Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலம்பெயர் சமூகம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டும். நாடு கடந்த தமிழ் ஈழத்தை பொறுப்பேற்க வேண்டும்! இதுவே தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்கின்றனர் புலம்பெயர் புலிச் «சிந்தனையாளர்கள்.»

 

இதை நோர்வேயின் பெரும் பான்மைத் தமிழ் மக்கள் நிராகரித்தே விட்டனர். இத்தேர்தலை புலிகளின் ஒரு பகுதியினர் கூட விரும்பவில்லை. இதை அங்கிருந்து வரும் செய்திகள் ஊர்ஐpதம் செய்கின்றன.

நோர்வேயில் தமிழ்மக்களின் எண்ணிக்கை 27,000. வாக்களிக்கத் தகுதி பெற்றோர் 20,000. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களித்தோர் 2,677 பேர் மட்டுமே.

தமிழ் மக்கள் புலிகளின் தமிழ் ஈழப்போரின  மூலம் பலவறறைப்பட்டறிந்துள்ளனர். அதிலிருந்து பிழையான பலவற்றை மௌனமாக, அமைதியாக நிராகரிக்கின்றார்கள். தற்போது அவர்கள் போராடும் வல்மையை இழந்துள்ள நிலையில், அவர்களின் அண்மைக்கால போரும்-ஆயுதமும் மௌனமும் நிராகரிப்புமே. இவ் ஆயுதம் கொணடு சிஙகளப் பேரினவாத –குறுந்தேசிய இனவாத அரசியலை எதிர்க்கின்றார்கள் – இல்லாததும் ஆக்குகின்றனர்.

புலிகள  தம் கடந்த முப்பது ஆண்டுகால அரசியலில் மக்களை போராடும் சக்தியாக கணிக்காது, புறந்தள்ளி ஓதுக்கினர். ஆடக்கி ஒடுக்கினர். அப்புலிகளையே, இல்லாதாக்கியதில், தமிழ் மக்களின் இப்போர் ஆயுதம் கனதியானதும், பெரும் சக்தி கொண்டதோர் பாத்திரத்தையும் வகித்தது.

யாழ்ப்பாணத்தில் – வவுனியாவில் நடைபெற்ற தேர்தல்களிலும், பெரும்பான்மையான மக்கள் இதையே செய்தார்கள். மகிந்தா இத்தேர்தல்களை சிங்கள மக்களும், சர்வதேச சமூகமும் உற்றுநோக்குகின்றது என்றார். தேர்தலின்பின் அதன் பிரதிபலிப்பை, உண்மையை யாவரும் கண்டறிந்தனர்.

டக்கிளசு போன்ற ஐனநாயக நீரோட்டக்காரர்களையும் சிந்திக்கவே வைத்தது. இதனாலேயே மாநகரசபைத் தேர்தலில் தங்களுக்கு பெரும் வெற்றியே இல்லையென்றும், தமிழ்மக்கள் சரியானதொரு அரசியல் தீர்வை மகிந்தாவிடம் கோருகின்றனர் என்றார்.

எனவே புலத்திலும் – புலம்பெயர் வாழ்விலும் நடைபெற்றுள்ள அண்மைக்காலத்  தேர்தல்கள், பெரும்பாலான தமிழ்மக்களை ஒரே சிநதனைச் – செயறபாடு நோக்கியே செல்ல வைத்துள்ளது.

தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் காலடியில் சிக்குண்டு பற்பலவகையான சிறைகளில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்குடாநாடு திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள்ளும் வன்னியில் முட்கம்பி வேலிக்குள்ளும், போரின்போது சரணடைந்த – கைது செய்த இளைஞர்கள் யுவதிகள் எல்லோரையும் புலிகளாக்கி அவர்களை ஓர்  விசேட சிறைக்குள்ளும், இதைவிட கடந்த பல பத்தாண்டுகளாக எவ்வித குற்றமுமே செய்யாதவர்கள், நாட்டின் பலபாகச் சிறைகளுக்குள்ளும் மரணவாழ்வு வாழ்கின்றனர்.  ஓப்பீட்டு வகையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சிவில் சமுகவாழ்வு, இன்றியும், ஐனநாயகம் சுதந்திரமற்ற ஐடலங்கள் ஆக்கப்பட்டுள்ள்தையும், இவ்வருடத்தில் செய்த மாபெரும் மனிதப் படுகொலைகளையும் முழுத் தமிழ் மக்களும் மறக்கவேயில்லை. இக்கொடுமைகளை, அழிவு அனர்த்தனங்களை இருபகுதி தமிழ்மக்களும் ஒரேகுரலிலேயே பேசுகின்றனர்.

இவற்றிற்கெல்லாம் புலம்பெயர் சிந்தனையற்றவர்களின தீர்மானங்கள் பிரகடனங்கள் பரிகாரமோ, பலனோ தராது என்பதையும், உண்டி கூழுக்கு அழுகின்றது, என்ற நிலையில் புலத்தின்; தமிழ்மக்களும், கொண்டை பூவிற்கு அழுகின்றது என்ற நிலையில் புலம்பெயர் «புலனற்றவர்களும்» உள்ளதை, தமிழ் மக்கள் தெளிவாக விளங்கியுள்ளனர்.

புலி-அரசு ஆகிய இருவரினதும்  பயங்கரவாத அரசியலால் தமிழ்மக்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். பல இடர்பாடுகள்; துன்ப-துயர வாழ்வால் போராடும் சக்தியையும் இழநதுள்ளனர். தமிழ் மக்களின் இச்சமகால அரசியல் போக்கு தற்காலிகமானதே! எதிர்காலததில் இது பல பரிமாணங்களைப் பெறும். இப்பரிமாணம் தற்காலிகமாக இழந்தவைகள் அனைத்தையும் மீளப் பெறவைக்கும். இதனூடே அவர்கள் மீண்டும் போராடும் சக்தியாக மீண்டெழுவர்.

அகிலன்

30.11.2009