Language Selection

கண்மணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரபாகரானே!
உன்னிடம் சில
கேள்விகள்?
நீ
இருக்கின்றாயோ
இறந்தாயோ
எமக்குத் தெரியாது
இருந்தும்
கேட்கின்றோம்?

முபத்து வருடமாக – உனக்கு
மண் மூட்டைகளாகவும்
இருந்தோமே,
இதற்கு கைமாறாக
என்ன செய்தாய்!
மன்னாரில் இருந்து
நந்திக் கடல் மட்டும்
நம்பி வந்த எங்களுக்கு
நீ தந்த வெகுமதிகள்,
உனக்கு தெரியுமா?
இல்லையெனில்
எமக்குத்தான் மறந்திடுமா?
இன வெறி யுத்ததில் - உனது
கைக் கூலிகளும்,
காக்கை வன்னியர்களும்
காடையர்களாக மாறி
கஞ்சிக்கு காத்திருந்த,
எங்களை
கசக்கிப் பிழிந்து
கதற வைத்தார்களே?
தங்களின்,
பிஞ்சு குழந்தைகளின்
மிஞ்சியுள்ள
உயிரையாவது,
தக்;க வைக்க
யாரோ கொடுத்த
பால் மாவிற்காக
கையேந்தி நின்றபோது
கைகளிலே வீழ்ந்த
எறிகணையில்
காணமல் போனோர் 
எத்தனை பேர்
உயிர் விடும் வேளையிலும்
உள்ளவர்கள் விடவில்லை
கதறிய மக்களை
கண்டு கொள்ளாமல்
கொலைக்களம்
கொண்டு சென்றார்கள்
எஞ்சி நின்ற
எமது பிள்ளைகளை
வண்ண வண்ணக்
கனவுகளுடன்
வாழ வேண்டிய
எம் பிள்ளைகளை
கதறக் கதறப் பிடித்து
காணமால் செய்தாயே
ஏன் ?
சிங்களம் மட்டும்
கொல்லவில்லை
எதிரிக்கு நீட்டிய
துப்பாக்கியை
இடையிடையே
எம் பக்கமும் நீட்டினார்கள்?
தாய்மை அடைந்த
பெண்மைகளை
பச்சை மட்டையால் - அடித்து
பாடை கட்டினார்களே
நீங்கள் தந்த வேதனைகள்
கெஞ்சமா?
பிள்ளைகள் இருந்தும்
மலடுகளாக
உறவுகள் இருந்தும்
அநாதைகளாக - இறுதியில்
பாலைவன
முட்கம்பி சிறைக்குள்
வரிசையாய் நின்று
கையேந்தும் நிலை
பார்த்தாயா?
உன் பின்னே
ஊர்வலம் போன
எங்களின் நிலயை,
மனங்களில் மாலையிட்டோம்
உனக்கு - நீயோ,
பிணங்களாக்கி
பேயாய் அலைய விட்டுள்ளாய்
உனது
கொடுங்கோலாட்சி
உலகுக்கு தெரியாது
உள்ளுக்குள் இருந்தே
ஊமையாகிப் போன
எங்களுக்கு மட்டும்தான்
தெரியும்.
கிளிநொச்சி
வீழ்ந்த பிறகாவது – உன்
மர மண்டைக்கு
ஏறவில்லையே
ஏனிந்த வீழ்ச்சி என்று,
அந்த இறுதி
நேரத்திலாவது
கள நிலமைகளை
கருத்தில் எடுத்திருந்தால்
ஒரு வேளை
உயிர் பலிகளும் , அங்கவீனர்களும்
விதவைகளும், அநாதைகளும்
குறைவாக இருந்திருக்கும்
உன்
காக்கை வன்னியர்களையும்
கையோடு பிடித்திருக்கலாம்
உனது
நீச்சல் தடாகத்தை
பார்த்தவர்கள்
கிளிநொச்சி
பலியான போதும்
நந்திக் கடலுக்குள்
புலிகள் இயக்கம்
நசுக்கிப் போகாது – என்று
நம்பி இருந்தார்களாம்
அந்த அற்ப ஆசை
இருந்ததா உனக்கும்?
அதனால் தானா,
உன்னைப் பாதுகாக்க
எம்மைச் சாகடித்தாய்?
காலில்லாமல்
கண்ணில்லாமல்
உணர்வுகள் சிதைக்கப்பட்டு
வேதனைகளால்
சுpறைப்பிடிக்கப்பட்டு
ஏதிர்கால ஏக்கத்துடன்
ஏப்படி வாழ்வோம் என்று
ஏங்கி கிடக்கின்றோமே
எல்லாவற்றுக்கும்
என்ன பதில்
கூறுவாய்?
ஓன்றை மட்டும்
புரிந்து கொள்
உலகத் தமிழருக்கு
உண்மையானவாய்
இருந்தாலும்
வன்னி மக்களுக்கு – நீ
தந்த வேதனைகளால்
பூட்டப்பட்ட அவர்களது
மனக்கதவுகள் - ஓரு போதும்
உனக்காக
திறக்காது என்ற
உண்மையை
புரிந்து கொள்