர் சமூகத்தில் இருந்து இல்லாதாக்கப்பட்டார். இந்த கொலைக்காக புலிகள் சுய விமர்சனமோ, மக்களிடம் மன்னிப்பையோ கோரவில்லை. மாறாக நியாயப்படுத்தவே செய்தனர். இப்படி அந்த படுகொலையை நியாயப்படுத்தும் இவர்கள், அருணனுக்கு தண்டனை என்பது கேலிக்குரியதாகும். மாறாக பிரபா, கிட்டு, மாத்தையா என்ற மூன்று வெவ்வேறு தலைமைகளுக்கிடையில், அருணனின் சார்பு நிலையை கருத்தில் கொண்டே, அன்று அதிகாரத்துக்கு வந்திருந்த மாத்தையா, பழிவாங்கியதே தண்டனை என்ற பெயரில் செய்த பித்தலாட்டம்.

 

44.கிட்டுவை படுகொலை செய்ய முயன்றவர்கள், அதை நான் செய்ததாக கூறினர் - (வதைமுகாமில் நான் : பாகம் - 44)

43.புதியபாதை குமணன், ராகவன் பற்றி இரண்டாவது வதையின் இறுதியில் மாத்தையா - (வதைமுகாமில் நான் : பாகம் - 43)

42.எதிர்த்துப் போராடி மடிவது அல்லது புலிக்கு எதிரான இரகசிய ஆயுதம் ஏந்திய குழுவை உருவாக்குவது (வதைமுகாமில் நான் : பாகம் - 42)

41.ஊளையிட்டு கூச்சல் போடுவதற்கு அப்பால், இயற்கையான இயக்கத்தை நிறுத்த முடியாது - (வதைமுகாமில் நான் : பாகம் - 41)

40.அறைச் சுவரில் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களும், கிரனையிற் சிதறல்களும் - (வதைமுகாமில் நான் : பாகம் - 40)

39.சிலதைக் கூற, பயங்கரத் திருப்பம் என்று கூறிய சலீம் ..(வதைமுகாமில் நான் : பாகம் - 39)

38.  வதைமுகாமின் உள்ளே…(வதைமுகாமில் நான் : பாகம் - 38)

37.வதைமுகாமில் இருந்து தப்பிய பின் முதல் இரண்டு நாட்களில் எழுதப்பட்ட சிறு குறிப்புகளில் இருந்து (வதைமுகாமில் நான் : பாகம் - 37)

36.துருப்பிடித்த வாள்,கத்தி, கோடாலி மூலம், என்னைக் கடத்தியது புலிகளல்ல, என்.எல்.எவ்.ரி. என்று நிறுவிய புலிகள் (வதைமுகாமில் நான் : பாகம் - 36)

35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)

34.நான் மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்து கொண்டு, தகவல்களை கோரித் தாக்கினர் (வதைமுகாமில் நான் : பாகம் - 34)


33.கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? (வதைமுகாமில் நான் : பாகம் - 33)


32.மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்தவுடன் மூன்றாவது முறை வதைகள் தொடங்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 32)


31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31)


30.03.05.1987 – 06.05.1987 வரை இரண்டாவது வதை முகாமில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 30)


29. புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)


28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)


27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)


26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)


25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)


24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது