Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட அணுவிபத்து இழப்பீடு மசோதா நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ள‌து. இதை நிறைவேற்றுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் விவாதம்(!) நடைபெற்றது.

இந்த மசோதாவின் உயிரோட்டம் குறித்து விவாதம் செய்வதை இடதுசாரிகள் என தம்மை அழைத்துக்கொள்வோர் உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மிகக்கவனமாக தவிர்த்துக்கொண்டன. மாறாக அவர்கள் விவாதித்ததெல்லாம் தொகையை அதிகரிக்கவேண்டும் என்பன போன்ற சில்லரை விசயங்களைத்தான்.

இழப்பீடு மசோதவில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய திருத்தம் தேசிய நலனுக்கு எதிரானது என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தாகாரத். அதாவது மசோதா தேசியநலனுக்கு உகந்தது அதன் திருத்தம் மட்டும் எதிரானது என்பதுதான் அவர் கூறியதன் முழுப்பொருள். இழப்பீட்டுத் தொகை 500 கோடியிலிருந்து 1500 கோடியாக உயர்த்தப்பட்டதை எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் ஏற்கப்பட்டதைப் போல‌வும், இம்மசோதா சுயமாக இந்திய அரசினால் தயாரிக்கப்பட்டதைப் போலவும் காட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இது இந்திய அரசின் விருப்பத்தினாலோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளாலோ உருப்பெறவில்லை.

கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவுடனான அணு ஆற்றல் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அமெரிக்கமுதலீடும், தொழில்நுட்பமும் யுரேனியமும் இந்தியாவில் குவியத் தொடங்கிவிடும் என இவர்கள் கூறிவந்தது எதுவும் நடக்கவில்லை. அமெரிக்க முதலாளிகள் தொழில்நுட்பத்தையும் இயந்திரங்களையும் தருவதற்கு முன்னர் அணுவிபத்து நேரிட்டால் தாங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதை ஏற்று அமெரிக்க முதலாளிகளைக் காப்பதற்குத்தான் இந்த இழப்பீடு மசோதா தயாரிக்கப்பட்டதேயன்றி பாதிக்கப்படும் இந்திய மக்களுக்கு இழப்பீடு உறுதி செய்யப்படவேண்டும் என்பதற்காக அல்ல. அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக முதலில் மதிப்பிடப்பட்ட 500 கோடி என்பது போபால் இழப்பீட்டுத் தொகையைவிட குறைவு. போபால் இழப்பீடு எந்த அளவில் இருந்தது என்பதை தனியாக இங்கு விளக்க வேண்டியதில்லை. இப்போது உயர்த்தப்பட்ட மதிப்பு போபாலை விட கொஞ்சம் அதிகம். இதில் கவனிக்க வேண்டிய விசயம் போபாலில் நடந்தது அணு விபத்தல்ல. போபாலை விட பல மடங்கு வீரியம் மிக்க பல தலைமுறையை பாதிக்கக்கூடிய அணுவிபத்திற்கு இழப்பீடாக மதிப்பிடப்பட்ட தொகை பாதிக்கப்படும் இந்திய மக்களை நினைத்து மதிப்பிடப்பட்டதா? அமெரிக்க முதலாளிகளை நினைத்து மதிப்பிடப்பட்டதா?

தொழில்நுட்பத்தையோ, இயந்திரங்களையோ தருபவர்கள் இழப்பீட்டிலிருந்து விலக்களிக்கப்படுவார்கள். அவர்களிடமிருந்து இழப்பீடு பெறவேண்டுமென்றால் அணுவிபத்தை ஏற்படுத்தவேண்டும் எனும் நோக்கத்துடன் அவர்கள் செயல்பட்டார்கள் என்பதை நிரூபித்தாகவேண்டும். (இதைத்தான் தேசியநலனுக்கு எதிரானது என்கிறார் பிருந்தாகாரத்) காலவதியான, வழக்கொழிந்த தொழில் நுட்பத்தைத்தான் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யவிருக்கிறார்கள் என்பது தெளிவிக்கப்பட்ட பிறகும் இது போன்றதொரு நிபந்தனையை வைப்பது என்பது அவர்களைக் காப்பதுதான் இம்மசோதாவை கொண்டு வருவதற்கான இந்திய அரசின் நோக்கம் என்பதை அறிவிக்கிறது.

அண்மையில் போபால் விசவாயுக் கசிவுக்கு காரண‌மான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கிய டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் இழப்பீடு செலுத்த வேண்டும் என அமைச்சரவை முடிவெடுத்தது. அமெரிக்க துணை அமைச்சரொருவர் இந்த நடவடிக்கையை கைவிடாவிட்டால் கடன் தருவதில் பிரச்சனை ஏற்படும் என இந்திய அரசை மிரட்டியது அண்மையில் அம்பலமானது. இது தொழில் நுட்பம் வழங்கும் நிறுவனங்களையும் இழப்பீட்டுக்கு பொறுப்பாக்கினாலும் அது எந்த அளவுக்கு நிறைவேற்றப்படும் என்பதற்கான அச்சாரமாக அமைந்துவிட்டது.

அன்னிய இயக்கும் நிறுவனங்களுடன் இணைந்து அணு ஆலையை இயக்கவிருப்பது இந்திய அரசு நிறுவனங்கள்தான் என அரசு அறிவித்திருக்கிறது. இதில் சாத்தியமற்ற நிபந்தையை வைத்து அன்னிய இயக்கும் நிறுவனங்களை இழப்பீட்டிலிருந்து விடுவித்து விட்டால் இந்திய ஆலையை இயக்கும் இந்திய அரசு நிறுவனங்களின் மீதுதான் இழப்பீட்டின் முழுப்பொறுப்பும் வருகிறது. அதன்படி இந்திய அரசு இழப்பீடு வழங்கும் என்றால் அது இந்திய மக்களிடமிருந்து பெற்ற வரிப்பணம்தான். அதாவது பாதிக்கப்படப் போகும் மக்களின் வரிப்பணத்திலிருந்து எடுத்து பாதிக்கப்பட்ட பின் அவர்களிடம் கொடுப்பதை இழப்பீடு என எப்படிக் குறிப்பிட முடியும்? இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் மக்களின் பணத்தை காலம் கடந்த தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்க தனியார் நிறுவனங்களிடம் அள்ளிக் கொடுத்துவிட்டு அதனால் ஏற்படும் விபத்துக்கான இழப்பீட்டையும் அந்த மக்களின் தலையிலேயே சுமத்துவது என்பதற்குப் பெயர்தான் இழப்பீடு மசோதா.

மின் உற்பத்திதான் இதன் முக்கிய இலக்கு என்று கூறப்பட்டாலும் அணு ஆயுத உற்பத்திக்குத்தான் இவை பயன்படப் போகின்றன. இராணுவப் பயன்பாடு, ஆக்கப் பயன்பாடு என்று அணு உலைகளைப் பிரித்து கண்காணிக்கும் விதி இருக்கிறது என்று விளக்கம் கூறினாலும் ஆக்கப் பயன்ப்பாடு எனக் கூறப்படும் அணு உலைகளில் என்ன நடக்கிறது என்பதை அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அணுவிசை நீர்மூழ்கிக்கப்பலை விசாகப்பட்டினத்தில் பிரதமர் தொடங்கிவைத்தார். அந்நிகழ்வில் அறிவியலாளர்கள் இக்கப்பலுக்குத் தேவையான அணுசக்தியை கல்பாக்கம் அணுஉலையில் இரகசியமாக தயாரித்ததாக கூறினார்கள். கல்பாக்கம் அணு உலையானது முழுக்க முழுக்க மின்சாரப் பயன்ப்பாட்டுக்கானது என அறிவிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இராணுவப்பயன்பாடு, ஆக்கப்பயன்பாடு என பிரித்துக் கூறினாலும் இரண்டின் பொருளும் ஒன்றுதான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை கருத்தில் கொண்டுதான் அமெரிக்காவுடனான அணு ஆற்றல் ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கிறது என்று கூறப்படுவதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் தயாரிக்கப்படும் மின்சாரம் பயன்படப் போவது யாருக்கு? மின் உற்பத்தியில் பற்றாக்குறை எனக் கூறிக்கொண்டு மக்களையும் குறுந்தொழில்களையும் மின்வெட்டில் மூழ்கடித்துவிட்டு பன்னாட்டு, தரகு பெரு முதலாளிகளின் நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக இந்தியாவின் வளங்களை கொள்ளையிடுவதற்காக வரவிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பயன்பாட்டுக்காகத்தான், அந்த நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்திற்காகத்தான் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பயன்படும் என்பதில் ஐயம் என்ன இருக்கப் போகிறது?

இப்போது இழப்பீடு மசோதாவுக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் என குதிக்கும் இந்த ஊடகங்களும் ஓட்டுக்கட்சிகளும், இதன் மூலமான அணு ஆற்றல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்திற்கு தகவல் கூட தெரிவிக்கப்படாமல் ஒப்பமிடப்பட்டது என்பதை மறந்து விட்டார்கள். காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சியானாலும் தங்கள் எஜமானர்களான அமெரிக்க, பன்னாட்டு முதலாளிகளின் கண்ணசைவுக்கு ஒப்பவே செயல்படுவார்கள் என்பதற்கு, செயல்படுத்துவதற்கு ஒன்றுபட்டு நிற்பார்கள் என்பதற்கு இந்த மசோதா இன்னும் ஒரு சாட்சியாக நிற்கிறது. மக்கள் இவர்களை புரிந்துகொள்வதும், புறக்கணிப்பதும் இன்றைய அவசரத் தேவையாக இருக்கிறது.

இந்திய அணுசக்தி திட்டம் குறித்த முழுமையான புரிதலுக்கு 

 

இந்திய அணுசக்தித் திட்டம் மாயையும் உண்மையும் எனும் இந்தக் கட்டுரையை அவசியம் படியுங்கள்

கட்டுரையை அவசியம் படியுங்கள்

 

தொடர்புடைய இடுகை

முதலாளிகளின் லாபத்திற்கு முன் மக்களின் உயிர் தூசு: பயங்கரவாதிகளின் சட்டம்

 

http://senkodi.wordpress.com/2010/08/30/nuclear-liability-bill/ 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது